இந்தப்படம் 2021 ல் ரிலீஸ் ஆனதாக சில வெப்சைட்களில் காண முடிகிறது . ட்டைம்ஸ் ஆஃப் இண்டியா விமர்சனத்தில் 2023 ஜூன் ரிலீஸ் என சொல்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் பத்தாம் வகுப்ப் படிக்கும்போது அமலானு ஒரு பொண்ணு மேல காதல் வயப்படறான். சக மாணவன் ஒருத்தன் அதே அமலா மீது காதல் வைத்தபோது இவனால் தாங்கிக்க முடியல. அமலா கண் எதிர்லயே அவனை படு பயங்க்ரமா தாக்கறான். இதனால பயந்த அமலா ஓடும்போது ஸ்லிப் ஆகி ஒரு கிணற்றில் விழுந்து மூழ்கி இறக்கிறாள் . இதனால் சைக்கோ ஆன வில்லன் அமலா சாயலில் அல்லது அமலா மாதிரி அவன் நினைக்கும் பெண்களை கொலை செய்கிறான். அவனை போலீஸ் எப்படிப்பிடிச்சாங்க என்பதுதான் கதை
வில்லன் ஆக அப்பானி சரத் சாதரண தோற்றம் , ஆனால் வலிமையான கேரக்டர் டிசைன். நன்றாக நடித்திருக்கிறார். டாக்சி டிரைவராக , வாட்டர் கேன் போடுபவராக சாமான்யனாக அவர் வரும் காட்சிகள் எளிமை . இன்னும் கொடூரமாகவே இவரைக்காட்டி இருக்கலாம்
நாயகி ஆக அனார்கலி மரிக்கர். அழகிய முகம், இளமை பொங்கும் உடல் அமைப்பு . கச்சிதமான நடிப்பு .
அமலா ஆக ஒரு சிறுமி சுந்தர காண்டம் நாயகி சிந்துஜா சாயலில் இருக்கிறார். நடிக்க அதிக வாய்ப்பில்லை , சிரிப்பதோடு சரி
நாயகன் என ஸ்ரீ காந்த்தை நம்ப வைத்து போலீஸ் ஆஃபீசர் ரோல் கொடுத்திருக்கிறார்கள் , அதிக வாய்ப்பில்லை
ஒளிப்பதிவு ., லொக்கேஷன் இரண்டும் தான் ப்டத்தின் பலம்
சபாஷ் டைரக்டர்(நிசாத் இப்ராஹிம்)
1 ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன்
2 70% காட்சிகள் வில்லனுக்குத்தான் என்றாலும் நாயகன் நீங்க தான் என ஸ்ரீகாந்த்தை நம்ப வைத்து கால்ஷீட் வாங்கியது
3 படத்தில் வரும் முக்கிய பெண் கேரக்டர்கள் அனைவரையும் அழகாக , கண்ணியமான உடையில் காட்டியது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நான் சிகப்பு மனிதன் படத்தில் கே பாக்யராஜ் அடிக்கடி வேர்க்கடலைசாப்பிடுவது போல் சீன் இருக்கும், அவர் காமெடியன், அதனால ஏத்துக்க முடிஞ்சுது , சீரியஸ் கேரக்டரான , போலீஸ் ஆஃபீசர் ஆன நாயகன் டெட் பாடிக்கு பக்கத்துல ஏதாவது தடயம் கிடைக்குமா?னு தேடும்போது பாப்கார்ன் சாப்ட்டுட்டே தேடறார். குமட்டாதா? உவ்வே
2 இந்தக்காலப்பெண்கள் செல் ஃபோனில் பேசும்போது குசுகுசு என ரகசியமாப்பேசறாங்க . இதுல வாடகை டாக்சி கார்ல போகும் பெண் கார் டிரைவருக்குக்கேட்பது போல “ டேய் வீட்ல யாரும் இல்லை , வா என இன்விட்டேஷன் வைக்குது
3 பப்ளிக் பார்க்ல ஒரு லேடி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கு . அது தற்கொலையா இருக்கலாம்னு போலீஸ் ரிப்போர்ட் வைக்குது . ஹையர் ஆஃபீசரும் பேக்கு மாதிரி அது உண்மையா?னு கேட்கறார்
4 ஃபிளாஸ்பேக் சீனில் வில்லன் பத்தாவது படிக்கறப்ப அப்டினு ஒரு பையனைக்காட்றாங்க. அஞ்சங்கிளாஸ் பையன் மாதிரி இருக்கான்
5 அமலா கிணற்றில் விழுந்ததும் அவளைக்காப்பாற்ற வில்லன் ஆன சின்னப்பையன் எந்த நடவடிக்கையும் எடுக்கலையே?
6 வில்லன் கோடாலி எடுத்து கதவை உடைக்க ட்ரை பண்றான். கண்ணாடிக்கதவு அது. கல் எடுத்து உடைச்சு தாழ் நீக்கி இருக்கலாமே?
7 வில்லன் நாயகியைத்துரத்தும்போது நமக்கு ஒரு பரிதவிப்பு , பதட்டம் வரனும், வில்லனால நாயகிக்கு எதுனா ஆபத்து வந்துடுமோ?னு , ஆனா உல்டாவா இருக்கு. நாயகியால வில்லனுக்கு ஆபத்து வந்துடுமோ?னு.. குணா மாதிரி வில்லன் கேரக்டர் டிசைன் இருக்கு , ஆள் சோப்ளாங்கி மாதிரி இருக்கார், நாயகி ஜைஜாண்டிக்கா இருக்கு
8 ஏற்கனவே ஸ்லோவா போகும் படத்தில் க்ளைமாக்ஸ் சேசிங் சீனில் எக்ஸ்ட்ரா ஸ்லோமோஷன் சீன் எதுக்கு ? கண் சிமிட்டும் நேரம் மாதிரி பிஜிஎம் அடி பொளந்திருக்க வேண்டாமா?
9 கடைசி 16 நிமிடங்களில் ஒரு பாட்டு வேற ஸ்பீடு பிரேக்கர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ /ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ராட்சசன், போர் தொழில் பார்க்காதவர்கள் பார்க்கலாம், அதே பாணியில் அதை விட சுமார் தரத்தில் ஒரு சைக்கோ கில்லர் ஃபிலிம்., ரேட்டிங் 2 / 5
0 comments:
Post a Comment