கவுண்டமணி , வடிவேலு , சந்தானம் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூவருமே புகழின் உச்சத்தில் ஒரு நாள் ஷூட்டிங்க்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் . நாயகன் ஆன பின் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை . சந்தானம் நடித்த படங்களிலேயே அதிக வசூல் தில்லுக்கு துட்டு தான். அந்த வரிசையில் இந்தப்படம் 43 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது . திரைக்கதை தான் பிளஸ்.
ஸ்பாய்லர் அலெர்ட்
இடைவேளைக்கு முன் இடைவேளைக்குப்பின் என இரு பிரிவாக திரைக்கதையைப்பிரிக்கலாம்
ஒரு பங்களா. அதில் கணவன், மனைவி , மகள் , பாட்டி என வசிக்கிறார்கள் . அவர்கள் கேம் ஷோ மாதிரி ஒன்றை நடத்துகிறார்கள் . எண்ட்ரன்ஸ் ஃபீஸ் ஆக எவ்வளவு கட்டுகிறார்களோ அதைப்போல் இரு மடங்கு பரிசு என அறிவிக்கிறார்கள் . மக்கள் இதை நம்பிப்போய் உயிர் இழந்தது தான் மிச்சம்., யாரும் ஜெயிக்கவில்லை . இதனால் மக்கள் கொதித்து அந்த பங்களாவை தீ வைத்துக்கொளுத்தி விடுகிறார்கள் . அனைவரும் இறந்து விடுகிறார்கள் . பேய் ஆக மாறிய பின் ஜென்மக்கூறு செருப்பில் அடித்தாலும் போகாது என்பது போல அதே கேம் ஷோ நடத்துகிறார்கள். அந்த கேம் ஷோ வில் நாயகன் அண்ட் வில்லன் டீம் எப்படி மாட்டி தப்பிக்கிறார்கள் என்பதே மீதிதிரைக்கதை
இந்த கேம் ஷோ தான் திரைக்கதையின் மெயின் என்றாலும் கிளைக்கதையாய் முதல் பாதியில் வரும் கதை மெயின் கதையை விட நல்ல காமெடி
நாயகன் ஆக சந்தானம். அவர் ஏன் முகத்தை எப்போதும் விரைப்பாக வைத்துக்கொள்கிறார் என்று தெரியவில்லை ., அவரது பிளஸ் பாயிண்ட்டே யதார்த்த,மான முகமும் டயலாக் டெலிவரியும், கவுண்ட்டர் கொடுக்கும் பாங்கும் தான். நாயகன் ஆசையில் அவற்றை எல்லாம் இழந்து விட்டாரா? குறைத்துக்கொண்டாரா? தெரியவில்லை
லொள்ளு சபா மாறன் , கிங்க்ஸ்லீ , முனீஸ்காந்த் , பழைய ஜோக் தங்கதுரை , மொட்டை ராஜேந்திரன் என ஒரு காமெடியன்ஸ் பட்டாளமே படத்தில் உண்டு , அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் . எல்லோருக்கும் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்து கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்
125 நிமிடங்கள் படம் ஓடும்படி க்ரிஸ்ப் ஆக கட் செய்திருக்கிறார் எடிட்டர். எங்குமே போர் அடிக்கவில்லை
தீபக்குமார் ஒளிப்பதிவு சிறப்பு , பின்னணி இசை கச்சிதம் . திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எஸ் பிரேம் ஆனந்த்
சபாஷ் டைரக்டர் (எஸ் பிரேம் ஆனந்த் )
1 எல்லாகேரக்டர்களையும் அறிமுகப்படுத்தும் முதல் பாதி செம ஸ்பீடு காமெடி கலாட்டா
2 ஆளாளுக்கு கவுண்ட்டர் கொடுப்பது படத்தின் பெரிய பிளஸ் . எல்லாமே கச்சிதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
3 குழந்தைகளைக்கவரும் வண்ணம் கேம் ஷோ
ரசித்த வசனங்கள்
1 மனிதர்களோட பலவீனமே பேராசைதான் , அதை வெச்சுத்தான் பலரும் இங்கே வாழ்ந்துட்டு இருக்காங்க
2 நாம என்ன கல்யாணத்துக்கா போறோம்? ஓலா டாக்சி புக் பண்ணி இருக்கீங்க ? பண்றது கடத்தல் ? ஒரு காரை ஆட்டையைப்போட்டுட்டு வாங்கடா
3 பொண்ணு கல்யாண டிரஸ்லயே நல்லால, இந்தப்பொண்ணு நார்மல் டிரஸ்லயே நல்லாருக்கு , பேசாம இந்தப்பொண்ணைக்கல்யாணம் பண்ணிக்கவா?
4 முதலாளி , வேலை செஞ்சவங்க காசு கேட்கறாங்க
நீங்க கூடத்தான் வேலை செஞ்சீங்க, காசு கொடுத்தேனா?
ஒண்ணாந்தேதி பிறந்தா காசு கொடுக்கறதா சொன்னீங்களே?
நீ அஞ்சாம் தேதி தான் பிறந்தவனாமே?
5 சாவுங்கறது மூச்சு நின்னு போறது மட்டுமில்ல , பிடிக்காத வாழ்க்கையை வாழ்வதும்தான்
6 மொத்த பாண்டிச்சேரியும் அவன் கைக்குள்ளே
ஏன்? பாண்டிச்சேரி மேப்பை மடிச்சு கைல வெச்சிருக்கானா?
7 இந்த காலிப்பெட்டியைத்திருட மணி ஹெய்ஸ்ட் மாதிரி மாஸ்க்வேற
8 இது யார் காசுன்னு தெரியலையே?
யார் காசா இருந்தா என்ன? குபேரனே நமக்கு கூகுள் பே பண்ணி இருக்காப்ல
9 எங்கே போகனும்?
கொஞ்ச தூரம் போனதும் ஆல மரம் வரும், அதுல லெஃப்ட் எடுக்கனும்
லெஃப்ட் தானே?
ரைட்டு
டேய். இப்போதானே லெஃப்ட்னு சொன்னே
ஹைய்யோ , லெஃப்ட்னு ரைட்டா சொன்னேனு சொன்னேன்
10 இவளைத்தூக்கினா அவன் கிடைப்பான்னு சொன்னே, இப்போ இவ்ளையே தூக்கிட்டாங்களே?
அதனால என்ன? அதான் இவன் இருக்கானே? இவனைத்தூக்கினா அவ கிடைப்பா , அவளைத்தூக்கினா அவன் கிடைப்பான்
11 நான் பார்க்கறதுக்குத்தான் பனி , தொட்டா சனி .. சாரிபா டைமிங் தெரியாம ரைமிங் பேசிட்டேன்
12 சாதாரணமா ஒரு குழந்தை கிட்டே இருந்து பொம்மையைப்பிடுங்கினாலே அது கத்து,ம், இது பேய்க்குழந்தை வேற , பேய் மாதிரி கத்துமே?
13 உனக்கு அதை ரிப்பேர் பண்ணத்தெரியுமா?
ஒரு அஞ்சு நிமிசம் டைம் கொடுப்பா
எதுக்கு ? தெரியாதுனு சொல்றதுக்கா? அதை இப்பவே சொன்னா என்ன?
14 காண்டா மிருகம் கருப்பா ஒரு குட்டி போட்ட மாதிரி ஒருத்தன் வந்திருக்கான் பாரு
15 வீடு என்ன கரி பிடிச்ச கடாய் மாதிரி இருக்கு ?
நாம என்ன குடித்தனமா நடத்தப்போறோம்?
16 கரி பிடிச்ச வீட்ல வெறி பிடிச்ச பேயாலதான் நமக்கு சாவு
17 யோவ் , இவளை நீ குத்தக்கூடாது , இவளைக்குத்தும்போது ஒருவன் தடுக்க வருவான், அவனைத்தான் நீ குத்தனும்
18 இந்த கர்ச்சீஃபால அவ கையைக்கட்டு
கையைகட்டுனா கால் ஃப்ரீயா இருக்குமே? ஓடிட மாட்டா?
அப்போ காலைக்கட்டு
காலைக்கட்டுனா கை ஃபிரீயா இருக்குமே? அவுத்துட மாட்டா?
19 ஒரு பெண்ணுக்காக நாம ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு சாக வேண்டாம், பேசாம நீ செத்துடு
20 யார் இந்த ஆஃபாயில் ஆயா? அய்யோ பேயா? வுடு ஜூட்
21 பத்துக்கு பத்து இடத்துல பத்து தடவை சுத்த வெச்சுட்டியேடா பஞ்ச் தர்மலிங்கம்
22 நான் கொரானாவை விட கொடூரமானவன்
பின்னாடி ஒமைக்ரான் இருக்கறது தெரியாம பஞ்ச் பேசிட்டு இருக்கான் பஞ்சு மிட்டாய் தலையன்
23 இங்கே ஃபிரெஞ்ச்ல என்ன எழுதி இருக்கு தெர்யுமா?
தமிழ்ல எழுதுனாலே எனக்கு படிக்கத்தெரியாது
24 பேய் வீடு பிக் பாஸ் வீடு ஆகிடுச்சு
25 காசு வ்ந்ததும் ஃபிரண்ட்சை கழட்டி விடக்கூடாது , அவங்களை ஆட்டோ வெச்சு அனுப்பச்சொல்றியே? வேண்டாம், நடந்தே போய்டுவானுங்க
26 இந்த பணப்பையை நீ எடுத்துக்க், தங்கக்காசு மூட்டையை நீ எடுத்துக்க , எடுத்து காரில் வெச்சுட்டு கிளம்பிடுங்க
27 நீ மட்டும் இந்த உதவியைச்செய்யலைன்னா இரண்டாம் பாகத்துல வந்து உன்னைப்பழி வாங்குவேன்
இதுவே மூன்றாம் பாகம் தான் , பேரை மாத்தி எடுத்து வெச்சிருக்கோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
காமெடிப்படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது , பார்க்கனும்னு நினைச்சா காமெடி படங்களையே பார்க்கக்கூடாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அனைத்துத்தரப்பினரையும் கவரும் படம் . ஜாலியாக சிரிக்கலாம், ரசிக்கலாம். ரேட்டிங் 3 / 5
DD Returns | |
---|---|
Directed by | S.Prem Anand |
Written by | S.Prem Anand |
Produced by | C. Ramesh Kumar |
Starring | Santhanam Surbhi |
Cinematography | Dipak Kumar Padhy |
Edited by | N. B. Srikanth |
Music by | OfRo |
Production company | RK Entertainment |
Release date |
|
Running time | 125 minutes |
Country | India |
Language | Tamil |
Box office | est. ₹41.28 crore |
0 comments:
Post a Comment