பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும்போது 100 வருடங்கள் வரை தீர்க்காயுசா வாழனும் என வாழ்த்துவார்கள், ஆனால் ஒரு இந்தியனின் சராசரி ஆயுட்காலம் 63 என சொல்லப்படுகிறது. அந்தக்காலத்துல் ,மருத்துவ வசதிகள் , விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் இந்த அளவு இல்லாதபோதே நம் முன்னோர்கள் 80 வயது டூ 95 வயது வரை வாழ்ந்தார்கள் . ஆனால் இந்த காலகட்டத்தில் 75தாண்டுவதே அபூர்வம் ஆகிவிட்டது . 100 வருடங்கள் வாழும் ஆசை எல்லோருக்கும் இருக்கும், ஆனால் அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிப்போர் கொஞ்சம் பேர் தான் . அந்த வழி முறைகள் என்ன?
நம் உடம்பில் உள்ள முக்கியமான 6 உறுப்புக்ளை பராமரித்தால் போது, ஒவ்வொரு உறுப்புக்கும் நான்கு விஷயங்கள் , ஆக மொத்தம் 24 பாயிண்ட்கள் கவனிக்க வேண்டும்
1 மூளை 2 இதயம் 3 கல்லீரல் 4 எலும்பு & மூட்டு 5 செரிமாண மண்டலம் ( ஜீரண உறுப்புகள் 6 சிறு நீரகம்
1 தினசரி ஏழு மணி நேரம் டூ எட்டு மணி நேரத்தூக்கம்
2 தினசரி அரை மணி நேரமாவது ஏதாவது புதிய விஷயங்களைப்படிக்க வேண்டும்
3 தினசரி கால் மணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும் .
4 முடிந்தவரை தினசரி கொஞ்ச நேரமாவது சிரிக்க வேண்டும், சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்
=================================
5 வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும், ஹோட்டல் , நடை பாதைக்கடைகளில் சாப்பிடுவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்
6 தினசரி 45 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்ய வேண்டும். ஜிம் முக்குப்போகனும் என்ற அவசியம் இல்லை . நடைப்பயிற்சி , நீச்சல் பயிற்சி , ஸ்கிப்பிங் , ஜாகிங் எது வேண்டுமானால் இருக்கலாம்
7 மனழுத்தம் , ஸ்ட்ரெஸ் , டென்ஷன் போன்றவற்றைக்குறைத்துக்கொள்தல் . அல்லது எப்போதும் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்தல்
8 புகையிலை , சிகரெட் , மூக்குப்பொடி போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருத்தல்
===========================
9 குடிப்பழக்கம் இல்லாமல் இருத்தல்
10 மாவு உணவுகள் , கார்போஹைட்ரேட் உணவுகளை, கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்தல்
11 டாக்டர் அட்வைஸ் இல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் நீங்களாகவே போய் தலைவலி , காய்ச்சல் என எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்த்தல்
12 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கல்லீரலை சுத்தம் செய்ய கரிசலாங்கண்ணிக்கீரை யை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் .. கல்லீரலை பலபப்டுத்த கை கால்களை வீசி நடைப்பயிற்சி அடிக்கடி மேற்கொள்தல்
===================
13 கால்சியம் சத்து உள்ள பொருட்களை உணவில் எடுத்துக்கொள்தல் . உதாரணம் பால் , தயிர் , மோர் , ராகி ( கேழ்வரகு)
14 முருங்கை கீரை , முருங்கை காய் உணவில் சேர்த்தல்
15 நெய்யை வாரம் 3 நாட்களாவது உணவில் சேர்த்தல்
16 புரோட்டீன் சத்து உள்ளபொருட்களை உணவில் சேர்த்தல். நீங்கள் 80 கிலோ எடை உள்ளவராக இருந்தால் தினசரி 50 கிராம் அளவாவது புரதச்சத்து தேவை . அதற்கு பட்டாணி , சுண்டல் , பயிறு வகைகள் சாப்பிட வேண்டும். இட்லி , தோசை , சாப்பாடு என மாவுச்சத்து பொருட்களையே தொடர்ந்து சாப்பிட்டால் சரி வராது .
=====================
17 முழு தானிய உணவுகளை எடுத்துக்கொள்தல் . ரிஃபைண்டு பொருடகளை தவிர்த்தல் மைதா, பட்டை தீட்டப்பட்ட அரிசி , அஸ்கா சர்க்கரை ( வெள்ளை சர்க்கரை )) தவிர்த்தல் நல்லது . தானியங்கள் ( ராகி , கம்பு , சோளம் ), சிறுதானியங்க:ள்( வரகு , சாமை , திணை , குதிரைவாலி ) பழகிக்கொள்ளவேண்டும்
18 பேக்கரி ஐயிட்டங்களான வெள்ளை சர்க்கரை + மைதா பொருட்களை தவிர்த்தல்
19 நார்ச்சத்து மிக்க காய்கறிகள் எடுத்துக்கொள்தல் . பெரும்பாலும் அனைத்துக்காய்கறிகளிலும் ஃபைமர் எனும் நார்ச்சத்து உள்ளது . சீசனுக்கு ஏற்ற அல்லது சீசன் டைமில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுதல் . ஜூசாக பழசாறாக குடிக்காமல் பழமாகவே சாப்பிடுதல் நல்லது
20 ஃபிரைடு அயிட்டங்களை தவிர்த்தல்
==============
21 இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்தல் 120 / 80
22 இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்தல். சாப்பிடும் முன் ரத்த சர்க்கரை அளவு 70 - 110 . சாப்பிட்ட பின் 90-150. பிபி , சுகர் உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது நல்லது . மாத்திரைகளை சரியாக சாப்பிட்டு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்
23 டாக்டர் அட்வைஸ் இல்லாமல் பெயின் கில்லர்ஸ் எனப்படும் வலி மாத்திரைகளை மெடிக்கல் ஷாப்பில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்தல்
24 சாராயம் , கள்ளச்சாராயம், சீமை சரக்கு போன்ற ஆல்ஹஹால் தவிர்த்தல் . தின்சரி தேவையான அளவு தண்ணீர் குடித்தல்
0 comments:
Post a Comment