ஆவாரை விளையும் இடத்தில் சாவாரைக்கண்டதுண்டா? என ஒரு பாடல் இருக்கிறது . இதன் மூலம் ஆவாரம்பூவின் மகத்துவத்தை அறியலாம். சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் கசாயம் தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்
ரோஜாப்பூ இதழ்களை பிய்த்து சேமித்துக்கொள்ள வேண்டும். ஒரு கைப்பிடி அளவு ஆவாரம்பூ எடுத்துகொள்ள வேண்டும், கொஞ்சம் நெருஞ்சி முள்ளை பொடியாக்கி எடுத்துக்கொள்ளவேண்டும் , இவை அனைத்தும் சித்த வைத்தியக்கடைகளில் கிடைக்கும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் , அதில் இந்த மூன்று கலவைகளையும் இட்டு காய்ச்ச வேண்டும் ., 10 நிமிடம் கொதி வந்த பின் அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும் , குடிக்கும் பதத்துக்கு வந்ததும் அந்த நீரை வடிகட்டிக்குடிக்கலாம் . காய்ச்சிய பின் ரோஜா, ஆவாரம்பூ , நெருஞ்சி முள் இந்த மூன்றின் சாறும் தண்ணீரில் இறங்கி இருக்கும்
இதை காலை வெறும் வயிற்றில் கசாயம் ஆக , டீ ஆக நினைத்துக்குடிக்கலாம் . இதன் பயன்கள் எக்கச்சக்கம்
0 comments:
Post a Comment