2015ல் செம ஹிட் ஆன த்ரிஷ்யம் படம் பல மொழிகளில் ரீமேக்கப்பட்டு ஹிட் ஆனது எல்லோருக்கும் தெரியும்.2008 ல் ரிலீஸ் ஆன ஜப்பானிஸ் படமான சஸ்பெக்ட் எக்ஸ் என்ற படம் அதிரி புதிரி ஹிட் ஆனது . 2019ஆம் ஆண்டு விஜய் ஆண்ட்டனி நடிப்பில் கொலைக்காரன் படம் வெளி வந்தது . இவை எல்லாமே டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ் என்னும் ஜப்பானிய நாவலின் தழுவல் தான் மேற்கூறிய அனைத்துப்படங்களும். அதே மாதிரி சாயலில் உள்ள படம் தான் இதுவும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சிங்கிள் மதர். 13 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு . கணவனைப்பிரிந்து வாழ்பவர் . காரணம் அவன் ஒரு விளங்காதவன். மனைவியை கிளப்களில் ஆட விட்டு பணம் சம்பாதிக்க நினைப்பவன். இப்போது நாயகி கணவனைப்பிரிந்து 14 வருடங்களாக தனிமையில் வசித்து வருகிறார். ஒரு காஃபி கஃபே கம் ரெஸ்ட்டாரண்ட் நடத்தி வருகிறார்
நாயகன் ஒரு மேத்ஸ் டீச்சர். அபாரமான புத்திக்கூர்மை உள்ளவன் . எல்லாவற்றையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பவன், இவனுக்கு நாயகி மீது ஒரு தலைக்காதல். தினசரி நாயகி கடைக்கு வந்து ஏதாவது பார்சல் வாங்கிச்செல்பவன். நாயகி வீட்டுக்குப்பக்கத்து வீடு தான்
ஒரு நாள் நாயகியின் கணவன் திடீர் என நாயகியை சந்திக்க வருகிறான். பணம் வசூல் பண்ணத்தான். இருவருக்கும் கை கலப்பு நடந்து எதிர்பாராத விதமாக கணவனை கொலை செய்து விடுகிறாள் . இது நாயகனுக்குத்தெரிய வர நீங்க , கவலைப்படாதீங்க . இந்தக்கொலைப்பழியில் இருந்து உங்களை நான் காப்பாற்றுகிறேன் என உத்தரவாதம் அளிக்கிறான். டெட் பாடியை நாயகன் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறான்
இந்த கேசை துப்பு துலக்க ஒரு போலீஸ் ஆஃபீசர் வருகிறார். அவர் நாயகனின் ஸ்கூல் மேட். நாயகன் - நாயகி , போலீஸ் இந்த மூவருக்கும் நிகழும் போரட்டங்கள் தான் மீதிக்கதை
நாயகி ஆக கரீனா கபூர் கான் கச்சிதம் ஆக நடித்திருக்கிறார். கணவனைக்கண்டு பொங்குவது , அவனால் தன் மகளுக்கு எந்த தீங்கும் நடக்கக்கூடாது என பதறுவது எல்லாம் அருமை , பெண்களின் பாராட்டைப்பெறும் நடிப்பு
நாயகன் ஆக ஜெய்தீப் அடக்கி வாசிக்கும் நடிப்பு. வழுக்கைத்தலையை அடிக்கடி கண்டு தாழ்வு மனப்பான்மையில் துடிப்பதும் , நாயகியைக்காப்பாற்றபோராடுவதும் சிறப்பு
போலீஸ் ஆஃபீசர் ஆக விஜய் வர்மா துடிதுடிப்பான நடிப்பு. ஓப்பனிங் ஃபைட் சீனிலேயே மனம் கவர்கிறார்
ஊர்வசி சக்சேனாவின் எடிட்டிங்கில் படம் 139 நிமிட நேரம் ஓடுகிறது . சச்சின் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் ஷார் போலீஸ் பின்னணி இசையில் இன்னும் கலக்கி இருக்கலாம் ஆயுக் முக்கோபதே ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கிறார்
சுஜோய் கோஷ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் (சுஜோய் கோஷ்)
1 நாயகியின் கணவன் மீது ஆடியன்சுக்கு வெறுப்பு ஏற்படுவதைப்போல சித்தரித்த விதம் அருமை . அவன் எப்படியோ செத்தா சரி என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது
2 போலீஸ் ஆஃபீசர் , நாயகன் இருவருமே நாயகி மீது ஆசைப்படுவதாகக்காட்டினாலும் நாயகி யார் மீது மையல் கொண்டிருக்கிறார் என்பதை கடைசி வரை சொல்லாமல் விட்டது
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் , மேத்ஸ் டீச்சர் சம்யோசிதம் வெளிப்படும் இதர காட்சிகள்
ரசித்த வசனங்கள்
1 என்னை எப்படிகண்டுபிடிச்சே?
முயற்சி செஞ்சா கடவுளையே கண்டுபிடிக்கலாம்
2 உனக்கு நல்ல நேரம், கடவுள் உன்னைக்காப்பாத்திட்டார்
யார் கிட்டே இருந்து?
என் கிட்டே இருந்துதான்
3 உன் அளவுக்கு நான் பர்சனாலிட்டி இல்லாம இருக்கலாம், ஆனா நான் உயிரோட இருக்கேன், நீ இல்ல
4 நாம சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணலாமா?
என் டைமைத்தான் சாப்பிட்டுட்டு இருக்கீங்க, இதையும் சாப்பிடுங்க
5 ஜீனியஸ்க்கும், பைத்தியக்காரனுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி நாயகனைக்காதலிக்கவில்லை , அதே சமயம் க்ளப்பில் போலீஸ் ஆஃபீசருடன் நெருக்கமாக நடனம் ஆடியது தெரிய வருகிறது. இருந்தும் தன் வாழ்க்கையையே பணயம் வைக்கும் வேலையை ஏன் செய்கிறார்?
2 நாயகி செய்த கொலையை செல்ஃப் டிஃபன்ஸ் என வாதாடி இருந்தால் அட்லீஸ்ட் குறைந்த பட்ச தண்டனையுடன் தப்பி இருக்கலாம், நாயகியைக்காப்பாற்ற நாயகன் செய்த செயலால் தெவையற்ற தண்டனை
3 மேத்ஸ் டீச்சர் புத்திசாலி. போலீசிடம் நான் எப்போதாவதுதான் நாயகி கடைக்கு செல்வேன் என்கிறார். போலீஸ் கடையில் விசாரிக்கும்போது பணிப்பெண்கள் தான் ரெகுலர் கஸ்டமர் என்பதை சொல்ல வேண்டாம் என நாயகியிடம் சொல்லவில்லை. அது என்? அவ்ரால் அதை யூகிக்க முடியவில்லையா?
4 நாயகிக்கு போலீஸ் அஃபிச்ரைக்கவரும் எண்ணம் இல்லை . பின் ஏன் அவர் முன்னாலேயே அல்லது அவர் பார்க்கும்படி நாயகி தன் வீட்டில் உடை மாற்றுகிறார். பெட்ரூமில் போய் கதவை சாத்தி உடை மாற்றி இருக்கலாமே?
5 எப்போதும் இறுக்கமாக இருக்கும் நாயகி க்ளப்பில் போலீஸ் ஆஃபீசருடன் பாட்டு பாடி நடனம் ஆடுவது எதற்கு ? செயற்கையாக இருக்கிற்து
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - பிணம் எரிக்கும் காட்சி மட்டும் கொடூரம்.
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - த்ரிஷ்யம் , கொலைகாரன் , சஸ்பெக்ட் எக்ஸ் போன்ற படங்களைப்பார்க்காதவர்கள் பார்க்கலாம், பார்த்தவர்கள் விமர்சனம் மட்டும் படிக்கலாம், ரேட்டிங் 2.5 / 5
0 comments:
Post a Comment