யாவரும் நலம் என்னும் பிரமாதமான மிஸ்ட்ரி த்ரில்லர் தந்த இயக்குநர் விக்ரம் குமார் இந்திய அளவில் அப்போது கொண்டாடப்பட்டார். பல மொழிகளில் ரீமேக் ஆனது .2009ல் ரிலீஸ் ஆன அப்படம் ஹிந்தியில் 13 பி என டைட்டிலில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.அது போக ஆறு தெலுங்குப்படங்களை இயக்கினாலும் 2016ல் சூர்யா நடிப்பில் வெளியான 24 ஒரு சயின்ஸ் ஃபிக்சன் டைம் ட்ராவல் ஃபிலிமாக அமைந்தது. அவரது இயக்கத்தில் வெளியான வெப் சீரிஸ் தான் இது
பத்திரிக்கைத்துறையை மையமாகக்கொண்டு எழுதபட்ட தமிழ் சினிமா திரைக்கதைகள் பெரும்பாலும் மெகா ஹிட் தான் . 1986ல் ரிலீஸ் ஆன ஊமை விழிகள் மெகாஹிட்.1987ல் ரிலீஸ் ஆன சொல்வதெல்லாம் உண்மை மீடியம் ஹிட் என்றாலும் கதைக்கரு பிரமாதம். 1986ல் கலைஞரின் வசனத்தில் உருவான பாலைவன ரோஜாக்கள் படமும் மெகா ஹிட் , ஆடியோ கேசட் வசன விற்பனையில் சாதனை படைத்த பட,ம். 2011ல் வெளியான கோ பிரமாதமான பொலிடிக்கல் த்ரில்லர் . ரைட்டர் சுபாவின் திரைக்கதை பின்னிப்பெடல் எடுத்திருக்கு ம்
மேலே சொன்ன படங்களில் எல்லாம் பத்திரிக்கைத்துறை என்பது 50% தான் இருக்கும், மீதி மற்ற ஆக்சன் கலந்திருக்கும், ஆனால் முழுக்க முழுக்க பத்திரிக்கைத்துறை பற்றியே திரைக்கதை எழுதி ரிலிஸ் ஆகி இருக்கும் முதல் வெப் சீரிஸ் இது . மொத்தம் எட்டு எபிசோடுகள் . சராசரியாக முக்கால் மணி நேரம் ஒரு எபிசோடுக்கு, ஆக மொத்தம் ஆறு மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம், நல்ல விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பத்திரிக்கையாளர்., பல பத்திரிக்கைகளில் பணி புரிந்து இப்போது ஒரு மிகப்பெரிய பத்திரிக்கையில் சீஃப் எடிட்டர் ஆக பதவி ஏற்க இருக்கிறார்.அந்த விழாவில் கலந்து கொள்ள தன் மனைவி , குழந்தை , நாய் உடன் காரில் கிளம்புகிறார். வழியில் டீக்கடையில் டீ சாப்பிடும்போது ஒரு பழைய பேப்பர் கட்டிங் கிடைக்கிறது. அதில் நாயகனின் கார் விபத்துக்கு ஆளாவதாக பிரிண்ட் செய்யபட்டிருக்கிறது . அதே போல் நடக்கிறது
இது மாதிரி தொடர்ச்சியாக பல சம்பவங்கள் .ஒவ்வொரு துர் மரணம், அல்லது மோசமான நிகழ்வு நடக்கும்போது நடப்பதற்கு முன் ஒரு பேப்பர் துண்டு கிடைக்கும், அதில் நடக்க இருக்கும் சம்பவம் குறிப்பிடப்பட்டிருக்கும்
இந்த மர்மங்களை எல்லாம் நாயகன் எப்படிக்கண்டு பிடிக்கிறான் என்பது மீதிக்கதை
நாயகன் ஆக நாக சைதன்யா நன்றாக நடித்திருக்கிறார். நாகார்ஜூன் க்கு உதடுகள் ஒரு மைனஸ், சிரிக்கவே மாட்டார். அவரது மகனான நாக சைதன்யாவுக்கு கண்கள் சரி இல்லை . மற்றபடி உடல் மொழி , நடிப்பு குட்
நாயகனின் மனைவியாக ப்ரியா பவானி சங்கர் அழகாக வந்து போகிறார். சில இடங்களில் நடிக்கவும் வாய்ப்பு . நாயகனின் பி ஏ ஆக பிரச்சி தேசாய் சுமார் ஆகத்தான் இருக்கிறார்.நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை
போலீஸ் ஆஃபீசர் ஆக பார்வதி திருவோத்து கலக்கி இருக்கிறார்
நேர்மையான பத்திரிக்கையாளர் ஆக ஃபிளாஸ்பேக்கில் வரும் பசுபதி குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். ஜெயப்பிரகாஷ் நடிப்பும் குட்
நாயகனின் அம்மாவாக ரோகினி ரகுவரன் பாந்தமான நடிப்பு ., போலீஸ் ஆஃபிசரின் அம்மாவாக ஈஸ்வரி ராவ் குட்
ஃபிளாஸ்பேக்கில் பணிப்பெண்ணாக வரும் ஸ்ருதி ஜெயன் கண்களாலேயே கவிதை சொல்கிறார். டிரைவரின் மனைவி ஆக வரும் காமாட்சி பாஸ்கரன் கவனிக்க வைக்கும் நடிப்பு
இசாண் இசை , குட் திரைக்கதையை ஆறு பேர் எழுத இயக்கி இருப்பவர் விக்ரம் குமார்
சபாஷ் டைரக்டர்
1 லாரி டிரைவர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு துப்பாக்கிகளை கடத்த உதவுவார்கள் என்ற கான்செப்ட் புதிதாகவும் , நம்பும்படியும் சொல்லப்பட்ட விதம்
2 போலீஸ் ஆஃபீசர் லாரியின் டீசல் டேங்க்கில் செண்ட்டர் ப்ளேசில் டீசல் என ஏழுதி இருக்குமே? இதில் மட்டும் ஏன் கேப் இருக்கு என சந்தேகப்பட்டு வெல்ட் பண்ணி மாத்தி அமைத்திருக்கலாம் என கண்டுபிடிக்கும் காட்சி
3 நாயகனின் குழந்தைக்கு ஆபத்து என குறிப்பு சொன்னதும் பதறிய நாயகன் மனைவி சேஃப்டி என்று உணர்ந்து ரிலாக்ஸ் ஆவதும் ஆனால் ஆபத்து இன்னொரு வடிவில் துரத்துவதும் விறுவிறுப்பான திருப்பம்
4 எழுபது கிலோ எடை உள்ள ஆள் காலின் பூட்ஸ் இவ்ளோ ஆழம் மண்ணில் பதியுதுன்னா அதை விட டபுள் மடங்கு ஆழம் பதிந்துள்ள இந்தத்தடம் உருவாக 70 கிலோ எடை உள்ள நபர் இன்னொரு டெட் பாடியை தூக்கிட்டு நடந்திருக்கனும் என கண்டுபிடிக்கும் லாஜிக் அபாரம்
5 குழந்தை அஞ்சலி லிஃப்டில் மாட்டும்போது லிஃப்ட்டை ஆஃப் பணணச்சொல்லி நாயகன் செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணும் பரப்ரப்பான காட்சி
6 டிரைவரின் டெட் பாடியை நாயகனின் ஃபார்ம் ஹவுசில் புதைக்கப்பட்ட இடத்தைக்கண்டு பிடித்ததாய் நினைக்கும் நாயகி ஆன போலீஸ் ஆஃபீசர் பின் அது நாய் புதைக்கப்பட்டதை அறிந்து ஏமாறுவது
7 நாய் தானே புதைக்கப்பட்டிருக்கு என அசால்ட்டாக கிளம்பிய பின் அதே குழியில் அடி ஆழத்தில் இன்னொரு பிணம் இருப்பது செம ட்விஸ்ட்
8 தூக்கு;ப்ப்போட்டு தற்கொலை செய்த கேசில் சுருக்கு போடுவது லெஃப்ட் ஹேண்ட் பழக்கம் உள்ளவர் , ரைட் ஹேண்ட் பழக்கம் உள்ளவர் என இரு வேறு வித முடிச்சு உருவாவதைக்கண்டு பிடித்து போலீஸ் ட்விஸ்ட்டை உடைப்பது
ரசித்த வசனங்கள்
1 ஒரு தண்ணிப்பாம்பை பிடிக்க ஊர் மொத்தமும் கிளம்புன கதையா இருக்கு
2 ஒரு க்ரைம் சீன்ல ரத்தம் தான் ஒரு மொழியாக மாறும், அது நமக்கு பல விஷயங்களை சொல்லித்தரும்
3 அவன் வித்தியாசமானவன் , பர்த் டே விஷ் பண்றப்பக்கூட நீ கல்லறையை நோக்கி ஒரு ஸ்டெப் எக்ஸ்ட்ரா எடுத்து வைத்த நாள் இதுனு வாழ்த்துவான்
4 வயிற்றில் இருக்கும் குழந்தை பலமா எட்டி உதைக்குது , அப்போ நிச்சயமா பையன் தான்
அந்தக்காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு , இப்பவெல்லாம் பெண் குழந்தைகள் தான் அதிகம் எட்டி உதைக்கறாங்க
5 அரசியல்வாதிங்களான நாங்களே அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவைதான் கட்சி மாறுகிறோம், நீ என்னடான்னா ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை கம்ப்பெனி மாறிட்டே இருக்கே?
6 பத்திரிக்கையும் , அரசியலும் புருசன் பொண்டாட்டி மாதிரி , அப்பப்ப அடிச்சுக்கிட்டாலும் எப்போதும் சேர்ந்திருப்பதே நல்லது
7 யாரைப்பற்றியாவது நாம தெரிஞ்சுக்கனும்னா கடைசி ஒரு வாரத்துல எதை எல்லாம் அவங்க டிஸ்போஸ் பண்ணாங்கனு குப்பையைகிளறிப்பார்த்தா போதும்
8 ஒவ்வொரு தற்கொலைக்குப்பின்னும் ஏதோ பேராநார்மல் ஆக்ட்டிவிட்டி , ஆத்மா, பேய் ஏதோ ஒண்ணு இருக்கும்
9 உண்மையைப்பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் திரித்து எழுதும் மோசமான பத்திரிக்கைக்காரங்களை மட்டும் தான் இந்த பேய் தாக்குது .
10 பத்திரிக்கை தர்மம் என்பது என்ன? வெளிவரப்போகும் நியூஸ் உண்மையா? இல்லையா? என்பதை ஒரு தடவைக்கு 10 தடவை செக் பண்ணி உறுதிப்படுத்திய பின் வெளியிடுவது
11 ஒரு தனி மனிதனின் மாற்றம் பிரபஞ்சத்தின் முன்னேற்ர்றம்
12 இடது கைப்பழக்கம் உள்ளவன சாத்தானுக்கு ரொம்பப்பிடித்தமானவனா இருப்பான்
13 நான்கு பேரையாவது கொன்னவன் தான் ராஜ்ஜியத்தை ஆள முடியும்
14 ஒரு பாதையைத்தேர்ந்தெடுத்துப்போக முடிவு பண்ணிட்டா திரும்பி வருவது மிகக்கடினம், அதனால பாதை தெர்வில் கவனமா இருக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அவ்ளோ பெரிய பங்களாவில் குடி இருக்கும் நாயகன் ஒரு லேப்டாப்போ அல்லது இன்வெர்ட்டரோ வைத்திருக்க மாட்டாரா? கரண்ட் இல்லை , அதனால சிஸ்டம் ல டைப் பண்ண முடியலை , பழைய டைப்ரைட்டர்ல டைப் பண்ணினேன் என டயலாக் வருதே?
2 காரில் பயணம் செய்யும்போது நாயகன் செல் ஃபோன் பேட்டரி தீர்ந்து விடுகிறது . பவர் பேங்க் வைத்திருக்க மாட்டாரா?
3 காரில் பயணிக்கும்போது வாட்டர் பாட்டில் இல்லை என கொட்டும் மழையில் இறங்குகிறார். காரில் பயணிக்கும்போது எக்ஸ்ட்ரா வாட்டர் பாட்டில் கூடவா வைத்திருக்க மாட்டார்கள் ?
4 நாயகன் காரில் பயணிக்கும்போது கை வசம் ஒரு குடை வெச்சுக்க மாட்டாரா? நனைந்து கொண்டே வெளில போய்ட்டு மீண்டும் காருக்கு அடிக்கடி வர்றார்
5 நாயகன் போலீஸ்க்கு லஞ்சம் ஆக ரூ 1 லட்சம் கூகுள் பே மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்றார். ஒரு போலீஸ் லஞ்சமாக ஆன் லைன் ட்ரான்ஸ்சக்சன் வைத்துக்கொண்டால் மாட்டிக்கொள்ள மாட்டாரா? கேஷாக வாங்கிக்கொள்வதுதானே சேஃப்ட்டி ?
6 நாயகன் சார்லசின் மனைவிக்கு ஃபோன் பண்ணி சார்லெஸ் எங்கே இருக்கிறான் இப்போ என கேட்டு அந்த இடத்துக்குப்போகிறான், சார்லஸ் நாயகனின் கண் முன் தற்கொலை செய்து இறக்கிறான்., நாயகன் சத்தம் இல்லாமல் ஸ்பாட்டை விட்டு கிளம்புகிறான். சார்லசின் மனைவிக்கு டவுட் வராதா?
7 மழையில் வெளியில் சென்று வந்த நாயகன் அதே ஷூ காலோடு வீட்டின் பெட்ரூம் வருகிறான். மிடில் கிளாஸ்ல எல்லாம் செப்பல், ஷூ எல்லாம் வாசலிலேயே கழட்டி வருவோம். பணக்காரங்க ஷூ வோடே பெட்ரூம் வருவாங்களோ?
8 போலீஸ் ஆஃபீசர் சார்லசின் மனைவியிடம் விசாரனை செய்யும்போது சார்லசின் அம்மா, அப்பா, சகோதரன் இறந்தது பற்றி சொல்லும் மனைவி தங்கள் மகன் இறந்தது பற்றி சொல்லவே இல்லை , ஏன் ?
9 நாயகனுக்கு தான் போலீசின் சந்தேகப்பார்வையில் விழுந்திருக்கோம், நம் ஃபோன் கண்காணிக்கப்படும் என தெரியும், அப்படித்தெரிந்திருந்தும் பி ஏ அம்ருதாவுக்கு ஃபோன் பண்ணி இப்போ போலீஸ் ஆஃபீசர் ஃபோன் பண்ணி ஒரு விபரம் கேட்பாங்க . நான் சொல்வது போல் சொல் என பேசுகிறாரே? அதே போல் லாக்கப் டெத் நடத்திய போலீஸ்காரருக்கும் ஃபோன் பண்ணிப்பேசறாரே? அட்லீஸ்ட் வேறு ஒருவர் ஃபோனில் இருந்தாவது பேசி இருக்கலாம்
10 போலீஸ் விசாரணையில் அந்த டிரைவரை விசாரிக்கும்போது அவன் இறந்த விஷயம் எப்படியும் வெளியில் வரும் என்பது அவனைக்கொன்ற போலீஸ் ஆஃபீசருக்குத்தெரியாதா? ஏன் நாயகியிடம் மறைக்கிறார்?
11 ஒரு பிரபலமான பத்திரிக்கையின் சீஃப் எடிட்டர் மனைவி அல்லாத பெண்ணுடன் பப்ளிக் ஆக ஹோட்டலில் டான்ஸ் ஆடுதல் , பார்ட்டி கொண்டாடுதல் போன்றவை நடந்தால் வெளியே தெரியாதா? அந்த பயம் அவருக்கு இருக்காதா?
12 நாயகனின் மனைவி , சின்ன வீடு இரண்டு பேரும் ஒரே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவது இரட்டை வால் குருவி முதல் பல படங்களில் பார்த்தாகி விட்டது
13 குடிசை வீட்டில் , ஓட்டு வீட்டில் ம்ழை நீர் ஒழுகுவது ஓக்கே ஆனா பங்களாவில் அதே போல் நடப்பது அதனால் நாயகனின் மனைவி வ்ழுக்கி விழுவது எல்லாம் ஓவர்
14 நாயகிக்கு கூரியர் பார்சல் வந்திருக்கு . பணிப்பெண் அதை ரிசீவ் செய்கிறார். சைன் பண்றதும் அவரே. நாயகி வீட்டில் தான் இருக்கிறார். ஏன் அவர் சைன் வாங்காமல் போறார் கூரியர் மேன் ?
15 நாயகன் கெட்டவன் , சுயநலக்காரன். வில்லன். அதிக பழக்கம் இல்லாத யூ ட்யூபர் இறக்க இருக்கிறார் என்றதும் அவர் ஏன் அவ்ளோ பதட்டமாக காரில் வேகமாக பயணிக்கனும் ?
16 எம் எல் ஏ வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை வில்லன் 2 வருடங்கள் முயற்சி செய்து காதல் வலையில் விழ வைக்கிறான். ஆனால் வீட்டுக்கதவு தாழ்ப்பாளைக்கழட்டி இங்கே கொண்டு வா என்றதும் ஏன் எதற்கு என கேட்காமல் கொண்டு வருவதும் , வில்லன் தந்த ஆல்ட்டர்நேட்டிவ் தாழ்ப்பாளைக்கொண்டு போய் ஃபிட் பண்ணுவதும் நம்ப முடியவில்லை
17 அதே பணிப்பெண்ணை வில்லன் ஒரு சேத்துக்குளத்தில் இருந்துகொண்டு அழைக்கிறான், என்னமோ குற்றால அருவில குளிக்கப்போற மாதிரி அந்தப்பொண்ணு அசால்ட்டா போகுது , பார்க்கற நமக்கே குமட்டுது . அந்தப்பொண்ணுக்கு எதுவும் ஆகலையா?
18 இரண்டு வருடங்கள் சிரமப்பட்டு காதலித்த வில்லன் அப்பெண்ணை வாய்ப்பிருந்தும் அனுபவிக்காமல் கொலை செய்வது ஏன் ?
20 பசுபதி அநியாயத்துக்கு நல்லவராகவே இருக்கட்டும், அதுக்காக 10 கொலை செய்தவன் வில்லன் என்று தெரிந்ததும் உடனே போலீஸ் உயர் அதிகாரிகளிடம் போகாமல் தனியாக அப்படி மாட்டிக்கொள்வது ஏன் ?
21 லாரி டிரைவரின் மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டரைப்பார்க்க தனியாக நைட் டைமில் ஏன் போகிறார்? ஆண் துணை இல்லாமல் போகிறது ஆபத்துனு தெரியாதா?
22 நாயகியின் வீட்டுக்கு நாயகனும் , போலீஸ் ஆஃபீசரும் வந்து ஒரு ஆள் ஃபோட்டொவைகாட்டி இவனால் உன் உயிருக்கு ஆபத்து , கொலை செய்யப்போகிறான் என எச்சரித்துச்சென்ற பின்பும் நாயகியின் அப்பா ஏன் பேக்கு மாதிரி மிட் நைட்டில் காலிங்க் பெல் அடிக்க கதவைத்திறக்கிறார்? ( கனவிலும் பின் நனவிலும் டிட்டோ)
23 க்ளைமாக்ஸ்ல நாயகன் தன் அம்மாவிடம் தன் தாத்தாவின் பெயர் என்ன? எனக்கேட்கிறார். தாத்தா பேர் கூடவா அத்தனை நாட்களாக தெரியாமல் இருப்பார்?என்ன ஜர்னலிஸ்ட்டோ?
24 நிறை மாத கர்ப்பிணியான நாயகி தன்னைக்கொல்ல வருபவனைத்தாக்கி தப்புவது நம்பும்படி இல்லை
25 தன் சொந்த மகனான சத்யாவின் விழாவுக்கு அவர் அப்பா ஏன் வரவில்லை ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தரமான க்ரைம் த்ரில்லர் தான் , விறுவிறுப்பாகப்போகிறது , டைம் ஒதுக்கி பார்க்க வேண்டிய வெப் சீரிஸ், ரேட்டிங் 3.25 / 5
Dhootha | |
---|---|
Genre | Neo noir Crime thriller |
Created by | Vikram Kumar |
Written by | Vikram Kumar Venkat D. Pati Poorna Pragna Sripal Reddy N. G. Thomas Venkatesh Dondapati |
Directed by | Vikram K. Kumar |
Starring | Naga Chaitanya Srikanth Murali Parvathy Thiruvothu Prachi Desai Anish Kuruvilla Tharun Bhascker Rohini Tanikella Bharani Priya Bhavani Shankar Pasupathy |
Composer | Ishaan Chhabra |
Country of origin | India |
Original language | Telugu |
No. of seasons | 1 |
No. of episodes | 8 |
Production | |
Producers | Sharrath Marar Vikram Kumar |
Production location | India |
Cinematography | Mikolaj Sygula |
Editor | Naveen Nooli |
Running time | 43–53 Minutes |
Production company | Northstar Entertainment |
Original release | |
Network | Amazon Video |
Release | 1 December 2023 |
0 comments:
Post a Comment