1988ல் ரிலீஸ் ஆன அக்னிநட்சத்திரம் படம் போஸ்டர் டிசைனிலேயே கலக்கியது . இரு நாயகர்களும் மோதிக்கொள்ளும் காட்சியில் இருவருக்கும் இடையே பூகம்பம் ஏற்பட்டது போல விரிசல் விழுந்திருக்கும் பூமியோடு அந்தக்காட்சி அதகளப்படுத்தியது . அதே போல் படம் பார்க்கும்போதும் கார்த்திக் , பிரபு இருவரும் ஒவ்வொரு முறை நேருக்கு நேர் சந்திக்கும்போதும் பிஜிஎம் மில் இளையராஜா ட்டுடும் ட்டுடும் என இசையில் கலக்கி இருப்பார். தியேட்டரில் கைதட்டல்கள் பறக்கும் .
35 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் அப்படி காம்பினேஷன் ஷாட்களில் எல்லாம் பொறி பறக்கும் ஒரு திரைக்கதையை உருவாக்கி பிரமாதப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன். எட்டு தோட்டாக்கள் படத்தில் தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய எம் எஸ் பாஸ்கர் இதில் நிச்சயம் வாங்கி விடும் அளவுக்கு நடிப்புத்திறனின் உச்சியைத்தொட்டு இருக்கிறார்
2019ல் ரிலீஸ் ஆன பிருத்விராஜ்+ சுராஜ் வெஞ்சாரமூட் காம்ப்போ படம் ஆன டிரைவிங் லைசென்ஸ் என்ற மலையாளப்படம் , 2020 ல் ரிலீஸ் ஆன பிருத்விராஜ் - பிஜூ மேனன் காம்போ படம் ஆன அய்யப்பனும் கோஷியும் ஆகிய இரு படங்களுக்குமே ஒரே திரைக்கதை ஆசிரியர் தான். இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் ஈகோ மோதல்களால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதுதான் கதையின் ஒன் லைன். ஆனால் திரைக்கதையில் இரு படங்களுமே மாறுபட்டு இருந்தன.அதே போன்ற ஒரு கதை தான் இதுவும், ஆனால் இந்த இரண்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டு வேறு ஒரு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதை இது
வெறும் இரண்டு கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 1/12/2023 அன்று திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற இப்படம் 1/1/2024 முதல் டிஸ்னி+ஹாட்ஸ்டார் , 14/1/2024 முதல் ஸ்டார் விஜய் ஒளிபரப்ப இருக்கின்றன
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ஐ டி கம்ப்பெனியில் பணி புரிபவர் . காதல் மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் லவ் மேரேஜ் என்பதால் இரு தரப்பு வீட்டிலும் எதிர்ப்பு . அவர்களுடன் போக்குவரத்து இல்லை . நாயகி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்
வில்லன் தன் மனைவி , மகள் உடன் வாடகை வீட்டில் வசித்து வரும் அரசாங்க ஊழியர்
வில்லன் கீழ் வீடு , நாயகன் மேல் மாடி வீடு. வில்லன் பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருக்கிறார். நாயகன் கார் நிறுத்தி இருக்கிறார். ஒரு நாள் பைக்கை நிறுத்தும்போது நாயகனின் காரில் கீறல் போட்டு விடுகிறார் வில்லன் . நாயகனுக்கும் , வில்லனுக்கும் வாக்குவாதம். ஒரு கட்டத்தில் இது ஈகோ பிரச்சனை ஆக மாறுகிறது
ஹவுஸ் ஓனரிடம் பஞ்சாயத்து நடக்கும்போது பைக்கை வைத்திருப்பவர் தான் அட்ஜஸ் பண்ணிப்போகவேண்டும் என சொல்ல வில்லனுக்கு இது ஈகோவை பண்ணி விடுகிறது . வீம்புக்காக வில்லன் புதுக்காரே வாங்குகிறார்
இதற்குப்பின் நடக்கும் மோத்ல்கள் தான் மீதி திரைக்கதை. என்னடா இது ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிளாக இருக்கிறதே? இதை வைத்து எப்படி ஒரு முழுப்படம் எடுக்க முடியும் ? குறும்படம் வேண்டுமானால் எடுக்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். விறுவிறுப்பான ஒரு க்ரைம் த்ரில்லருக்கு நிகரான படத்தைத்தந்திருக்கிறார் இயக்குநர்
நாயகன் ஆக ஹரீஷ் கல்யாண் அருமையாக நடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்த படங்களில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்ட ரோல் அவருக்கு
வில்லன் ஆக எம் எஸ் பாஸ்கர் அசத்தி இருக்கிறார்/.ஒரே ஒரு பார்வை மூலமே உலகின் மொத்த வெறுப்பையும் கண்களில் காட்டி விட முடியும் என்று உணர்த்தி இருக்கிறார்.
நாயகி ஆக இந்துஜா வுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை சிறப்பு . ஹவுஸ் ஓனராக இளவரசு கச்சிதம்
சாம் சி எஸ் தான் இசை , பின்னணி இசையால் எந்த அளவு டெம்ப்போ கூட்ட முடியுமோ அந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறார், ஒரே ஒரு மேல் வீடு , கீழ் வீடு மொத்த லொக்கேஷனும் இவ்வளவு தான் என்பதால் ஒளிப்பதிவாளர் ஜிஜூ சன்னிக்கு சவாலான வேலை தான். கனகச்சிதமாக தன் பணியை செய்திருக்கிறார்
.
பிலோமின் ராஜ் தான் எடிட்டிங். இரண்டு மணி நேரம் ஓடும்படி கச்சிதமாக ட்ரிம் செய்திருக்கிறார்
சபாஷ் டைரக்டர் ( ராம் குமார் பாலகிருஷ்ணன்.)
1 ஒரு சாதாரண மோதலை பெரிய சண்டை ஆகும் வண்ணம் வில்லன் நாயகன் மேல் போலீஸ் புகார் அளிக்கப்போடும் திட்டமும் அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும்
2 போலீஸ் ஸ்டேஷனில் அவமானம் அடைந்த நாயகன் வில்லனைப்பழி வாங்க போடும் திட்டமும் அதன் எக்ஸ்க்யூசனும் அபாரம். அந்த ரெய்ட் சீன் செம டெம்ப்போ
3 வில்லன் நாயகனின் காரை டேமேஜ் பண்ண காரின் அருகே இரவில் பதுங்கி இருப்பதும் அப்போது போலீஸ் ரோந்து வரும் காட்சியும்
4 நாயகன் வில்லனைக்கொல்லப்போடும் திட்டம் அபாரம்.
ரசித்த வசனங்கள்
1 கடன் வாங்கியாவது அவன் பொண்டாட்டியை சந்தோஷமா வெச்சிருகானே?
கடன் வாங்குனா பொண்டாட்டி சந்தோஷமா இருப்பா , சரி , ட்யூ கட்றது புருசன் தானே?
2 ந்மக்கு யூஸ் ஆகாத சேவிங்க்ஸ் எதுக்கு சார் ?
நீங்க ஆர்வத்துல பேசறீங்க , நான் அனுபவத்துல பேசறேன்
3 புதுக்காரை ஜாக்கிரதையாத்தான் ஹேண்டில் பண்ணனும், என் கார்ல யாரோ ஏ பிசிடி எழுதி வெச்சுட்டாங்க
இது தேவலை , என் கார்ல ஐ ல யூ எழுதி வெச்சிட்டானுங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் அந்த 500 ரூபாய் நோட்டுக்களை சீரியல் ஃபேன் இறக்கை மேலே வைத்த ஐடியா ஓக்கே , ஆனால் உதிரியாகவா வைப்பார்கள் ? லேசாக காற்றடித்தாலே பறந்து காட்டிக்கொடுக்குமே? ஆஃபீசில் ரப்பர்பேண்டுக்கா பஞ்சம் ? ஒரு கட்டுப்போட்டு அந்தப்பணக்கட்டை வைத்திருக்கலாமே?
2 நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நாயகியை கவனிக்க ஒரு நர்ஸ் அல்லது ஒரு பணிப்பெண்ணை ஏற்பாடு பண்ணி வைக்க மாட்டாரா? நாயகன் ? அவ்ளோ வசதி வேற
3 போலீசில் கேஸ் கொடுத்தது வில்லன் தான் , ஆனால் கேசை வாபஸ் வாங்குவது வில்லனின் மகள் , இது எப்படி ? செல்லாதே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இந்த வருடத்தின் மிக முக்கியமான படம், மாறுபட்ட திரைக்கதை அவசியம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். ரேட்டிங் 3.5 / 5
வாகன நிறுத்துமிடம் | |
---|---|
இயக்கம் | ராம்குமார் பாலகிருஷ்ணன் |
எழுதியவர் | ராம்குமார் பாலகிருஷ்ணன் |
உற்பத்தி | சுதன் சுந்தரம் கே.எஸ்.சினிஷ் |
நடித்துள்ளார் | |
ஒளிப்பதிவு | ஜிஜு சன்னி |
திருத்தியவர் | பிலோமின் ராஜ் |
இசை | சாம் சிஎஸ் |
உற்பத்தி நிறுவனங்கள் | பேஷன் ஸ்டுடியோஸ் சிப்பாய்கள் தொழிற்சாலை |
வெளிவரும் தேதி | 1 டிசம்பர் 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம் | ₹ 1.92 கோடி [1] |
0 comments:
Post a Comment