Thursday, August 31, 2023

பீட்சா 3 த மம்மி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹாரர் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


 2012ஆம்  ஆண்டு  விஜய் சேதுபதி  நடிப்பில்  கார்த்திக்  சுப்புராஜ்  இயக்கத்தில்  பீட்சா  எனும்  மெகா ஹிட்  படம்  ரிலீஸ்  ஆனது. அதே  பட  நிறுவனம் 2013 ஆம்  ஆண்டில்  பீட்சா  2  த  வில்லா  எனும்  டைட்டிலில்  அசோக்  செல்வன்  நடிப்பில் தீபன்  சக்ரவர்த்தி  இயக்கத்தில்  வெளியாகி  சுமாராக  ஓடியது. இப்போது  அறிமுக  மோகன்  கோவிந்த்  இயக்கத்தில்  அஸ்வின்  நடிப்பில்  பீட்சா  3  த மம்மி வெளியாகி  உள்ளது   . இது  மினிமம்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு   5  கோடி  வசூல்  செய்து  வெற்றிப்படம்  ஆகி  உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 -  டீன் ஏஜ்  வயதான ஒரு  சின்னப்பொண்ணு  தலைல  அடிபட்டதால்  கஜினி  மாதிரி  அடிக்கடி  நினைவுகளை  மறந்துடுது , அம்மா  கூட  ஒரு  அப்பார்ட்மெண்ட்ல  வசித்து  வரும்  அந்த  சிறுமியின்  அம்னீஷியா  நிலை  தெரிந்து  அப்பார்ட்மெண்ட்  செக்யூரிட்டி  அந்த  சிறுமியை  அடிக்கடி  பாலியல்  வன் கொடுமைக்கு  ஆளாக்குகிறான், இது  தெரிய  வந்த  அபார்ட்மெண்ட்  செக்ரட்ரியான  மெயின்  வில்லன்  தன்  ஆட்களுடன்  அந்த  சிறுமியை  அவன்  பங்குக்கு  நாசம்  செய்கிறான். பாதிக்கப்பட்ட  சிறுமி   இறந்து  விடுகிறார். பேயாக  வந்து  வில்லன்களைப்பழி  வாங்குகிறார்


 சம்பவம் 2 - நாயகன்  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்  நடத்தி  வருகிறார். அவர் நாயகியைக்காதலிக்கிறார். நாயகி  ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  தங்கை . அண்ணனுக்கு இந்தக்காதலில்  இஷ்டம்  இல்லை . வேறு  மாப்பிள்ளை    பார்க்கிறார். நாயகனின்  ரெஸ்ட்டாரண்ட்டில்  ஒரு  மம்மி  பொம்மை  வருகிறது ., அந்த  பொம்மை  வருகைக்குப்பின்  அமானுஷ்யமான  சில  சம்பவங்கள்  நடக்கின்றன. ஒரு  கொலையும்  நடக்கிறது . இதுதான்  சாக்கு  என்று  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனை  அந்த  கேசில்  ஃப்ரேம்  பண்ணப்பார்க்கிறார். அதில்  நாயகன்  தப்பித்தானா? என்பது  மீதிக்கதை 


 மேலே  சொன்ன  இரு  தனித்தனிக்கதைகளை  ஒன்றாக்க  இயக்குநர்  ரொம்பவே சிரமப்பட்டு  இருக்கிறார்


நாயகன்  ஆக அஸ்வின்  தாடி , ஹிப்பித்தலை  ஃபங்க்  ஹேர்  ஸ்டைலில்  வருகிறார். இவர்தான்  பேய்  ஆக  இருப்பாரோ  என  டவுட்  நமக்கு  வருகிறது . நடிப்பு  ஓக்கே  ரகம்


 நாயகி  ஆக பவித்ரா  அழகிய முகம் , கண்ணிய  உடை  என  மனம்  கவர்கிறார். நடிப்பு  ஓரளவு  வருகிறது .இவ்வளவு  அழகான  பெண்  ஏன்  இந்த  தாடிவாலாவை  லவ்வுகிறார்  என  டவுட்  வரவில்லை , இந்தக்காலப்பெண்கள்  மாடர்ன்  யுகவாசிகள்  என்பதால்  பொதுவாகவே  அவர்கள்  டீசண்ட் ஆன  ஆண்களை  விரும்புவதில்லை , ரவுடி  மாதிரி  இருப்பவனைத்தான்  விரும்புகிறார்கள் 


 நண்பனாக  காளி  வெங்கட்  சிறப்பாக  நடித்திருக்கிறார். அவர்தான்  ஓனரோ  என்னும்  சந்தேகம்  எழும்  அளவுக்கு  ஓவராக  நாயகனிடம்  உரிமை  எடுத்துக்கொள்கிறார்


போலீஸ்  ஆஃபீசர்  ஆக கவுரவ் நாராயணன்  விறைப்பாக  நடித்திருந்தாலும்  வசன  உச்சரிப்பில்  கோட்டை  விட்டிருக்கிறார். மெயின்  வில்லன்  ஆக  கவிதா  பாரதி  கம்பீரமான  நடிப்பு  ( இவர்  ஈரோடு  மாவட்டம்   சென்னிமலையான  எங்க  சொந்த  ஊர்க்காரர்  ஆக்கும். ஹலோ , நினைத்தேன்  வந்தாய்  பட இயக்குநர்   கே செல்வ பாரதி  கூட  சென்னிமலை  தான் )


சிறுமியாக  வரும்  அபிநட்சத்திரா  புருவங்கள்  இணைந்த  கண்  அழகி . நல்ல  நடிப்பு , அவரது  அம்மாவாக  வரும்  அனுபமா  குமார்  கனகச்சிதம் 


பிரபு  ராகவின்  ஒளிப்பதிவில்   இருட்டுக்காட்சிகளில்  சிக்சர்  அடிக்கிறார் . எடிட்டர்  இக்னேஷியஸ்  அஸ்வின்  டைம்  டியுரேசன்  2  மணி  நேரம்  வருமாறு  ட்ரிம்  செய்திருக்கிறார். முதல்  பாதியில்  இழுவைக்காட்சிகளைக்குறைத்து  இருக்கலாம் . அருண்  ராஜின்  இசை  குட், பின்னணி  இசை  அருமை 


 பேய்க்கு  மேக்கப்  போடுபவர்  லீவ்  எடுத்துக்கொண்டதால்  முகத்தை  கூந்தலால்  மறைத்து  சமாளித்த  விதம்  அருமை 


சபாஷ்  டைரக்டர்  (மோகன்  கோவிந்த் ) 

1  ஜவுளிக்கடை  ஷோ  கேஷ்   பொம்மைகள்  ஒரு  அறையில்  வரிசையாக  முக்காடிட்டு  மூடிய  நிலையில்  இருக்க  அங்கே  நடக்கும்  திகில்  சம்பவம்  அருமை 


2 வில்லனின்  ஃபிளாட்டில்  மித்ரா  இருப்பதை  ஸ்மார்ட் வாட்ச்சில்  அட்ரஸ்  ரிமைண்ட்  வாய்ஸ்  மூலம்  கேட்கும்  இடம்  குட் 

3   பேய்  தயாரித்த  ஸ்வீட்  பற்றி  எல்லோரும்  சிலாகிக்கும்  காட்சியும்  நாயகன்  முகத்தில்  மட்டும்  உண்மை  அறிந்து  திகில்  ஆவதும் 

ரசித்த  வசனங்கள் 


1    எங்க  டிப்பார்ட்மெண்ட்  ரூல்ஸ்  படி  எங்களையே  நாங்க  நம்பக்கூடாது

2 கடை மூடறதுக்குள்  போய்  வாங்கிட்டு  வா

 புரியல 

10  மணிக்கு  எந்தக்கடை  மூடுவாங்க?

புரிஞ்சிடுச்சு 

3 கதவு  ரொம்ப  டைட்டா  இருக்குண்ணே 

 இல்லை , நீ தான்  டைட் ஆகிட்டே

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 மர்மமான  சத்தம்  அதிகமாக  வரும்போது  அதைத்தாங்க  முடியாத  நாயகன்  அதை  நிறுத்துங்க  என  கத்திக்கொண்டே  இருக்காரே?  வெளியே  போகலாமே? 


2   ஃபிளாஸ்பேக் சீனில் மித்ரா  ஆட்டோவில்  போகும்போது  அது  ரிப்பேர்  ஆகிற்து , அர்ஜெண்ட்  ஆக போக  வேண்டிய  சமயத்தில்  ஆட்டோ  பக்கத்துலயே  இருப்பாங்களா? ஆட்டோ  டிரைவ்ரிடம்  நீங்க  ரிப்பேர்  பண்ணிட்டு  என்னைக்கூப்பிடுங்க , அதுவரை  நான்  கிரவுண்ட் ல  இருக்கேன்  அப்டினு  மேட்ச்   பார்த்துக்கிட்டே   நாயகனின்  உருவத்தை  ஓவியமாக  வரைஞ்சிட்டு  இருக்கு  பாப்பா. நல்ல  வேளை , சினிமா  தியெட்டர் போய்  படம்  பார்க்கலை 


3 தலையில்  அடிபட்டதால்  அடிக்கடி  நினைவை  இழக்கும்  மித்ரா  கஜினி  படத்தில்  வருவ்து  போல்  பேப்பரில்  எழுதி  வைத்துக்கொள்ளலாமே?

4   பேயாக  வரும்  மித்ரா  நாயகனின்  ரெஸ்ட்டாரண்ட்டில்  அவன்  நண்பர்களை  பயமுறுத்துவது  எதற்கு? மித்ராவின்  ஃபிளாஸ்பேக்  கதைக்கும்,  நாயகனுக்கும்  சம்பந்தமே  இல்லை 

5  பேய்  ரொம்ப  மரியாதை  தெரிஞ்ச  குடும்பத்து வளர்ப்பு  போல. தன்னை  நாசம்  ஆக்கிய  வில்லனைப்பார்த்து  என்னை  ஏங்க  இப்படிப்பண்ணுனீங்க?னு  மரியாதையாக்கேட்குது . என்ன  ஏண்டா  இப்டி  செஞ்சே? நாயே?னு  கோபமா  டயலாக்  வெச்சிருக்க  வேண்டாமா?

6  க்ளைமாக்ஸ்ல  போலீஸ்  ஆஃபீசர்  தன்  தங்கையைக்கொலை  செய்ய  முயற்சி  செய்து  கொண்டிருக்கும்  வில்லனைப்பார்த்து  அவ்ளை  விடுங்க , விட்டுடுங்க , இல்லைன்னா  சுட்டுடுவேன்னு  மரியாதையா  சொல்லிட்டு  இருக்கார்/ எந்த  ஊர்ல  எந்த  போலீஸ்  கிரிமினல்ஸ்க்கு  இவ்ளோ  மரியாதை  தருது ? 

7 போலீஸ்  இன்ஸ்பெக்ட்ர்  தன்னைத்தேடி  வந்திருக்கார்னு  தெரிஞ்சதும் அவர்  போலீஸ்  ஸ்டேஷன்ல  அஃபிஷியலா  இன்ஃபார்ம்  பண்ணிட்டுதான்  வந்திருப்பார்னு  தெரியாதா?  வில்லன்  போலீஸ்  ஆஃபீசரைக்கொலை  செய்ய  முயற்சி  செய்யறார். தான்  கொலைக்கேசில்  மீண்டும்  மாட்டிக்குவோம்னு  தெரியாதா? 


8  ஒரு  முக்கியமான  கொலைக்கேசில்  ஆளை  விசாரிக்க  வரும்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  தனியாகவா  வருவார்? அட்லீஸ்  4  கான்ஸ்டபிள்ஸ் உடன்  வர மாட்டரா?  ஜீப்  டிரைவர்  கூட  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்கமான  டெம்ப்ளேட்  பேய்க்க்தை  தான்  பின் பாதி , முதல்  பாதி  சில  வித்தியாசமான  காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன . பார்க்கலாம்  , ரேட்டிங் 2.5 / 5 


Pizza 3: The Mummy
Theatrical release poster
Directed byMohan Govind
Starring
CinematographyPrabhu Raghav
Music byArun Raj
Production
company
Release date
  • 28 July 2023
CountryIndia
LanguageTamil
Box office5cr

Wednesday, August 30, 2023

மாயோன்(2022) - தமிழ் - சினிமா விமர்சனம் ( அட்வென்ச்சர் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


படம்  ரிலீஸ்  ஆனால்  ஓ டி டி  க்கு  ஒரு  மாதத்தில்  வ்ந்து  விடும், ஆனால் 2022ல் ரிலீஸ்  ஆகி  ஒரு  வருடம்  கழித்து  ஓ டி டி  யில்  ரிலீஸ் ஆகும்  முதல்  தமிழ்ப்படம்  என்னும்  பெருமையை  இது பெறுகிறது, ஏகப்பட்ட  எதிர்பார்ப்புகள்., அதை  எல்லாம்  நிறைவேற்றியதா? என்பதைப்பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


இந்தியாவில்  இருக்கும்  ப்ழமையான  கோவில்களில்  பல  தொல்பொருள்  ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள்  மர்மமான  முறையில்  இறக்கிறார்கள் , அல்லது  காணாமல்  போகிறார்கள் . இந்தியாவில்  இருக்கும்  பழமையான  சிலைகள்  நகைகள், கோவில்  சொத்துக்கள்  வெளிநாட்டுக்குக்கடத்தப்படுகின்றன்.இந்த  கடத்தல்  வேலையில்  சர்வதேசக்குற்றவாளி  ஒருவன்  சம்பந்தப்பட்டு  இருக்கிறான், அவனைப்பொறி வைத்து  எப்படிப்பிடித்தார்கள்  என்பதே  கதையின்  ஒன்  லைன் 


நாயகன்  ஆக  சிபிராஜ். இவர்  கேரக்டர்  டிசைனில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஆக  நினைத்து  இயக்குநர்  வைத்த  ஒரு  விஷயம்  ஓப்பனிங்  சீன்லயே  தெரிந்து  விடுகிறது . அவரது  அலட்டல்  இல்லாத  நடிப்பு  கச்சிதம் 


 நாயகி  ஆக  தன்யா  ரவிச்சந்திரன், அதிக  வாய்ப்பில்லை  என்றாலும்  ஓக்கே  ரகம் பகவதிப்பெருமாள் , கே  எஸ்  ரவிக்குமார் , ராதாரவி , ஹரீஷ்  பெரோரி , ஜி  மாரிமுத்து  என  தெரிந்த  முகங்கள்  அவர்கள்  பாத்திரத்தைக்கனகச்சிதமாக  செய்திருக்கிறார்கள் 


இளையராஜாவின்  பின்னணி  இசை  அருமை , பாடல்கள்  பெரிதாக  எடுபடவில்லை , சி  ராம்பிரசாத்தின்  ஒளிப்பதிவு  குட்  ராம் பிரசாத் , கொண்டலராவ்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  ஓடுகிறது 


அருண் மொழி  மாணிக்கத்தின்  திரைக்கதையை  என்  கிஷோர்  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1   செஸ்  விளையாட்டை  வைத்து  அர்சியல் , போர்  பற்றிய பஞ்ச்  டயலாக்ஸ்  வைத்தது 

2  மாயாஜால  மந்திரக்கதையா? க்ரைம்  த்ரில்லரா?  என  யூகிக்க  முடியாத  அளவு  காட்சிகளை  மாற்றி  மாற்றி  வைத்தது 


 சாங்க்ஸ்

1 தேடித்தேடிப்போக  உண்மை  விளங்கும், ஓடிப்போன  காலம் கண்  முன்  தோன்றும்

2  கந்தர்வா

3  மாயோன்

4  கிருஷ்ண  பஜனை 


  ரசித்த  வசனங்கள் 


1  களத்தில்  எதிரியுடன்  மோதும்  முன்  அவனோட  புத்தியை நாம  வெல்லனும்

2  போர்  என்பது  வஞ்சனை  ஏமாற்றுதல்  ஆகியன்  அடங்கியது 

3 சூழ்நிலைக்கு  ஏற்றபடி  நம்  திட்டங்களை  மாத்திக்கனும்

4  எதிரி  எதிர்பாராத  த்ருணத்தில்  நாம்  தாக்கனும்

5  என்னோட  வேலை  புதைஞ்சு  கிடப்பதை  தோண்டி எடுப்பது  மட்டும்  இல்லை , என்னைத்தோண்டிப்பார்க்கறவனை  புதைப்பதும்தான்

6 உன்  பேர்  என்னம்மா?


 வாணி

 என் மனசைத்தின்ன  களவாணி

7  உங்க  கிட்டே  பேசிட்டு  இருந்தா  சிரிச்சே  செத்துடுவேன்

  சிரிச்ச பின்  செத்துடலாம், ஆனா  செத்த  பின்  சிரிக்க  முடியாது

8  நீங்க  ரொம்ப தப்புப்பண்றீங்க

 இல்லை , கரெக்ட்  பண்றேன் 

9  வாலைக்கொடுத்து  தலையைக்காப்பாத்திக்கற பல்லி  மாதிரி சந்தர்ப்ப  சூழல்களை  வைத்து  எது  முக்கியமானது? எது  முக்கியமில்லாதது  என  முடிவெடுப்பதுதான்  புத்திசாலித்தனம் 

10  வாழ்க்கையை  இரு  வழிகளில்  நாம்  வாழலாம்   1  எதுவுமே  அற்புதமோ , அதிசயமோ  இல்லை  என்பது  போல   2  எல்லாமே  அற்புதமும், அதிசயமும்  தான்    என்பது  போல -  ஆல்ப்ர்ட்  ஐன்ஸ்டீன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கோயிலுக்குள்  செல்ஃபோன்  பேசுவது  த்டை  செய்யப்ப்ட்டிருக்கிறதே? நாயகன் ட்ரோன்  அனுப்பி  செல்ஃபோனில்  கோயில்  அமைப்புகளை  ஆராயுமோது  எதிரே  ஒரு முக்கிய  ஆள்  வரும்போது  செல் ஃபோன்  பேசுவது  போல  சமாளிக்கிறாரே? அப்போது  அவர்  கேட்க  மாட்டாரா? ஏன்  கோயிலுக்குள்  செல் ஃபோன்  யூஸ் பண்றீங்க?னு 


2  நாயக்கர்  குடும்பம்  மூலிகைத்தண்ணீரைக்குடித்து  விட்டுத்தான்  உள்ளே  வருகிறார்கள்  என்பதால்  நாமும்  அதே  போல்  செய்வோம்  என  கொள்ளை  சம்பவத்துக்கு  முன்  தன்  ஆட்களிடம்  கூறும்  நாயகன்  அவன்  மேற்பார்வையில்  கண்  முன்  குடிக்க  வைத்திருக்கலாமே?

3  நள்ளிரவில்  உளவு  பார்க்க  காட்டுக்குள்  வரும்  ஆள்  செப்பல்  இல்லாமல்  வெறும் காலில்  வந்து  முள்  குத்து  வாங்குவது  ஏன் ?

4   பின்  பாதியில்  வரும்  பாம்பு  காட்சிகள்  போர்.ஒண்ணா  அவங்களைக்கொல்லனும், அல்லது பயமுறுத்தி  துரத்தனும், சும்மா  விளையாட்டு   காட்டிட்டு  இருக்கு . ராமநாராயணம்  படம்  மாதிரி  இருக்கு 

5  குள்ளன்  காட்டும்  பூமாரங்  சித்து  விளையாட்டுக்கள்  எல்லாம்  காமெடி  என  நினைத்து  கடுப்பேற்றி  இருக்கிறார்கள் 

6  சக்கிரவியூகத்துக்கான  சாவி என்ன  ஷேப்ல  எப்படி  இருக்கும்னே  யாருக்கும்  ஒரு  ஐடியா  இல்லாத  போது  மூன்று பேரும்  கரெக்டாக  அவற்றைக்க்ண்டுபிடிப்பது  எப்படி ? 

7பல  வருடங்களாக  அடைபட்டுக்கிடக்கும்  சுரங்கப்பாதை  திறக்கப்படும்போது  ஆக்சிஜன்  சிலிண்டர்  இல்லாமல்  நார்மலாக  சுவாசிக்க  முடியாது , ஆனால்  நாயகன்  அண்ட்  டீம்  சர்வசாதாரணமாக  சுவாசிக்கிறார்கள் 

8  ஒரு டிரக்கில்  ஏற்றும்  அளவு  புதையல்  கிடைக்கிறது , ஆனால்  நாயகன்  அண்ட்  டீம்  25  கிலோ  அரிசி  சிப்பம்  சாக்கு  மட்டும்தான்  கைல  வெச்சிருக்காங்க . முன்  யோசனையே  இல்லை 

9  சுரங்க  அறையில்  நாயகன்  நாயக்க  பெருமாளின்  மகனை  தாக்கி  மயக்கம்  அடைய  வைக்கிறார்கள் , காலையில்  அவர்  வந்ததும்  மகன்  நடந்த  தாக்குதல்  சம்பவத்தை  சொல்லவே  இல்லையே? 

10  நாயக்கர்  மகன்  சுரங்க  அறையில்  இருப்பதாக  தான்  பொய்  சொன்னதால்  மற்றவர்களுக்கு  அவன்  


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி  ல  போட்டா  பார்க்கலாம், யூ  ட்யூப்லயும்  கிடைக்குது . ரேட்டிங்  2.5 / 5 


Maayon
Theatrical release poster
Directed byN. Kishore
Screenplay byArun Mozhi Manickam
Produced byArun Mozhi Manickam
Starring
CinematographyC. Ramprasad
Edited byRam Pandian
Kondalarao
Music byIlaiyaraja
Production
company
Double Meaning Productions
Release date
  • 24 June 2022
CountryIndia
LanguageTamil

Tuesday, August 29, 2023

கொலை (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


  நியூயார்க்  நகரில்  1923 ஆம்  ஆண்டு  நிகழ்ந்த  உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  2001  ஆம் ஆண்டு  அனதர்  லைஃப்  என்ற  ஹாலிவுட்  படம்  ரிலீஸ் ஆனது . அந்தப்படத்தின் பட்டி  டிங்கரிங்  அட்லீ  ஒர்க்  தான்  இது 


2013 ஆம்  ஆண்டு  அறிமுக இயக்குநர்  பாலாஜி  கே  குமார் விடியும்  முன்  என்ற  தன்  முதல்  த்ரில்லர்  படத்தை  இயக்கினார். அது  ஏற்கனவே   ஹாலிவுட்டில்  ரிலீஸ்  ஆன  லண்டன்  டூ பிரிட்டன்  என்ற படத்தின்  அன்  அஃபிஷியல்  அட்லீ  ஒர்க் தான். சுமாராகத்தான்  ஓடியது . 10  வருட  இடைவெளிக்குப்பின்  தன்  இரண்டாவது  படமாக  டெக்னிக்கலி  சவுண்ட்  ஆன  பட்ம்  ஆக தந்திருக்கிறார்  இயக்குநர் 


    ஸ்பாய்லர்  அலெர்ட்


முன்னாள்  பாடகியும்  இந்நாள்  மாடலிங்க்  கேர்ள் உம்  ஆன  நாயகி  கொலை  செய்யப்பட்டு  இருக்கிறார். அவரது  கொலைக்கு  போலீஸ்  சந்தேகப்படும்  நபர்கள்  அவரது  பாய்  ஃபிரண்ட் , பர்சனல்  மேனேஜர் ,  மாடலிங் துறைக்கு  இழுத்து  வந்து  ஒரு  முக்கியமான  காண்ட்ராக்ட்டில்  சைன்  போட ஒரு  நாள்  இரவு  தங்க  விலை  பேசிய  வில்லன்  என  சிலரது  மீது  விசாரணை  நடக்கிறது. இறூதியில்  கொலைகாரனை  எப்படிக்கண்டுபிடிக்கிறார்கள்  என்பதே  கதை 


நாயகி  ஆக  மீனாட்சி  சவுத்ரி  நல்ல  முக  அழகு , தேவையான  அளவு  கண்ணியமான  கிளாமர் , அழகிய  ஆடை  வடிவமைப்பு , உடல்மொழி  என  மனதைக்கவர்கிறார். நல்ல  எதிர்  காலம்  உண்டு 

போலீஸ்  ஆஃபீசர்  ஆக ரித்திகா  சிங்  சுறுசுறுப்பாக  நடித்திருந்தாலும்  போலீஸ்  யூனிஃபார்மில் கம்பீரம்  குறைவு.மேக்கப்பை  கொஞ்சம்  குறைத்திருக்கலாம் 

முன்னாள்  போலீஸ்  ஆஃபீசராக  கேசை  டீல்  செய்யும்  விஜய்  ஆண்ட்டனி வழக்கம்  போல்  முகத்தில்  உணர்ச்சியைக்காட்டாத  நடிப்பு . அமைதியாக  வ்ந்து  போகிறார்


ஜான்  விஜய் , ராதிகா ,  என  தெரிந்த  முகங்கள்  வ்ந்து  போகிறார்கள் 


வில்லன்  ஒரு  சைக்கோ  என  க்ளைமாக்சில்  காட்டும்போது  நம்  மனதில்  பெரிய  பாதிப்பை  ஏற்படுத்தவில்லை . பெரும்பாலான  கேரக்டர்கள்  கொலை  செய்ய்ப்படுவது , சில  கேரக்டர்கள்  தற்கொலை  செய்து  கொள்வது  ஆயாசத்தைத்தருகிறது 


ஜி  கிரிஷின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  இன்னுமே  சுமார் , சிவக்குமார்  விஜயனின்  ஒளிப்பதிவு  ஹாலிவிட்  பட  தரத்தில்  அருமையாக  உள்ளது . 129  நிமிடங்கள்  ஓடும்  அளவு  க்ரிஸ்ப்  ஆக  எடிட்டர் கட்  பண்ணி  இருந்தாலும்  முதல்  பாதியில்  இருந்த  விறுவிறுப்பு  பின்  பாதியில்  இல்லை


சபாஷ்  டைரக்டர் (   பாலாஜி  கே  குமார்)


1  நாயகன் , வில்லன், நாயகி , போலீஸ்  ஆஃபீசர்  என  அனைத்துக்கேரக்டர்களுக்கும் உரிய  ஸ்பேஸ்  கொடுத்து  திரைக்கதை  அமைத்தது ,பொருத்தமான  நடிகர்  நடிகை  தேர்வு 


2  கொலை  எப்படி  நடந்திருக்கும்  என  வெவ்வேறு  வெர்ஷனில்  விஷூவலாகக்காட்டிய  விதம் 

சாங்க்ஸ்


1   ஒரு  நாளில் மயக்கமாகி  நானும்  நின்றேனே

2 பார்த்த  ஞாபகம்  இல்லையோ  ( ரீமிக்ஸ்) 

3  நேசம்  மாறுமோ

4  கேள்வி  மட்டும்  தங்குதே


  ரசித்த  வசனங்கள் 

1  பர்ஃபெக்ட்  மர்டர்  என்று  ஒன்று  கிடையாது , எல்லா  மர்டர்லயும் ஒரு  ஃப்ளா  இருக்கும், அதைக்கண்டு பிடிக்கனும்

2  ஒரு  பிரச்சனையோட  தீவிரத்தை  அப்போ  உணர  முடியாது , எதிர்காலத்தில்தான்  உணர  முடியும் 

3   தற்செயலான  நிகழ்வு  என  எதுவுமே  இல்லை, எல்லாமே  தீர்மானிக்கப்பட்டவை 


4 ஏதோ  உன்  பதவிக்காக  சும்மா  இருக்கேன்


 சும்மா  இருப்பது  ஒண்ணும்  உனக்கு  புதுசு  இல்லையே?


5  ஒரு  பொய்யோட  சப்தம்  எப்படி இருக்கும்?னு  எனக்குத்தெரியும்


6 ஒவ்வொரு  மனுசனும்  தன் மனசில்  இருப்பதை  சைகை  மூலம்  அவனையும்  அறியாமல்  வெளிப்படுத்துவான், அதுக்கு freudian slipனு  சொல்வாங்க 


7 எவ்வளவு தான்  வாழ்க்கைல  ஜெயிச்சாலும்  மரணம் கிட்டே  எல்லாரும்  தோற்றுத்தான்  போகனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1நாயகனின்  மகளுக்கு  நடக்கும்  விபத்து , மனைவியுடனான  கருத்து  வேறுபாடு , செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  அனைத்தும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை

2  கொலைக்கான  காரணம்  வலுவாக  இல்லை, போற  போக்கைப்பார்த்தால்  அடுத்த  படத்தில்  எனக்கு  க்டலை  பர்பி  வாங்கித்தர  மறுத்தான், அதனால்  கொன்னுட்டென்னு  சீன்  வைப்பார்  போல . 


3  கொலைக்கான  காரணத்தை  வலுவாகச்சொல்லத்தெரியவில்லை  எனில்  வில்லன்  ஒரு  சைக்கோ  என  சாமார்த்தியமாக  எஸ்கேப்  ஆவது  ஏற்புடையதல்ல 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி  ல  போட்டாலோ , யாராவது  ஓசி  டிக்கெட்  வாங்கித்தந்தாலோ பார்க்கலாம் ., ரேட்டிங் 2. 5 / 5   


Kolai
Theatrical release poster
Directed byBalaji K. Kumar
Written byBalaji K. Kumar
StarringVijay Antony
Ritika Singh
Meenakshi Chaudhary
CinematographySivakumar Vijayan
Edited byR. K. Selva
Music byGirishh G.
Release date
  • 21 July 2023
CountryIndia
LanguageTamil

Monday, August 28, 2023

ஐங்கரன் (2022)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் டிராமா) @ ஆஹா தமிழ் ஓடிடி

 


 2015  ஆம்  ஆண்டு  அதர்வா  நடிப்பில்  வெளியான  ஈட்டி  படத்தை இயக்கிய ரவி  அரசு  இயக்கிய  இரண்டாம்  படம்  இது /. 2015லேயே  துடிக்கும்  கரங்கள்  என்ற  திரைக்கதையை  பதிவு  செய்தவர் 2019ல் தான்  இப்படத்தை  எடுத்திருக்கிறார். சில  கார்ணங்களால்  3  வருடங்கள்  தாமதமாக  வந்தாலும்  விமர்சகர்கள்  இடையே  வரவேற்பைப்பெற்ற  படம்  


   ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் நகைக்கடையில்  வைரங்களைக்கொள்ளை  அடித்து   செல்லும்போது  எதிர்பாராத  விதமாக  மூடப்படாத  ஆழ்துளைகிணறில்  அந்த  வைர  மூட்டை  மாட்டிக்கொள்கிறது. அரசாங்க  உதவி  இல்லாமல்  அதை  மீட்க  முடியாது  என்பதால்  ஒரு  குழந்தையை  அந்த  ஆழ்துளைக்கிணற்றில்  போட்டு  விடுகிறான். அரசாங்கத்தால்  மீட்க  முடியாததை  நாயகன்  எப்படி  மீட்கிறான்  என்பதே  மீதி  திரைக்கதை


நாயகன்  ஆக ஜி வி  பிரகாஷ். இதுவரை  பி  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்குறி  வைத்து விடலைப்பையன், ரவுடி , பொறுக்கி  கேரக்டர்களில்  நடித்தவர்  ,முதல்  முறையாக குடும்பங்கள்  ர்சிக்கும்  இளம்  விஞ்ஞானி  ரோலில்  கண்ணியமாக  நடித்திருக்கிறார். பாரட்டுக்கள் , வாழ்த்துகள் . கெட்ட  வார்த்தை  பேசாமல் ,டபுள்  மீனிங்  வசனம்  பேசாமல்  இவர்  நடித்த  முதல்  படம்  இது 


 நாயகி  ஆக  மஹிமா  நம்பியார். 3  காட்சிகளில்  மட்டும்  வருகிறார். ரசிக்க  வைக்கும்  காதல் கலாட்டா  காட்சிகள்


நண்பனாக  காளி  வெங்கட் , அப்பாவாக ஆடுகளம்  நரேன்  கச்சிதமான  நடிப்பு . வில்லன்  ஆக  வரும் சித்தார்த்தா  சங்கர்  குட்  ஆக்டிங் . சின்ன  வில்லன்  ஆக  வரும்  ஹரீஷ் பெராடி  ரசிக்க  வைக்கிறார்\


ராஜா  மொகமத்  எடிட்டிங்கில் போர்  அடிக்காமல்  காட்சிகள்  நகர்கின்றன.சரவணன்  அபிமன்யூ  ஒளிப்பதிவு  நேர்த்தி . திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ரவி  அரசு. இளம்  விஞ்ஞானிகளின்  கண்டு  பிடிப்புக்கு  அரசு  உரிய  அங்கீகாரம்  தரவேண்டும் என்பதுதான்  கதைக்கரு. பாராட்டத்தக்க முயற்சி 


 இசை ஜிவிபி  தான்  பின்னணி  இசை  கவனிக்க  வைக்கிறது 



சபாஷ்  டைரக்டர் (ரவி  அரசு.)


1  இயக்குநர்  மெக்கானிக்கல்  எஞ்சினியர்  ஆக  இருக்க  வேண்டும், நாயகனின்  கண்டு பிடிப்புகளாக  அவர்  காட்டும் சைக்ளிங்கில்  கிரைண்டர்  , மிக்சி  3 இன் ஒன் ,  ஒரே  சமயத்தில்  லாரித்தண்ணீரை 20  குடங்களில்  பிடிக்கும்  ஐடியா ,  பேனாவில்  மைக்  என  சின்ன  சின்ன  ஐடியாக்கள்  அசத்தல் 

2 வில்லன்களில்  ஒருவன்  ஆறு விரல் கொண்டவன்  என்பதை  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  கண்டு பிடிக்கும்  காட்சி   


3  நாயகன்  காட்டிய  கருவியை  உடைத்த  வில்லன் இப்போ  போய்  காப்பாத்து  என்றதும்  நீங்க  உடைச்சது  டெமோ  காட்ற  கருவிதான், ஒரிஜினல்  நம்ம  கிட்டே  இன்னொண்ணு  இருக்கு  என  சொல்லும்  காட்சி 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தான்  அடி திருக்கல்  அடி 

2 டக்கரு  பார்வை 

3  தித்திப்பா

4  உயிரினும்  உயர்ந்த 


  ரசித்த  வசனங்கள் 

1  வாழ்க்கைல  உருப்படியா  ஏதாவது  பண்ணு  அல்லது  உருப்பட  ஏதாவது  பண்ணு 

2  ஓடாத , விழுந்திடுவே  என  சொல்ல  ஆயிரம்  பேர்  இருக்காங்க , ஆனா  விழாமல்  ஓடுனு  சொல்லத்தான்  ஆளுங்களே  இல்லை 

3    டிக்கெட்  செக்கிங்  வந்திருக்கேன், டிக்கெட்டைக்காட்டுங்க 


 சார்  , அவன்  சாப்ட்டுட்டான்


 நான்  நாலே  நாலு  இட்லி  தான்  சாப்ட்டேன்


சார்  அவன்  என்  டிக்கெட்டை  சாப்டுட்டான்


இதை  எந்த  லூசாவது  நம்புவானா? சார், நீங்க  நம்பறீங்களா? 


4 நேர்மையா  வாழ்ந்து  என்னத்தை  சாதிச்சேன்?


 நேர்மையா  வாழ்வ்தே  ஒரு  சாதனை  தான் 


5  பல  நாள்  ஃபாலோ  பண்ணியும்  பக்கம்  வராத  ஃபிக்ரை பழம்  மாதிரி  முகத்தை  வெச்சுக்கிட்டு  பார்க்க  வெச்சுட்டியே?


6  பயந்தா  பாதி  பலம்  குறைஞ்சிடும்   

7 இது  மாதிரி  புது  முய்ற்சிகள்  ஆரம்பத்தில்  வீண்  முயற்சியாகப்பேசப்பட்டாலும்  வெற்றி  பெற்ற  பின்  விடா  முயற்சி  என  பாராட்டப்படும்


8   நம்ம  கண்ட்ரோல்ல  இருக்கும்  ஏரியாவில்  க்ரைமே  நடக்கக்கூடாது, அப்படி  நட்ந்தா  நம்ம  கண்ட்ரோல்ல  தான்  நடக்கனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  தன்  அறிவியல்  கண்டுபிடிப்புகளை  ஒவ்வொரு  முறையும்  ஒரு  குறிப்பிட்ட  ஆளிடமே  டெமோ  காட்டுகிறார். அவரும்  ரிஜெக்ட்  செய்து  கொண்டே  இருக்கிறார்? ஏன்  வேறு  ஆளை  மாற்றக்கூடாது . லவ்  லெட்டர்  கொடுக்கும்போது  வாங்க  மறுத்தால்  அந்தப்பெண்ணின்  தோழிக்கோ , தங்கைக்கோ  கை  மாற்றும்  காலம்  இது . ஒரே  ஆளிடம்  ஏன்  தொங்க  வேண்டும் ? ஹையர்  ஆஃபீசரை  அப்ரோச்  பண்ணி இருக்கலாமே?


2  மெயின்  கதையின்  வீரியத்தை  ஆழ்துளைக்கிணறு  குழ்ந்தை  சம்பவம்  டைவர்ட்  பண்ணி  விடுகிறது . மேலும்  இது  அறம்  படத்தின்  மையக்கரு  என்பதால் பார்த்து  சலித்த  காட்சி  ஆகிறது 


3  குழந்தையைக்காப்பாற்றும்  முயற்சியில்  வைரக்கற்கள்  உள்ள  மூட்டை  மாட்டுவது  எப்படி ?

4  வில்லன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  வில்லன்  கேங்கில்  மாட்டுவார்  என்பதை  யூகிக்க  மாட்டாரா? அவரா  வாண்ட்டடா போய்  மாட்டிக்கறார்


5  ஜீப்பில்  வ்ந்த  அனைத்து  போலீஸ்காரர்களையும் டப்னு  சுட்டு  காலி  பண்ணும்  வில்லன்  நாயகனின்  அப்பாவை  மட்டும்  அடித்தே  கொல்ல  முயற்சிப்பதும்  நாயகன்  காப்பாற்றுவதும்  நாடகத்தனம்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மெயின்  கதையை  நீட்டாக  எடுத்து  விட்டு  தேவையற்ற  கிளைக்கதையாக  கோழித்தீவன  ஊழல்  வில்லன்  கதையை  இழுத்தது  மைனஸ்  என்றாலும் பார்க்கலாம், ஆஹா  ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது /. ரேட்டிங் 2.75 / 5 


Ayngaran
Theatrical release poster
Directed byRaviarasu
Written byRavi Arasu
Produced byB. Ganesh
StarringG. V. Prakash Kumar
Mahima Nambiar
CinematographySaravanan Abimanyu
Edited byRaja Mohammed
Music byG. V. Prakash Kumar
Production
company
Common Man Presents
Release date
  • 12 May 2022
CountryIndia
LanguageTamil

Wednesday, August 23, 2023

அஸ்வின் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

   


2020  ஆம்  ஆண்டு  தருண்  தேஜா  என்ற  இயக்குநர்  அஸ்வின்  என்ற  பெயரில்  ஒரு  குறும்படத்தை  இயக்கினார் , அது  மெகா  ஹிட்  ஆனது . அதே  படத்தைத்தான்  இப்போது  இரண்டு  மணி  நேரப்படமாக  இயக்கி  இருக்கிறார்


 ஸ்பாய்லர்  அலெர்ட்

மெயின்  கதைக்குப்போகும்  முன்  ஒரு  முன்  கதை 


ஒரு  விவசாயிக்கு  இரு  மகன்கள் . இருவரும் தண்ணீரில்  மூழ்கி  இறக்கிறார்கள் . விவ்சாயி  கடவுளை  நோக்கி  க்டுமையான  தவம்  இருக்கிறார். அவரது  தவத்தை  மெச்சி  இறைவன்  ஒரு  வரம்  கொடுக்கிறார். இரு  குழந்தைகளில்  ஒருவனை  மற்றும்  உயிர்ப்பிக்கிறோம், அவனுக்கு  இரு  சிலைகள்  பரிசாகத்தருகிறோம், அந்த  சிலைகள்  அவனிடம்  இருக்கும்  வரை  வெளி  சக்திகளால்  அவனுக்கு  மரணம்  வராது , இயற்கை  மரணம்  தான்


இறைவன்  மறைந்த  பின்  சாத்தான்  அந்த  சிலையை  அடைய  திட்டம்  போடுகிறது , மனித  உருவில்  அந்தப்பையனிடம்  வந்து  உன்  சகோதரனை  உயிருடன்  மீட்டுத்தருகிறேன் , எக்சேஞ்ச்  ஆஃபர்  ஆக  உன்னிடம்  இருக்கும் இரு  சிலைகளில்  ஒரு  சிலையை  எனக்குத்தா  என்கிறது . இவனும்  ஏமாந்து  தந்து  விடுகிறான் இதனால்  சாத்தானின்  ஆதிக்கம்  பெருகி  அந்த  ஊர்  மக்கள்  எல்லாம்  நோய்  வந்து  வரிசையாக  இறக்கிறார்கள் . பிறகு  உண்மை  அறிந்து  அந்த  இரு  சிலைகளையும்  மீட்டு  ஒரு  மந்திரக்கயிறால்  கட்டி  பூமிக்குள்  புதைக்கிறார்கள் 


ஆர்க்கியாலஜி  டிபார்ட்மெண்ட்டை  சேர்ந்த  ஆர்த்தி  என்ற  பெண்   இந்த  சிலைகளை  மீட்கிறார்.  மேலே  சொன்ன  முன்  கதையை  ஒரு  வீடியோவில்  பதிவு  செய்து  சிஸ்டத்தில்  ஸ்டோர்  பண்ணுகிறார். ஆனால்  சாத்தான்  ஆர்த்தியைக்கொன்று  விடுகிறது


போலீசுக்குக்கிடைத்த  தகவல்படி  ஆர்த்தி  என்ற  பெண்  அந்த  மேன்சனில்  வாழ்ந்த  18  பேரைக்கொலை  செய்து  விட்டு  தானும்  தற்கொலை  செய்து  கொண்டாள் . ஆனால்  ஆர்த்தியின் டெட்  பாடி  மட்டும்  கிடைக்கவில்லை 


 இந்த  கேசின்  மர்மத்தைக்கண்டறிய  யூ  ட்யூப்  பிரபல  டீம்  ஒன்று  களம்  இறங்குகிறது. வழக்கமான  பேய்ப்படங்களில்  நாம்  என்னென்ன  பார்ப்போமோ அந்த  சம்பவங்கள்  எல்லாம் நடக்கிறது , இறுதியில்  சாத்தானை  நாயகன்  எப்படி  வெற்றி கொள்கிறான்  என்பது  க்ளைமாக்ஸ் 


 ஆங்கிலப்படங்களுக்கு  இணையான  ஒளிப்பதிவு , பிரமாதமான  பின்னணி  இசை , நடித்த  அனைவருடைய  பர்ஃபார்மென்ஸ்  தான்  படத்தின்  பலம்  


சபாஷ்  டைரக்டர்


1  இருபது  நிமிடத்தில்  முடிக்க  வேண்டிய  படத்தை  ஜவ்வாக  இழுத்தது 

2   டெக்னிக்கலாக  பிரமாதமான  கூட்டணி 


  ரசித்த  வசனங்கள் 


1      விடாம  துரத்தும்  சாபக்கேடுகளிடம்  மாட்டியவர்களுக்கு  சாவின்  வரம்  கூட  சாபம்  தான் 


2  எல்லாருடைய  மண்டைக்குள்ளும்  எப்பவும்  ரெண்டு  குரல்  கேட்டுட்டு  இருக்கும்


3 இருட்டில்  இருந்து  வெளிச்சத்தைப்பார்க்கும்போது  கேட்கும்  குரல்  வெளிச்சத்துல  இருந்து  இருட்டைப்பார்க்கும்போதுதான்  புரியும் (  எதுவும்  புரியல ) 

4  இந்த  பூமியில்  இறந்து  போகிறவர்கள்  கம்ப்ளீட்டா  இறந்து  போக  மாட்டாங்க . அவங்க  வேற  ஒரு  இண்ட்டர்மீடியேட் ல  கனெக்ட்  ஆகி  இருப்பாங்க 

5  இந்த  உலகத்துல  எதுவுமே  தற்செயலா  நடப்பதில்லை 

6  தலைக்குள்ளே  இருக்கும்  ராட்சசனை  ஒரு  நிமிச்த்துக்குள்  அழிக்க  முடியும்  என்பது  மனிதனுக்குக்கிடைத்திருக்கும்  பெரிய  வரம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அது  ஒரு  அமானுஷ்யமான  இடம்னு  தெரியும், அப்படி  இருந்தும்  மேன்சனுக்குள்  ஐந்து  பேரும்  பிரிந்து  வெவ்வேறு  இடங்களுக்குப்போவது  ஏன்? எல்லா  இடங்களுக்கும்  ஒற்றுமையாக  ஒரே  குழுவாகப்போகலாமே?  சீக்கிரமா  எல்லா  இடங்களையும்  கவர்  பண்றது  முக்கியமா? உயிரை  கவர்  பண்றது  முக்கியமா?

2 படத்தோட  ஓப்பனிங்  சீன்ல 12  நிமிடங்களுக்கு  ஒரு  விவசாயியோட  ட்வின்ஸ் மகன்கள்  பற்றிய  ஒரு  கதை  வாய்ஸ்  ஓவர்;ல  சொல்றாங்க , அதே    கதையை  படத்தின்  பின் பாதில  அதாவது  62  வது  நிமிடத்துல  மீண்டும்  ஒரு  முறை  12  நிமிடங்களுக்கு  சொல்றாங்க , ஏன்? 

3  நாயகனுக்கு  தன்  சொந்த  சம்சாரம்  மாசமா  இருக்கறது  தெரியாது . அடுத்த  நாள்  காலைல  நாயகனின்  பிறந்த  நாள்  வருவதால்  அப்போ  அந்த  சஸ்பென்ஸை  ஓப்பன்  பண்ணப்போறதா  அவ  சொல்றா, ஆனா  நாயகன்  அன்னைக்கு  நைட்டே  அவ  வயிற்றில்  முத்தமிட்டு  அழறான். நம்ம  குழந்தைக்காக  உன்னை  நீயே  அழிச்சுக்காதேனு  சொல்றான். அடுத்த  நாள்  காலைல  தெரிய  வேண்டிய  அந்த  ராணுவ  ரகசிய  கொஸ்டீன்  பேப்பர்  எப்படி  அவுட்  ஆச்சு? 


4  சாத்தானின்  அந்த  ,மந்திர  சிலைகள்  இரண்டையும்  கிராமத்தார்  மந்திரக்கயிறு  கொண்டு  பூமிக்குள்  புதைச்சுடறாங்க . பல  வருடங்களுக்குப்பின்  அதை  தோண்டி  எடுக்கும்போது  கயிறு  சேதாரம்  ஏதும்  இல்லாம  அப்படியே  இருக்கே? எப்படி ?


5  பல  வருடங்களுக்குப்பின்  கிடைக்கும்  அந்த  சிலை  ஒண்ணு  மட்டும்  தான்  நாயகன்  கைவசம்  இருக்கு , இன்னொரு  சிலை  சாத்தானிடம்  இருக்கு. ஆனா  மந்திரக்கயிறு  யார்  கிட்டேயும்  இல்லயே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ, ஆனால்  ஜம்ப்ஸ்கேரிங்  சீன்ஸ்க்காக  ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -     ஹாரர்  த்ரில்லர்  ரசிகர்கள்  பொறுமையாகப்பார்க்கலாம்., ரேட்டிங் 2.75 / 5

Tuesday, August 22, 2023

THE TAILOR (2023) TERZI -பாகம் 2 - (துருக்கி) - வெப் சீரிஸ் விமர்சனம்( ரொமாண்டிக் டிராமா) @ நெட் ஃப்ளிக்ஸ்



துருக்கியில்  வாழ்ந்த  பியாமி  என்ற  டெய்லரின்  வாழ்க்கையில்  நடந்த  உண்மை  சம்பவம்  இது . உங்கள்  கடந்த  காலம்  நிகழ்  காலத்தோடு  தைக்கப்பட்டால்  நீங்கள்  என்ன  செய்வீர்க்ள்  ?  என்ற  விளம்பர  வாசகத்துடன்  இதன்  பிரமோ  செம  பரப்ரப்பாக  வெளியானது , மொத்தம்  மூன்று  பாகங்கள் . முதல்  பாகம்  2023  மே  மாதத்திலும்  இரண்டாம்  பாகம்    ஜூலை 2023  லும்  வெளியாகி  உள்ளது / மூன்றாம்  பாகம்  அக்டோபர் 2023 ல்  வெளியாகும்   

ஸ்பாய்லர்  அலெர்ட்


பாகம்  1   முன்  கதை  சுருக்கம்

 

 நாயகன்  புகழ்  பெற்ற  டெய்லர் , நாயகனின்  நெருங்கிய  நண்பன்  தான்  வில்லன். வில்லனுக்கு  மெரேஜ்  ஃபிக்ஸ்  ஆகி  இருக்கிறது.  வில்லன்  சமூக  சம்பிரதாயப்படி  மண மகளை  வெளி  ஆண்கள்  திருமணத்துக்கு  முன்  பார்க்கக்கூடாது , அதனால்  நாயகனின்  கண்ணைக்கட்டி  நாயகிக்கு  உடை  அளவு  எடுக்க  வில்லன் அழைத்து  வருகிறான். நாயகன்  மணப்பெண்ணின்  உடை  அளவை கண்கள்  கட்டிய  நிலையிலும்  கச்சிதமாக  எடுக்கிறார்

 

நாயகிக்கு  இந்ததிருமணத்தில்  இஷ்டம்  இல்லை . பண  பலத்தால்  ஏழையான  நாயகியை  வில்லன்  விலைக்கு  வாங்கி  விடுகிறார். வில்லனிடம்  இருந்து  தப்பித்து  நாயகி  நாயகனின்  வீட்டில்  தஞ்சம்  புகுந்து  விடுகிறாள். நாயகனுக்கு  நாயகி  தான்  வில்லனுக்கு  நிச்சயிக்கப்பட்ட  பெண்  என்பது  தெரியாது , இருவருக்கும்  காதல்  மலர்கிறது

 வில்லனுக்கு  விஷயம்  தெரிந்து  நாயகியை  மீட்க  வரும்போது  நாயகி  துப்பாக்கியால்  வில்லனை  சுடுகிறாள்  , நாயகன்  குறுக்கே  போய்  துப்பாக்கிக்குண்டை  தன்  தோளில்  வாங்கி  காயம்  படுகிறது . இதோடு  முதல்    பாகம்  முற்றும்

 

இரண்டாம்  பாகம்  இது  எட்டு  எபிசொடுகள்  கொண்டது . ஒவொரு  எபிசோடும்  40  நிமிடங்கள்  டூ 45  நிமிடங்கள் , அதில்  டைட்டில்  10  நிமிசம்  கட்  பண்ணி  விட்டால்    கிட்டத்தட்ட  நான்கு  மணி  நேரம்  இருந்தால் ஒரே  சிட்டிங்கில்  படம்  பார்த்து  விடலாம்

 

 முதல்  பாகத்தில்  இருந்த  விறு விறுப்பு  இரண்டாம்  பாகத்தில்  இல்லை . வேண்டா  வெறுப்பா  பிள்ளையைப்பெத்துட்டு  காண்டா  மிருகம் என  பேரு  வெச்ச  கதையாக  ஜவ்வாக  இழுக்கிறார்கள்

 

வில்லன் – நாயகி  திருமணம்  நிகழ்ந்து  விடுகிறது .  இந்த  திரும்ணத்துக்கு  போகும்  நாயகன்  வழியில்  சந்தித்த  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  பெண்ணைத்தன்னுடன்  அழைத்துச்செல்கிறான், அப்போதுதான்  நாயகி  எந்த  குற்ற  உணர்வும்  இல்லாமல்   திருமணம்   செய்து  கொள்வாள்  என்பது  அவன்  எண்ணம்

 

ஆனால்  திருமணம்  ஆன  பின்னும்   நாயகனைக்காண , நாயகனின்  அப்பாவைப்பராமரிக்க  அடிக்கடி  நாயகி  நாயகன்  வீட்டுக்கு  வருகிறாள்

 

 நாயகனால்  நாயகிக்கு  திருமணம்  ஆனதைத்தாங்கிக்கொள்ள  முடியவில்லை . தன்  தொழிலில்  கான்செண்ட்ரேட்  செய்ய  முடியவில்லை .  பணி  புரியும்  அனைவரையும்  விரட்டி  விடுகிறார். தற்கொலைக்கு  முயல்கிறார்

 

 வில்லன்  நாயகனிடம்  உன்  கம்பெனி  ஷேர்களை  எல்லாம்  எனக்கு  விற்று  விடு , நான்  டேக்  ஓவர்  செய்து  கொள்கிறேன்  என்கிறார். நாயகன்  அதற்கு  மறுத்து  ,மீண்டும்  தன்  தொழிலை  வெற்றிகரமாகக்கொண்டு  வருகிறார்.

 

 நாயகன்   இதுவரை  தன்  அம்மாவை  நேரில்  பார்த்ததில்லை. கருவில்  சிசுவாக  இருக்கும்போதே  அம்மா  வீட்டை  விட்டு  வெளீயேறி  விடுகிறாள் . இப்போது  இத்தனை  வருடங்கள்  கழித்துத்திரும்பி  வருகிறாள்

 

 நாயகனின்  அம்மா  ஏன்  விட்டுச்சென்றாள்?  இப்போது  ஏன்  திரும்பி  வந்தார்?   மனநிலை  சரி  இல்லாத  நாயகனின்  அப்பா  தன்  துணையை  அடையாளம்  கண்டாரா?  அதற்குப்பின்  என்ன  ஆனது  என்பதே  பின்  [ பாதி  திரைக்கதை


 நாயகனாக  நடித்தவர்  முதல்  பாகத்தில்  இருந்த  கம்பீரம்  இதில்  மிஸ்சிங். கதைப்போக்கு  அப்படி . க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்  பழைய  கம்பீரத்துடன்  வருகிறார்


 நாயகி  அருமையான  நடிப்பு . குழந்தைத்தனமான  முகம்  இவரது  பிளஸ் 


 வில்லனாக  வருபவர்  அரை  லூஸ்  மாதிரி  கேரக்டர்  டிசைன்  செய்யப்ப்பட்டிருப்பதால்  அவர்  மீது  கோபம்  வரவில்லை .


 முதல்  பாகத்தில்  இல்லாத  புது  கேரக்டர்  ஆக  நாயகனின்  அம்மா  வருகிறார். அருமையான  நடிப்பு  அவருடையது 


பின்னணி  இசை , ஒளிப்பதிவு  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  தரம் 

 


சபாஷ்  டைரக்டர்


1  தன்  அப்பா   மனநலன்  குன்றியவர்  என்பதால்  அவரை  வெளி  உலகத்துக்கு  தன் அப்பா  என  அறிமுகம்  செய்ய  கூச்சப்படும்  நாயகன்  தன்  அப்பாவை  ஒரு  கட்டத்தில்  ஒரு  பார்ட்டியில்  எல்லோருக்கும்  அறிமுகப்படுத்தி  பெருமைப்படுத்துவது 


2  நாயகனின்  அம்மா  கேரக்டர்  நாயகனிடம்  பணிப்பெண்னாக  வேலைக்கு  வருவது  தமிழ்ப்பட  செண்ட்டிமெண்ட்  காட்சிகளை  நினைவு படுத்துகிறது


  ரசித்த  வசனங்கள் 


1  தண்ணி  அடிச்சுட்டு  மப்புல  இருக்கறவங்க  எல்லாம்  நிலை  தடுமாறி  தரைல  விழும் வரை  தாங்கள்  வானில்  பறப்பதாகத்தான்  நினைக்கிறார்கள்


2  எல்லாத்தையும்  மறக்கனும்னா  அதற்கு  ஒரே  வழி  மரணம் தான்


3   கீழே  விழுவது , வீழ்ச்சி  இரண்டும்  நல்லதுதான். வீழ்ந்தால் தான்  எப்படி  எழுவது  என்பதை  கற்க  முடியும் 


4   மற்றவர்களிடம்  இருந்து  இரக்கத்தை  சம்பாதிக்க நினைப்பவன் தான்  அழுவான் 

5  உனக்கு  போர்  வேணுமா? அமைதி  வேணுமா? அதை  நீ தான்  தீர்மானிக்கனும்

6  ஒருவர்  நல்லவரா? கெட்டவரா? என  ஜட்ஜ்  பண்றது  ஈசி , ஆனா  அவங்கவங்க  சூழல்களை  கவனிப்பதுதான்  கஷ்டம்

7  நாம  பெரும்பாலும்  நம்ம  கடந்த  காலத்தில்  ஸ்டக்  ஆகிடறோம், அதைக்கடந்து   வரனும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நமக்கு  ஒரு  ஆளைப்பிடிக்க  வில்லை  எனில்  அவர்களிடம் இருந்து  விலகி  இருக்க  வேண்டும், இதில்  வரும்  வில்லன்  தன்  மனைவிக்கு  நாயகன்  கூட  காதல்  உண்டு  என  தெரிந்த  பின்னும்  அடிக்கடி  நாயகன்  வீட்டுக்கு  தன்  மனைவியுடன்  வருவதும்  தன்  வீட்டுக்கு  நாயகனை  அழைப்பதும்  மடத்தனம் 

2  நாயகனின்  அம்மா  தன்  விரலில்  போட்டிருந்த  மோதிரத்தை  இப்போது  கொடுத்து  இந்த  மோதிரம்  விரலுக்குப்பொருந்தினால்  அவர் தான்  நாயகனின்  அம்மா  என  சொல்வது  நகைக்க  வைக்கிறது . 20  வருடங்கள்  கழித்தும் ஒருவரின்  விரல்  அதே  சைசில்  தான் இருக்குமா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முத்ல  பாகம்  பார்த்தவர்கள்  அந்த  அளவு  எதிர்பார்ப்புடன்  வந்தால்  ஏமாறுவார்கள் , அதைப்பார்க்காதவர்கள்  இதைப்பார்த்தால்  புரியாது . ரேட்டிங்  2.25 / 5   


The Tailor
Also known asTerzi
Genre
Written by
  • Rana Mamatlıoğlu
  • Bekir Baran Sıtkı
Directed byCem Karcı
Starring
Music byFırat Yükselir
Country of originTurkey
Original languageTurkish
No. of seasons2
No. of episodes15
Production
ProducerOnur Güvenatam
Production companyOGM Pictures
Release
Original networkNetflix
Original release2 May 2023