நியூயார்க் நகரில் 1923 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 2001 ஆம் ஆண்டு அனதர் லைஃப் என்ற ஹாலிவுட் படம் ரிலீஸ் ஆனது . அந்தப்படத்தின் பட்டி டிங்கரிங் அட்லீ ஒர்க் தான் இது
2013 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் பாலாஜி கே குமார் விடியும் முன் என்ற தன் முதல் த்ரில்லர் படத்தை இயக்கினார். அது ஏற்கனவே ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆன லண்டன் டூ பிரிட்டன் என்ற படத்தின் அன் அஃபிஷியல் அட்லீ ஒர்க் தான். சுமாராகத்தான் ஓடியது . 10 வருட இடைவெளிக்குப்பின் தன் இரண்டாவது படமாக டெக்னிக்கலி சவுண்ட் ஆன பட்ம் ஆக தந்திருக்கிறார் இயக்குநர்
ஸ்பாய்லர் அலெர்ட்
முன்னாள் பாடகியும் இந்நாள் மாடலிங்க் கேர்ள் உம் ஆன நாயகி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரது கொலைக்கு போலீஸ் சந்தேகப்படும் நபர்கள் அவரது பாய் ஃபிரண்ட் , பர்சனல் மேனேஜர் , மாடலிங் துறைக்கு இழுத்து வந்து ஒரு முக்கியமான காண்ட்ராக்ட்டில் சைன் போட ஒரு நாள் இரவு தங்க விலை பேசிய வில்லன் என சிலரது மீது விசாரணை நடக்கிறது. இறூதியில் கொலைகாரனை எப்படிக்கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை
நாயகி ஆக மீனாட்சி சவுத்ரி நல்ல முக அழகு , தேவையான அளவு கண்ணியமான கிளாமர் , அழகிய ஆடை வடிவமைப்பு , உடல்மொழி என மனதைக்கவர்கிறார். நல்ல எதிர் காலம் உண்டு
போலீஸ் ஆஃபீசர் ஆக ரித்திகா சிங் சுறுசுறுப்பாக நடித்திருந்தாலும் போலீஸ் யூனிஃபார்மில் கம்பீரம் குறைவு.மேக்கப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம்
முன்னாள் போலீஸ் ஆஃபீசராக கேசை டீல் செய்யும் விஜய் ஆண்ட்டனி வழக்கம் போல் முகத்தில் உணர்ச்சியைக்காட்டாத நடிப்பு . அமைதியாக வ்ந்து போகிறார்
ஜான் விஜய் , ராதிகா , என தெரிந்த முகங்கள் வ்ந்து போகிறார்கள்
வில்லன் ஒரு சைக்கோ என க்ளைமாக்சில் காட்டும்போது நம் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை . பெரும்பாலான கேரக்டர்கள் கொலை செய்ய்ப்படுவது , சில கேரக்டர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆயாசத்தைத்தருகிறது
ஜி கிரிஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பிஜிஎம் இன்னுமே சுமார் , சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு ஹாலிவிட் பட தரத்தில் அருமையாக உள்ளது . 129 நிமிடங்கள் ஓடும் அளவு க்ரிஸ்ப் ஆக எடிட்டர் கட் பண்ணி இருந்தாலும் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு பின் பாதியில் இல்லை
சபாஷ் டைரக்டர் ( பாலாஜி கே குமார்)
1 நாயகன் , வில்லன், நாயகி , போலீஸ் ஆஃபீசர் என அனைத்துக்கேரக்டர்களுக்கும் உரிய ஸ்பேஸ் கொடுத்து திரைக்கதை அமைத்தது ,பொருத்தமான நடிகர் நடிகை தேர்வு
2 கொலை எப்படி நடந்திருக்கும் என வெவ்வேறு வெர்ஷனில் விஷூவலாகக்காட்டிய விதம்
சாங்க்ஸ்
1 ஒரு நாளில் மயக்கமாகி நானும் நின்றேனே
2 பார்த்த ஞாபகம் இல்லையோ ( ரீமிக்ஸ்)
3 நேசம் மாறுமோ
4 கேள்வி மட்டும் தங்குதே
ரசித்த வசனங்கள்
1 பர்ஃபெக்ட் மர்டர் என்று ஒன்று கிடையாது , எல்லா மர்டர்லயும் ஒரு ஃப்ளா இருக்கும், அதைக்கண்டு பிடிக்கனும்
2 ஒரு பிரச்சனையோட தீவிரத்தை அப்போ உணர முடியாது , எதிர்காலத்தில்தான் உணர முடியும்
3 தற்செயலான நிகழ்வு என எதுவுமே இல்லை, எல்லாமே தீர்மானிக்கப்பட்டவை
4 ஏதோ உன் பதவிக்காக சும்மா இருக்கேன்
சும்மா இருப்பது ஒண்ணும் உனக்கு புதுசு இல்லையே?
5 ஒரு பொய்யோட சப்தம் எப்படி இருக்கும்?னு எனக்குத்தெரியும்
6 ஒவ்வொரு மனுசனும் தன் மனசில் இருப்பதை சைகை மூலம் அவனையும் அறியாமல் வெளிப்படுத்துவான், அதுக்கு freudian slipனு சொல்வாங்க
7 எவ்வளவு தான் வாழ்க்கைல ஜெயிச்சாலும் மரணம் கிட்டே எல்லாரும் தோற்றுத்தான் போகனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1நாயகனின் மகளுக்கு நடக்கும் விபத்து , மனைவியுடனான கருத்து வேறுபாடு , செண்ட்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை
2 கொலைக்கான காரணம் வலுவாக இல்லை, போற போக்கைப்பார்த்தால் அடுத்த படத்தில் எனக்கு க்டலை பர்பி வாங்கித்தர மறுத்தான், அதனால் கொன்னுட்டென்னு சீன் வைப்பார் போல .
3 கொலைக்கான காரணத்தை வலுவாகச்சொல்லத்தெரியவில்லை எனில் வில்லன் ஒரு சைக்கோ என சாமார்த்தியமாக எஸ்கேப் ஆவது ஏற்புடையதல்ல
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டாலோ , யாராவது ஓசி டிக்கெட் வாங்கித்தந்தாலோ பார்க்கலாம் ., ரேட்டிங் 2. 5 / 5
Kolai | |
---|---|
Directed by | Balaji K. Kumar |
Written by | Balaji K. Kumar |
Starring | Vijay Antony Ritika Singh Meenakshi Chaudhary |
Cinematography | Sivakumar Vijayan |
Edited by | R. K. Selva |
Music by | Girishh G. |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment