ஈவன் ஹக்ஸ் எழுதிய நான் -ஃபிக்சன் நாவல் ஆன த ஹார்டு சேல் கதைக்கருவை தழுவி எடுக்கப்பட்ட படம் இது . மருத்துவ உலகில் நடக்கும் மோசடிகள் , மருந்துக்கம்பெனிகளின் தில்லுமுல்லுகள் , கமிஷனுக்கு ஆசைப்பட்டு டாக்டர்கள் செய்யும் தவறுகள் பற்றிப்பேசுகிறது . டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் இல்லாமல் ஒரு பயோகிராஃபி தொனியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சிங்கிள் மதர். தன் அம்மா, ஒரு மகளுடன் வசித்து வருகிறார். நைட் கிளப்களில் ஸ்ட்ரப்டீஸ் டான்ஸ் ஆடுவது அவரது பணி . ஒரு கவுரவமான வேலை செய்யலாம் என முடிவெடுத்து ஒரு மருந்துக்கம்பெனியில் மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ் வேலைக்கு அப்ளை செய்கிறார்
அதிர்ஷ்டவசமாக அங்கே அவருக்கு வேலை கிடைக்கிறது ., ஆனால் கம்பெனி மேனேஜர் நாயகியின் ரெஸ்யூம், பயோ டேட்டாவில் சில மாறுதல்களை செய்கிறார். நாயகி பள்ளிப்படிப்பு தான் முடித்திருக்கிறார், ஆனால் டிப்ளமோ படித்தது போல , அனுபவம் உள்ளவர் போல பொய்யான தகவல்களை பதிவேற்றி எப்படியோ கம்ப்பெனி எம் டி யிடம் சொல்லி பணியில் அமர்த்தி விடுகிறார்
நாயகி வேலைக்கு சேர்ந்திருக்கும் மெடிக்கல் கம்பெனி லாஸ்ல போய்க்கிட்டு இருக்கு . மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் பிரயாணம் செய்ய வந்திருக்கும் பயணி போல உணர்கிறார்.
வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் என்பது போல நாயகி தன் கம்பெனி தயாரிக்கும் பெயின் கில்லர் மெடிசனை டாக்டர்களிடம் மார்க்கெட்டிங் செய்து ஆர்ட்ர் பிடிக்கிறார். அவரது தொடர் உழைப்பால் கம்பெனி செம சேல்ஸ் டார்கெட் அச்சீவ் செய்கிறது. நாயகிக்கு பிரமோஷன் , சம்பள உயர்வு , இன்செண்ட்டிவ் என ஒரு அள்ளு அள்ளுகிறார்
நாயகிக்கு அது போலி மருந்து என்பது தெரியாது . கேன்சர் நோயாளிகளுக்கு ஏற்படும் வலியைக்குறைக்கும் மருந்து அது . சேல்ஸ் நன்கு முன்னேறவே அது எல்லா வலிகளுக்குமான பொது நிவாரணி என்ற பொய்யான தகவலைப்பரப்பி டாக்டர்களை பேஷண்ட்களுக்குப்பரிந்துரைக்க கம்பெனி கட்டாயப்படுத்துகிறது . இதில் நாயகிக்கு உடன்பாடில்லை
ஒரு கட்டத்தில் அப்ரூவர் ஆக மாறி போலீசிடம் உண்மைகளை எல்லாம் சொல்கிறார். கோர்ட்டில் கேஸ் நடக்கிறது . இதற்குப்பின் ஏற்படும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகி ஆக எமிலி பிளண்ட் கச்சிதமாக நடித்திருக்கிறார். மொத்தப்படத்தையும் அவர் தான் தோளில் சுமக்கிறார். அவ்ரது யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பக்க பலம்
ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் நன்றாக இருக்கின்றன
திரைக்கதை அனுமதித்தும் விரசமான காட்சிகள் வைக்காமல் கண்ணியமான நெறியாள்கை பாராட்ட வைக்கிறது
சபாஷ் டைரக்டர் ( டேவிட் யாட்ஸ்)
1 டாக்டர்களை , அவர்களின் சுயநலத்தை தோலுரிக்கும் காட்சிகள் அமர்க்களம், அவர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்பது தெரிந்தும் போல்டான காட்சிகளை அமைத்த விதம் அருமை
2 மெயின் கதைக்கு சம்ப்ந்தம் இல்லாத விஷயங்கள் ஆன நாயகி ஏன் டைவர்ஸ் பெற்றார்? நாயகனுடன் என்ன உறவு ? கம்பெனி ஓனரை , டாக்டர்களை அவர் அட்ஜஸ் செய்தாரா? இல்லையா? என்பதை விளக்காமல் மேலோட்டமாக காட்சிகளை அடுக்கிய விதம்
ரசித்த வசனங்கள்
1 நாம ரெண்டு பேரு மட்டும் இருந்தா அதுக்குப்பெரு ஈவெண்ட் இல்லை , டேட்டிங்
2 உங்க உயிருக்கே ஆபத்து என்பது போல நீங்க வேலை செய்யனும்
3 அதிகமா வரி கட்டுவதும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் அம்மா கம்பெனி ஓனருடன் நெருக்கமாக இருப்பது , பணத்துக்காக நீ யார் கூட வேண்டுமானாலும் இருப்பாய் என மகளே (நாயகி) அம்மாவைக்குற்றம் சுமத்துவது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது
2 கம்ப்பெனியில் செல்வாக்குக்கிடைத்த பின் நாயகி எதற்காக தன் அம்மா என்பதை மறைத்து அம்மாவை கம்பெனியில் ஸ்டாஃப் ஆக சேர்த்து விட வேண்டும் ? உண்மை சொல்லியே சேர்க்கலாமே?
3 நாயகியின் அம்மா தன் கம்பெனியில் பணியில் இருக்கிறார் என்ற உண்மை தெரிந்த [பின் முதலாளி ஏன் நாயகியின் அம்மாவை பணி நீக்கம் செய்ய முனைகிறார். அவர் ஆல்ரெடி அவருடன் இல்லீகல் ரிலேசன்ஷிப்பில் இருந்தும் டிஸ்மிஸ் செய்ய நினைப்பது ஏன்? என்பதற்கு விளக்கம் இல்லை
4 போலி மருந்துக்கு லைசென்ஸ் எப்படிக்கிடைத்தது ? அதுவும் பண பலத்தால் பெற்றார்களா? என்பது காட்டப்படவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - வசன ரீதியான 18+ க்ள் உண்டு . காட்சி ரீதியாக சைவம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மெலோ டிராமா , பயோகிராஃபி மூவி ரசிகர்கள் பார்க்கலாம், ஸ்லோவாக செல்லும் திரைக்கதை . தமிழ் டப்பிங்கில் நெட் ஃபிளிக்சில் கிடைக்கிறது / ரேட்டிங் 2.5 / 5
0 comments:
Post a Comment