Monday, September 18, 2023

அநீதி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ ஆஹா தமிழ்

 


 2003 ஆம்  ஆண்டு  இயக்குநர் வசந்தபாலன்  இயக்கிய  முதல்  படம்  ஆன  ஆல்பம்  விமர்சன  ரீதியாகப்பாராட்டைப்பெற்றாலும்  கமர்ஷியலாக  ஓடவில்லை. 2006ஆம்  ஆண்டு  வெளியான  வெயில்  அந்த  ஆண்டின்  சிறந்த  தமிழ்ப்படத்துக்கான  தேசிய  விருதைப்பெற்றது.2010ல் வந்த  அங்காடித்தெரு  கமர்ஷியலாகவும், விமர்சன  ரீதியாகவும்  வெற்றி, அஞ்சலி அறிமுகம்.,2011ல் வந்த  அரவாண்  பிரமிப்பைத்தந்த  படம், ஆனால்  பிரமாதமான  வெற்றி பெறவில்லை . 2014ல் வந்த  காவியத்தலைவன்  தோல்வி ( ஏற்கனவே  விஜயகாந்த்-பானுப்பிரியா  ந்டிப்பில்  வந்த காவியத்தலைவன்  அட்டர்  ஃபிளாப் ஆகியும்  மீண்டும்  ஏன்  அதே  டைட்டில்?).2021ல்  வந்த  ஜெயில்  ஓக்கே  ரகம் 


கிட்டத்தட்ட  20 ஆண்டு  கால  திரை  வாழ்கையில்  இவர்  இயக்கியது  ஏழு  படங்கள்  மட்டுமே. கமர்ஷியலாக  சில  வெற்றி  பெறாமல்  போனாலும்  அடித்தட்டு  மக்களின்  வேதனையை  ஒவ்வொரு  கதையிலும்  பிரமாதமாகப்பதிவு  செய்வதில்  வல்லவர்/ ஜெயித்தவனின்  கதையைப்பற்றியே  பேசுபவர்   மத்தியில்  தோற்றவனின் கதையைப்பதிவு  செய்வதில்  ஆர்வம்  உள்ளவர் 



   ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 – நாயகன்  சின்ன வயசுல ஸ்கூல் போகும்போது  அப்பாவிடம்  டெய்ரி மில்க்  சாக்லெட்  கேட்கிறான், அதன்  விலை ரூ 50. அப்பா  மளிகைக்கடையில் சேல்ஸ்மேன். சம்பளமே 500 ரூபாய்தான். அதனால் அப்போது  வாங்கித்தர  முடியவில்லை. மகனின்  பிறந்த நாள் அன்று கடை  ஓனரிடம்  உரிமையாக ஒரு  சாக்லெட்  எடுத்துக்கறேன், சம்பளத்துல  கழிச்சுக்குங்க  என்க  முதலாளி  செம  கடுப்பாகி  வாக்குவாதம்  செய்ய, அப்பாவும், ஓனரும்  தள்ளுமுள்ளுவில்  ஈடுபட்டபோது  ஓனருக்கு  தலையில்  கண்ணாடி  இடித்துக்காயம். ஓனர்  செம  காண்டாகி போலீசில் புகார்  கொடுக்க  போலீஸ் அப்பாவை  லாக்கப்பில்  தள்ளி  செம  அடி  போட்டு  வீட்டுக்கு  அனுப்புகிறார்கள். அன்று  இரவே  அப்பா  மரணம். இதனால்  நாயகன்  ஆன  மகன்  மனநிலை  பாதிக்கப்படுகிறான். சாக்லெட்  என்றாலே  கசப்புதான். யாரைப்பார்த்தாலும்  கொல்ல  வேண்டும் என்ற  மனநோய் வந்து  சிகிச்சையில்  இருக்கிறான்

 

சம்பவம் 2 -  நாயகன்  இப்போது  வளர்ந்து  விட்டான். ஜொமோட்டோ, ஸ்விக்கி  மாதிரி  கம்பெனியில்  ஃபுட்  டெலிவரி  பாய்  ஆக  பணி  செய்கிறான். லிஃப்ட்  வேலை  செய்யாத 13  மாடி  கட்டிடத்தில்  13வது  மாடியில்  ஒரு  ஆர்டர், மூச்சு  வாங்க  நடந்து  மெலே  போனால்  பார்ட்டி  2000  ரூபாய்  நோட்டுக்கொடுத்து  சில்லறை  இல்லை  என  கடுப்பேற்றுகிறார். இன்னொரு  கஸ்டமர்  சரக்கு  மப்பில் எக்ஸ்ட்ராவாக  ஏதோ பொருள்  வாங்கி  வந்தால் தான்  இதற்கான  பணமும்  தர  முடியும்  என  தகறாரு  செய்கிறான். இதனால்  செம  காண்ட்  ஆன  நாயகன்  அவர்கள்  இருவரையும்  போட்டுத்தள்ளுப்வதாக  மனதுக்குள்  நினைக்கிறான், ஆனால்  கொல்லவில்லை

 

சம்பவம் 3 – நாயகன்  ஒரு  வீட்டில்  நண்பர்கள்  இருவருடன்  தங்கி  இருக்கிறான். நாயகனின்  மனநல  பாதிப்பு  அறிந்து  அவர்கள்  அவனுடன்  இரவில்  தங்க  பயப்பட்டு  வாசலில்  படுத்துக்கொள்கிறார்கள் . ஒருவன்  நாயகனை  நீ  காலி  செய்து  வேறு  இடம்  பார்த்துக்கொள்  என்க  நாயகன்  தனிமையில்  இருந்தால்  நான்  தற்கொலை  செய்து  கொள்வேன் அதனால்  அட்ஜஸ்  பண்ணிக்குக்குங்க  என்கிறான்

 

சம்பவம் 4  -இப்படி  வறட்சியாகப்போகும்  நாயகன்  வாழ்வில்   ஒளி  வீசும்  விதமாய்  தென்றலாய்  நாயகி  வருகிறார். ஃபுட்  டெலிவரி  செய்யும் ஒரு  பங்களாவில்  நாயகியை  சந்திக்கிறார். அங்கே  நாயகி ஒரு  பணிப்பெண். சில  பல  தொடர்  சந்திப்புகளுக்குப்பின்  இருவருக்கும்  காதல்  மலர்கிறது

 

சம்பவம் 5 – நாயகி  வீட்டில்  அம்மா, அப்பா, தங்கை, தம்பி  நால்வரும்  தண்டச்சோறுகள் தான், நாயகி  மட்டும்  தான் உழைக்கும்  ஒரே ஆள். ப்ணக்கார  வீட்டில்  ஒரு  பாட்டி  இருக்கிறார். அவரை  பார்த்துக்கொள்ளும்  பணி  நாயகிக்கு. பாட்டியின்  மகனும், மகளும்  ஃபாரீனில்  இருக்கிறார்கள் . இங்கே  அதிகம்  வருவதில்லை . ஃபோனில்  மட்டுமே  பேச்சுக்கள்  எல்லாம். அவர்களிடம்  அன்பு , பாசம்  கிடைக்காத  விரக்தியில்  பாட்டி  பணிப்பெண்ணான  நாயகியை  கொத்தடிமை  போல்  நடத்துகிறார். இதை  நேரில்  ஒரு  முறை  கண்ட  நாயகன்  செம  காண்ட்  ஆகி  பாட்டியை  போட்டுத்தள்ளிடனும்  போல  இருக்கு  என  நாயகியிடம்  சொல்கிறான்

 

சம்பவம் 6 – ஒரு  நாள்  பாட்டி  திடீர்  என  இறக்கிறார். பாட்டியின்  டெபிட்  கார்டை நாயகியின்  தம்பி  களவாடி  அதன்  மூலம்  2  லட்சம்  பணம்  ஆட்டையைப்போட்டு  விடுகிறான். பாட்டியின்  டெட் பாடியை  தனியார்  மார்ச்வரியில்  நாயகி  வைத்து  விடுகிறார்

 

சம்பவம் 7 -  ஃபாரீனில்  இருந்து  பாட்டியின்  மகன், மகள்  வருகிறார்கள் . போலீஸ் கேஸ்  ஃபைல்  ஆகிறது. நாயகியும், நாயகனும்  சேர்ந்துதான்  பாட்டியைக்கொலை  செய்திருக்க  வேண்டும்  என  போலீஸ்  சந்தேகிக்கிறது. விசாரணை  நடக்கிறத் . ஒரு  கட்டத்தில்  நாயகியே  நாயகனைப்பார்த்து  ஏன்  பாட்டியைக்கொலை  செய்தே? என  போலீஸ்  முன்னிலையில்  கேட்டு  விடுகிறாள்

 

இதற்குப்பின்  நிகழும்  பரபரப்பான  சம்பவங்களே  திரைக்கதை


நாயகன்  ஆக  அர்ஜூன்  தாஸ்   கச்சிதமாக  நடித்திருக்கிறார். சைக்கோவா? நல்லவனா? என அவருக்கே  புரிபடாமல்  நடக்கும்  கேரக்டர். பக்குவமான  நடிப்பு .


நாயகி  ஆக துஷாரா  விஜயன். காதல்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகிறது . நடிப்பிலும்  குட் . கண்ணியமான  உடை  அணியும்  நடிகைகளே  குறைவு  என இருக்கும்போது  இவர்  ஒரு  கண்ணியக்கன்னி  ஆக  மனம்  கவர்கிறார்


ஃபிளாஸ்பேக்  காட்சியில்  அப்பாவாக  வரும்  காளி  வெங்கட்  அற்புதமான  குணச்சித்திர  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்


திமிர்  பிடித்த  ஃபாரீன்  ரிட்டர்ன்  டாட்டர்  ஆக  வனிதா  விஜய்குமார்  வாழ்ந்திருக்கிறார். இவரைப்பார்த்தாலே  காண்ட்  ஆகும்  அளவில்  தான்  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது


ஜி வி  பிரகாஷ்  இசையில்  நான்கு  பாடல்கள்  ஓக்கே  ரகம் , பிஜிஎம்   குட் . எட்வின்  ஒளிப்பதிவில்  நாயகியின்  தேவதைத்தன  வெளிப்பாடு  காட்சிகள்  அருமை 


எம்  ரவிக்குமாரின்  எடிட்டிங்கில்  பட,ம்  ரெண்டே  கால  மணி  நேரம்  ஓடுகிறது 

 சபாஷ்  டைரக்டர் ( வசந்தபாலன்  )

1  நாயகி  ஓப்பனிங்  ஷாட்டில்  ஒரு  தேவதை  மாதிரி  காட்டியதும் , ம்ருதாணி  வைத்த  உள்ளங்கைகளை  மட்டுமே  பல  முறை  பார்த்த  நாயகன்  முதல்  முறையாக  நாயகி  முகத்தைப்பார்க்கும்  காட்சியும்  கவிதை


2   ஃபிளாஸ்பேக்  சீனில்  காளி  வெங்கட்  நடிப்பு  பிரமாதம்


3 பொது  மக்கள்  மத்தியில்  ஏற்கனவே  வெறுப்பை  சம்பாதித்த  வனிதா  விஜயகுமாரை  வில்லித்தனமாகக்காட்டிய  புத்திசாலித்தனம்


  ரசித்த  வசனங்கள் ( எஸ்.கே.ஜீவா)

1  முதல்  மழைல  நனையக்கூடாதுனு சொல்வாங்க 

 எனக்கு  மழையில்  நனையப்பிடிக்கும்.. ஹச்  ஹச் 


 ஓ, பிடிச்சிடுச்சு  போல 


2  சங்கம்  முக்கியமா? சாப்பாடு  முக்கியமா?

 சங்கத்துல  சாப்பாடு  போட்டா  சங்கம்  தான்  முக்கியம்


4  நான்  முதலாளி  இல்லை , வேலைக்காரிதான்னு  எப்படி  முன்னமே  தெரியும்?


‘மழைக்கு ஒதுங்கி நில்லுங்கன்னு சொல்ற குரலும் தலை துவட்ட துண்டு கொடுக்கற கையும் நிச்சயம் பணக்காரங்களோடதா இருக்காது’, 


இங்க எல்லாமே பிரைவேட் ஆயிடுச்சு, போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடெட்னு போட்ருவாங்க போல’


6  ஒண்ணுமே  இல்லாத  ஏழை  வீட்டில்  தேவதை  பிறந்தா  வாழ்க்கைல  ரொம்ப  கஷ்டப்படுவாங்க


7 பணக்காரர்கள்  அகராதில  வேலைக்காரர்கள்  என்றாலே  திருடர்கள்  என்றுதான்  அர்த்தம் 

8  அன்பையும், பாசத்தையும்  கேட்டு  வாங்கும்  நிலைமை  எந்தத்தாய்க்கும்  வரக்கூடாது

9 உழைக்கறவங்களை  நம்பாத  எந்த  நிறுவனமும்  உருப்பட்டதா  சரித்திரமே  இல்லை 

10  கை  கூப்பி  மன்னிப்பு  கேட்கும்  கரங்களை  மன்னிக்காதவன்  மனுசனே  இல்லை , மிருகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  எமர்ஜென்சி, பாட்டியின்  ஃபோனில்  காண்டாக்ட் நெம்பர்ஸ்  பார்க்கனும், ஆனா  லாக்  பண்ணி  இருக்கு . இந்த  சிச்சுவேஷனை  ஈசியா  ஹேண்டில்  பண்ணலாம். சிஸ்டம் ஸ்பெஷலிஸ்ட்  கிட்டே  அல்லது  ஃபோன்  சர்வீஸ்  செண்ட்டர்ல  கொடுத்தா  அவங்க  லாக்  ரிலீஸ்  பண்ணித்தருவாங்க 


2 பாட்டியோட  டெபிட்  கார்டை  நாயகி  ஏன்  தன்  வீட்டுக்குக்கொண்டு வர  வேண்டும் ?  தன்  தம்பி  அதை  எடுத்து  2  லட்சம்  பணம்  எடுத்துட்டான்  என  சொல்ல  வேண்டும் ? பாட்டி  வீட்டிலேயே  அதை  வைத்திருக்கலாமே?


3  தற்கொலைக்கடிதம்  எழுதுபவர்கள்  அந்த  பேப்பர்  மேல்  வெயிட்  வைப்பார்கள் ., அல்லது  டைரியில்  எழுதிய  பக்கத்தை  திறந்து  வைத்து  அதில்  வெயிட்  வைப்பார்கள் . இப்படி  ஃபேன்  காற்றில்  பறக்கற  மாதிரியா  அசால்ட்டாக  வைப்பார்கள் ?

4  ஒரு  கம்பெனியின்  ஓனர்  அவருக்கு  என  தனி  பாத்ரூம் / டாய்லட்  வைத்திருக்க  மாட்டாரா? தொழிலாளர்கள்  உபயோகிக்கும்  டாய்லட்டுக்கா  வருவார்?

5  நாயகியைக்கொத்தடிமை  போல்  நடத்தும்  பாட்டி  தன்  சொத்துக்களை  அவர்  பெயரில்  எழுதி  வைப்பது  நம்பும்படி  இல்லை . பாட்டிக்கு  தன்  மகன்  , மகள்  மேல்  கோபம்  எனில்  அனாதை  இல்லத்துக்கு  எழுதி  வைக்கலாமே?


6  கையில்  ஆயுதத்துட ந்  கொலை  வெறி  உடன்  இருக்கும்  ஆளைப்பார்த்து  பயந்து  ஓடுவார்களா? என்னை  என்னடா  பண்ணிடுவே? என  எதிர்த்துப்பேசுவார்களா? அதுவும்  ஒரு  பெண்?


7  வெத்து  பாண்டு  பேப்பரில்  கையெழுத்து  வாங்காமல்  நாயகியிடம்  உன்  பேரில்  இருக்கும்  வீட்டை  என்  பேருக்கு  மாற்றனும்  என  மடத்தனமாக  மாட்டி  உளறிக்கொட்டுவாங்களா?


8   திரைக்கதையை  நேரடியாக  சொல்லி  இருந்தால்  ஆரம்பத்தில்  இருந்தே  நாயகன்  மீது  பரிதாபம்  வந்திருக்கும், சஸ்பென்ஸ்  வைக்கிறேன்  என  நான்  லீனியர்  கட்டில்  சொன்ன  விதம்  குழப்பம் 


9  வசந்த  பாலன்  வழக்கமான  பாணியான  மென்  காதல்  மாறி  வன்முறையைக்கையில்  எடுத்திருப்பது  பின்னடைவு 


10   ஏற்கனவே  காவல்துறையில்  கொடுமைகள் , லாக்கப்  வன்முறைகளை  விசாரணை , ஜெய் பீம்  உட்பட  பல  படங்களில்  பார்த்து  விட்டதால்  போலீஸ்  செய்யும்  ஃப்ரேமிங்  காட்சிகள்  சலிப்பு 

  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  அடல்ட்  கண்ட்டெண்ட்  இல்லை , ஆனால்  வன்முறைக்காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இயக்குநர்  வசந்த பாலன்  ரசிகர்கள்  அங்காடித்தெரு , வெயில்  படங்களை  சிலாகிப்பவர்கள்  பார்க்கலாம். ரேட்டிங்  2.75 / 5 


Aneethi
Theatrical release poster
Directed byVasanthabalan
Written byVasanthabalan
Produced by
  • M. Krishna Kumar
  • Murugan Gnanavel
  • Varadharajan Manickam
  • Vasanthabalan
Starring
CinematographyA. M. Edwin Sakay
Edited byRavikumar. M
Music byG. V. Prakash Kumar
Production
company
Urban Boyz Studios
Distributed byS Pictures
Release date
  • 21 July 2023
CountryIndia
LanguageTamil

0 comments: