எல்லாரும் நல்லவங்கதான் என்பதுதான் பட டைட்டிலின் அர்த்தம். இப்படம் பெரும்பாலான பகுதிகள் குன்னூரில் படமானது . கொஞ்சம் போல ஃபாரீன் லொக்கேஷன் உண்டு 2023 மே 18 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன இப்படம் அமேசான் பிரைம் ல் ஜூன்17 முதல் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , நாயகி இருவரும் குழந்தையாகப்பிறக்கும்போது ஒரே நாளில் பிறந்தவர்கள் . ஒரே ஹாஸ்பிடலில் டெலிவரி நடக்கும்போது தவறுதலாக குழந்தைமாறி விடுகிறது . அதாவது நாயகன் நாயகியின் பெற்றோருக்கும் , நாயகி நாயகனின் பெற்றோருக்கும் மாறி கொடுக்கப்படுகிறார்கள் . இந்தக்குழப்பம் க்ளைமாக்சில் தான் தெரிய வருகிறது அனைவருக்கும்
இரு குடும்பமும் ஒரே ஒரு கேஸ் விஷயத்தில் காலம் காலமாக கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள் . காஃபி எஸ்டேட் பிரச்சனை அது இந்தப்பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கிறது
நாயகி ரொம்ப சிக்கனம் ஆனவர் . திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துபவர் நாயகன் அதற்கு நேர் மாறானவர் , சித்தன் போக்கு சிவன்போக்கு என வாழ்க்கை நடத்துபவ்ர் , சீரியஸ்னெஸ் இல்லை , அதனால் எப்போதும் பெற்றோரிடம் திட்டு வாங்குபவர்
ஸ்கூல் லைஃபில் நாயகன் , நாயகி இருவரும் ஒன்றாகப்படித்தவர்கள் . அப்போதே நாயகன் தன் காதலை வெளிப்படுத்த நினைத்துக்கடிதம் எல்லாம் எழுதினார் , ஆனால் வெளிப்படுத்த வில்லை . அதனால் நாயகிக்கு விஷயம் தெரியாது
இப்போது வேறு ஒரு நபர் நாயகியை திருமணம் செய்ய பிரப்போஸ் செய்கிறார். நாயகி அதற்கு ஒத்துக்கொள்கிறார். திருமண ஏற்பாடுகள் நடக்கிறது . அப்போது எதேச்சையாக நாயகனின் காதல் விஷயம் நாயகிக்கு தெரிய வருகிறது . அதற்குப்பின் அவர் எடுக்கும் முடிவு தான் க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக சந்தோஷ் ஷோபன் தன் பொறுப்புணர்ந்து பொறுப்பில்லாதவர் போல நடித்திருக்கிறார். டூயட் ஷாங்கில் நன்றாக ஆடுகிறார்
நாயகி ஆக மாளவிகா நாயர் , முதல் பாதியில் துடிப்பான பெண்னாகவும் , பின் பாதியில் காதலை உணர்ந்த பெண்னாகவும் மாறுபட்ட நடிப்பு . மாறுபட்ட இரு ஹேர் ஸ்டைலில் பின் பாதி தோற்றம் குடும்பப்பாங்கு .
நாயகனின் அம்மாவாக நம்ம ஊர் கவுதமி . அவரை ஏன் செவித்திறன் அற்றவராக கேரக்டர் டிசைன் செய்தார்கள் என தெரியவில்லை , திரைக்கதையில் அதற்கான தேவையும் இல்லை
இது ஒரு குடும்பப்படம் என நிரூபிக்க திரையில் எப்போதும் 50 பேர் இருந்து கொண்டே இருக்கிறார்கள் , மிக்கி ஜெ மேய்ர் இசையில் ஆறு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன , இஜிஎம் இன்னும் இளமைத்துள்ளலோடு இருந்திருக்கலாம்
ஃபாரீன் லொக்கேஷன் , குன்னூர் அழகு ஆகியவற்றை கேமரா உள் வாங்கி இருக்கிறது ஜுனைது சித்திக் எடிட்டிங்கில் இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர் ( பி வி நந்தினி ரெட்டி )
1 வெற்றிக்ரமான காஃபிக்கொட்டை ஃபார்முலாவுக்கு புகழ் பெற்ற இரு வேறு காஃபி கம்பெனிகளின் கொட்டைகளை 50:50என கலப்பது அட்லீ ஃபார்,முலா என்றாலும் அதை ரசிக்கும்விதத்தில் காட்சிப்படுத்தியது
2 நாயகன் - நாயகி ஒரே விமானத்தில் சென்றாலும் , ஒன்றாக இருந்தாலும் காதல் காட்சிகள் வைக்காமல் தொழில் நிமித்தம் பேசுவது
3 நாயகி நாயகனுன் முன்னாள் காதலை உணரும் தருணம்
ரசித்த வசனங்கள் ( லட்சுமி பூபாலா)
1 அணிலைப்பார்த்து ஓணான் சூடு போட்ட கதை மாதிரி
2 பழைய சோறு சாப்பிடறவன் தான் பழைய ப்ஞ்சாங்கம் எல்லாம் பார்ப்பான்
3 யாருக்காவது உபயோகமா இருந்தாதான் அது பணம், இல்லைன்னா வெறும் பேப்பர் தான்
4 பெஸ்ட் ஃபிர்ண்ட்ஸ் ரொம்ப நாள் பேசிக்காம இருக்க மாட்டாங்க
5 லைஃப்ல எல்லாமே கொஞ்ச நேரம்தான் , ருசி , கஷ்டம், நஷ்டம், சந்தோஷம்., எல்லாமே,. அனுபவிச்சுடனும்
6 என்னை மாதிரி வயசான ஆட்கள் உங்க கூட இருந்தா உங்களுக்கு பாரமா இருக்கும், அதுவே தூரமா இருந்தா ந்ல்லாருக்கும்
7 உங்க வீட்ல தண்ணீர் குடிச்சா அது இளநீர் மாதிரி இருக்கு
ஹ;லோ அது நிஜமாவே இளநீர்தான்
8 அனுபவம்,அறிவு ரெண்டுமே இப்போ ஒருசேர யார் கிட்டே இருக்கு ?
9 எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா ஒரே மாதிரி யோசிச்சா வித்தியாசமா ஏதும் செய்ய முடியாது
10 அவன் எனக்கு செட் ஆக மாட்டான், ஸ்டாக்மார்க்கெட் மாதிரி அவன் லைஃப்ல ஏகப்பட்ட அப் அண்ட் டவுன்ஸ்
அஸ் எ டாக்டரா நான் வேற மாதிரி நினைக்கறேன். ஈசிஜி ல அப் அண்ட் டவுன் இருந்தாதான் நார்மல்
11 அவளை உனக்குப்பிடிக்குமா?
சொல்ல முடியாத அளவுக்குப்பிடிக்கும், ஆனா அவ கிட்டே சொல்ல முடியாது , சொல்லவும் கூடாது
12 நம்ம தேவைக்கு மேலே பணம் இருந்தா அது வெறும் பேப்பர்தான்
பேப்பரை பண்டல் கட்டிப்போடறது கூட பணத்துக்காகத்தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இனிமே எங்க வீட்டுக்கு வரும்போது இப்டி கிளாமரா டிராயர் எல்லாம் போட்டுட்டு வராதே என நாயகியிடம் நாயகனின் அப்பா சொல்கிறார். சரி என்ற நாயகி படம் பூரா அதே டிரசில்தான் வருகிறார்
2 சமையல் இன்சார்ஜ் இடம் ஏற்ப்ட்ட பிரச்சனை காரணமாக கவுதமி வீட்டார் திருமணத்துக்கான 2000 பேருக்கான விருந்து சமையலை வீட்டாரே சமைப்பதாக சொல்வது நம்பும்படி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மோட்டிவேஷனல் டிராமா ., ஃபேமிலி டிராமா , ரொமாண்டிக் மெலோ டிராமா இந்த மூன்று கேட்டகிரியிலும் இப்படம் அடங்கும் என்பதால் பார்க்கலாம் , ரேட்டிங் 2. 5 / 5
Anni Manchi Sakunamule | |
---|---|
Directed by | B. V. Nandini Reddy |
Screenplay by | Sheik Dawood G. |
Dialogues by |
|
Produced by | Priyanka Dutt |
Starring | Santosh Sobhan Malvika Nair |
Cinematography | Sunny Kurapati Richard Prasad |
Edited by | Junaid Siddiqui |
Music by | Mickey J. Meyer |
Production companies | Swapna Cinema Mitra Vinda Movies |
Release date | 18 May 2023 |
Running time | 154 minutes |
Country | India |
Language | Telugu |
0 comments:
Post a Comment