ஏன் டி வி சீரியலை மட்டமா சொல்றேன்னா நடைமுறை வாழ்க்கையில் நாம் கண்டிராத பழி வாங்கல்கள் , கள்ளக்காதல், மாமியார் மருமகள் அட்ராசிட்டிஸ் தான் கேவலமாக ( பெரும்பாலான 95% டி வி சீரியல்களில் ) கையாளப்படுகிறதுனு பலர் சொல்லக்கேள்வி
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா பெரிய பட்டாசு தொழிற்சாலை நடத்தும் முதலாளி. நாயகன் 10 வயது சிறுவனா இருந்தபோது நாயகனின் அம்மா வேறு ஒரு நபருடன் ஓடிப்போய் விட்டதாக சொல்லப்படுகிறது . இதனால் நாயகனுக்கு சின்ன வயதில் இருந்தே பெண்கள் என்றால் வெறுப்பு
நாயகன் வாலிப வயதை அடைந்ததும் அப்பா அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஆரம்பத்தில் மனைவியிடம் இருந்து விலகி இருந்தவன் ஒரு கட்டத்தில் ராசி ஆகி விடுகிறான். நல்லபடியாகக்குடும்பம் நடத்தி வருகிறான்
இப்போதுதான் கதையில் கேவலமான ஒரு ட்விஸ்ட். சாத்தான் நாயகனிடம் உன் மனைவியின் ரத்தம் ஒரு சொட்டு கொண்டு வா, உன்னை கோடீஸ்வரன் ஆக்குகிறேன் என்கிறது . நாயகனும் அதை கொண்டு வருகிறான். சாத்தான் அதை ரோஸ்மில்க் மாதிரி டேஸ்ட் பண்ணி விட்டு சொன்ன வார்த்தையைக்காப்பாற்றுகிறது
நாயகன் பெரிய பணக்காரன் ஆகிறான். இப்போது அவனுக்குப்பேராசை , மேலும் பணம் சம்பாதிக்க நினைக்கிறான். சாத்தானை அழைக்கிறான், அவன் அழைத்ததும் ஆஃபீஸ் பாய் மாதிரி ஓடி வரும் சாத்தான் இந்த முறை உன் மனைவியை என்னிடம் முழுசாக ஒப்படைக்க வேண்டும் என்கிறது
மறுத்து விட்ட நாயகன் தன் வேலையைக்கவனிக்க ஆரம்பிக்கிறான், இதற்குப்பின் தொழிலில் பயங்கர நட்டம். அப்பாவிடம் போய் ஆலோசனை கேட்கிறான். அப்பா நாயகனின் மனைவியை சாத்தானுக்கு தாரை வார்க்கச்சொல்கிறார். ஊரார் கேட்டால் யாருடனோ ஓடிப்போய் விட்டதாக கதை கட்டு என்கிறார்.
அப்போதுதான் நாயகனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது . அம்மா ஓடிப்போகவில்லை , அப்பாதான் சாத்தானுக்கு டொனேஷன் கொடுத்து விட்டார்
இதற்குப்பின் கதையில் நடக்கும் கேவலமான ட்விஸ்ட் தான் க்ளைமாக்ஸ் . இந்த லட்சணத்தில் இதன் இரண்டாம் பாகம் வேற வருதாம்
நாயகன் ஆக ஸ்ரீகாந்த் குர்ரம் என்பவர் நடித்திருக்கிறார். தாடி , தொப்பையோடு கேவலமாக இருக்கிறார்
நாயகி ஆக பிரியங்கா சர்மா கச்சிதமாக நடித்திருக்கிறார்
அஜய் அரசடா என்பவர்தான் இசை . பின்னணி இசை தேவலை
சிறுகுடி வம்சி சீனிவாஸ் தான் ஒளிப்பதிவு . ஓக்கே ரகம்
இந்த மட்டமான திரைக்கதையை எழுதியவர்கள் இருவர் சபாஷ் எம் எச் வினீத் ( நான் பாராட்டி சபாஷ் போடலை ., பேரே அதான் போல ), பொண்ணுரு
இயக்கி இருப்பவர் முத்தையா மெஹர் தீபக்
சபாஷ் டைரக்டர்
1 தயாரிப்பாளரிடம் இது செமயான பேய்க்கதை என பொய் சொல்லி படம் எடுக்க சம்மதிக்க வைத்தது
2 ஓப்பனிங் பில்டப்பாக புராணக்கதையான அகல்யா - இந்திரன் , முனிவர் கதையை எல்லாம் அள்ளி விட்டு நல்ல எதிர்பார்ப்பை கொண்டு வந்தது
3 கதை , திரைக்கதை கேவலமாக இருந்தாலும் காட்சிகளில் அடல்ட் கண்ட்டெண்ட் இல்லாமல் பார்த்துக்கொண்டது
ரசித்த வசனங்கள்
1 அவசரமான சமயங்களில் தப்பு செஞ்சுட்டு அதை சரி செய்யனும்னு நினைப்பது ரொம்ப தப்பு , ஏன்னா சில சமயங்களில் அந்தத்தப்பே நம்ம வாழ்வை நாசமாக்கிடும்
2 நாம் சில சமயங்களில் எடுக்கும் சின்னச்சின்ன முடிவுகள் நம் தலையெழுத்தையே சில சமயம் மாற்றி விடும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் பெரிய தொழில் அதிபர் மகன், பெரிய பங்களாவில் குடி இருப்பவர் , முதல் இரவு அன்று மனைவியை விட்டு விட்டு தனியே போய் படுப்பது என்றால் கட்டிலில் படுக்க மாட்டாரா? பாய் எடுத்துட்டுப்போறாரே? ஏழையா ?
2 சாத்தான் நாயகனிடம் நாயகியின் ரத்தம் ஒரு சொட்டு வேண்டும் எனக்கேட்கிறது/ நாயகன் ஒரு குடுவையில் ஒரு சொட்டு ரத்தத்தை எடுத்துட்டு வர்றான்.ஒரு இங்க் ஸ்பில்லர்ல எடுத்துட்டு வ்ந்திருக்கலாம்
3 பட்டாசு ஸ்டாக் வைக்க புது குடோன் கட்டும் நாயகன் அது ம்ழைல நனையுதா? தன்ணீர் உள்ளே வருதா? என செக் செய்யாமல் பட்டாசுகளை ஸ்டாக் வைப்பாரா?
4 பட்டாசு ஆலை அதிபர்கள் யாராவது இப்படத்தைப்பார்த்தால் நட்ட ஈடு கேட்டு வழக்கு போட வாய்ப்பு இருக்கிறது , அப்பா, மகன் இருவரும் அவரவர் மனைவியை சாத்தானுக்குக்கூட்டிக்கொடுத்துதான் இந்த வசதியான வாழ்வு பெற்றார்கள் என யாரையோ அட்டாக் செய்யும் கதை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - போஸ்டர் டிசைன் நல்லாருக்கு , டைட்டில் ஒக்கே என நினைத்து யாரும் ஏமாந்து விட வேண்டாம், மட்டமான படம் , மோசமான மேக்கிங் , ரேட்டிங் மைனஸ் 1 / 5
Tantiram: Chapter 1: Tales of Shivakasi | |
---|---|
Directed by | Muthyala Meher Deepak |
Written by | Shabaz MS, Wineeth Ponnuru |
Produced by | Srikanth Kandragula[3] |
Starring |
|
Cinematography | Sirugudi Vamsi Srinivas |
Edited by | Sirugudi Vamsi Srinivas |
Music by | Ajay Arasada |
Production company | Cinema Bandi |
Release date |
|
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment