பாமா கலாபம் என்பது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பிரபல நடன முறை. ப்ரியாமணி ந்டித்த முதல் வெப் ஃபிலிம் இது . கோவிட் கால கட்டத்தில் இண்டோர் ஷூட்டிங் நடத்தி குறைந்த பட்ஜெட்டில் தயார் ஆன படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
200 கோடி ரூபா மதிப்புள்ள ஒரு அபூர்வ முட்டை கொல்கத்தா மியூசியத்தில் இருந்து திருடு போகிறது . வில்லனின் அடியாள் அதைக்கடத்தி வரும்போது தவறுதலாக ஒரு முட்டை வேனில் விழுந்து விடுகிறது . முட்டைக்கடை ஓனர் அதை தன் வீட்டு பீரோவில் மறைத்து வைக்கிறார்.
நாயகி ஒரு யூ ட்யூப் ரிவ்யூவர். உணவு , சமையல் குறிப்புகள் சொல்பவர். இவ்ர் அக்கம் பக்கம் வீடுகளில் வம்பு தும்புக்ள் ஏதாவது நடக்கிறதா? என நோட்டம் இட்டு அதைப்பற்றி அனைவரிடமும் வம்பு பேசும் கேரக்டர் . எதிர்பாராத விதமாக வில்லனின் அடியாளை நாயகி தாக்க நேரிடுகிறது . அந்தப்பிணத்தை மறைத்து வைக்க அவர் எடுக்கும் முயற்சிகளும் , அபூர்வ முட்டையைக்கைப்பற்ற வில்லன் எடுக்கும் நடவடிக்கைகளும் தான் மீதி திரைக்கதை
கோல மாவு கோகிலா டைப் திரைக்கதை யில் பிளாக் ஹ்யூமர் புகுத்தி ஒப்பேற்றி இருக்கிறார்கள்
நாயகி ஆக ப்ரியா மணி . பருத்தி வீரன், சாரு லதா மாதிரி படங்களில் கொழுக் மொழுக் ப்ரியாவைப்பார்த்து விட்டு டயட் இருந்து இளைத்த ப்ரியா வைப்பார்க்க கஷ்டமாக இருக்கிறது . நடிப்பு தரம்
வில்லன் ஆக ஜான் விஜய். கண்ணுக்கு மை இட்டு ராமராஜன் மாதிரி ரோஸ் பவுடர் எல்லாம் அடித்து காமெடி வில்லன் ஆக வருகிறார்.
இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசர் ஆக சாந்தி ராவ் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
நாயகியின் தோழியாக சரன்யா பிரதீப் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். என் புருசன் வேற ஊர்ல இல்லை என்ற ஒரே வரி டயலாக்கை படம் முழுக்க அடிக்கடி சொல்வது வெடிச்சிரிப்பு
மார்க் கே ராபின் இசை கச்சிதம் . பிஜிஎம்மில் இன்னும் முனைப்பு காட்டி இருக்கலாம் , ஒளிப்பதிவு தீபக் ஓக்கே ரகம் விப்லவ் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடும்படி ஷார்ப் ஆக கட் செய்து இருக்கிறார்கள் . திரைக்கதை எழுதி இயக்கி இருபவர் அபிமன்யூ. காமெடி சில இடங்களில் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
சபாஷ் டைரக்டர் (அபிமன்யூ)
1 நாயகியின் தோழியாக வருபவரின் கேரக்டர் டிசைனும் அவர் நடிப்பும் கலகலப்பு
2 ஜவ்விழுப்பாக படத்தை இழுக்காமல் ஷார்ப் ஆக 2 மணி நேரத்தில் ட்ரிம் செய்த விதம்
ரசித்த வசனங்கள்
1 நம்மளைப்பற்றி நாம எப்ப வேணா யோசிச்சுக்கலாம், ஆனா அக்கம் பக்கம் இருக்கறவங்களைப்பற்றித்தெரிஞ்சுக்கறது ஒரு தனி சுகம்
2 பிளான் பண்ணுனதை பிளான் பண்ணுனபடி சரியாச்செய்யறதுக்குப்பேர்தான் உஷாரா இருப்பது , அதாவது ஷார்ப்பா இருப்பது
3 வெளி வீட்டு விஷயங்களில் காட்டும் அக்கறையை வீட்டில் இருக்கும் புருசனிடம் பெண்கள் காட்டினால் நல்லா இருக்கும்
4 குழம்பில் வர்ற வாசனையை வெச்சே உப்பு கம்மியா? அதிகமா?னு கண்டுபிடிச்சிடுவேன், இது கடவுள் கொடுத்த வரம்
5 அக்கா , நீ அவனைக்கொலை பண்ணி இருக்கே
இல்லை , சும்மா ஃபோர்க்கால லைட்டா குத்தினேன், அதுக்கப்புறம், அவனா செத்துட்டான், நான் அவனைக்கொலை பண்ணலை
6 கொன்னவனை அங்கேயே போட்டுட்டு வராம ஹோட்டல்ல பார்சல் வாங்கிட்டு வர்ற மாதிரி எதுக்கு இங்கே கொண்டு வந்திருக்கே?
7 அவன் ஏன் சூட்கேஸ்ல படுத்துத்தூங்கிட்டு இருக்கான்
அய்யோ பாஸ் , அவனைக்கொலை பண்ணி சூட்கேஸ்ல வெச்சிருக்காங்க
8 முட்டை எங்கே இருக்குனு அவன் சொன்னானா?
சாரி சார் , அவன் மறுபடியும் செத்துட்டான்
9 அந்த முட்டையோட மதிப்புத்தெரியுமா? 200 கோடி ரூபா , நூறு ரூபாய்க்கே நான் மர்டர் பண்றவன்
10 ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்னு போர்டு இருக்கு , ஆனா போர்டுல ஒரு ஸ்டார் தான் வரைஞ்சிருக்கு ?
11 டெட் பாடியை எங்காவது மறைச்சு வைக்கனும்
ஏற்கனவே மறைச்சு வெச்ச பாடியை மீண்டும் ஏன் மறைக்கனும் ?
12 நீ டெட் பாட்யோட காலை கட் பண்ணு , நான் பேசிட்டு இருக்கும் இந்த ஃபோன் காலை கட் பண்றேன்
13 நல்லது கெட்டது தெரியாதவன் கடவுள் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை அவ்வளவு அசால்ட்டாகவா டீல் செய்வார்கள் , ஓப்பனிங் ஷாட்டில் வரும் அந்த மிஸ்சிங் சீன் நம்பகத்தன்மை இல்லை
2 நாயகி தற்காப்புக்காக செய்த கொலைக்கு தண்ட்னை கிடைக்காது, அப்படி இருந்தும் டெட் பாடியை ஏன் மறைக்க வேண்டும் ?
3 ஒரு சாதாரண ஃபோர்க்கை வைத்து கழுத்தில் குத்தியதும் ஒரு ஆள் ஸ்பாட் அவுட் ஆவானா? என நாயகிக்கு டவுட் வராதா?
4 இப்போ எங்கே இருக்கே? என ஜான் விஜய் ஃபோனில் கேட்கும்போது முட்டைக்கடை ஓனர் வீட்டில் என சொல்லாமல் அந்த ஆள் வீட்டு அட்ரஸ் , கூகுள் லொக்கேஷன் எல்லாம் சொல்வது ஏன் ?
5 அத்தனை பேர் குடி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் நாயகி சூட்கேசில் டெட்பாடியை டீலிங் செய்வது எல்லாம் ஓவர்
6 இர்ண்டு நாட்களாக டெட் பாடி வீட்லயே இருக்கு , ஸ்மெல் வராதா? நாயகி செண்ட் கூட அடிக்கலை
7 டெட் பாடி பாக்கெட்ல அவன் செல் ஃபோன் இருக்கு . அதை ஆஃப் பண்ணி வைக்கலைன்னா அபார்ட்மெண்ட்ல தான் டெட் பாடி இருக்குனு க்ண்டு பிடிச்சிட மாட்டாங்களா?
8 சூட்கேசை செக் செய்யும் போலீஸ்க்கு டெட் பாடி ஸ்மெல் வராதா?
9 ஏழு மாத கர்ப்பிணி ஆன லேடி போலீஸ் ஆஃபீசர் கொலைகாரன் வீட்டுக்கு வந்து உங்க வீட்டை செக் பண்றேன்னு சொல்றாங்களே? கூட வேற போலீஸ் யாரும் இல்லாம தனியாவா வருவாங்க ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிளாக் ஹ்யூமர் காமெடி ரசிகர்கள் பார்க்கலாம். லாஜிக் பார்க்கக்கூடாது ரேட்டிங் 2.5 /5
Bhamakalapam | |
---|---|
Directed by | Abhimanyu |
Written by | Abhimanyu |
Produced by | Bhogavalli Bapineedu Sudheer Edara |
Starring |
|
Cinematography | Deepak Yeragera |
Edited by | Viplav Nyshadam |
Music by | Mark K. Robin |
Production company | |
Distributed by | Aha |
Release date |
|
Running time | 133 minutes |
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment