பா ரஞ்சித்தின் வருகைக்குப்பின் தமிழகத்தில் சாதி ரீதியான படங்கள் அதிகம் வர ஆரம்பித்து விட்டன . இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் தரமான ஒரு படமாக வந்திருக்க வேண்டிய ஒரு நல்ல கதைக்கரு தான் . ஆனால் வீரியமாக சொல்லப்படாததால் சராசரிப்படமாக வந்துள்ளது
பாரதி கண்ணம்மா வுக்குப்பின் இயக்குநர் சேரன் பங்களிப்பில் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப்பேசும் படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கிறார்.2 மணி நேரப்படத்தில் கடைசி ஒரு மணி நேரம் தான் மெயின் கதை நடக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி வாலிபர். மணியக்காரர் ஆக ஆசை , விஏஓ எக்சாம் எழுத துடிப்பவர் . இவர் பரம்பரை பரம்பரையாக சாவு வீட்டில் ஈமக்காரியங்கள் செய்யும் தொழிலை செய்பவர் . ஆனால் இப்போது அவருக்கு குலத்தொழில் செய்ய விருப்பம் இல்லை
வில்லனின் மகன் நாயகனின் தங்கையைக்காதலிக்கிறான் . இதனால் இரு குடும்பத்துக்கும் ஏகப்பட்ட பகை இந்த கிளைக்கதை இடைவேளை வரை . மெயின் கதை வில்லனின் அப்பா இறந்தபின் ஆரம்பம் ஆகிரது
வில்லனின் தந்தையின் இறுதிச்சடங்கை செய்ய நாயகன் மறுக்கிறான்/. அந்தத்தொழிலையே விட்டாச்சு என்கிறான் வில்லன் நிர்ப்பந்தப்படுத்துகிறான் . கோர்ட்டில் கேஸ் நடக்கிறது . இறுதியில் என்ன ஆச்சு என்பதே மீதி திரைகக்தை
நாயகன் ஆக சேரன். ஆட்டோகிராஃப் சேரனுக்கும் த்மிழ்க்குடிமகன் சேரனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் . கன்னங்கள் எல்லாம் ஒடுக்கு விழுந்து விட்டது . வயோதிகம் துரத்துகிறது . ஆனால் பண் பட்ட நடிப்பில் அவர் குறை வைக்க வில்லை . ஊரார் முன் கூனிக்குறுகி நிற்கும்போதும், போலீஸ் ஸ்டேசனில் அடி வாங்கும்போதும் பரிதாபத்தை அள்ளுகிறார்
நாயகி ஆக ஸ்ரீ பிரியங்கா அதிக வேலை இல்லை
வில்லன் கள் ஆக லால் , அருள் தாஸ் இருவரும் சாதி வெறியை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
வேல ராமமூர்த்தி குணச்சித்திர பாத்திரத்தில் மிளிர்கிறார்.க்ளைமாக்சில் கோர்ட் சீனில் ஜட்ஜ் ஆக ராஜேஷ் , எஸ் ஏ சந்திரசேகர் , ரவி மரியா வருகிறார்கள் ., நிறவான நடிப்பு
சாம் சி எஸ் சின் இசையில் பாடல்கள் அருமை , பின்னணி இசை கச்சிதம் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் கிராமிய அழகுகள் கண் முன்
சபாஷ் டைரக்டர் (இசக்கி கார்வண்ணன்)
1 மண் வாசனை படத்தை நினைவு படுத்தினாலும் ஒரு டூயட் காட்சியில்
அந்த கிணறில் இருந்து மேலே வரும் காட்சி அருமை
2 யதார்த்தமான கதை , பாந்தமான நடிப்பு
3 காந்திமதி பாணியில் நாயகனின் அம்மா நடிப்பு அருமை
செம ஹிட் சாங்க்ஸ்
1 சிக்கிக்கிட்டேனே நான் சிக்கிக்கிட்டேனே , உனக்குள்ளே நான் சிக்கிக்கிட்டேனே
2 வானம் பார்த்து தவளைங்க கத்தும்
ரசித்த வசனங்கள்
1 ஊர்க்காரங்க முன்னாடி கை கட்டி வாய் பொத்தி நிற்பது எல்லாம் ஒரு வேலையா?
கவர்மெண்ட் உத்தியோகத்துல மட்டும் யார் முன்னாலயும் கை கட்டாம நின்னுடுவியா?
2 இங்கே நாம பார்க்கும் தொழிலை வெச்சுத்தான் நமக்கு மரியாதை , சமூகத்தை அப்படி பிரிச்சு வெச்சிருக்காங்க
3 மத்த சாதிக்காரங்க எல்லாம் அவங்களுக்குள்ளே அங்காளி., பங்காளினு கூப்பிட்டுக்கிட்டு சொந்தம் கொண்டாடுனதால சரியாகிடுச்சு , ஆனா நம்ம சாதிக்காரங்க அவங்களை சாமி சாமினு கூப்பிட்டதால அவங்க தங்களை சாமியாவே நினைக்க ஆரம்பிச்ட்டாங்க
4 மூளையை வளர்க்காம முடியை வளர்த்திருக்கான் பாரு
5மண்ணுக்குள்ளே விதை கூட முட்டி முட்டிதான் மேலே வருது ., மனுசன் நீ முட்டி மேல வர மாட்டியா?
5 காரியம் பெருசா? வீரியம் பெருசா? பொறுமையா இருந்துதான் சாதிக்கனும்
6 சாதியைஒழிக்கனும்னா முதல்ல அதன் உட்பிரிவுகளை ஒழிக்கனும்
அதுதான் உண்மையான சாதி ஒழிப்பு
7 நாதியற்ற என்னை சாதியற்ற ஆள் ஆக்கிடுங்க
8 சாதியை ஒழிச்சிட்டேன்னு சொல்றது கொசுவை ஓழிப்பது போல
9 சாதி வேண்டாம் என நினைப்பவர்கள் தமிழ்க்குடிமகன் என பதிவு செய்து கொள்ளலாம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் பால் வியாபாரம் செய்கிறான். ஊர் மக்கள் யாரும் வாங்கவில்லை . சாதிபெயரை சொல்லி அவமானப்படுத்துகிறார்கள் . அதனால் நாயகன் பாலை வேஸ்ட் பண்ணுவது போல் ஒரு காட்சி . ஊருக்கு ஊர் பால் டிப்போ இருக்கே? அங்கே பாலை விற்கலாமே? அல்லது ஏழைகளுக்கு இலவசமாக அதைக்கொடுத்திருக்கலாமே?
2 உள்ளூரில் இருக்கும் நாயகன் சாவு சடங்கு செய்ய வரவில்லை என மறுத்ததும் வெளியூரில் ஆள் பிடித்து வர வில்லன் க்ரூப் கிளம்புது , ஆனால் யாரும் வரவில்லை ., இது நம்பற மாதிரியா இருக்கு ? ப்ணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், ஆனால் ஒரு ஆள் கோடி ரூபா கொடுத்தாலு ம் இறுதி சடங்கு செய்ய வர மாட்டேன் என பன்ச் டயலாக் எல்லாம் பேசறார் ., சினிமாத்தனம்
3 நாயகன் சொந்தப்பகை காரணமாகவும், வேற காரணங்களாலும் சடங்கு செய்ய மறுப்பது ஓக்கே , ஆனால் தன் மாமனார் வில்லன் வீட்டில் சடங்கு செய்யப்போகும்போது அதை தடுப்பது சரி இல்லை . இவர் நாயகன் ரோலா? வில்லன் ரோலா?
4 மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருக்கும் டெட் பாடியை தந்து விட்டால் நாயகனை கொன்று விடுவார்கள் என கோர்ட்டில் வக்கீல் வாதிடுவது ஏற்புடையது அல்ல . கொல்லனும்னு நினைச்சா வில்லன் எப்ப வேணா கொல்லலாமே?
5 கோர்ட்டில் வக்கீல் ஆன எஸ் ஏ சி ஜட்ஜூக்கே கிளாஸ் எடுப்பது போல காட்சி அமைத்தது ஏன் ?
6 ஜட்ஜ ஆன ராஜேஷ் எஸ் பி கிட்டே , நாயகன் கிட்டே என்ன நட்ந்தது?னு கேட்கறாரு? ஸ்டேட்மெண்ட் டாக்குமெண்ட்டா இருக்காதா??
7 ஊரில் இருக்கும் எல்லாரும் வெளியூர் போய் வெவ்வேற தொழில் பார்க்கறாங்க என நாயகனே வசனம் பேசுகிறார். இவரும் அவர்களைப்போலவே வெளியூர் போய் அவர் இஷ்டப்படி வாழ்ந்திருக்கலாமே? அங்கேயே தான் இருப்பேன் என அடம் பிடிப்பது ஏன்?
8 படத்தின் மெயின் கதை இடைவேளையிலிருந்துதான் தொடங்குகிறது . அதுவரை காட்டப்படுவது கிளைக்கதையே . மெயின் க்தை சொல்லப்பட்ட விதம் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சேரன் ரசிகர்கள் யாராவது இருந்தால் பார்க்கலாம் , மற்றபடி இது ஒரு சுமார் ரகமே . ரேட்டிங் 2.25 / 5
0 comments:
Post a Comment