60 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெளியான முதல் மாதத்திலேயே 120 கோடி வசூல் செய்த படம் . டைட்டிலுக்கு இரண்டு விதமாகபொருள் கொள்ளலாம், நாயகன் பெயர் சத்யபிரேம், நாயகி பெயர் கதா.. அதனால் சத்யபிரேமின் கதா எனவும் அர்த்தம் வரும், உண்மையான காதலின் கதை எனவும் ஒரு அர்த்தம் வரும்.இந்தப்படம் காதலர்களுக்கும், பெண்களுக்கும் பிடிக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் அம்மா, அப்பா, தங்கை என கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து வருபவர். ( ஒரு காலத்துல தாத்தா , பாட்டி இருந்தாதான் கூட்டுக்குடும்பம்) . ஒரு நடன விழாவில் நாயகியை சந்திக்கிறார். ஆனால் எனக்கு ஆல்ரெடி பாய் ஃபிரண்ட் இருக்கான் என நாயகி சொல்லி விடுகிறாள் .
ஒரு வருடம் கழித்து அதே இடம், அதே விழா , நாயகியை சந்திக்க நாயகன் முற்படும்போது நாயகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். நாயகன் காப்பாற்றுகிறார். ஆனால் நாயகிக்கு அது பிடிக்கவில்லை , காரணம் காதலன் உடனான பிரேக்கப்பால் மனமுடைந்து இருக்கிறார்.
நாயகியின் அப்பா பெரிய கம்பெனி ஓனர். பணக்காரர். நாயகன் குடும்பம் மிடில் கிளாஸ். நாயகியின் அப்பா தன் மகளின் உயிரைக்காப்பாற்றிய நாயகனுக்கு தன் பெண்ணைக்கொடுக்க முன் வருகிறார். நாயகனுக்கு ஆச்சரியம், ஆனால் நாயகனின் பெற்றொருக்கு சந்தேகம் , ஆதாயம் இல்லாம பணக்காரன் ஆத்தோட போக மாட்டானே? என நினைக்கின்றனர். நாயகிக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை . ஆனால் நாயகியின் அப்பா தற்கொலை மிரட்டல் விடுத்து நாயகியை சம்மதிக்க வைக்கிறார்.
திருமணம் நடக்கிறது . ஆனால் மற்ற விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை ., நாயகியின் மன மாற்றத்திற்காக நாயகன் காத்திருக்க நாயகியோ திக்பிரமை பிடித்தவர் போலவே இருக்கிறார். நாயகியின் வாழ்வில் நிகழ்ந்த அந்த அதிர்ச்சி சம்பவம் என்ன? நாயகன் - நாயகி இணைந்தார்களா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக கார்த்திக் ஆர்யன் சுறுசுறுப்பான , துறுதுறுப்பான உடல் மொழியுடன் கச்சிதமாக நடித்திருக்கிறார். ரசிகைகள் கூட்டம் இனி கூடலாம் . படம் பார்க்கும் பெண்களுக்கு இந்த மாதிரி ஒரு கணவன் தனக்கு அமைய மாட்டானா? என ஏக்கம் கொள்ள வைக்கும் கேரக்டர் டிசைன்
நாயகி ஆக க்யாரா அத்வானி ( இவர் மத்திய அமைச்சர் அத்வானியின் மகள் அல்ல ) கிளாமர் , அழகு , நடிப்பு என முப்பரிமாணத்தையும் காட்டி நடித்திருக்கிறார். ஆனால் இது போன்ற சீரியஸ் கேரக்டருக்கு ஒப்ப்னிங் சீனில் கிளாமர் காட்டி நடித்திருப்பது பின்னடைவு
144 நிமிடங்கள் ஓடும்படி எடிட்டர் கட் செய்து இருக்கிறார். கடைசி 40 நிமிடங்கள் நேர்த்தியான காட்சி அமைப்புகள், பாராட்ட வைக்கும் வசனங்கள்
ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார் அயனங்கா கோஷ் . நாயகியை க்ளோசப் காட்சிகளில் அழகாகக்காட்டி இருக்கிறார். ஹனன் பரத்வாஜ் இசையில் எட்டு பாடல்கள் ., அதில் 3 செம ஹிட் ஹித்தேஷ் சோனிக் பின்னணி இசையில் அடக்கி வாசித்து இருக்கிறார்
கரண் ஸ்ரீகாந்த் சர்மாவின் திரைக்கதைக்கு சமீர் வித்வான்ஸ் உயிர் கொடுத்து இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங் டூயட் சாங்கில் மூன்று பெரிய இதய வடிவ பலூன் செட்டிங்க்க்கு ஆயிரக்கணக்கான பலூன்களை ஆர்ட் டைரக்ட்ர் டிசைன் செய்த விதம் அருமை
2 பாடல் காட்சிகளில் முடிந்தவரை ஷங்கர் போல் பிரம்மாண்டம், மணிரத்னம் போல் கவித்துவம், கவுதம் வாசுதேவ் மேனன் போல அழகியல் கொண்டு வந்திருப்பது அருமை
3 நேர் கொண்ட பார்வையில் வரும் நோ மீன்ஸ் நோ என்னும் கருத்தை அழுத்தமாகப்பதிவு செய்த க்ளைமாக்ஸ் காட்சி
ரசித்த வசனங்கள்
1 உனக்கு என்னால பொண்ணு பார்க்க முடியாது , உனக்கானவளை நீயே பார்த்துக்கோ
யாரு? இவனா? சோசியல் மீடியாக்களில் இவனுக்கு ஃபாலோயர்சே இல்லை. ஜோடி மட்டும் எப்படிகிடைக்கும் ?
2 ஏம்மா, குத்துக்கல்லு மாதிரி நான் வீட்ல இருக்கும்போது என் தங்கச்சிக்கு மாப்ளை பார்த்திருக்கியே? எனக்கு எப்போ பார்ப்பே?
உன் கேள்விலயே பதிலும் இருக்கு . குத்துக்கல்லு மாதிரி வீட்லயே இருந்தா எவன் பொண்ணு தருவான் ? வேலைக்குப்போகனும்ல?
3 எல்லாருக்கும் கடைசி ஆசைனு ஒண்ணு இருக்கும்
4 மாமா, எனக்குனு ஒரு வேலை இன்னும் நான் தேடிக்கலை , ஆனா உங்க பொண்ணைத்தர எப்படி ரெடி ஆனீங்க ?
என் பொண்ணை லவ் பண்றீங்களே? அதுவும் ஒரு வேலை தானே?
5 டேய், உன் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு வேலை தேடிக்கோ
எதுக்கு? அவன் மாமானர் இன்னும் நாலு வருசமோ அஞ்சு வருசமோ இருப்பாரு. அதுக்குப்பின் அவர் கம்பெனியை நம்ம பையன் தானே பார்த்துக்கனும்?
ஓ இன்னும் நாலு வருசம் இருப்பாரா?
6 என் வாழ்க்கைல பல தவறான முடிவுகளை நான் எடுத்திருக்கேன், அதனால அப்பாவோட இந்த முடிவு தவறோ சரியோ அதை ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்
7 டியர் , என்ன? லவ்வருக்கு நெற்றில முத்தம் தர்றே? வழக்கமா ஜனங்க நாய்களுக்குத்தான் ஐ மீன் அவங்க வளர்த்தும் செல்லப்பிராணிகளுக்குத்தான் நெற்றி முத்தம் தருவாங்க
8 ஹேப்பி ஃபர்ஸ்ட் மந்த் வெட்டிங் அனிவர்சரி
தாங்கஸ் , ஆனா வழக்கமா ரெட் ரோஸ் தானே கொடுப்பாங்க ? நீங்க யெல்லோ ரோஸ் தந்திருக்கீங்க?
முதல்ல ஃபிரண்ட்ஸ் ஆவோம், அப்புறமா தம்பதி ஆவோம்னு தான்
9 நீ பேசும்போது யோசிச்சுப்பேச மாட்டியா?
உண்மையைப்பேசும்போது எதுக்கு யோசிக்கனும் ?
10 எல்லா உண்மைகளையும் எல்லாராலும் சகிச்சுக்க முடியாது , சில உண்மைகளை நம்மாலேயே ஜீரணிச்சுக்க முடியாது
11 நீ உண்மையை எப்போ சொல்லனும்னு நினைக்கறயோ அப்போ சொன்னாப்போதும், நான் எப்பவும் தயாரா இருக்கேன்
12 என்னைப்பற்றிய சில உண்மைகளை உன்னாலயே ஜீரணிக்கவோ, சகிச்சுக்கவோ முடியாதப்ப உன் பெற்றோர்களால் எப்படி ஏத்துக்கம்முடியும் ?
13 ஒருத்தரோட வலியை உங்களால உணர முடியலைன்னா பரவாயில்லை , அவங்களை மேலும் காயப்படுத்தாம இருந்தாலே போதும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கும் நாயகன் வலது கையால் அவர்கள் காலைத்தொடாமல் இடது கையால் தொடுகிறாரே?
2 நாயகிக்கு உடல் நிலை சரி இல்லை , அவரைப்பார்த்துக்காமல் அல்லது பார்த்துக்க ஆளை நியமிக்காமல் நாயகியின் குடும்பம் மொத்தமும் நவராத்திரி விழாவுக்கு கொண்டாட்டமாக வருகை புரிந்திருக்கிறார்களே? எந்த வீட்டில் இப்படி பெண்ணை தனியா விட்டுட்டு வருவாங்க ?
3 நாயகிக்கோ , அவளின் குடும்பத்துக்கோ நாயகன் டீட்டெய்ல்ஸ் எதுவும் தெரியாது . என் உயிரைக்காப்பாறியவன் ஃபோன் நெம்பர் கண்டுபிடித்துத்தா என்று நாயகி சொன்ன அடுத்த நொடியே நாயகியின் தங்கை நாயகனின் நெம்பரைக்கண்டு பிடித்தது எப்படி ?
4 முதல் பாதி திரைக்கதை மவுன ராகம், குட் நைட் ஆகிய படங்களை நினைவுபடுத்துவது பலவீனம் . அதே போல பின் பாதியில் வரும் சில வசனங்கள் பிங்க் ( நேர் கொண்ட பார்வை ) கை நினைவு படுத்துகிறது
5 நாயகியை உருகி உருகிக்காதலித்த நாயகன் திருமணத்துக்குப்பின் தாம்பத்ய சுகம் கிடைக்க வில்லை என்றதும் உடனே டைவர்ஸ் பண்ணப்போறேன் என மாமனாரிடம் சொல்வது அந்த கேரக்டர் டிசைனையே கேள்விக்குள்ளாக்குகிறது
6 நாயகனும், நாயகியும் ஒரு பர்த்டே பார்ட்டிக்குப்போகும்போது அங்கே நாயகியின் முன்னாள் காதலன் பார்ட்டிக்கு இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக ஃபோன் மூலம் பர்த் டே பேபியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான். உடனே அவசர அவசரமாக நாயகன் நாயகியைக்கிளப்பிக்கொண்டு அங்கே இருந்து கிளம்பி ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள் /. அதான் அரை மணி நேரம் டைம் இருக்கே? பர்த் டே பார்ட்டியிலேயே சாப்பிட்டுட்டு போய் இருக்கலாமே?
7 நாயகன் நாயகி சொன்னபடி வரதட்சணையா கிடைச்ச காரின் சாவியை ,மாமனாரிடம் ரிட்டர்ன் கொடுத்து விட்டு நாயகியைப்பார்க்க வருகிறார். அப்போது சாரி , கடைல கஸ்ட்ம்ர்ஸ் நிறைய இருந்ததால வர லேட் ஆகிடுச்சுங்கறார். அவர் தான் கடைல உள்ளேயே போகலையே? மாமனாரைக்கடைல பார்த்தார் , சாவியைக்கொடுத்தார். வந்துட்டார். எங்கெயோ இடிக்குதே?
8 நாயகியோட அப்பாவே தன் மாப்பிள்ளை கிட்டே அவளை ரெண்டு அடி போடு , சரி ஆகிடும் எல்லாம் என்கிறார். எந்த அப்பாவாவது அப்படி சொல்வாரா? அதுவும் பாதிக்கப்பட்ட பெண் வேற
9 நாயகன் வில்லனை அடித்து விட்டு லாக்கப்பில் இருந்து விட்டு பின் வீட்டுக்கு வந்து கையை வாஷ் பண்ணும்போது அவர் கையில் ரத்தம் தண்ணீரில் சுத்தம் ஆகிறது . இது என் ர்த்தம் இல்லை , தப்பன் ( வில்லன்) ரத்தம் என்கிறார். அது வரை காயாம இருக்குமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ படம் தான், ஆனால் 2 இடங்களில் லிப் லாக் காட்சிகள் இருக்கின்றன
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி கலகலப்பான வழக்கமான கமர்ஷியல் டெம்ப்ளேட் காதல் கதை . பின் பாதியில் அழுத்தமான கதை அம்சம், பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5
0 comments:
Post a Comment