ரயில்வே துறையில் IRCTC , IRFC என மோனோபோலி ஸ்டாக்குகள் இருந்தாலும் RVNL ஏனும் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிட்டெட் எனும் ஷேர் மிக வேகமாக உயரும் பங்காக மாறி உள்ளது
2022 ஆம் வருடம் மே மாதம் 4 ம் தேதி அன்று ரூ 32 இருந்த பங்கின் விலை ஒரே ஆண்டில் 322% கூடி இன்று அதாவது மே 5 2023 அன்று ரூ 141.85 ஆக உள்ளது
இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் , மகிழ்ச்சியையும் அளித்துள்ளது . இது ஒரு மல்ட்டி பெக்கர் ஸ்டாக் ஆக மாறி உள்ளது .
காரணங்கள்
1 2021-2022 கால கட்டத்தில் 18 பிராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது
2 கை வசம் 73 பிராஜெக்ட்கள் முடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது
3 2020 - 2021 கால கட்டத்தில் 102 பிராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது
4 ரூ 58000 கோடி க்கான ஆர்டர் ரஷ்யா கம்பெனியுடன் சேர்ந்து முடிக்க உள்ளது
5 வந்தே பாரத் ரயில்வே திட்டத்தில் ஆர் வி என் எல் -ன் பங்கும் இருக்கிறது
4 ஹெச் ஆர் டி ஐ எனும் தனியார் நிறுவனம் கடந்த வாரத்தில் 7 லட்சம் ஆர்விஎன் எல் பங்குகளை வாங்கி உள்ளனர்
கடந்த கால வரலாறு
2019 ம் ஆண்டில் மார்க்கெட்டில் லிஸ்ட் ஆகும்போது 20 ரூபாய்க்கு இருந்த பங்கு கோவிட் காலத்தில் 11 ரூபாய்க்கு இறங்கியது . 2021 ஜனவரியில் தான் இதன் பங்கு 25 ரூபாயாக உயர்ந்தது பின் 2022 செப்டம்பரில் 46 ரூ ஆக உயர்ந்தது
பங்கு லிஸ்ட் ஆகும்போது இந்தப்பங்கை நீங்கள் வாங்கி இருந்தால் இப்போது 422% உயர்வு ஆகும் .
இப்போது வாங்கினாலும் ரூ 150 டூ ரூ 175 வரை உயர வாய்ப்புள்ளது ., இறங்கினால் ரூ 100 வரை இறங்கலாம், எனவே ரிஸ்க் புரிந்து முதலீடு செய்யவும்
நான் செபியில் பதிவு பெற்ற நபர் கிடையாது . இந்தப்பங்கை வாங்குங்கள் வாங்க வேண்டாம் என சொல்லவில்லை , இது எஜூக்கேஷன் பர்ப்பஸ் கட்டுரை மட்டுமே
இதன் புக் வேல்யூ 11 ரூபாய் . ஒரு பிராஜெக்ட்டில் 200 கோடி ரூபாய் லாபம் பெறுகின்றனர் . ஷேர் ஹோல்டிங்க் பேட்டர்ன் ல பார்த்தாலும் அரசாங்கத்திடம் 91% உள்ளது ,. பொது மக்களிடம் 9 % தான் உள்ளது . இது மிகவும் பாதுகாப்பானது
கட்டுரை எழுதிய நாள் - 5/4/2023
0 comments:
Post a Comment