நாயகன் படம் முழுக்க பெண் வேடத்தில் வந்தது தமிழ் சினிமாவில் முக்கியமான முதல் படம் பிரசாந்த் நடித்த ஆணழகன் தான் (1995). சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த ரெமோ (2016) அடுத்த இடம். கமல் நடிப்பில் வெளி வந்த அவ்வை சண்முகி (1996) இந்தப்பட்டியலில் இடம் பிடிக்காது . ஏன் எனில் அது பாட்டி வேடம். இவை போக விவேக் , சந்தானம் போன்றவர்கள் காமெடி டிராக்கில் பெண் வேடத்தில் கலக்கினார்கள்
மேலே குறிப்பிட்டவர்கள் போக முன்னணி ஹீரோக்கள் பலரும் பெண் வேடத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றினாலும் அது சும்மா பேருக்குத்தான்
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் திரைக்கதை , கேரக்டர் டிசைன் ஆகியவற்றில் வித்தியாசம் காட்டும் ஆயுஷ்மான் குரானா நடித்த ஃப்ரீம் கேர்ள் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது . இது தனிக்கதை , அதனால் முதல் பாகம் பார்க்காவிட்டாலும் புரியும்
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 145 கோடி வசூல் செய்த பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தன் அப்பாவுடன் வசித்து வருகிறார். அப்பாவுக்கு ஏகப்பட்ட கடன். அதை அடைக்கவே நேரம் சரியாக இருக்கிறது . நாயகனுக்கு பெண் குரலில் பேசும் திறமை இருக்கிறது , அதை வைத்து கடன்காரனை சமாளிக்கிறார்
பிரபல வார இதழ்களில் பணி ஆற்றும் பலரும் ஆண் படைப்பாளிகளைக்கண்டு கொள்ளாமல் பெண் படைப்பாளிகள் ஃபேஸ் புக் மெசேஞ்சரில் போய் வழிந்து மேடம் உங்க படைப்புகள் எல்லாம் அபாரம், எனக்கு மெயில் பண்ணுங்க , பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன் என ஜொள்ளு விடுவது போல இந்த கடன்காரன்கள் எல்லாம் ஆண்களிடம் எரிந்து விழுந்து பெண்கள் என்றால் பம்முகிறார்கள் என்பதால் நாயகன் பெண் வேடத்தில் உருவத்தில் , குரலில் ஏமாற்ற முடிவு செய்கிறார்
நாயகன் ஒரு வசதியான பணக்கார வீட்டுப்பெண்ணைக்காதலிக்கிறார். ஆனால் பெண்ணின் தந்தை நாயகன் வங்கிக்கணக்கில் 30 லட்சம் ரூபாய் இருந்தால் தான் திருமணம் என்கிறார்
நாயகன் பெண் வேடத்தில் ஒரு நைட் கிளப்பில் டான்சராக மாறி பணம் சம்பாதிக்கிறார்
நாயகனின் நண்பன் ஒரு பெண்ணைக்காதலிக்கிறார். அந்தப்பெண்ணின் அண்ணன் ஒரு ரிசர்வ் டைப். யாரிடமும் பேசாமல் இருப்பவர். அவருக்குத்திருமணம் ஆனால் தான் இவருக்குத்திருமணம் என்று சொல்லி விடுவதால் நாயகன் பெண் வேடத்தில் அந்த வீட்டில் மருமகளாக செல்கிறார்.
இதற்குப்பின் நிகழும் காமெடி களேபரங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஆயுஸ்மான் குரானா பெண் வேடத்தில் அதகளம் பண்ணி இருக்கிறார் என்றாலும் தமிழில் நம்ம ஆட்கள் செய்த பர்ஃபார்மென்சுடன் ஒப்பீடு செய்தால் ஒரு மாற்றுக்குறைவு தான்
நாயகி ஆக அனன்யா பாண்டே சைஸ் ஜீரோ அழகியாக வலம் வருகிறார், அதிக வாய்ப்பில்லை
படத்தில் வில்லன் என யாரும் இல்லை , மற்ற அனைவரின் நடிப்பும் கச்சிதம்
134 நிமிடங்கள் ஓடும்படி படத்தை ட்ரிம் பண்ணி இருக்கிறார் எடிட்டர்
ஒளிப்பதிவு கலர்2 ஃபுல்லாக இருக்கிறது
சபாஷ் டைரக்டர் ( ராஜ் சாண்டியா)
1 நாயகனை ஒருதலைக்காதலாக லவ்வும் அநத ஆண்ட்டியை நாயகனின் அப்பா கரெக்ட் பண்ண துடிப்பது காமெடி கலாட்டா
2 நாயகன் லேடி டான்சராக பணி ஆற்றும் நைட் கிளப் ஓனர் நாயகனை பெண் என நினைத்துக்காதலிக்கும் காமெடி டிராக்கும் அசத்தல்
3 நாயகனின் நண்பன் காதலிக்கும் பெண்ணின் அண்ணன் கே டைப் என்பதும் அவன் நாயகனிடம் உங்க கிட்டே பழகும்போது என் காதலன் நினைவு வந்தது என உருகுவதும் வெடிச்சிரிப்பு
ரசித்த வசனங்கள்
1 பயந்துட்டீங்களா? சும்மா காமெடி பண்ணேன்
இனி ஜோக் சொல்லும்போது இதுஜோக்னு ஒரு முன்னறிவிப்பு கொடும்மா, நாங்க ரெடி ஆகிக்கறோம்
2 மிடில் கிளாஸ் பசங்க கிட்டே இருக்கும் குணம் என்ன தெரியுமா? சொந்தக்காலில் நிற்கனும்
3 உங்க காதலுக்கு நான் குறுக்கே நிற்கலை, ஆனா ஷாரூக்கிற்கு மேரேஜ் ஆகாம இவளுக்கு மேரேஜ் பண்ண முடியாது
ஷாரூக்? அவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி 3 குழந்தைகள் இருக்கே?
அய்யோ, ஷாரூக்கான் அல்ல , உன் காதலியோட அண்ணன் ஷாரூக்
4 ஒரு இந்தியப்பெண் தானே? நீ? அரை மணி நேரம் லேட்டா வர்றதுதானே இந்திய கலாச்சாரம்? நீ முன் கூட்டியே வந்து என்னை டென்ஷன் பண்ணிட்டே!
5 எதுக்காக அவனை அடிக்கறீங்க ?
சன்னி லியோன் படம்னு பொய் சொல்லி சன்னி தியோல் நடிச்ச படத்துக்குக்கூட்டிட்டுப்போய்ட்டான்
6 ஒரு பெண்ணாக இருப்பது எவ்வளவு கஷ்டமோ அதை விட கஷ்டம் ஒரு பெண்ணாக நடிப்பது
7 டியர் பூஜா , என்னைத்தெரியலையா? நான் தான் உன் டைகர்
யார்றா நீ? பல்லி மாதிரி இருந்துட்டு டைகர்னு பீலா விடறே?
8 உங்க பசங்களுக்கு டான்சும் வர்லை , இங்க்லீஷூம் வர்லை
அன் பாசிபிள்
என்னது ? உங்களுக்கும் இங்க்லீஷ் வர்லையே? இம்ப்பாசிபிள் தானே சொல்லனும்?
9 ஏய் மிஸ்டர், எனக்கு இது வரை 3 தடவை கல்யாணம் ஆகியும் சரியான ஜோடி இன்னும்கிடைக்கலை
ஓஹோ , முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு தொடர்ந்து ட்ரை பண்ணிட்டே இருக்கீங்களா? வெரிகுட்
10 இங்கே பாரம்மா மின்னல் , நம்ம வீட்ல எத்தனை ரூம்ஸ் இருக்கோ அதை விட அதிக எண்ணிக்கைல உனக்கு மேரேஜ் ஆகி இருக்கு, நிறுத்தனும், எல்லாத்தையும் நிறுத்தனும்
11 என் மூன்றாவது கல்யாணத்தப்போ நான் என்ன சொன்னேன்னு நினைவிருக்கா? எப்போ என்னை விட கம்மியான வயசுள்ள ஆணைக்கல்யாணம் பண்றேனோ அன்னைக்குதான் என் கடைசி கல்யாணம்னு,, அது இப்போ நிறைவேறப்போகுது
12 என்னை இந்த ஆள் கல்யாணம் பண்ணி என் 3 வருச இள்மையை வேஸ்ட் பண்ணிட்டான்
என்னது ? இளமையா? ஏம்மா கிழ போல்ட்டு நமக்கு மேரேஜ் ஆகும்போது உன் வயசு 45
13 என்னது ? இது சவுரியா? தனியா வந்துடுச்சு?
அது வ்ந்து முடி கொட்டிடுச்சு?
இவ்ளோ பல்க்காவா கொட்டும் ?
14 சாரி சார், உங்க புரொபோசலை நான் ஏத்துக்க முடியாது , ஆல்ரெடி ஒரு பையன் என்னை லவ் பண்றான்
பையன் என்ன பண்றான் ?
அதான் சொன்னேனே? என்னை லவ் பண்றான்
அய்யோ ராமா, பர்சனலா என்ன பண்றான்னு கேட்கலை , புரொஃபஷனலா என்ன பன்றான்?
சிபிஐ
வாட்?
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா ல கேஷிய்ர்
15 அய்யய்யோ ஜாக்கெட்க்குள்ளே வெச்சிருந்த பால்ஸ் ல ஒரு பால் கீழே விழுந்துடுச்சே? சரி , ஒரு ஆரஞ்சுப்பழம் ஆர்டர்பண்ணுவோம், சமாளிப்போம்
மேடம், ஆரஞ்ச் ஆர்டர் பண்ணீங்களே?
யோவ், நான் ஆரஞ்ச் ஜூசா கேட்டேன்? ஆரஞ்சுப்பழம்
சாரி அது ஸ்டாக் இல்லை , முலாம்பழம் தரவா?
அதுல சின்ன சைஸ் இருக்கா?
சின்னதுன்னா திராட்சை ஓக்கே வா?
அது ரொம்ப சின்னதா இருக்குமே?
16 நான் டாய்லெட் போக வேண்டிய டைம் நெருங்கிடுச்சு
‘ டைம் டேபிள் போட்டு டாய்லெட் போவியா?
அங்கே போனாத்தானே டிரஸ் சேஞ்ச் பண்ணி நான் சேஞ்ச் ஆக முடியும் ?
17 பூஜா செத்துட்டா என்பதை எங்களால நம்ப முடியாது
ஏன் இன்ஸ்பெக்டர்?
பூஜாவோட செல் ஃபோன் ஆக்டிவாத்தானே இருக்கு?
18 ரிலெஷன்ஷிப்க்குள்ளே ஏதாவது டவுட் இருந்தா ஃபேஸ் டூ ஃபேஸ் கேட்டு க்ளியர் பண்ணிக்கனும்
19 தன் காதலி வேற ஒருத்தனைக்கல்யாணம் பண்ணிக்கிட்டு தன்னைக்கைவிடும் முதல் ஆள் நான் மட்டும் இல்லையே? இதுக்கு முன்னால எத்தனையோ சம்பவம் நடந்திருக்கு
20 காதலிக்கற ஒரே ஒரு காரணத்துக்காக எங்களை குறைச்சு எடை போட்டுடடாதீங்க . நேரம் வரும்போது நாங்களும் சாதிப்போம்
21 மிடில் கிளாஸ் ஆட்கள் ஆறு மாசத்தில் 30 லட்ச ரூபாயை செலவு கூட பண்ண முடியாது , எப்படி அவ்வளவு சம்பாதிக்க முடியும்?’
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் பெண் வேடத்தில் வரும் ஓப்பனிங் ஷாட்டில் வரும் தீம் மியூசிக் பூவே உனக்காக படத்தில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் பாட்டு இசை
2 மொள்ளமாறித்தனம் பண்ணி பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் அதை சாணக்கியத்தனம் என சொல்லிக்கொள்வது போல நாயகன் பண்ணுனதே ஃபிராடுத்தனம் . அவர் ஏமாற்றிய எல்லோரையும் க்ளைமாக்சில் வரிசையாக நிற்க வைத்து அவர்கள் மீதே குற்ரம் சொல்வதும் அவர்கள் பம்முவதும் சரியான நாடகத்தனம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - காட்சி ரீதியாக 18+ இல்லை , ஆனால் வசனத்தில் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான படம் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம், ரேட்டிங் 2.75 / 5
Dream Girl 2 | |
---|---|
Directed by | Raaj Shaandilyaa |
Written by |
|
Produced by | |
Starring | |
Cinematography |
|
Edited by | Hemal Kothari |
Music by | Score: Hitesh Sonik Songs: Meet Bros Tanishk Bagchi Arko |
Production company | |
Distributed by | Pen Marudhar Entertainment |
Release date |
|
Running time | 134 minutes[1] |
Country | India |
Language | Hindi |
Budget | ₹35 crore[2] |
Box office | ₹140.26 crore[3] |
0 comments:
Post a Comment