டைட்டிலைப்பார்த்ததும் இது ஏதோ ஃபுட்பால் மேட்ச் சம்பந்தப்பட்ட படம் என யாரும் மனப்பால் அல்லது மன ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டாம், இது பெட் லவ்வர்ஸ்க்கான அல்லது நாய்க்குட்டிப்பிரியர்களுக்கான காமெடி டிராமா .
2019ல் ரிலீஸ் ஆன செம ஹிட் படமான தண்ணீர் மாத்தன் தினங்கள் 2022ல் ரிலீஸ் ஆன ஜோ அண்ட் ஜோ ஆகிய இரண்டு படங்களின் ராசியான ஜோடி ஃபிரண்ட்ஸ் ஆன மேத்யூ தாம்ஸ் , நாஸ்லன் கே கபூர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம்
ஹீரோ பின்னால் பம்மும் பழக்கம் இல்லாத நம்ம ஊர் ராமநாராயணன் ஒரு காலகட்டத்தில் ஆடு , பாம்பு , நாய் ஆகியவற்றை முன்னணி கதாபாத்திரங்கள் ஆக்கி மெகா ஹிட் படங்களைத்தந்தார் . அதே போன்ற ஒரு முயற்சி தான் இதுவும்
டைட்டிலுக்கும் , படத்துக்கும் என்ன சம்பந்தம் ? நாய்க்குட்டியின் பெயர் தான் அது .
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் நாயகியை ஒன் சைடாக லவ்வுகிறான். நாயகி ஒரு ஃபாரீன் நாய்க்குட்டி உடன் உலா வருகிறாள் . அவளை கரெக்ட் பண்ண முதல் கட்டமாக நாமும் ஒரு நாய் வாங்க வேண்டும் என நாயகனுக்கு நண்பன் ஐடியா தருகிறான்
அதன்படி நாயகன் ஒரு நாயை சொந்தம் ஆக்குகிறான், எதிர்பார்த்தபடியே நாயகன் நாயகி இருவரும் அந்த நாயால் நெருக்கம் ஆகிறார்கள்
கதை இப்படியே ஜாலியாகப்போகும் என எதிர்பார்த்தால் அப்படியே யூ ட்ர்ன் அடித்து நாயகன் - நாயகி இருவரையும் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்கி நாய் முன்னிலை ஆவது போல கதைக்களம் மாறுகிறது
அந்த நாயால் நாயகனின் அப்பாவுக்கும், அந்த ஏரியா ,மக்களுக்கும் ரொம்பத்தொந்தரவு . ஒரு கட்டத்தில் நாயகனின் அப்பா அந்த நாயை பாண்டிச்சேரி போகும் ஒரு வேனில் ஏற்றி விடுகிறார்
நாயைக்காணாமல் தவிக்கும் நாயகன் தன் நண்பனுடன் பாண்டிச்சேரி போகிறான்
அங்கே நாயை வைத்து டோர்ணெமண்ட்டுக்கான ட்ரெய்னிங் கொடுத்துக்கொண்டிருக்கிறான் ஒரு தாதா . தாதாவிடம் அடியாளாக இருந்தவன் தாதாவை ஏமாற்றி விட்டு சுல்தான் எனும் நாயை அபேஸ் செய்து போட்டிகளில் ஜெயிக்கிறான் , இப்போது அந்த தாதா நாயகனின் நாயை வைத்து ஜெயிக்க நினைக்கிறான் . என்ன நடந்தது ? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக மேத்யூ தாம்ஸ் பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம். மாண்புமிகு மாணவன் காலத்து விஜய் போல சாயலில் தெரிகிறார். நண்பன் ஆக நாஸ்லன் கே கபூர் கிடைக்கும் கேப்களில் எல்லாம் கிடா வெட்டுகிறார். பொதுவாக தமிழ் சினிமாக்களில் நாயகியை விட நாயகியின் தோழி அழகாக இருப்பார் , இதில் உல்டா டிட்டோ ஆக நாயகனை விட நண்பன் நல்ல பர்சனாலிட்டி
நாயகனின் அப்பா, நண்பனின் அப்பா , இருவருக்குமான பொது நண்பர் ஒருவர் என மூவர் அடிக்கும் லூட்டிகள் பின் பாதி திரைக்கதைக்கு சுவராஸ்யம் . விஜயராகவன், ஜானி ஆண்ட்டனி ,ஷம்மி திலகன் இவர்கள் மூவ்ரும் உயிரோட்டமான நடிப்பை வ்ழங்கி இருக்கிறார்கள் . தாதாவாக யோக் ஜெபி ஒரு சாயலில் நம்ம ஊர் ராஜ்கிரனின் தம்பி போல உள்ளார்
படத்தின் கடைசி ஒரு மணி நேரம் நாய்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் என்பதால் இது சிறுவ்ர்கள் , குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்
ஷான் ரஹ்மானின் இசை இதம் , பிஜிஎம் கொண்டாட்டம் . 160 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் பண்ணி இருக்கிறார் எடிட்டர் . பின் பாதியில் அரை மணி நேரம் கட் பண்ணி இருக்கலாம். அல்பியின் ஒளிப்பதிவு கச்சிதம் . நாய்க்கான க்ளோசப் ஷாட்கள் அருமை
ஆதர்ஷ் சுகுமாரன் பால்சன் திரைக்கதைக்கு சுதி மடிசன் உயிர் கொடுத்து இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் அம்மா தன் பின்னால் சுற்றிய ஒன் சைடு லவ்வர் இப்போது நாய் ;பிஸ்னெஸ் செய்பவர் என்பதை அறிந்து மினி அனுப்பியதாக சொல், உனக்கு நாய் கிடைக்கும் என மகனை அனுப்புவதும் அதைத்தொட்ர்ந்து வரும் காட்சிகளும் காமெடி கலக்கல்
2 வாக்கிங் போகும் சாக்கில் நாய்க்குட்டியை ஜம்பம் ஆக அழைத்துச்செல்லும் பணக்காரப்பெண்களை கலாய்த்திருக்கும் இயக்குநரின் உத்தி அழகு
3 நாயகன் , நண்பன் இருவரின் அப்பாக்களும் நண்பர்களாக இருப்பது அவ்ர்களது சண்டை , செல்லசண்டைகள் அழகு
9 ஃபைனல் போட்டியில் ஜெயிக்கும் தருணத்தில் நாய்க்குட்டி சேற்றில் சிக்கிய இன்னொரு நாயைக்காப்பாற்றும் காட்சி செம செண்ட்டிமெண்ட்
ரசித்த வசனங்கள்
1 இவங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுட்டே இருக்காங்களே? என்ன பிரச்சனை ?
பிரச்சனை எதுவும் இல்லைனு தான் சண்டை போடறாங்க
2 ஒருத்தருக்குப்பதிலா இன்னொருத்தரை மாத்துவதாக இருந்தால் எப்பவோ உன்னை நான் மாற்றி இருப்பேன்
3 அடேய் . நாய்க்குப்பிறந்த நாயே
4 இது என்ன பேங்க் லாக்கரா? நாய் வயிற்றில் இத்தனை பொருடகள் இருக்கு ?
5 இது உங்க நாயா?
இல்லை , இவன் என் பையன்
6 என்னடா? உன் ஆளு புதுசா வாக்கிங் எல்லாம் போறா
புதுசா நாய் வாங்கி இருக்கால்ல? சீன் போடறா
7 இவனுங்க ரெண்டு பேரும் ஏன் எப்போப்பாரு காத்துலயே கணக்கு போட்டுட்டு இருக்கானுங்க , புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி
ஏன்? இந்த வயசுல நீ இப்படி செஞ்சதே இல்லையா?
8 உங்க அப்பா ஆரோக்கியமாத்தானே இருக்காரு ? இல்லை எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமோனு.....
அதெல்லாம் இல்லை , அப்பா நல்லாத்தான் இருக்கார்
9 இங்கே நாய் பாபு என்பது நீங்கதானா? சாரி மிஸ்டர் பாபு என்பது நீங்க தானே?
10 உன் அம்மா மினி இப்போ எப்படி இருக்கா ?
தெரில , இப்போ நான் இங்கே தானே இருக்கேன் ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
இது சின்னக்குழந்தைகள் பார்க்க வேண்டிய படம். நாமும் குழந்தையா மாறி படம் பார்க்கனும், இங்கேயும் லென்ஸ் வெச்சுக்கிட்டு குறை கண்டு பிடிக்கக்கூடாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான , கலகலப்பான, ஃபேமிலியுடன் பார்க்க வேண்டிய நல்ல படம் ., ரேட்டிங் 3 / 5
Neymar | |
---|---|
Directed by | Sudhi Maddison |
Screenplay by | Adarsh Sukumaran Paulson |
Produced by | Padma Uday |
Starring | |
Cinematography | Alby |
Edited by | Noufal Abdullah |
Music by | Shaan Rahman |
Production company | V Cinemas International |
Release date |
|
Running time | 160 minutes |
Country | India |
Language | Malayalam |
Box office | est. ₹10 crore (US$1.3 million)[1] |
0 comments:
Post a Comment