கோழையாக இருப்பவன் வீரனாக மாறுவது 1965ல் எம் ஜி ஆர் எங்க வீட்டுப்பிள்ளை காலத்துலயே சொல்லப்பட்ட கதை தான். அதில் எம் ஜி ஆரின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கலக்கலாய் இருக்கும். நான் ஆணையிட்டால் பாடல் காட்சிகளில் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது ., அந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக்கண்டு அதை ஹிந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்தார்கள் , ஆனால் எம் ஜி ஆர் அளவுக்கு அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்க்க யாராலும் முடியவில்லை . அந்த சாயலில் ஒரு கதையை எடுத்து 2006ல் ரிலீஸ் ஆன ஸ்ட்ரேஞ்சர் தன் ஃபிக்சன் என்ற ஹாலிவுட் படத்தில் வந்த அசரீரி என்ற கான்செப்டில் பட்டி டிங்கரிங் பண்ணி இந்தப்படத்தைத்தந்திருக்கிறார்கள்
பிரின்ஸ் படத்தின் தோல்வியால் துவண்டு போன சிவகார்த்திகேயனுக்கு இது ஆறுதல் வெற்றிப்படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தன் அம்மா, மற்றும் தங்கை யுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். அந்த இடத்தைக்காலி செய்ய வேண்டும் என வில்லனான மினிஸ்டரின் ஆட்கள் வ்ந்து சொல்ல எதிர்ப்பேச்சு பேசாமல் காலி செய்து கொடுக்கிறார்கள் . ஆல்ட்டர் நேட்டிவாக வில்லன் கட்டிக்கொடுத்த ஒரு டப்பா அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார்கள் , ஆனால் வாழத்தகுதி அற்ற அந்த வீட்டில் மக்களால் தொடர்ந்து சமாளித்து இருக்க முடியவில்லை . வில்லனான மினிஸ்டரை நாயகன் எதிர்த்துப்போராடுகிறான், அதில் அவன் எப்படி வெற்றி பெற்றான் என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக சிவகார்த்திகேயன், படம் முழுக்க அவர் பயந்த சுபாவமாகவே வருவது சிறப்பு. நாயகி ஆக அதிதி ஷங்கர் பிரம்மாண்டமாக இல்லாமல் எளிமையாக இருக்கிறார்
காமெடிக்கு யோகி பாபு , ஆனால் அவர் பெரிதாக காமெடி எதுவும் செய்ய வில்லை . வில்லன் ஆக மிஸ்கின் , சுனில் கச்சிதமான நடிப்பு . அம்மாவாக சரிதா ஓவர் ஆக்டிங். தங்கையாக மோனிஷா பிலஸ்சி பிரமாதமான முக பாவனையுடன் நல்ல நடிப்பு
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பிஜிஎம் ஓக்கே ரகம் .பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடுகிறது ., இன்னும் க்ரிஸ்ப் ஆக கட் செய்து இருக்கலாம்
சபாஷ் டைரக்டர்
1 வில்லன் மிஸ்கின் வாளுடன் வர பின்னால் கைகள் கட்டப்பட்ட நாயகன் அதை சமாளிக்கும் காட்சி கைதட்டலை அள்ள வைக்கும் மாஸ் சீன்
2 ஆயுதங்களுடன் நெருங்கும் ரவுடி கும்பலை சமாளிக்க நாயகன் மேலே வானத்தைப்பார்த்து கைல பொருள் வெச்சிருக்கறவனையா போட்டுத்தள்ளனும் ? என கேட்க அனைவரும் ஆயுதங்களைக்கீழே போடுவதும், டார்ச் லைட் வைத்திருப்பவன் கூட அதைக்கீழே போடுவதும் கூஸ்பம்ப் சீன்
- வீட்ல வளர்க்கற நாய் கூட ரெண்டு டைம் அடிச்சா மூணாவது டைம் அடிக்கறப்ப எதிர்க்கும்
- வீரனுக்குப்புரிந்தது , தப்பிக்க ஒரே வழி யுத்தம்
- அட்ஜஸ் பண்ணி வாழ்ந்தா எல்லாம் சரி ஆகிடும்னு நினைச்சேன், ஆகலை
Maaveeran | |
---|---|
Directed by | Madonne Ashwin |
Written by | Madonne Ashwin Chandru A. |
Produced by | Arun Viswa |
Starring | |
Cinematography | Vidhu Ayyanna |
Edited by | Philomin Raj |
Music by | Bharath Sankar |
Production company | Shanthi Talkies |
Distributed by | Red Giant Movies |
Release date |
|
Running time | 166 minutes[1] |
Country | India |
Language | Tamil |
Budget | ₹35 crore[2] |
Box office | est. ₹89 crore[3] |
0 comments:
Post a Comment