Friday, December 01, 2023

சத்திய சோதனை (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ சோனி லைவ்

     


      ஒரு கிடாரியின்  கருணை ,மனு(2017) என்ற  மாறுபட்ட  , தரமான  நகைச்சுவைப்படத்தை  வழங்கி  விமர்சகர்கள்  இடையே  மிகப்பெரும்  பாராட்டைப்பெற்ற  சுரேஷ்  சங்கையா  இயக்கத்தில்  உருவான  இப்படம்  மிக  மிக  எளிமையான , தரமான  கதைக்களம், காட்சி  அமைப்புகளுடன்  வந்திருக்கிறது . விக்ரம், ஜெயிலர் , லியோ  மாதிரியான  ஆக்சன் மசாலா  வன்முறைப்படங்களைத்தொடர்ந்து  பார்த்து  சலித்து  விட்ட  ரசிகர்களுக்கு  மிகப்பெரிய  ஆறுதல்  இப்படம்

ஸ்பாய்லர்  அலெர்ட்

 ஓப்பனிங்  சீன்லயே  ஒரு  கிராமத்தில்  நான்கு  ரவுடிகள்  ஒரு  ஆளை  துரத்தி  வெட்டிக்கொலை  செய்கின்றனர். டெட் பாடியை  அப்படியே  விட்டுச்செல்கின்றனர். இறந்த  ஆள்  கழுத்தில்  தலா  10  பவுன்  கணக்கில்  ஏகப்பட்ட  தங்கசங்கிலிகள்  அணிந்திருக்கிறான்

நாயகன்   அந்த  வழியாக  வரும்போது  டெட்  பாடியைப்பார்த்து  அருகில்  இருக்கும்  போலீஸ்  ஸ்டேஷனில்  புகார்  கொடுக்கிறான். ஆனால்  போலீசோ  முறையாக  விசாரிக்காமல்  தகவல்  தந்த  நாயகனையே  பழி சொல்லி  லாக்கப்பில்  அடைக்கிறது 


போலீசுக்கு  கொலைகாரனைப்பிடிப்பதை  விட  கொலையான  ஆள்  அண்ந்திருந்த  தங்க  நகைகளை ஆட்டையைப்போடுவதில்  தான்  ஆர்வம்  அதிகம்


போலீஸ்  ஸ்டேஷனில்  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள் தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  பிரேம்  ஜி  அமரன்  அடக்கி  வாசித்து  இருக்கிறார்.  வெங்கட்  பிரபு  இயக்கும்  படங்களில்  எல்லாம்  பிரேம்  ஓவராக  உரிமை  எடுத்து  ஓவர்  ஆக்டிங்  செய்வார். சில  சிரிப்பது  போல  அமையும், பல  காட்சிகள்  எரிச்சல்  ஊட்டும், ஆனால்  இப்படத்தில்  இயக்குநர்  சொன்ன  வேலையை  மட்டும்  செய்திருக்கிறார். அப்பாவித்தன  நடிப்பு  நன்றாகக்கை  கொடுத்திருக்கிறது 


 ஜட்ஜ்  ஆக  வரும்  கு  ஞானசமபந்தம்  அவர்களின்  யதார்த்தமான  டயலாக்  டெலிவரி , அட்டகாசமான  உடல்  மொழி ,  , நடிப்பு  அனைத்தும்  படத்துக்குப்பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


போலீஸ்  குபெரன்  ஆக  வரும்  கே  ஜி  மோகன் ,  பாட்டியாக  வரும்  புது  முகம்  இருவரும்  கவனிக்க  வைக்கும்  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் 


அதிக  காட்சிகள்  இல்லை  என்றாலும்  பெண்  கதாபாத்திரங்களாக  வரும் ஸ்வயம்  சித்தா , ரேஷ்மா  இருவரும்  ஓக்கே  ரக  நடிப்பை  வ்ழங்கி  இருக்கிறார்கள் 


ஆர்  வி சரணின்  ஒளிப்பதிவில்  கிராமத்தில்  யதார்த்த  மனிதர்களைப்படம்  பிடிப்பதில்  ஃபர்ஸ்ட்  கிளாஸ்  ஃபோட்டோகிராஃபியை  பதிவு  செய்திருக்கிறார்


எம்  ரகுராம்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் .தீபன்  சக்கரவர்த்தியின்  பின்னணி  இசை  ஒரு  காமெடிப்படத்துக்கு  தேவையான  அளவில்  சிறப்பாக  அமைந்திருக்கிறது, திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்  சுரேஷ்  சங்கையா

சபாஷ்  டைரக்டர்  ( சுரேஷ்  சங்கையா) 


1  மெயின்  கதைக்குப்போகும்  முன்  போலீஸ்  ஸ்டேஷன்  எப்படிப்பட்டது  அங்கே  இருப்பவர்கள்  கேரக்டர்  என்ன? என்பதை  விலாவாரியாக   விளக்கிய  விதம்  அருமை 

2   போலீஸ்  இன்ஃபார்மர்  ஆக  வருபவர்  நடிப்பும், கேரக்டர்  டிசைனும்  அருமை 

3   இரு ஏரியா  போலீஸ்  ஸ்டேஷன்களில்  உள்ள  போலீசும்  நகைக்காக  அடித்துக்கொள்வது  அல்ட்டிமேட்  காமெடி 

4  யதார்த்தமான , நகைச்சுவையான  கோர்ட்  காட்சிகள் , நீதிபதி  நடிப்பு  கிளாசிக் 


  ரசித்த  வசனங்கள் 


1   சக்தி  மெடிக்கல்ஸ்க்கு  ஏன்  போனே? 


 சக்தி யை  வாங்க , ஐ  மீன்  பூஸ்ட்  வாங்க .. மற்றபடி  நீ  நினைக்கறதை  எல்லாம்  வாங்கலை 


2   ரெண்டு  போலீசும்  சோடி  போட்டுக்கிளம்பிட்டீங்களா? இன்னைக்கு  எவன்  குடியை  கெடுக்கப்போறாங்கனு  தெரியல


3   என்  ராசாத்தியை  வேணா   இங்கே  உட்கார  வைக்கலாமா? உடுப்புக்கு  எடுப்பா  இருக்கும் 


4  யூ  டூ  ப்ரூட்டஸ்?  மீண்டும்  ஃப்ரூட்டியா?


5   அவனை  ஏன்  கொலை  செஞ்சே?

அவன்  நடவடிக்கை  சரி  இல்லை  யுவர்  ஆனர் 

 அப்டி  என்ன  செஞ்சான் ?

வெளில  ஓப்பனா  சொல்ல  முடியாது 

சரி , அப்டி  உள்ளே  வந்து  சொல்றியா?


6  ரிமாண்ட்ல  எடுத்து  விசாரிக்க  எத்தனை  நாட்கள்  கால  அவகாசம்  வேண்டும் ?

யுவர்  ஆனர்  , ஒரு  48  நாட்கள்

சபரிமலைக்கா  மாலை  போட்டுட்டு  போறீங்க ? ரெண்டு  நாள்  எடுத்துக்குங்க 

7  உன் பேர்  என்ன?

வைரமுத்து 

பேர்  எல்லாம்  நல்லாத்தான்  இருக்கு , ஆனா  நடவடிக்கை  தான்  சரி  இல்லை 


8   என்னை  அடிக்காதீங்க , ஆளாளுக்கு  கை  வைக்க  நான்  ஒண்ணும்  ஏடிஎம்  கிடையாது . முதல்ல  அடிச்சாரே? அவர்  மட்டும்  என்  மேல  கை  வைக்கலாம் 


9  திருடனை  ஏன்  துரத்த  ,முடியலை ?

தம்  அடிச்சு  தம்  அடிச்சு   தம்  கட்டி  ஓட  முடியலை ‘

நம்ம  ராசாத்தியை  வேணா  முன்னால  ஓட  விடவா? அப்பவாவது  நீங்க  ஓடறீங்களா?னு பார்க்கலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஃபார்ஸ்ட்  ஏரியாவில்  கொலை  நடந்தால்  முதலில்  ஃபார்ஸ்ட்  ஆஃபீசர்ஸ்  தான்  டெட்  பாடியைக்கைப்பற்ற  வேண்டும், பின்  ஃபாரன்சிக்  ஆட்கள்  வந்து  தடயங்களை  சேகரிக்க  வேண்டும். இங்கே  அப்படி  நடந்த  மாதிரி  தெரியல 


2  நாயகனை  போலீஸ்  பார்த்ததும்  அவர்  பாக்கெட்டை  ஏன்  செக்  செய்யவில்லை ? 


3  நாயகி  நாயகன்  போலீஸ்  ஸ்டேஷனில்  அடி  வாங்கும்போது  கண்டுக்கவே  இல்லை , க்ளைமாக்சில்  மட்டும்  சிரித்தபடி  அவருடன்  ஜோடியாக  வண்டியில்  செல்வது  எப்படி ? கேரக்ட்ர்  டிசைன்  சரியாக  வடிவமைக்கப்படவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட கலக்கலான  காமெடிப்படம், டோண்ட்  மிஸ்  இட் . ஸ்டார்  வேல்யூ  இல்லை  என  யாரும்  தயங்க  வேண்டாம் .  அனைவரின்  நடிப்பும்  அருமை  . ரேட்டிங்  3.25 / 5 


நன்றி - அனிச்சம்  மின்னிதழ்  டிசம்பர் 2023 

0 comments: