Wednesday, September 06, 2023

WORLD FAMOUS LOVER (2020) -தெலுங்கு - சினிமா விமர்சனம் ( ரொமண்டிக் டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 ஒரு  மெகா  ஹிட்  படம்  கொடுத்த  இயக்குநரோ, நடிகரோ  அந்தப்பட  பாதிப்பில் இருந்து  வெளி  வருவது  சிரமம். அதன்  சாயல்  அவரைத்துரத்திக்கொண்டே  இருக்கும், சின்னத்தம்பி  பிளாக்  பஸ்டர் ஹிட்டுக்குப்ப்பின்  பிரபு  நடித்த  பல  பட்ங்களில்  அந்த  அப்பாவித்தன  சாயல்  இருந்தது , உள்ளத்தை  அள்ளித்தா  வெற்றிக்குப்பின்  சுந்தர்  சி  படங்களில்  உருட்டுக்கட்டை காமெடி  நிச்சயமாக  இடம்  பெற்றது . அது  மாதிரி  அர்ஜூன்  ரெட்டி  படத்தின்  பாதிப்பில்  இருந்து  விஜய்  தேவரகொண்டா  இன்னும்  வெளி  வரவில்லை  என்பதை  உணர்த்தும்  படம்  தான்  இது 


      ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பெரிய  கோடீஸ்வர  தொழில்  அதிபரின் மகள் , நாயகன் பின் புலம்  இல்லாத  சாமான்யன், இருவரின்  காதலுக்கும்  நாயகியின்  அப்பா  எதிர்ப்பு. வீட்டை  விட்டு  ஓடி  கல்யாணம்  பண்ணிக்கொண்டால்  மீடியாக்கள்  அப்பாவை  கிண்டல்  செய்யும்  என்பதால்  அவர்  பெயரைக்கெடுக்க  விரும்பாமல்  நாயகனுடன்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்


 நாயகன்  ஒரு  ரைட்டர்  ஆக  ஆசைப்படுகிறான்.  அதனால்  தான்  பார்த்து  வரும்  வேலையை  ரிசைன்  பண்ணி  விட்டு  வீட்டில்  இருக்கிறான், நாயகி  தினமும் சமையல்  பண்ணி  விட்டு  வேலைக்குப்போகிறாள் . நாயக்ன்  தண்டச்சோறு  சாப்பிட்டு  விட்டு  வீட்டில்  டி வி  பார்த்துக்கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட  2  வருடங்கள்  இதே  நிலை ,  இதனால்  வெறுத்துப்போன  நாயகி  பிரேக்கப்  செய்து  விட்டு  அப்பா  வீட்டுக்குப்போய்  விடுகிறாள் 


 நாயகன்  தன் தவறை  உணர்ந்து  திருந்தி  இரு  நாவல்கள்  எழுதுகிறார். புக்ழ்  பெற்ற  ரைட்டர்  ஆகிறார். ஆனால்  நாயகிக்கு  வேறு  ஒருவருடன்  திருமணம்  நடக்க  இருக்கிற்து.  க்ளைமாக்ஸில்  காதலர்கள்  ஒன்று  சேர்ந்தார்களா? இல்லையா?  என்பது  சொல்லப்படுகிறது   


நாயகன் ஆக    விஜய்  தேவரகொண்டா  டெம்ப்ளேட் ஆன  அர்ஜூன்  ரெட்டி  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். அவரது  தாடியையும் , ஹேர்  ஸ்டைலையும்  பார்த்தால்  எரிச்சல் ஆக  இருக்கிறது 


 நாயகி  ஆக  ராஷி  கண்ணா  பிரமாதமான  முக  பாவனை ,  நல்ல  நடிப்பு  என  கலக்குகிறார்


 நாவலில்  வரும்  நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஷ்   அற்புதமான  நடிப்பு , படத்தில்  மனதில்  பதிவது  இவரது  கேரக்டர்  டிசைன்  தான் . அதே  நாவலில்  வரும்  வெல்ஃபேர்  ஆஃபீசர்  ஆக  கேத்ரீன்  தெரேசா  கொஞ்ச  நேரம்  வந்தாலும்  நல்ல  நடிப்பு 


 இன்னொரு  நாவலில்  நாயகி  ஆக  , பைலட்  ஆக வரும்  இசபெல்ல்லா  இளமையான  முகம், ரசிக்க  வைக்கிறார்


 நாயகனின்  மாமனார்  ஆக  ஜெயப்பிரகாஷ்  கச்சிதமான  நடிப்பு 


ஒளிப்பதிவாளர்  ஜெயகிருஷ்ணா  படம்  முழுக்க  ஒளிப்பதிவில்  குளுமை  காட்டி  இருக்கிறார்.  நான்கு  நாயகிகளையும்  கண்ணியமான  உடையில்  படம்  பிடித்ததற்கு  ஒரு  சபாஷ்


கோத்தகிரி  வெங்கடேஸ்வர  ராவ்  எடிட்டிங்கில்  இரண்டரை  மணி  நேரம்  ஓடுமாறு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  பண்ணி  இருக்கலாம்


கோபி  சுந்தர்  இசையில்  ஐந்து  பாடல்கள்  சுமார்  ரகம்  தான் , பின்னணி  இசையும்  பிரமாத,ம்   என  சிலாகிக்க  முடியவில்லை 


 கிராந்தி  மகாதேவ்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார் . மெயின்  கதை  ஒரு  மணி  நேரம்தான்  என்பதால்  நாயகன்  நாவல்  கதை  என  சமார்த்தியமாக  இரு  வெவ்வேறு  கதைகளை  இணைத்த  ஐடியா  குட் 




சபாஷ்  டைரக்டர்  ( கிராந்தி  மகாதேவ்)


1   மெயின்  க்தை , நாயகனின்  ஃபிளாஸ்பேக்  லவ்  ஸ்டோரி , நாவல்  கதைகள்  இரண்டு  என  நான்கு  வெவ்வெறு  கதைகள்  என  எடுத்துக்கொண்ட  ஐடியா  குய்ட் 

2  நான்கு  நாயகிகளை  படத்தில்  பயன்படுத்தி  இருந்தாலும்  கிளாமர்  என்ற  பெயரில்  காட்சிகளை  எடுக்காமல்  கண்ணியமாகக்கையாண்ட  விதம் 

  ரசித்த  வசனங்கள் 


1  அண்ணே, நீ  யூனியன்  லீடரா  இருந்தப்போ  ஒரு  கிழ  போல்ட்டு  தான்  வெல்ஃபேர்  ஆஃபீசரா  இருந்தாரு , ஆனா  இவன்  யூனியன்  லீடரா  ஆனதும்  ஒரு  செம  ஃபிகர் வெல்ஃபேர்  ஆஃபீசரா வந்திருக்கு , இதுல  இருந்து  என்ன  தெரியுது ? இவரு  பெரிய  பெரிய  மாற்றங்களைக்கொண்டு  வரப்போறாரு


2   நீ  ஒரு  பார்ன்  பியுட்டி 


3  காதலில்  இருக்கும்போது  முட்டாள்தனமான  எமோஷனல்  ஆன  முடிவுகளை  எடுக்காதீங்க 


4  தியாகத்தின்  மதிப்பு  என்ன?னு  எனக்குத்தெரியாதுனு  நீ  எப்படி  நினைச்சே?


5  கடவுளுக்குப்பிடித்த்  எண்  24  என  நினைக்கிறேன்,அதனால்தான் ஒரு  நாளுக்கு24  மணி  நேரம் 


6  கதைலயும், சினிமாலயும்  நாயகி  நாயகனுக்காக  எத்தனை  வருடங்கள்  ஆனாலும் காத்திருக்கலாம், ஆனா  நிஜ  வாழ்வில்  யாரும்  யாருக்காகவும்  காத்திருக்க  மாட்டார்கள் 


7  நாம்  கடைசி  வரை  நாம்  செஞ்ச  தப்புக்களுடன் தான்  வாழ்வோம். 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  துள்ளாத  மனமும்  துள்ளும் , நிலவே  முகம்  காட்டு, நீ  வருவாய்  என  என  எல்லா  ஹிட்  படங்களிலும்  செய்யப்பட்ட  ஒரு  லாஜிக்  மீறல்  இதிலும்  உண்டு . கண்  தானம்  என்பது  ஒருவரின்  இரு விழிகளை  எடுத்து  இன்னொருவருக்கு  பொருத்த  முடியாது . இரு  வேறு  நபர்களின்   ஒவ்வொரு  விழி தான்  பொருத்தப்படு ம். நாயகன்  தன்  இரு  கண்களையும்  நாயகிக்கு  தானம்  செய்தான்  என்பது  இம்ப்பாசிபிள் 


2   ஒரு  பெண்  தன்  காதலனை   தன்  அப்பாவிடம்  அறிமுகப்படுத்தும்  முன்  தனிமையில்  இன்ன  மாதிரி  ஒருவ்ரைக்காதலிக்கிறேன், நாளை  அவரை  இண்ட்ரோ  பண்றேன்  என  சொல்லி விட்டுத்தான்  செய்வார். ஆனால்  நாயகி  எந்த  வித  முன்னறிவிப்பும்  இன்றி  அப்பாவிடம்  தன்  லவ்வரை இண்ட்ரோ  பண்ணி  நோஸ்கட்  வாங்குகிறார்


3  நாயகன்  ஜெயமாலினி ,அனுராதா , சில்க் ஸ்மிதா  போல  லோ  ஹிப்பில்  அடிக்கடி  வருகிறார். கமல்  ரசிகரா?

4  க்ளைமாக்சில்  நாயகன்  தன்னைத்தானே  ப்டு  காயப்படுத்திக்கொள்வது  மடத்தனம். இந்த  மாதிரி  முட்டாள் தனமான  காட்சிகளை  எதுக்கு  வைக்கனும் ?


5  இரண்டு  வருடங்கள்  ஜெயிலில்  இருந்து  ரிலீஸ்  ஆகும்  ஒரு  கைதி  ஃபங்க்  தலை  உடன்  இருக்க  முடியுமா?  சிறை  விதி  தெரியாதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதலர்களுக்கு  மட்டும்  தான்  பிடிக்கும், மற்றவர்கள்  கடுப்பாகி  விட  வாய்ப்பு  உண்டு ., ரேட்டிங்  2.25 /5 


World Famous Lover
Theatrical release poster
Directed byKranthi Madhav
Written byKranthi Madhav
Produced byK. A. Vallabha
K. S. Rama Rao
StarringVijay Deverakonda
Raashii Khanna
Aishwarya Rajesh
Catherine Tresa
Izabelle Leite
CinematographyJaya Krishna Gummadi
Edited byKotagiri Venkateswara Rao
Music byGopi Sundar
Production
company
Release date
  • 14 February 2020[2]
Running time
148 minutes
CountryIndia
LanguageTelugu
Budget35 crore[3]

0 comments: