இயக்குநர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான “தமிழ்ப்படம் “ என்னும் தமிழ்ப்படம் தான் தமிழ் சினிமாவின் முழு நீள ஸ்பூஃப் வகையறா திரைப்படம் 1986 ல் எஸ் வி சேகர் நடிப்பில் வெளி வந்த சினிமா சினிமா என்ற படமும் அதே ஜர்னர் தான் என்றாலும் மற்ற படங்களின் க்ளிப்பிங்க்ஸ் இடம் பெற்றதால் அது ஒரு ஸ்பூஃப் வகைப்படமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது . 2018 ஆம் ஆண்டில் தமிழ் படம் பாகம் 2 வெளியாகி அதுவும் வெற்றி பெற்றது . இவரது இரண்டு படங்களூமே வசூல் ரீதியாக வெற்றி பெற்று விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் வைப்ரேஷனில் பரவியது
2010 ஆம் ஆண்டில் விஜய் ஆண்ட்டனியின் நடிப்பில் நாக்கு முக்க என்ற டைட்டிலில் இவர் ஒரு படம் இயக்குவதாக இருந்தது . பின் ஏனோ பேக் அடித்து விட்டார் . 2011 ல் தலைவலி என்ற டைட்டிலில் அஜித் + விஜய் காம்போவில் படம் பண்ணுவதாக ஒரு வதந்தி உலா வந்தது . அது புரளி என அவர் மறுத்து விட்டார்
முதல் இரண்டு படங்களையும் காமெடி ஜர்னரில் கொடுத்து விட்டு மூன்றாவது படத்தை க்ரைம் த்ரில்லர் ஜர்னரில் தந்தது ஆச்சரியம் தான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு பத்திரிக்கை ஓனரின் வளர்ப்பு மகன் . அவரது அப்பாவின் சொந்த மகன் பத்திரிக்கை ஆஃபீசிலேயே பப்ளிக்காக ஒருவனால் கொலை செய்யப்படுகிறான் .கைதாகி விட்டாலும் அந்தக்கேசில் ஏதோ மர்மம் இருக்கிறது
நாயகன் துப்பு துலக்க களம் இறங்குகிறார் அப்போதுதான் ஒரு டெக்னிக்கல் டீமை வைத்துக்கொண்டு ஒரு அமைப்பு இது போல பல கொலைகளை செய்து வருவது தெரிய வருகிறது . அவர் எப்படி அந்த கேசை டீல் செய்தார் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக விஜய் ஆண்ட்டனி . முக்கால் வாசிப்படத்தில் ஒற்றைக்கையில் கட்டுப்போட்டு வருகிறார்.( ஒத்தைக்கை ஸ்ட்ரேட்டஜி ? ) வழக்கம் போல் முகத்தில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை , ஆனால் ரஜினி , விஜய் ரேஞ்சுக்கு ஆக்சன் சீக்வ்சன்சில் பில்டப் ஓவராக இருக்கிறது
எடிட்டர ஆக நந்திதா ஸ்வேதா கச்சிதம் . பேண்ட் , டி சர்ட்டில் கெத்தாக நட்ந்து வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்
ஒரு மாறுபட்ட ரோலில் மஹிமா நம்பியார் வருகிறார் . கமல் நடித்த சத்யா படத்தில் வில்லன் ஆக வரும் கிட்டி என்ற ரோல் போல சிரித்துக்கொண்டே இருக்கும் கேர்க்டர் . நன்றாக செய்திருக்கிறார்
கண்ணன் நாராயணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பிஜிஎம் ஓக்கே ரகம் . கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்க விதத்தில் . டி எஸ் சுரேஷ் எடிட்டிங்கில் 144 நிமிடங்கள் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர் (சி எஸ் அமுதன்)
1 சிட்டில நடந்த கொலைகள் போல கிராமத்தில் எங்காவது கொலை நடந்தா அதை விசாரிப்போம், ஏன்னா ஒரு புது ஆள் கிராமத்துக்கு வந்தா அங்கே இருக்கும் ஆட்களுக்கு தெரியாமல் இருக்காது . பிடிச்சுடலாம் என நாயகன் பேசும் வசனம், அந்த ஐடியா குட்
2 கொலைகளை செய்யும் ஆர்கனைசேஷன் லீடர் யாராக இருக்கும் என்ற லீட் வெளியில் வ்ரும் அந்த இண்ட்டர்வெல் பிளாக் சீனும் , அப்போது ஒரு கேரக்டரின் ட்ரான்ஃபர்மேஷன் சீனும்
ரசித்த வசனங்கள்
1 ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு அவரோட ஸ்டேஷன் எரியாவில் நடக்கும் க்ரைம் பற்றி மட்டும் தான் தெரியும்,, ஒரு டாக்டருக்கு அவரோட க்ளினிக் வர்ற பேஷண்ட்ஸ் மட்டும் தான் தெரியும், ஆனா ஒரு மீடியா பர்சன்க்கு ஒரு ஊர்ல, ஒரு மாநிலத்துல ஏன்? உலகத்துல எந்த மூலைல என்ன நடந்தாலும் அப்சர்வ் பண்ணிக்கற ஆற்றல் இருக்கும் , இருக்கனும்
2 நமக்குப்பிடிக்கலைங்கறதுக்காக , நம்ம நம்பிக்கைக்கு எதிரா இருக்காங்க என்பதற்காக ஒருவரை வெறுத்து கொலை செய்வது தான் ஹேட் க்ரைம்
3 ஒரு கஷ்டமான விஷயத்தை , நிறைய பேரால பண்ண முடியாத விஷயத்தை நாம் பண்ண முடிஞ்சா ஒரு ஹைப் கிடைக்குமே? அதான் எனக்கு முக்கியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அந்தக்காலத்தில் எல்லாம் ஓப்பனிங் சீன்ல சாமி கும்பிடற மாதிரி காட்சி அல்லது நல்லாருக்கனும் என ஆசீர்வதிப்பது போல மங்களகரமான காட்சி வைப்பாங்க. இதுல என்னாடான்னா ஒரு குடிகாரன் சரக்கு அடிக்கற மாதிரி ஓப்பனிங் சீன் வெச்சிருக்காரு. விளங்குமா?
2 ஒரு கைல அடிபட்டு புத்தூர் மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில் நாயகன் ஆஃபீசுக்கு வந்த ரவுடிகள் 35 பேரை அடிச்சு வீழ்த்தறாரு, ஆஃபிஸ்ல இருக்கற மிச்ச சொச்ச ஆம்பளைங்க 32 பேரும் வேடிக்கை தான் பார்க்கறாங்க . ஓவர் ஹீரோயிசம்
3 நாயகன் பெரிய பதவியில் இருப்பவர் , பணக்காரர், ஆனால் மனைவி 7 மாத கர்ப்பமா இருக்கும்போது அவர் கூட அவரைப்பார்த்துக்க ஒரு நர்சையோ , ஒரு பணிப்பெண்ணையோ நியமிக்காம இருப்பது ஏன் ?
4 நாயகன் ஒரு குடிகாரன், தாடியோட கேவலமான கெட்டப்ல இருப்பது ஓக்கே , அவரது அப்பா ஒரு பத்திரிக்கையின் ஓனர் , அவரும் ஏன் பிச்சைக்காரன் மாதிரி தாடியோட இருக்காரு ? பாவமா இருக்கு அவர் கெட்டப்
5 கொலையாளி யார் என்பதை நாயகன் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக நிஷா தற்கொலை செய்வது ஓக்கே , ஆனால் அதற்கு முன் உண்மையான கொலையாளிக்கு ஃபோன் பண்ணி இப்போ நான் உன்னைக்காப்பாற்ற சாகப்போறேன் என சொல்வது ஏன்? லாஸ்ட் கால் ட்ராக் பண்ணினா கொலையாளி மாட்டிக்க மாட்டாரா?
6 கமிஷனர் ஆஃபிஸ்ல செக்யூரிட்டி சிஸ்டம் எல்லாம் ரொம்ப வீக், ஈசியா ஹேக் பண்ணலாம்னு ஒரு டயலாக் வருது, இதை சென்சார்ல எப்படி விட்டாங்க ?
7 க்ளைமாக்ஸ் ல ஹீரோ எஸ்கேப் ஆவது காதில் பூ வகை . அத்தனை போலீசும் வேடிக்கை பார்க்கறாங்க ., ஒரு ஆள் கூட சுட முயற்சி பண்ணலை
8 ஹையர் ஆஃபீசர் ஃபோன்ல ஷூட் ஹிம்னு சொல்றாரு , ஆனா ஒரு போலீஸ் கூட சுடலை
9 படத்தின் மெயின் வில்லன் சர்வர்களை எல்லாம் சிரமப்பட்டு கமிஷனர் ஆஃபீசில் மறைத்து வைப்பதற்குப்பதில் ஹார்டு டிஸ்கை மட்டும் மறைத்திருக்கலாம்
10 க்ளைமாக்சில் நாயகன் ஒரு சின்ன பேக்கில் ஹார்டு டிஸ்க்குகளை எடுத்துச்செல்கிறார். இதே வேலையை போலீஸ் ஜீப்பில் செல்லும்போது ஒரு வில்லன் ஈசியாக கொண்டு சென்றிருக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஸ்லோவக செல்லும் திரைக்கதை என்றாலும் க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்குப்பிடிக்கும் . ரேட்டிங் 2. 5 / 5
0 comments:
Post a Comment