Tuesday, August 22, 2023

BAWAAL (2023) ஹிந்தி -சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


பவால்  என்னும்  ஹிந்தி  சொல்லுக்கு  எக்சைட்மெண்ட்   என்று  அர்த்தம். ஸ்ரீதேவியின் மகளான  ஜான்வி  கபூர்  நாயகியாக  நடித்த  இந்தப்படம்  2023  ஜூலை  21  முதல்  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது . இப்படத்தின்  படப்பிடிப்பு மும்பை , கான்பூர் , லக்னோ ,பாரீஸ் , பெர்லின், ஆம்ஸ்டர்டாம், போலந்து  ஆகிய  இடங்களில்  படமாக்கப்பட்டது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு  ஸ்கூல்  டீச்சர் . டுபாக்கூர்  பார்ட்டி . தன்னைப்பற்றி  இல்லாததும், பொல்லாததுமாக  ஓவர்  பில்டப்  செய்து  இமேஜ்  வளர்த்தி  வைத்திருப்பவன்


நாயகி சின்ன  வயதில்  காக்கா  வலிப்பு  என்னும்  ஃபிட்ஸ்  நோயால்  பாதிக்கப்பட்டவள். திருமணத்துக்கு  முன்பே  மாப்பிள்ளையான  நாயகனிடம்  அதைப்பற்றி தெரிவித்து  விடுகிறாள் 


 அப்போது   அது  பற்றி  பெரிதாக  அலட்டிக்கொள்ளாத  நாயகன்  திருமணத்துக்குப்பின்  அந்தக்குறைபாட்டை  பூதாகரமாகப்பார்க்கிறான் 


 ஸ்கூலில்  தன்  க்ளாஸ்  ரூமில்  வாத்தியார்  ஆன  நாயகன்  ஒரு  பையனை  அடித்து  விடுகிறான். அடிபட்ட  பையனின்  அப்பா  ஒரு  எம் எல் ஏ . இதனால்  அந்த  எம் எல் ஏ  நாயகனை  சஸ்பெண்ட்  செய்ய  வேண்டும்  என  பிரஷர்  தருகிறார்


இந்த  ஒரு  மாத  கால  சஸ்பென்ஷன்  வாழ்க்கையை  சீராக்க, இழந்த  தன்  இமேஜை  சரி  ஆக்க  நாயகன்    ஃபாரீன்  டூர்  போய்  உலகப்போர்  நிகழ்ந்த்  இடங்களில்  எல்லாம்  ஒரு  விசிட்  அடித்து  மாணவர்களுக்கு  ஆன்  லைன்  கிளாஸ்  நடத்த  முடிவெடுக்கிறான்


நாயகன் , நாயகி  இருவரும்    ஃபாரீன்  டூர்  போகிறார்கள் . இதற்குபின்  இவர்கள்  கருத்து  வேற்றுமை  மறைந்து  இருவரும்  இணைந்தார்களா?  ஸ்கூலில்  வேலை  மீண்டும்  கிடைத்ததா? என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக வருண்  தவான்  முதல்  பாதியில்  காமெடி  கல்ந்த  நடிப்பையும், பின்  பாதியில்  செண்ட்டிமெண்ட்  கலந்த  நடிப்பையும்  வழங்கி  இருக்கிறார்

 நாயகி  ஆக  ஜான்வி  கபூர்   சோக  சித்திரமாக  படம்  முழுக்க  வருகிறார். ஸ்ரீதேவியின்  மகள்  என்ற  பிம்பமே  அவரது  எதிரி . அவர்  அளவுக்கு  முக  வசீகரம், அழகு , நடிப்பு  எல்லாமே  குறைவு  என்பதால்  ஒப்பீடு  செய்து  பார்ப்பதைத்தவிர்க்க  முடியவில்லை 

நான்கு  பாடல்கள் கேட்கும்  தரத்தில்  இருந்தாலும்  பிஜிஎம்  பாராட்டும்  விதத்தில்  இருக்கிறது மித்தேஷ்  மர்ச்சந்தரி  தான்  ஒளிப்பதிவு . ஃபாரீன்  லொக்கேஷன்களை  அழகாகப்படம்  பிடித்திருக்கிறார்

கதை  மற்றும்  தயாரிப்பு  இரண்டுமே அஸ்வின் அய்யர்  திவாரி , திரைக்கதை  , இயக்கம்  நிதேஷ்  திவாரி  சாரு  ஸ்ரீ  ராய்  எடிட்டிங்கில் 137  நிமிடங்கள்  டைம்  டியூரேஷன் , இன்னும்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்



சபாஷ்  டைரக்டர் ( நிதேஷ்  திவாரி)

1   எடுத்துக்கொண்ட  கதைக்கு  ஆறு  பேர்  கொண்ட  குழுவுடன்  திரைக்கதை  அமைத்த  விதம் , பிரிந்து  வாழும்  தம்பதியர் , பிணக்கில்  இருக்கும்  காதலர்களுக்கு  ஒரு  பாடமாய்  இருக்கும்  விதத்தில்  மனதைத்தொடும்படி  இருக்கிறது


2  மெயின் கதை  தம்பதியர்  மன  ஒற்றுமை  என்றாலும்  சைடு  டிராக்கில்  உலகப்போர்  நடந்த  இடங்கள்  அது  பற்றிய  தகவல்கள்  என  டாக்குமெண்ட்ரி  எஃபக்டில்  பின்  பாதி  எடுத்த  விதம் 

ரசித்த  வசனங்கள் 

1   அவரு  ஐ ஏஎஸ்  எக்சாம்  எழுதும்போதுதான்  நினைச்சார், நாம  ஜெயிச்சா  லக்னோவுக்கு  ஒரு  கலெக்டர்தான்  கிடைப்பாரு, ஆனா  ஆசிரியர்  ஆகிட்டா  ஏகப்பட்ட  கலெக்டர்சை  நாமே  உருவாக்கலாம்,அதனால  பேப்பரை  கிழிச்சுட்டு  எக்சாம்  ஹாலை  விட்டு  வெளில  வந்துட்டாரு 


2  இவரு  ஹிஸ்டரி  டீச்சர் இல்லை  மிஸ்டரி  டீச்சர்   என்ன  கத்துத்தர்றார்னு  அவருக்கே  தெரியாது  


2   நாம  என்ன  இமேஜ்  மெயிண்ட்டெயின்  பண்றமோ  அதுதான்  ஜனங்க  மனசுல  பதியும்

3  ஏங்க , அவர்  கிட்டே  கேட்டுப்பாருங்க , அவரோட  சேவிங்க்ஸ்  அக்கவுண்ட்  தான்  உங்க  பேங்க்ல  இருக்கே?


 ஏம்மா,  சேவிங்க்ஸ்  அக்கவுண்ட்  இருந்தா  என்  பிள்ளையை  அவர்  சேவ்  ப்ண்ணுவாரா? என்ன  லாஜிக்  இது ?


4  நாமே  ஒரு  வேலையை  விட்டு  ரிசைன்  பண்றதுக்கும், அவங்க  நம்மை  டெர்மினேட்  பண்றதுக்கும்  வித்தியாசம்  இருக்கு 


5  ஹோட்டல்  வெப்சைட்ல  விளம்பரம்  போடறாங்க  ஃபைவ்  ஸ்டார்  மாதிரி , ஆனா  கிடைக்கறது  என்னவோ  லாலிபாப் தான் 


6  உனக்கு  இதெல்லாம்  எப்படித்தெரியும்?

 தெரிஞ்சுக்கனும்னு  ஆசைப்பட்டா  நிச்சயமா  தெரிஞ்சுக்கலாம், இடங்களைபற்றியும், மனிதர்களைப்பற்றியும்

7  மரணம்  முன்  கூட்டியே  தீர்மானிக்கப்பட்டதாக  இருந்தாலும்  போர்  வீரர்கள்  முன்  நோக்கிச்செல்வதை  நிறுத்தவில்லை 

8  மற்றவர்களின்  சுதந்திரத்துக்காக  தன்  உயிரை  இழக்கத்துணிவது  சாதாரண  விஷய்ம்  இல்லை 

9  நம்ம  ரெண்டு  பேருக்கும்  பொதுவான  ஒற்றுமை  அம்சங்கள்  எதுவுமே  இல்லையே?


 அப்படி  இருக்கனும்னு  அவசியம்  இல்லை 

10 ஹிட்லர்  ஒரு  கிறுக்கன்,  தான்  இருக்கற  நாட்டை  விட்டுட்டு  இன்னொரு  நாட்டின்  மீது  ஆசைப்பட்டான், அழிந்தான்

 நாம  எல்லாருமே  ஹிட்லர்  மாதிரிதான் , சைக்கிள்  இருக்கறவன் பைக்  வேணும்னும் , பைக்  இருக்கறவன்   கார்  வேணும்னும்  ஆசைப்படறவங்க 


11  ஹிட்லர்  வாழ்க்கைல  நாம  கத்துக்க  வேண்டிய  ஒண்ணு  பித்தலாட்டம், பொய்  இவற்றால்  நாம்  ஏற்படுத்தும் இமேஜ் நீண்ட  நாட்கள் நிலைக்காது . ஹிட்லர்  செத்த  இடத்துல  ஒரு  நினைவு  மண்டபம்  கூட  இல்லை 


12  வரலாறு  நமக்குக்கத்துத்தரும்  ஒரு  முக்கியமான  விஷயமே  நம்ம  தப்பை  திருத்திக்கறதுதான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சின்ன  வீடு , கோபுரங்கள்  சாய்வதில்லை  போன்ற  படங்களில்  நாயகி அழகின்மை  பற்றிக்குறை  கூறும்  நாயகன்  பின்  மனம்  மாறுவது  பிரமாதமான  திரைக்கதையால்  விளக்கப்பட்டிருக்கும், அந்த  ஆழம்  இதில்  இல்லை 


2  ஒரு  மாச  சம்பளமே  நாயகனுக்கு 10,000  ரூபாய்  தான்  இருக்கும், ஆனால்  அந்த  ஒரு  மாச  சஸ்பென்சனுக்காக  வோர்ல்ட்  எஜூக்கேஷனல்  டூர்  என  8  லட்சம்  ரூபாய்  செலவு  செய்ய  முன்  வருவது  எல்லாம்  ஓவர் 


3 மனைவிக்கு  சின்ன  வயதில்  ஃபிட்ஸ்  நோய்  இருந்தது  என்ற  ஒரே  காரணத்துக்காக  பெட்  ரூமில்  இருவரும்  பிரிந்து  வாழ்வது  ஏற்றுக்கொள்ளும்  விதத்தில்  இல்லை 


4  தான்  தாலி  கட்டிய  சொந்த  சம்சாரத்தை  ஃபாரீனில்  மற்றவர்  முன்  கிளாமர்  டிரசில்  தோன்றும்போது  அழகு  என  நாயகன்  சிலாகிப்பதை  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜான்வி கபூர்  ரசிகர்கள் யாராவது  இருந்தால்  அவர்கள்  மட்டும்  பார்க்கலாம், நல்லா  தூக்கம்  வரும், ரேட்டிங்  2/ 5 



Bawaal
Official release poster
Directed byNitesh Tiwari
Written by
  • Nitesh Tiwari
  • Piyush Gupta
  • Nikhil Mehrotra
  • Shreyas Jain
Story byAshwiny Iyer Tiwari
Produced by
Starring
CinematographyMitesh Mirchandani
Edited byCharu Shree Roy
Music bySongs:
Mithoon
Tanishk Bagchi
Akashdeep Sengupta
Score:
Daniel B. George
Production
companies
Distributed byAmazon Prime Video
Release date
  • 21 July 2023
Running time
137 minutes
CountryIndia
LanguageHindi

0 comments: