Monday, November 13, 2023

KING OF KOTHA ( 2023) -மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்டர்ஆக்சன் த்ரில்லர்) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்

     


   கேரளாவைப்பார்த்து தமிழக  சினிமா  திருந்துனா  தேவலை  என  திரைக்கதை  ஆர்வலர்கள்  வேண்டி விரும்பிகேட்டுக்கொள்ளும்  சமயத்தில்  தமிழகத்தைப்பார்த்துக்  கெட்டுப்போக  முடிவெடுத்து  எடுத்த  மாமூல்  மசாலா  கேங்க்ஸ்டர்  ஃபிலிம்  தான் இது. கமர்ஷியலாக  இது  போகவில்லை  என்பது  ஒரு  ஆறுதல் 50  கோடி  பட்ஜெட்டில்   உருவான  இப்படம்  38  கோடி  மட்டுமே  வசூலித்து  12  கோடி  நட்டத்தை  ஏற்படுத்தியது . இந்த  மாதிரி  மசாலாக்குப்பைகள்  தொடர்ந்து  தோல்வி  அடைந்தால்தான்  நல்ல  திரைக்கதைகள்  உருவாகும்


டைட்டிலைப்பார்த்ததும்  இது  என்ன  கெட்ட  வார்த்தை  மாதிரி  இருக்கு , சென்சார்ல  எப்படி  விட்டாங்க  என  விசாரித்தபோதுதான்  அது  ஒரு  ஊரின் பெயர்  எனத்தெரிய  வந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , வில்லன்  இருவரும் பால்ய  சினேகிதர்கள் . இருவருமே  உருப்படாதவர்கள்  தான்.   வில்லன் காதலித்து  மணந்த  பெண்  ஏற்கனவே  திருமணம்  ஆகி  கணவனை  இழந்தவள் . அவளுக்கு  ஒரு  தம்பி . அவனும்  ஒரு  கஞ்சா  கேஸ்


அவன்  பொறுக்கி  என்பது  தெரியாமல்  ஆரம்பத்தில்  அவனைக்காதலிக்கும்  நாயகனின்  தங்கை   பின்  உண்மை  அறிந்து  விலகுகிறாள் . இதனால்  கடுப்பான  அந்த  பொறுக்கி  நாயகனின்  தங்கையைக்கொலை  செய்ய  முயற்சிக்கும்போது  நாயகன்  அந்தப்பொறுக்கியை  கொலை  செய்து  விடுகிறான்


இப்போது  வில்லனுக்கும், நாயகனுக்கும்  மோதல்  வருகிறது . நாயகன்  ஊரை  விட்டே  போக  முடிவெடுக்கிறான்


 வில்லன்  தான்  இப்போது  சோலோ  ரவுடி. எல்லா  அக்கிரமங்களையும்  செய்கிறான். அந்த  ஊருக்குப்புதிதாக  வரும்  போலீஸ்  ஆஃபீசர்  வில்லனின் கொட்டத்தை  அடக்க  நாயகன்  மீண்டும்  இந்த  ஊருக்கு  வர  வேண்டும்  என  நினைத்து  அதற்கான  ஏற்பாடுகளை  செய்கிறார்


 நாயகன்  திரும்ப  வந்ததும்  நாயகன் - வில்லன்  மோதல்  நடக்கிறது . மொத்தமாக  765  கொலைகள்  செய்து  விட்டு  நாயகன்  அமைதிப்பூங்காவான  காஷ்மீரில்  குடியேறுகிறன் , சுபம் 


நாயகன்  ஆக  துல்கர்  சல்மான் , படம்  முழுக்க  தம்  அடிச்சுக்கிட்டே  இருக்கார் ,  அது  போக  சரக்கும்  அடிக்கிறார். இளைய  தலைமுறைக்கு  நல்ல  ஒரு  முன்னுதாரணம் . அனால்    கேரளாவில்  இவருக்கு  ரசிகைகள்  அதிகம் . இவர்  தம்  அடிக்கும்போதெல்லாம்  கை  தட்றாங்க 


நாயகி  ஆக  ஐஸ்வர்யா  லட்சுமி  பாந்தமான  நடிப்பு . படத்தில்  அமைதியான  ஒரே  கேரக்டர்  இவர்தான் 


வில்லன்  ஆக  ஷபீர்  கலக்கி  இருக்கிறார். த  டெய்லர்  என்ற  ஃபிரெஞ்ச்  வெப்சீரிஸ்  வில்லன்  முக  சாயலில்  இருக்கிறார்

வில்லனின்  மனைவியாக  நைலா  உஷா  ஆஜானுபாவகமான  தோற்றம், வில்லித்தன  நடிப்பு. இவரது  கேரக்டர்  டிசைனில்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கிறது 


ரித்திகா  சிங்  கெஸ்ட்  ரோலில்  ஒரு  டான்ஸ்க்கு  வருகிறார். போலீஸ்  ஆஃபீசர் ஆக  பிரசன்னா  வந்தவரை  ஓக்கே  ரகம்


படத்தின்  நீளம்  மிக  அதிகம்  174 நிமிடங்கள் , ஷ்யாம்  சசிதரன்  இன்னுமே  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


நிமிஷ்  ரவியின்  ஒளிப்பதிவில்  3  பெண்  கேரக்டர்களை  நல்ல  லைட்டிங்கில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்.


 இசை , பின்னணி  இசை  இரண்டும்  வேறு வேறு  நபர்கள் , சுமார்  ரகம்  தான் 


அபிலாஷ்  சந்திரன்  திரைக்கதை எzழுத  அபிலாஷ் ஜோஷி  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்  (அபிலாஷ் ஜோஷி ) 


1  நாயகன் - நாயகி  இருவருக்கும்  இடையே  ஆன  அந்த  கெமிஸ்ட்ரி 

2  நாயகி , வில்லனின்  இணை , நாயகனின்  தங்கை மூவருக்குமான  தனித்தனி  ரொமாண்டிக்  டிராக்ஸ், அவர்களது   உடல்  மொழி , ஆடை  வடிவமைப்பு , நடிப்பு  அனைத்தும்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1   பனிஷ்மெண்ட்   ட்ரான்ஸ்ஃபரா? சார்

 ஆமா,  சில  பேரை  பனிஷ்  பண்ண  வேண்டி  இருக்கு 


2 விளைவுகளை  சந்தீப்பே , ஏன்னா  நான்  ஒரு  கவர்மெண்ட்  ஸ்டாஃப்


 நான் தான் இங்கே கவர்மெண்ட் டே


3  அவனை  சீண்டிப்பார்க்காம  இருப்பதுதான் உயிர்  வாழத்தகுதியான  விஷயம் 


4 ரத்தத்தில்  ஊறுன  கத்தியைப்பன்னீரில்  கழுவி  எடுத்தா  மின்னுமே  அது   மாதிரி    உன்னைப்பார்க்கும்போதெல்லாம்  துடிக்குது  என்  மன்சு 


 இந்த  மாதிரி  பேச  எங்கே  இருந்து  கத்துக்கிட்டே?


5  என்னடா  ஆடறீங்க? ரெண்டு  டீமும்  ஆளுக்கு  3  கோல்  போட்டிருக்கீங்க?


பெனாயில்  டீ  போட  வேண்டி  இருக்குமோ?


 டேய்  , அது பெனால்டி 


6  நீங்க  சொன்னபடி  அவன்  கீழே  குனிஞ்சு  அந்த  புக்கை  எடுக்கலைன்னா  என்ன  பண்ணி இருப்பீங்க ?


 அவனை  ஆம்பளைனு  சொல்லி  இருப்பேன், ஆனா  பாவம்  அதைக்கேட்க  அவன்  உயிரோட  இருந்திருக்க  மாட்டான் 


7  முரட்டு  சிங்கம்  முசக்குட்டி  ஆன  மாதிரி  உன்னைப்பார்த்ததும்  நான்  சாஃப்ட்  ஆகிடறேன் 


8  நாளை  பற்றி   யோசிக்கும் எல்லா  மனுசங்களோட நிம்மதியையும்  கெடுத்து  வெச்சிடுது  இந்த  நாளை 


9  டேய் , நீ  செமயா  இங்க்லீஷ்  பேசறே ,  என்னால்  உன்  அளவுக்குப்பேச  முடியலை   அதனால்  டேய்  அவனை  வெட்டி  கடல்ல  போட்டுடுங்க 


10  பெண்  மனசை  மட்டும்  யாராலும்  ஜெயிக்க  முடியாது , உடம்பை  வேணா  ஜெயிக்கலாம் 


11    ஹலோ.. டேய் , அவனை  முடிச்சுட்டியா?


 அதுக்கு  ஆட்டம்  பாம்  தான்  வேணும், முதல்ல  நீங்க  தப்பிச்சு ஓடிடுங்க 


12  ஒரு  உண்மையான  மனுசன்  தன்  சமாதி  வரை  தன்  காதலை  சுமந்து  செல்வான் 



13   நான்  குடிக்கற  பிராண்டை  எல்லாம்  நீ  பார்த்திருக்கவே  மாட்டே 


14  பல  வருசங்களுக்குப்பிறகு  பார்க்கப்போகும்  நாய்  மாதிரி  தான்  இந்த  ஊர்  எனக்கு . முதல்ல  குரைக்கும், அப்றம்  வாலை  ஆட்டிட்டு  பின்னாடியே  வரும் 


15  இங்கே  கூரை  ஏறி  கோழி பிடிச்சிட்டு  இருந்தவன்  அந்த  ஏரியா  போய்  வானம்  ஏறி  வைகுண்டம்  போய்ட்டு  வ்ந்திருக்கான் 

16 பாசம்  காட்ட  நாயும், பூனையும்  இருக்கறதாலதான்  பல  வயசானவங்க  இன்னும்  உயிரோட  இருக்காங்க 


17  ராஜூவைக்கொல்ல உங்களால    முடியும்னு எனக்குத்தெரியும், ஆனா  உங்களில்  ஒரு  ஆளைக்கொன்னுட்டுதான்  அவன் சாவான் , அந்தக்கஷ்டத்தை  என்னால  தாங்க  முடியாது 



18  காதலிக்கும்  பொண்ணோட  முன்  வரலாறை  தெரிஞ்சுக்க  நினைக்கறது  ஆம்பளைக்கு  அழகு  இல்லை 


19  கடந்த  காலத்தில்  நாம  செஞ்ச  பாவங்கள்  எதிர்  காலத்தில்  நம்மைத்தூங்க  விடாது 


20  யாருமே  கூட  இருக்காத  போதே  துணையாக  இருந்தவண்டா  நீ , நண்பன்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கேங்க்ஸ்டர் இருக்கும்  ஊருக்கு  ட்ரான்ஸ்ஃபர்  ஆகும்  இன்ஸ்பெக்டர்  30  அடியாட்களிருக்கும்  இடத்துக்கு  2  போலீசை  மட்டும்  கூட்டிட்டுப்போய்  மாட்டுவது  ஏன் ? 

2  வெளில்  பயங்கர  மழை , நனைஞ்சுட்டே  வரும்  ஹீரோ  வீட்டுக்குள்  வந்ததும்  சட்டை  அப்பவே  காய்ஞ்சிடுது . எடிட்டிங்  மிஸ்டேக்

3  ஹீரோவோட  காதலியின்  அப்பாவைக்கொலை  செஞ்சவன்  மகளை  ஏன்  உயிருடன்  விடுகிறான் ? 


4  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  பிரசன்னா  ஒரு  ரவுடி  பரிசாகக்கொடுத்த  ரேபான்  கூலிங்க்  கிளாசை  தனிமையில்  இருக்கும்போது  உடைக்கிறார். அவருக்குப்பிடிக்கலைன்னா  ஏழைக்கு  தானம்  பண்ணி  இருக்கலாமே? ஏன்  5000  ரூபாய்  காசை  வேஸ்ட்  பண்ணனும் ? 


5  வில்லனின்  அடியாட்கள்  50  பேர்  கைகளில்  வெடிகுண்டு  வெச்சிருக்காங்க . அதுல  ஒண்ணு  வெடிச்சாலே  நாயகன் க்ளோஸ், ஆனா  50  வெடியையும்  தீபாவளி  வெங்காய  வெடி , கல்  வெடி  மாதிரி  வெடிக்க  வெச்சும்  நாயகனுக்கு  ஒண்ணுமே  ஆகலை 

6  நாயகி  பல  மாதங்களாக  தனியாதான்  வீட்டில்  இருக்கிறாள் , வில்லன்  நினைச்சிருந்தா  எப்போ  வேணா  அவளைப்போட்டுத்தள்ளி  இருக்கலாம், ஆனா  நாயகன்  கண்  முன்   கத்தியால்  குத்தி  மாட்டிக்கனும்னு  வேண்டுதல்  போல 

7 வில்லன்  நாயகனை  தலை  அடித்து  மயக்கம்  ஆக்கினதும்  அப்பவே  கொன்னிருக்கலாம், அவன் என்னடான்னா  கிறுக்கன்  மாதிரி  நாயகனை  கட்டிப்போட்டு  அவன்  நினைவு  வரட்டும்னு  வெயிட்  பண்ணிட்டு இருக்கான் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்- படம்  முழுக்க  வன்முறை  வெட்டு  குத்து  ரத்தம்  தான் . நல்ல  வேளை  ரேப்   மட்டும் இல்லை . இயக்குநர்  சபரிமலை  ஐயப்ப  பக்தர்  போல 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல் போகும்  மாமூல்  மசாலா  குப்பை  தான்  , வன்முறை  விரும்பிகள்  பார்க்கலாம், ரேட்டிங் 2.25 / 5 



King of Kotha
Theatrical release poster
Directed byAbhilash Joshiy
Written byAbhilash N. Chandran
Produced by
Starring
Narrated byMohanlal
CinematographyNimish Ravi
Edited byShyam Sasidharan
Music by
Production
companies
Release date
  • 24 August 2023
Running time
174 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget50 crore[2]
Box officeest. ₹38.30 crore[3]

0 comments: