கன்னட இயக்குநர் ஆன தயாள் பத்மநாபன் தான் இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஆ கராலா ராத்ரி (2018) யை தமிழில் வரலட்சுமியை நாயகியாக வைத்து கொன்றால் பாவம் என இயக்கினார். ஒரிஜினல் லெவலுக்குப்போகவில்லை எனினும் கவனம் ஈர்த்த படம். மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்அவரது நேரடி முதல் தமிழ்ப்படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
சட்டத்துக்கு புறம்பாக ஏதோ செயல் நடைபெறுவதை ஒப்பனிங் ஷாட்லயே ஒருவர் ஒரு இடத்தில் பார்த்து அதை போலீசில் தகவல் சொல்றார். போலீசும் அந்த கேங்கின் கூட்டாளி. புகார் கொடுத்த ஆளை போட்டுத்தள்ளிடறாங்க
இப்போது அநியாயமாக கொல்லப்ப்ட்ட ஆளின் நண்பர்கள் மூவர் , காதலி நால்வரும் சேர்ந்து அந்த கேங்கை பழி வாங்க திட்டம் இடுகிறார்கள் . காதலி ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். அதனால் போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே போலீஸ் இன்ஸ்பெக்டர் , அந்த தாதா இருவரையும் கொல்ல பிளான் பண்றாங்க, ஆனால் அவங்களை முந்திக்கிட்டு வேற யாரோ அந்த பிளானை எக்சிக்யூட் பண்றாங்க.
போலீஸ் ஸ்டேஷனிலேயே நட்ந்த இரு கொலைகளைப்பற்றி துப்பு துலக்க நாயகன் ஆன போலீஸ் ஆஃபீசர்( அசிஸ்டெண்ட் கமிஷனர்) அங்கே வருகிறார். இதற்குப்பின் நிக்ழும் திருப்பங்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக ஆரவ் நல்ல கம்பீரம். போலீஸ் மிடுக்கை நன்கு வெளிப்படுத்துகிறார்
நாயகி ஆக வர லட்சுமி / நாயகனை விட அதிக காட்சிகள் . பழைய மிடுக்கும் கம்பீரம் , தெனாவெட்டு வரலட்சுமியிடம் மிஸ் ஆக முக்கியக்காரணம் டயட் இருந்து உடல் இளைத்ததுதான்
படம் போர் அடிக்காமல் 2 மணி நேரத்தில் முடிகிறது . இது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் டைரக்டாக ஆஹா தமிழ் ஓடிடி யில் ரிலீஸ் ஆனது
சபாஷ் டைரக்டர்
1 டூயட் , மொக்கைக்காமெடி டிராக் எதுவும் இல்லாம நேரடியாக கதை சொன்ன விதம்
2 நாயகி கொலை செய்ய பிளான் சொல்வதைக்காட்சியாகக்காட்டி விட்டு அந்த பிளானை செயல்படுத்தும்போது ஒரு பதை பதைப்பை ஆடியன்சிடம் கொண்டு வந்தது
3 க்ளைமாக்சுக்கு முன் பே ட்விஸ்ட் வெளிப்பட்டாலும் சுவராஸ்யமாய் கதை சொன்ன விதம்
ரசித்த வசனங்கள்
1 பூசாரி சப்போர்ட்டை விட சாமியோட சப்போர்ட் இருந்தா எனக்கும் நல்லதுதான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஒரு இன்ஸ்பெக்டரை அவரது போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டுவது சினிமாவில் பார்க்க பரபரப்பாக இருக்கலாம், ஆனால் ரிஸ்க் அதிகம்
2 போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து போலீசும் க்ளீன் ஷேவ் தாடையில் இருக்கும்போது நாயகன் ஆரவ் மட்டும் லைட் தாடியோடு இருக்காரே? ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருப்பாரோ?
3 குண்டடி பட்ட வில்லன் இன்ஸ்பெக்டர்க்கு உயிர் இருக்கு என டாக்டர் சொல்லி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப்போக ஹையர் ஆஃபீசர் பர்மிஷன் கேட்டுட்டு இருக்கார். அரை மணி நேரமா அப்படியே உயிர் ஊசலாடிட்டு இருக்கு
4 நீ ஆம்பளையா இருந்தா கட்டை அவிழ்த்து விட்டுட்டு உன் வீரத்தைக்காட்டு என ரவுடி போலீசிடம் சொல்வதெல்லாம் சோலோ ஃபைட்டுக்கான 1970களில் வந்த காட்சி
5 ஹையர் ஆஃபீசரான ஆரவ் தனக்குக்கீழ் பணி புரியும் வரலட்சுமியிடம் ஒவ்வொரு இடத்துக்கும் போகும்போதும் இன்ஃபார்ம் பண்றார் , எதுக்கு ?
6 சம்பவம் நடந்த அன்னைக்கு அந்த 3 பேரும் என்ன டிரஸ் போட்டு இருந்தாங்களோ அதே டிரஸ் ல அவங்களை வரச்சொல்லுங்கனு ஆரவ் வரலட்சுமி கிட்டே சொல்றார், ஆனா அவர் அதை ஃபாலோ பண்ணலை , ஆனா அவங்க கரெக்டா அதே டிரஸ்ல வர்றாங்களே?
7 க்ளைமாக்சில் அந்த சாட்சி எதுக்கு தானாக முன் வந்து தன்னைக்காட்டிக்கொள்கிறான்? சேஸ் செய்யப்படுகிறான்? அவன் பாட்டுக்கு கமுக்கமா போய் இருக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் மூவி தான் . பார்க்கலாம் , ரேட்டிங் 2.5 / 5
Maruthi Nagar Police Station | |
---|---|
Directed by | Dayal Padmanabhan |
Written by | Dayal Padmanabhan |
Produced by | Dayal Padmanabhan |
Starring | |
Cinematography | Shekhar Chandra |
Edited by | Preethi Mohan Babu A. Srivastava |
Music by | Manikanth Kadri |
Production company | D Pictures |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment