Sunday, November 05, 2023

ஒரிஜினல் சத்து மாவு நாமே தயாரிப்பது எப்படி? அதன் பயன்கள் என்ன?

 


பட்டை  தீட்டப்பட்ட  வெள்ளை  அரிசி  உணவுதான்  தமிழர்கள்  அதிகம்  விரும்பிசாப்பிடும்  உணவு. ஆனால்  இதில்  கார்போ ஹைட்ரேட்ஸ்  அதிகம்  இருப்பதால்  சிறு தானியங்கள்  உணவில்  அதிகம்  சேர்த்துக்கொள்ள  வேண்டும்  என்பது மருத்துவர்கள்  பரிந்துரை .சிறு தானியங்களை  வாங்கி  அதை  அரிசி  வேக  வைப்பது  போலவே  சோறு  அல்லது  பொங்கல் வடிவில்  சாப்பிடலாம். சிலருக்கு  அதன்  ருசி  செட்  ஆகவில்லை  எனில்  மாவாக  அரைத்து  இட்லி  , தோசை  ஆக  சாப்பிடலாம்

ராகி  ( கேழ்வரகு ) , கம்பு முதல்  ரகம், கம்பு  இரண்டாம்  ரகம் , சோளம்  முதல்  ரகம், சோளம்  இரண்டாம்  ரகம், சாமை  அரிசி , திணை  அரிசி , குதிரை வாலி  அரிசி , வரகு  அரிசி   ஆகியவை  சிறு  தானியுங்கள்  எனப்படும்  மில்லட்ஸ். இவை  கடைகளில்  கிடைக்கின்றன. விலை   கிலோ  ரூ 40  முதல்  ரூ 80  வரை  ஆகும்


 மேலே  கூறிய  சிறு தானியங்கள்  அனைத்தையும்  தலா  ஒரு  கிலோ  வாங்கி  மிஷினில்  கொடுத்து  ஒட்டு  மொத்தமாக  அரைத்து  மாவாக்கி  பொடியாக  சேமித்து  வைத்துக்கொள்ளவும். இப்போது  சுவையான  சத்து  மாவு  ரெடி .  கடைகளில்  சத்து  மாவு  வாங்கினால்  அதில்  கலப்படம்  இருந்தால்  தெரியாது . எனவே  நாம்  நேரடியாக  கடைகளில்  சிறு  தானியங்களை  வாங்கி  நம்  கண்  முன்  அரைத்து  பெறப்படும்  மாவுதான்  நம்பகத்தன்மை  மிக்கது 


 சிறு  தானியங்கள்  சாப்பிடுவதால்  ஏராளமான  நன்மைகள்  உண்டு ,  சர்கக்ரை  வியாதி உள்ளவர்கள் , ஹைப்பர்  டென்சன்  எனப்படும்  பிளட்  பிரஷர்  உள்ளவர்கள் , அதிக  உடல்  எடை  கொண்டவர்கள் , வெயிட்  லாஸ்  புரோகிராமில்  ஈடுபடுபவர்கள்  ரெகுலராக  தினசரி  ஒரு  வேளையாவது  சத்து  மாவில்  செய்த  இட்லி  தோசைகளை  சாப்பிட்டு  வந்தால்  பத்து  நாட்களில்  மாற்றங்கள்  தெரியும்.

0 comments: