Tuesday, November 21, 2023

1001 NUNAKAL (2022) மலையாளம் /தமிழ் - 1001 பொய்கள் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ சோனி லைவ்

     


                  இந்தப்படம்  27 வது  இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவல்  ஆஃப்  கேரளா  வில்  திரையிடத்தேர்வான  படம் . பல  விருதுகளைக்குவித்த  படம் . 2023  ஆகஸ்ட் டில்  சோனி  லைவ்ல  தமிழில்  திரையிடப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  தம்பதியின்  10 வது  வருட  திருமண  விழா . வீட்டில்  நடக்கும்  அந்த  விழா + விருந்துக்கு  நண்பர்களான  5  தம்பதிகள்  வருகிறார்கள் . ஜாலியாகப்பேசிட்டு  இருக்கும்போது  ஒருவன்  ‘ இப்போ  நாம்  ஒரு  கேம்  விளையாடலாம், இதுவரை  பரஸ்பரம்  ஒருவருக்கொருவர்  தெரியாமல்  மறைத்து  வைத்த  பொய்யை  இப்போது  ஓப்பன்  செய்ய  வேண்டும். தில்  இருப்பவர்கள்  இதில்  கலந்து  கொள்ளலாம்  என்கிறான்


 விளைய்ட்டாக  ஆரம்பித்த  இந்த   செயல்  வினை  ஆகிறது . தம்பதிகளுக்கும்  சண்டை , சச்சரவு  வருகிறது 


இது  போதாது  என  வெட்டிங்  அனிவர்சரிக்கு பரிசாக  கணவன்  தந்த  5  லட்ச  ரூபாய்  மதிப்புள்ள  கடிகாரத்தைக்காணவில்லை 


இது  ஒரு  டிராக்கில்  போகிறது 


 அந்த  வீட்டில்  பணிப்பெண்ணாக  வேலை  பார்க்கும்  பெண்ணின்  கணவன் ஆஃபீசில்  தந்த  பணத்தை  பேங்க்கில்  கட்டாமல்  ரோலிங்  பண்ணி  விட  அவன்  பண  சிக்கலில்  இருக்கிறான் . உடனடியாக  பணத்தை  ரெடி  பண்ணிக்கட்ட  வேண்டிய  நெருக்கடிக்கு  ஆளாகிறான்


இந்த  இரண்டு  டிராக்குகளையும் இந்த  திரைக்கதை  எவ்வாறு  இணைக்கிறது  என்பது  மீதி  கதை 


ஐந்து  தம்பதிகளுமே  சிறப்பாக  நடித்திருந்தார்கள் . பணிப்பெண்ணாக   வருபவர்  அனைவரையும்  ஓவர்  டேக்  செய்யும்  அளவு  தன்  பங்களிப்பை தந்திருந்தார் 


ஒரே  ஒரு  பங்களா . 12  கேரக்டர்கள் .  லோ  ப்ட்ஜெட்டில்  எடுத்திருக்கிறார்கள் . பெரிய  பெரிய  ஹீரோக்களுக்கு  100  கோடி  சம்பளம்  தந்து  நட்டம்  செய்யும்  படம்  தருவதை  விட  திரைக்கதைக்கு  முக்கியத்துவம்  தந்து  இது  போல  லோ பட்ஜெட் படம்  எடுத்தால் ஆரோக்கியமான  சினிமா வுக்கு  அது  நல்லது 


106   நிமிடங்கள்  மட்டுமே  ஓடக்கூடிய  சின்னப்படமாக  கட்  செய்திருக்கிறார்   எடிட்டர் . ஒரு  குயிக்  வாட்ச்  ஆகவே  இதைப்பார்த்து  விடலாம்


ஒளிப்பதிவு லோ  பட்ஜெட்  என்ற  மைனசையும்  மீறி  தரமாக  இருக்கிறது . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  தமர் 


சபாஷ்  டைரக்டர்


1   நாரதர்  போல  கலகத்தை  விளைவிக்கும்  அந்த   வக்கீல்  கேரக்டர்  டிசைன் 


2  ஒவ்வொரு  தம்பதியும் புதுப்புது  பொய்யை  சொல்லும்போது  அவர்  துணை  காட்டும்  ரீ  ஆக்சன்ஸ்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  சில  பஸ்  கரெக்டான  இடத்துக்கு  கரெக்ட்  டைம்க்குப்போயிடும், சில  பஸ்  பிரேக்  டவுன்  ஆகிடும், சில  பஸ்  ஆக்சிடெண்ட்  ஆகிடும் ,  அப்படி  ஆக்சிடெண்ட்  ஆன  பஸ்  பயணியை  வேற  பஸ்க்கு  மாற்றி  விடுவதுதான்  டைவர்ஸ்


2  உண்மையான  டேலண்ட்டை  ஒரு  சிலரால்  தான்  அடையாளம்  காண  முடியும் 


3  டைவர்ஸ்  ஆன  தம்பதிகள்  எல்லாம்  கிரிமினல்ஸ்  இல்லை , ஆனா  சேர்ந்து  வாழ்ந்தாலும்  ஒருவரை  ஒருவர்  ஏமாற்றி  , பொய்  சொல்லும்  தம்பதியினர் தான்  கிரிமினல்ஸ் 


4  பொதுவாக  நம்  பொய்கள்  எல்லாம்  வெளில  வராம  இருக்கும்  வரை  நாம்  நல்லவர்கள் தான் 


5  ரெண்டு  கைகளும்  சேர்ந்தாதான்  சத்தம்  வரும், யாராவது  ஒருவர்  அமைதியா  இருந்தா  ஆர்க்யூமெண்ட்  வராது 


6   பல  நேரங்களில்  அது  உண்மையா? பொய்யா? என்பதை  முடிவு  செய்வதே   அதைக்கேட்கறவங்க  தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  சமையல்  செய்யும்  பணிப்பெண்  அதிகபட்சம்  ரூ 6000  சம்பளம்  வாங்குபவராக  இருப்பார். அவரை  அவரது  கணவர்  எப்படியாவது  20,000  ரூபாய்  அட்வான்ஸ்  ஆக  வாங்கி  வா  என  சொல்வது  அபத்தம்,  யார்  அது  போல  மூன்று  மாத  சம்பளத்தை  முன்  கூட்டியே  தரப்போகிறார்கள் ?


2     நான்  லைட்டை  ஆஃப்  பண்றேன், வாட்சை  எடுத்தவங்க  அதைக்கொண்டு  வந்து  டேபிளில்  வைத்து  விடுங்கள்  என  சொல்கிறார்கள் , ஆனால்  வெளிச்சம்  காட்டிக்கொடுக்கும்  விதத்தில்  தான்  இருக்கிறது . எப்படி  திருடன்  கொண்டு  வந்து  வைப்பான் ? 


3  பொதுவாகவே  ஆண்களுக்கு  அவரவர் சம்சாரம்  குணம்  பற்றித்தெரியும், சின்னப்பொய்யை  சொன்னாலே  மாட்டிக்கொள்வார்கள் ,  இந்த  மாதிரி  கேமில்  ஒரு  பிரம்மாண்டமான  பழைய  பொய்யை  என்ன  தைரியத்தில்  சொல்கிறார்கள் ? 

-அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆண்களை  விட  பெண்களுக்கு  இந்தப்படம்  அதிகம்  பிடிக்கும்,  பொறுமை  வேண்டும்,  சுடுதண்ணீரைக்காலில்  ஊற்றியது  போல  பறக்கும்  ஆண்கள்  தவிர்க்கவும்  . ரேட்டிங்  2.75 / 5


1001 Nunakal
Promotional release poster
Directed byThamar K. V.
Written by
  • Thamar K. V.
  • Hashim Sulaiman
Produced bySalim Ahamed
Starring
  • Vishnu Agasthya
  • Remya Suresh
  • Zhinz Shan
  • Vidhya Vijaykumar
CinematographyJithin Stanislaus
Edited byNishadh Yusuf
Music by
Production
company
Allens Media
Distributed bySonyLIV
Release dates
  • 11 December 2022 (IFFK)[1]
  • 18 August 2023 (SonyLIV)[2]
Running time
106 minutes[3]
CountryIndia
LanguageMalayalam

0 comments: