Saturday, August 19, 2023

ரெஜினா(2023)- தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர்) அமேசான் பிரைம்


  தமிழ்  நாட்டில்  உள்ள  உதட்டழகிகள்  பட்டியலில்  முன்னணி  நடிகைகள்  பெயர்  பார்த்தால்  அதில்  சுனைனாவின்  பெயர்  டாப்  5  ல்  இருக்கும், ஆனால்  ஏதோ  ஒரு  கெட்ட  நேரம்  அவர் நயன்  தாரா , த்ரிஷா  லெவலுக்கு  வர  முடியவில்லை . டூயட்  பாடும்  சராசரி  நாயகியாய் வலம்  வந்தவருக்கு டைட்டில்  ரோலில்  கலக்க  ஒரு  வாய்ப்பு , ஆனால்  அவர்  அதை  சரியாகப்பயன்படுத்தினாரா? என்பதை பார்ப்போம்

 ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியின்  கணவன் ஒரு  பேங்க்  ஸ்டாஃப்.  பேங்க்கில்  நடக்கும்  ஒரு  கொள்ளை  சம்பவத்தின்  போது  கொள்ளையர்கள்  அவரைத்தாக்கிக்கொலை  செய்து  விடுகிறார்கள் . இந்தக்கொலையாளிகளைக்கண்டு  பிடிக்க  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  நாயகி  நடையாய்  நடக்கிறார்.   சும்மா  திருட்டுக்கேசுக்கு  புகார்  கொடுக்கப்போனாலே  ஒரு  கொயர்  பேப்பர்   வாங்கிட்டு  வா, டீ  வாங்கிட்டு  வா  என  பொது  மக்களிடம்  பிச்சை  எடுக்கும்  போலீஸ்  இந்தக்கேசை  கண்டு  பிடித்துக்கொடுக்குமா?  அலைக்கழிக்கிறது 


 நாயகி   திட்டம்  போட்டுக்கொலையாளிகளைக்கண்டு  பிடித்து  வஞ்சம்  தீர்ப்பதுதான்  மீதி  திரைக்கதை .  இதில் க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டும்  இருக்கிறது 


நாயகி   ஆக சுனைனா. அறிமுகம்  ஆன  போது  மெழுகு  பொம்மை  மாதிரி  இருந்தவர்  இப்போது  ஷைனிங்க்  குறைந்த பொம்மையாக  தெரிகிறார்.  ரொமான்ஸ்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட்  ஆன  அளவுக்கு  ஆக்சன்  காட்சிகளில் , ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சிகளில்  பிசிக்ஸ்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


ஒரே  ஒரு  கானாப்பாட்டுக்கு  மட்டும்  வரும்  அந்த  வில்லன்  கலக்கலான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். கொள்ளைக்கும்பலின்  கார்  டிரைவரின்  மனைவியாக  வரும்  ரிது  மந்த்ராவுக்கு  அதிக  வாய்ப்பு . நாயகியும்  ,இவரும்  நெருங்கிப்பழகுவது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


சதீஷ்  நாயரின்  இசையில்  ஐந்து  பாடல்கள்  , எல்லாமே  சுமார்  ரகம்  தான் , பிஜிஎம்  இன்னும்  விறுவிறுப்பாய்  இருந்திருக்கலாம். ரவி  கே  பர்வான்  ஒளிப்பதிவில்  குறை  எதுவும்  இல்லை   நாயகி  வரும்  காட்சிகளில்  எல்லாம்  டார்க்  டோனில்  படம்  பிடித்திருக்கிறார் 


இசை  அமைப்பாளர்  சதீஷ்  நாயரின்  சொந்தப்படம்  இது ,   சொந்தப்படத்துக்கே  இந்த  அளவு  தான்  இசை  எனில்  மற்ற  படங்களுக்கு  எப்படியோ?


2  மணி  நேரம்  டைம்  டியூரேஷன்  காட்டினாலும்  மொத்தப்படம்  100  நிமிடங்கள்  தான் . டைட்டில்  போடுவதில்  முதலில்  5  நிமிடங்கள் , கடைசியில் 17  நிமிடங்கள்  போய்  விடுகிறது 


சபாஷ்  டைரக்டர் ( டொமைன் டி  செல்வா)


1   நாயகி  வரும் பெரும்பாலான  காட்சிகளில்  அவருக்கு  லோ  கட்  டிரஸ்  கொடுத்து  வர  வைத்தது 

2    நாயகிக்கும்  இன்னொரு  பெண்ணுக்கும்  லெஸ்பியன்  பார்ட்னர்ஷிப்  இருக்குமோ  என  நினைக்க  வைக்கும்  அளவு  இருவரையும்  நெருக்கமாகக்காட்டியது 

3    பேங்க்  கொள்ளையில்  க்ளைமாக்சில்  வெளிப்படும்  ட்விஸ்ட் 

4  கானா  பாட்டு  முடிஞ்சதும்  வில்லனைப்போட்டுத்த:ள்ளும்  நாயகி  அந்த  ஸ்பாட்டில்  இருந்து  தப்பிக்க  கையாளும்  உத்தி 


சாங்க்ஸ்

1  சூறாவளி  போல 

2   நாம்  உலாவும்   ஓடை மீன்களோ?

3  சீனு  கேங்கு  டா  ( கானா  பாட்டு ) 

4  கோடி  கோடிப்பகை  மோதினாலும்

5  வீழ்ந்தேன்  என  நினைத்தாயோ?



  ரசித்த  வசனங்கள் 


1  எப்பேர்ப்ட்ட  வலிமையான  சிங்கமா  இருந்தாலும், அதனோட  குகைக்கு  தீ  வெச்சா  வெளியே  வந்துதான்  ஆகனும் 


2  எந்தப்பொண்ணுமே  இன்னொரு  பெண்  கிட்டே  சொல்லாத  ஒரு  விஷயத்தை  நான்  உன்  கிட்டே  சொல்லப்போறேன் , நீ ரொம்ப  அழகா  இருக்கே


3   இந்த  உலகத்துல  பெரிய  விஷயமே  நாம  சொல்ற்தை  காது  கொடுத்துக்கேட்க  ஒரு  ஆள்  இருப்பதுதான்

4  சிங்கம் , முயல்  கதைல  எப்பவுமே  சிங்கம்  சொல்றதைத்தான்  முயல்  கேட்கும், ஆனா  இங்கே  முயல்  சொல்படி தான்  சிங்கம்   கேட்கனும், கேட்க  வைப்பேன்


5  சூழ்நிலைக்கைதியா  வேணா  சிங்கம்  இருக்கலாம், ஆனா  சிங்கம்  என்னைக்கும்  சிங்கம்தான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 இரண்டு  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  முதல் 35  நிமிடங்கள்  ரொம்ப  ஸ்லோ . நாயகி  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  நடையா  நடப்பதை  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்


2  முற்போக்கு  எண்ணம்  கொண்ட  பெண்கள் , மாடர்ன்  கேர்ள்ஸ்  என  காட்ட  வேண்டும்  எனில்  அவங்க  தண்ணி  அடிக்கற மாதிரி, தம்  அடிக்கற  மாதிரி  அரைகுறை  ஆடை  அணிபவராகக்காட்டினால்  போதும்னு இப்போ  எல்லா  இயக்குநர்களும்  நினைக்க  ஆரம்பித்து  விட்டது  ஏனோ?

3   ஒரு சர்ட்  கொடுங்கனு  மட்டும் தான்  நாயகன்  ஜவுளிக்கடைல  கேட்கறார், சைஸ்  சொல்லவே இல்லை , ஆனா  கரெக்ட்  சைஸ்  தந்துடறாரே?

4  வங்கிக்கொள்ளை  நடக்கும்போது  பொது மக்களுக்கோ , வங்கிப்பணியாளர்களுக்கோ  எந்த  வித  கெடுதலும்  செய்யாத  கொள்ளையர்கள்  வங்கியில்  இருக்கும்  நாயகியின்  கணவனை  மட்டும்  கொடூரமாகத்தாக்கி  கொலை  செய்ததில்  இருந்தே  இதில்  ஏதோ  பர்சனல்  வெஞ்ஜென்ஸ்  இருப்பது  தெரிந்து  விடுகிறதே?  ஓப்பனிங்  ஷாட்டில்  நமக்குத்தெரியும்  இந்த  விஷயத்தை  பின்  பாதியில்  பெரிய  ட்விஸ்ட்  ஆகக்காட்டுகிறார்கள் 


5  நாயகியைக்கொலை  செய்யும்  நோக்கில்  போலீஸ்  ஸ்டேஷன்  வரும்  ரவுடி துப்பாக்கியால்  அவள்  வயிற்றில்  அல்லது  தலையில்  கன்  பாயிண்ட்டை  எய்ம்  பண்ணாமல்  ஷோல்டரில்  சுடுவது ஏன் ? 


6  நாயகியின்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  காட்சியில்  அவர்  முகத்தில்  போதிய  வீரம்  இல்லை . கூட  வரும்  மாரி  கேரக்டரில்  வரும்  துணை  நடிகை  அளவு  கூட  நாயகி  நடிக்கவில்லை . பாட்ஷா , விஸ்வரூபம்  மாதிரி  ட்ரான்ஸ்ஃபர்மேசனில்  கலக்கிய  படங்களில்  ஹீரோ  பர்ஃபார்மென்சை  பார்த்து  விட்டு  நடித்திருக்கலாம் 

7  நாயகி  ஹேண்ட்பேக்கில்  ரிவால்வர்  வைத்திருப்பதை  அறிந்த  வில்லன்  இது  என்னம்மா  மாடல் ?  ஜெர்மன் ? இத்தாலி ? என  நக்கலாகக்கேட்கிறார். சுட  குறி  வைக்கும்போது   சுடத்தெரியுமா? என  கிண்டலாகக்கேட்கிறார். என்னதான்  ஒரு  பெண்  முன்  வெத்து  கெத்து  காட்டினாலும்  துப்பாக்கியைப்பார்த்ததும்  உஷார்  ஆக  வேண்டாமா? இப்படியா  அசால்ட்டாக  பலி  ஆவது ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - லிப்  லாக்  சீன்ஸ்  இருக்கு ,  கிளாமர்  காட்சிகள்  இருக்கு , பயங்கர  வன்முறைக்காட்சி  ஒன்று  இருக்கு , ஆனா  சென்சார்ல  மட்டு,ம்  யூ  சர்ட்டிஃபிகேட்  கொடுத்திருக்காங்க . எவ்ளோ  செலவு  ஆச்சோ  தெரியல 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மேலோட்டமாகப்பார்க்கும்போது  கணவனைக்கொலை  செய்தவர்களைப்பழி  வாங்கும்  மனைவியின்  கதை  என  ஒன் லைனில்  சொன்னாலும்  ஒரு  த்ரில்லர்  மூவிக்கான  விறுவிறுப்பு  இருக்கிறது . டி வி  யில்  போட்டால்  பார்க்கலாம் . ,முதல்  25  நிமிடங்கள்  ஸ்கிப்  பண்ணிடலாம் . ரேட்டிங்  2.25 / 5 


Regina
Theatrical release poster
Directed byDomin D. Silva
Produced bySathish Nair
Starring
CinematographyPavi K. Pavan
Music bySathish Nair
Production
company
Yellow Bear Production
Release date
  • 23 June 2023
CountryIndia
LanguageTamil

0 comments: