2023 ஜூன் 2 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றது. ஆனால் கமர்ஷியல் சக்சஸ். இப்போது ஜூலை 5 2023 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சஞ்சய் தன் தோழ்னும் , பிஸ்னெஸ் பார்ட்னரும் ஆன ஷரத் உடைய அறிமுகத்தால் ஸ்ரீ என்ற பெண்ணை சந்திக்கிறான். நாயகனை ஸ்ரீக்குப்பிடித்துப்போகிறது . இருவ்ரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் ‘. இவர்களுக்கு குழந்தை இல்லை
ஒரு நாள் திடீர் என நாயகி ஆன ஸ்ரீ கொலை செய்யப்பட்டு வீட்டில் இருக்கிறாள் . பார்ட்டிக்குப்போய் விட்டு வீட்டுக்குட்திரும்பிய நாயகன் கொலை ஆன தன் மனைவியின் உடலைக்கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு ஃபோன் பண்ணுகிறான்
போலீஸ் வந்து விசாரிக்கிறது கொலையோடு வீட்டில் பணம், நகை கொள்ளை போய் இருக்கிறது . போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கொலையாளி மிகப்பெரும் வன்மத்துடன் ஆயுதத்தால் தாக்கி இருக்கிறான் என சொல்கிறார்கள்
இப்போது போலீஸ் ஆஃபீசரின் சந்தேக வளையத்தில்
1 நாயகன் தான் தன் மனைவியைக்கொன்று விட்டு நாடகம் ஆடுகிறான். ஏன் எனில் கடைசி 30 நாட்களில் நாயகனின் நண்பனுக்கு பல முறை கால் செய்து நாயகனின் ,மனைவி பேசி இருக்கிறாள் . இதனால் நாயகி, நாயகனின் நண்பன் இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து அது தெரிந்து நாயகன் கொலை செய்திருக்கலாம்
2 நாயகன் வீட்டு வேலைக்காரி பணம், நகைக்கு ஆசைப்பட்டு தன் கணவன் உதவியுடன் கொலை செய்திருக்கலாம்
3 நாயகன் ஃபேக்டரி மேனேஜர் நாயகனை சிக்க வைக்க இக்கொலையை செய்திருக்கலாம்
4 நாயகனின் நண்பனும், பிஸ்னெஸ் பார்டனரும் ஆன சரத் இக்கொலை யை செய்திருக்கலாம்
என சந்தேக வட்டத்துக்குள் நான்கு பேரைக்கொண்டு வந்து விசாரிக்கிறது . இறுதியில் மர்ம முடிச்சுகள் எப்படி அவிழ்ந்தது என்பதே மீதி திரைக்கதை
கேசை துப்பறியும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக அஜய் கம்பீரமான உயரத்தில் வருகிறார். அவரது அதட்டல் உருட்டல் எல்லாம் அமர்க்களம் . அவருக்கு உதவியாக வரும் சப் இன்ஸ்பெக்டர் ஆக ஞானேஸ்வரி லிப்ஸ் டிக் போட்ட போலீஸ் ஆக வருகிறார்
நாயகன் சஞ்சய் ஆக விவேக் த்ரிவேதி கச்சிதமாக நடித்திருக்கிறார். நாயகி ஸ்ரீ ஆக ஊர்வசி பரதேசி நடித்துள்ளார். இவருக்கு அதிக வாய்ப்பில்லை , வந்த வரை ஓக்கே ‘
பரத் மஞ்சிராசுவின் இசையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம் .சி வி அஜய் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் குளிர்ச்சியாக கண் முன் விரிகின்றன ஜேஸ்வின் பிரபுவின் எடிட்டிங்கில்110 நிமிடங்களில் ட்ரிம் செய்யப்பட்டிருக்கிறது .
சபாஷ் டைரக்டர் ( சேத்குரி மதுசூதன் )
1 ஒவ்வொருவர் மேலும் இன்ஸ்பெக்டர் சந்தேகப்படும்போது அவர் பார்வையில் என்ன நடந்திருக்கும் என காட்சிகளாக காட்டுவது நல்ல முயற்சி
2 இது ஒரு கள்ளக்காதல் கொலையாகத்தான் இருக்கும் என ச்ந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் காட்சி அமைப்புகளும் அதைத்தொடர்ந்து வரும் அதிரடித்திருப்பங்களும்
3 சந்தேக லிஸ்ட்டில் முக்கியமானவராக இருக்கும் நாயகனின் ந்ண்பரும், பிஸ்னெஸ் பார்ட்னரும் கொலை செய்யப்படும்போது விறுவிறுப்பு கூடுகிறது
ரசித்த வசனங்கள்
1 ஐம்பது லட்சம் ரூபா லிக்விட் கேஷ் வீட்ல வெச்சிருக்கறவங்க ஐயாயிரம் ரூபா செலவு பண்ணி சிசிடிவி வைக்க மாட்டாங்களா?
2 நம்ம ரெண்டு பேரையும் இந்தப்பணம் பிரிச்சிடும்னு நினைக்கிறேன்
பணம் நம்மைப்பிரிக்காது , பணத்தோட வேல்யூ தெரியாதவங்க தான் பிரிவாங்க
3 அடிக்சன் ல இருக்கற எல்லாரும் அதுல இருந்து வெளில வ்ரத்தான் விரும்புவாஙக ,ஆனா அவங்களால அது முடியாது
4 கோபத்துல நாம் எடுக்கும் முடிவுகளால் சில இழப்புகளை சந்திக்க நேரும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கொலைக்கேசை விசாரிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் ஃபங்க் ஹேர் ஸ்டைல் அடர் தாடி கெட்டப்ல இருக்காரே?
2 நாயகனை போலீஸ் ஜீப்பில் அரெஸ்ட் பண்ணி கூட்டிப்போகும்போது ஏன் ஜீப் ஸ்லோ ஆகிறது ? அவன் தப்பட்டும் என்றா?
3 ஒருவனை அடைய திட்டம் போடும் ஒரு பெண் முதலில் அவனை மயக்க என்ன வழி ? என பார்ப்பாளா? முதல் கட்டமா அவனோட மனைவியைகொலை பண்ண திட்டம் போடுவாளா?
4 வாடகைக்கொலையாளியை ஃபிக்ஸ் செய்யும் இருவர் இருவருமே தங்கள் முகத்தை அவனிடம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
5 பெண்ணைக்கொலை செய்ய வரும் வாடகைக்கொலையாளி இளைஞனாக இருந்த போதும் பெண்ணை ரேப் செய்ய முயலவே இல்லை
6 வாடகைக்கொலையாளியை ஃபிக்ஸ் செய்பவர் கொலை முடிந்தபின் அவனை அடிக்கடி செல் ஃபோனில் ஏன் தொடர்பு கொள்கிறான்? போலீஸ் ட்ராக் பண்ணும் என தெரியாதா?
7 ஒரு கொலைக்கேஸ் நடந்து கொண்டிருக்கும்போதே கொலை ஆன நபரின் இன்சூரன்ஸ் தொகை க்ளியர் ஆகி கைக்கு கிடைப்பது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும் ரசிக்க வேண்டிய ஒரு க்ரைம் த்ரில்லர் தான் இது . இன்னும் மெனக்கெட்டு உழைத்திருந்தால் நல்ல க்ரைம் த்ரில்லர் கிடைத்திருக்கும் . ரேட்டிங் 2.5 / 5
Chakravyuham: The Trap | |
---|---|
Directed by | Chetkuri Madhusudhan |
Written by | Chetkuri Madhusudhan |
Produced by | Chetkuri Savithri |
Starring |
|
Cinematography | G V Ajay kumar |
Edited by | Jesvin Prabu |
Music by | Bharath Manchiraju |
Distributed by | Mythri movie distributer's LLP |
Release date |
|
Running time | 111.24 Minutes |
Country | India |
Budget | 2 Cr |
Box office | 2.5 Cr |
0 comments:
Post a Comment