2019 ல் ரிலீஸ் ஆன டிரைவிங் லைசென்ஸ் , 2020 ல் ரிலீஸ் ஆன அய்யப்பனும் கோஷியும் . என்ற இரு மெகா ஹிட் ம்லையாளப் படங்களின் திரைக்கதை ஆசிரியர் ஒருவரே! சச்சி என்பவர் தான். இருவருக்கிடையே ஏற்படும் ஈகோ கிளாஸ் தான் இரு படங்களின் ஒன் லைன், அதே மாதிரி சாமான்யனுக்கும் , ஒரு போலீஸ் ஆஃபீசருக்கும் மோதல் ஏற்பட்டு ஈகோ கிளாஸ் நிகழ்ந்தால் என்ன ஆகும் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன்
பிரதாப் போத்தன் இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி நடித்து 1995 ல் ரிலீஸ் வெளியான லக்கிமேன் படக்கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புனீத் ராஜ் குமார் , பிரபு தேவா நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான கன்னடப்படத்துக்கும் , இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மனைவி , ஒரு மகன் என மிடில் கிளாஸ் வாழ்க்கை நடத்தும் சாமான்யன். சின்ன வயதில் இருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவன் என அழைக்கப்பட்டவன். ரியல் எஸ்டேட் கம்பெனியில் கமிஷன் ஏஜெண்ட் ஆக வேலை பார்த்து வருகிறான்.
எதிர்பாராதவிதமாக லாட்டரி பரிசு போல ஒரு சீட்டுக்கம்பெனியில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் கிடைக்கிறது . அதற்குபின் நாயகன் வாழ்வில் ஏகப்பட்ட திருப்பங்கள் . கம்பெனியில் கமிஷன் ஏஜெண்ட் ஆக இருந்தவன் ஆன் ரோல் ஸ்டாஃப் ஆகிறான்.
மகிழ்ச்சியாகப்போய்க்கொண்டிருக்கும் இவன் வாழ்க்கையில் ஒரு போலிஸ் ஆஃபீசர் குறுக்கே வருகிறார்.அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இவர்கள் மோதல் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை
நாயகன் ஆக யோகிபாபு. மொக்கைக்காமெடி செய்வ்தை விட கேரக்டர் ரோல் செய்வது நல்லது . நன்றாக நடிப்பும் வருகிறது. கவுண்டமணி பாணியில் அடுத்தவர்களை உருவ கேலி செய்யாமல் இது போல் குணச்சித்திர ரோல்கள் செய்வது நல்லது
நாயகி ஆக ரெய்ச்சல் ரொபாக்கா. கலக்கி இருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத முகம்/.கடைசி விவசாயி படத்தில் ஜ்ட்ஜ் ஆக பின்னிப்பெடல் எடுத்தவர் இதில் மிடில் கிளாஸ் மனைவி ஆக அடக்கி வாசித்திருக்கிறார்
வில்லன் ஆக நடுநிசி நாய்கள் நாயகன் வீரா. கம்பீரமான தோற்றம். நாயகனுக்கு நிகரான ரோல். நாயகனின் ந்ண்பனாக அப்துல் லீ யதார்த்தமான நடிப்பு
ஷான் இசை பின்னணி இசை இரண்டும் அருமை . 2 பாடலக்ள் குட் .சந்தீப் விஜயின் ஒளிப்பதிவு பாராட்ட வைக்கிறது
சபாஷ் டைரக்டர் ( பாலாஜி வேணுகோபால்)
1 மலையாளப்படங்களின் கதைக்கருவை பட்டி டிங்கரிங்க் பண்ணி இருக்கிறோம் என்பது தெரியாமல் இருக்க முதல் பாதியை அந்தக்காரை வைத்தே நகர்த்திய சாமார்த்தியம்
2 நாயகியின் கேரக்டர் டிசைனும் , அவரது இயல்பான நடிப்பும்
3 கருத்தான வசனங்கள் பல இடங்களில் கவனத்தை ஈர்க்கிறது
செம ஹிட் சாங்க்ஸ்
1 எது தான் சந்தோஷம் ? வண்ணமில்லா வாழ்க்கையிலே வழி கிடைச்சா சந்தோஷம்
2 தொட்டுத்தழுவும் தென்றலே
ரசித்த வசனங்கள்
1 அதிர்ஷ்டம் இல்லாதவன் லட்டு கேட்டாக்கூட பூந்தி தான் கிடைக்கும்
2 பூந்தி , லட்டு ரெண்டும் ஒண்ணுதான், ஆனால் லட்டுக்குக்கிடைக்கும் மரியாதை பூந்திக்குக்கிடைக்காது
3 பெட்ரோல் பங்க்ல ஃபோன் பேசக்கூடாது
பில் பே பண்றதுக்கு ஃபோன் வேண்டும், ஆனா ஃபோன் பேசக்கூடாது? என்னா டெக்னாலஜிடா?
4 ஒரு காட்டுக்கு ஒரு சிங்கம் தான் இருக்க முடியும்
ஆனா எந்தக்காட்டுக்கு ராஜாவா இருக்கனும்னு அந்த சிங்கம்தான் முடிவு பண்ணும், ராஜா இல்லை
5 மத்தவங்களை கிண்டல் பண்ணிட்டே இருக்கறவங்களுக்கு வாழ்க்கையைப்பற்றி பயம் இருக்கும்
6 என் யூ ட்யூப் சேனல்க்கு ஒரு பேட்டி கொடுத்தா ஒரு ஸ்டெப்னி ஃப்ரீ
\ஸ்டெப்னின்னாலே ஃப்ரீதானே?
7 சார், ஒரு சின்ன லீகல் டவுட். தனியா பைக்ல வந்தா பிடிக்கும் போலீஸ் ஃபேமிலியோட வந்தா பிடிக்கறதில்லையே, அது ஏன் ?
ஃபேமிலியோட வர்றவன் தப்பு பண்ண மாட்டான்னு ஒரு ஐதீகம்
கோலமாவு கோகிலா ல குடும்பத்தோட சேர்ந்து தானே கஞ்சா கடத்துனாங்க? ஃபேமிலியோட வர்றவன் ஆல்ரெடி பிரச்சனையோடதான் இருப்பான், மேலும் நாம ஏன் பிரச்சனை கொடுக்கனும்னு தான்... ?
8 பெட்ரோல் போடும் முன் ஜீரோ பார்த்துக்குங்க சார்
என் வாழ்க்கைல இனி ஜீரோவே கிடையாது
8 ஒரு போலீஸ் காரனுக்கு இவ்ளோ திமிர் இருக்கக்கூடாது
திமிர் இல்லாம போலீஸ்காரனே இருக்கக்கூடாது
9 சாதாரண மனிதன் தான் சூப்பர் ஹீரோ
நேர்மையான மனிதன் தான் சூப்பர் ஹீரோ , ஏன்னா அவன் முன்னால சாதாரண மனிதன் கை கட்டித்தான் நிக்கனும்
10 காமன் மேன் யானை மாதிரி , பார்க்க சாதாரணமா தான் இருப்பான் , மதம் பிடிசிடுச்சு பாகன் எனக்கூடப்பார்க்கமாட்டான், தூக்கிப்போட்டு மிதிச்சிடுவான்
11 காட்டுக்கே சிங்கமா இருந்தாலும் யானையைப்பற்றித்தெரிஞ்ச சிங்கமா இருக்கனும்
12 கடவுளைக்கேட்டா கொடுக்க மாட்டார், நாமா தந்தாலும் எடுத்துக்க் மாட்டார்
13 நல்லவனா இருந்தா கடைசி வரை நல்லவனாத்தான் இருக்க முடியும், சத்தியமா நல்லா இருக்க முடியாது
14 சாப்பிட்டுட்டு இருக்கும்போது சாமியே வந்தாலும் எந்திரிக்கக்கூடாது
15 இந்த உலகத்துல முதுகுல குத்துன ப்ரூட்டசை விட முகத்துல குத்துன முகமது அலிக்குதான் மரியாதை ஜாஸ்தி
16 நான் எல்லாம் செஞ்ச தப்புக்கே சாரி கேட்காதவன், என்னைப்போய் என் கடமையை செஞ்சதுக்கே சாரி கேட்க வெச்சுட்டே இல்ல?
17 இந்த உலகத்துலயே நமக்கு எது ரொம்பப்பிடிச்சிருக்கோ அதைத்தான் இந்த இயற்கை முதல்ல தூக்கும் ஏன் தெரியுமா? அதுவும் இல்லாம நம்மால் வாழ முடியும்னு நமக்கே கத்துக்கொடுக்கத்தான்
18 வெளில கண்டவன் கிட்டே காட்ட முடியாத கோபத்தை வீட்ல கட்னவ கிட்டே காட்டத்தானே ஆம்பளைங்களுக்குக்கல்யாணம் ?
19 வாழ்க்கைல ரெண்டே பேரு தான் 1 வலி கொடுக்கறவங்க 2 வழி கொடுக்கறவங்க
20 வலி கொடுக்கறவங்களைப்பற்றியே யோசிச்சுட்டு இருந்தா வழி கொடுக்கறவங்களைப்பற்றி எப்படித்தெரியும் ?
21 ஃபர்ஸ்ட் டைம் பாடறதுக்கு நிரோஷாவா இருக்கு சார்
யோவ், அது நெர்வஸ்
22 எமோஷனலா இருந்தா இண்ட்டெலிஜென்ஸ் வேலை செய்யாது
23 மன்னிப்பு என்பது சின்ன வார்த்தைதான், ஆனா அதைக்கொடுக்கறவங்க மனசைப்பொறுத்துத்தான் அது சின்னதா? பெருசா?னு தெரிய வரும்
24 இந்த உலகம் அழகா இருக்கறவங்களை ரசிக்கும், அறிவா இருக்கறவங்களை மதிக்கும், பணத்தோட இருக்கறவங்களைப்பார்த்துப்பொறாமைப்படும்.பவர் ல இருக்கறவங்களைப்பார்த்து பயப்படும் , ஆனா என்னைக்குமே உழைக்கறவங்களை மட்டும் தான் நம்பும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நான் போலீஸ் டிப்பார்ட்மெண்ட் என்பது என் பக்கத்து வீட்டு ஆட்களுக்குக்கூடத்தெரியாது , அவ்ளோ சீக்ரெட் என டயலாக் பேசும் ஆஃபீசர் நடு ரோட்டில் டிராஃபிக் இன்ஸ்பெக்டர் வேலை எல்லாம் பார்க்கிறாரே? ஊருக்கே தெரியுமே?
2 ஏஜெண்ட் ஆக இருந்த நாயகன் அ தே கம்பெனியில் திடீர் என எம்ப்ளாயி ஆகிறான். ஐ டி கார்டு தரும்போது ஆனந்த அதிர்ச்சி அடைகிறான், எல்லாம் ஓக்கே ஐ டி கார்டில் ஒட்ட ஃபோட்டோ , பிளட் க்ரூப் டீட்டெய்ல்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணி ஃபார்ம் தந்த பின் தானே ஐ டி கார்டு வரும் ? அவருக்கு முதலிலேயே தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே?
3 நிச்சயம் ஆன பெண்ணை ரிஜெக்ட் பண்ண இதுவரை 1000 பேர் 1000 காரணம் சொல்லி இருக்காங்க, ஆனா போலீஸ் ஆஃபீச்ரோட நாய் நான்கு நாட்களாகக்காணாமல் போனதால் வருத்தத்தில் இருக்கிறார் என அவரோட ஃபியான்சி அவருக்கு ஒரு புது நாய் கிஃப்ட்டா தர என் நாய் காணாமதான் போச்சு, சாகலை , இனிமே நமக்கு செட் ஆகாது, பிரேக்கப் என சொல்வது செம காமெடி
4 அன்னியோன்யமான தம்பதியாய் இருக்கும் நாயகன் - நாயகி பிரிய அழுத்தமான காரணம் சொல்லப்படவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வசனங்களுக்காகவே பார்க்கலாம், கடுப்படிக்கும் மொக்கைக்காமெடி செய்யாமல் டீசண்டாக நடித்திருக்கும் யோகிபாபுவுக்காகவும் பார்க்கலாம், ரேட்டிங் 2.25 / 5
Directed by | Balaji Venugopal |
---|---|
Starring | |
Cinematography | Sandeep K. Vijay |
Edited by | G. Madan |
Music by | Sean Roldan |
Production company | Think Studios |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment