ஸ்பாய்லர் அலெர்ட்
60 வயதான பாட்டிதான் நாயகி.வயதான காலத்தில் அவளது மகள்கள் அனைவரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து வீட்டில் இருக்கும் பசு , செல்வம் என கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போவதில் குறியாக இருக்கின்றனர் . அம்மா மீது உண்மையான பாசம் காட்ட யாரும் இல்லை . இப்போது நாயகியிடம் இருக்கும் ஒரே சொத்து காதுகளில் அணிந்திருக்கும் தண்டட்டி மட்டுமே. அதையும் ஆட்டையைப்போட வாரிசுகள் திட்டம் போட்டும் நாயகியிடம் அது மட்டும் பலிக்கவில்லை
அதற்கு கவிதையான ஃபிளாஸ்பேக் உண்டு . நாயகி சின்ன வயதில் காதலித்த காதலனிடம் ஆசையாய்க்கேட்டு வாங்கி அணிந்த தண்டட்டி அது . காதல் கை கூடாவிட்டாலும் அந்தக்காதலன் நினைவாய் கடைசி வரை தண்டட்டியுடன் உயிர் வாழ நினைக்கிறார்
திடீர் என நாயகி இறந்து விடுகிறார். அன்று இரவு தண்டட்டி களவு போகிறது . அதை திருடியது யார்? என்பதைக்கண்டு பிடிக்க போலீஸ்காரர் ஆன நாயகன் முயற்சிக்கிறார். இதற்குப்பின் நிக்ழும் சுவராஸ்யங்களே பின் பாதி திரைக்கதை
நாயகி பாட்டியாக ரோகினி. அருமையான நடிப்பு , மகளிர் மட்டும் படத்தில் பிணமாக வாழ்ந்து காட்டிய நாகேஷ் காட்டிய வழியில் இவரும் அற்புதமாக ந்டித்திருக்கிறார்
நாயகன் போலீஸ் காரராக பசுபதி .தூள் (2003) படத்தில் வில்லனாக ரசிக்க வைத்து வெயில் (2006) படத்தில் நாயகனாக ரசிக்க வைத்து ,மும்பை எக்ஸ்பிர்ஸ்(2005) காமெடியனாகக்கலக்கி , சார்பட்டா பர20ம்பரை ( 2021) யில் குண்ச்சித்திர வேடத்திலும் முத்திரை பதித்தவர் . இதில் முதல் பாதி முழுக்க காமெடி ரோல். பின்னி எடுத்து விட்டார். பின் பாதியில் உருக்கமான நடிப்பு
நாயகியின் குடிகார மகனாக விவேக் பிரசன்னா ஷோ பாண்டியாக ஷோ காட்டுகிறார். மகள்களாக தீபா சங்கர் ,பூவிதா , ஜானகி, செம்மலர் அன்னம் ஆகிய நால்வரும் ஓவர் ஆக்டிங். காமெடிக்காக வைக்கப்ப்ட்ட காட்சிக்ள் என்றாலும் நாடகத்தனம் தூக்கல்
கே எஸ் சுந்தர மூர்த்தியின் இசையில் ஒரு பாடல் சிறப்பு , க்ளைமாக்ஸ் நெருங்கும்போது வரும் மெலோடி பிஜிஎம் கலக்கல் ரகம். 2 மணி நேரம் எட்டு நிமிடங்கள் ஓடும் அளவு ட்ரிம் பண்ணி இருக்கிறார் எடிட்டர்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் கேரக்டர் டிசைன் ஓப்பனிங் ஷாட்டிலேயே தெளிவாக விளக்கப்பட்டு அதை வைத்துப்பின்னப்பட்டிருக்கும் காமெடி டிராக் அசத்தல் .போலீசையே உள்ளே அனுமதிக்காத கிராமத்தில் ஒரு முன் கோபக்கார போலீஸ் நுழைந்தால் என்ன ஆகும் என்ற ஒன் லைன் தான் அந்த டிராக் .நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
2 கரிநாக்கு உள்ள சாபம் விட்டால் பலிக்கும் பவர் உள்ள தவளை வாயன் கேரக்டர் , ஊர் வம்பை பேசும் கோளாறு பாட்டி இருவரது கேரக்டர் டிசைன்களும் அருமை
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை யாருமே யூகிக்க் முடியாத அளவில் அவிழ்க்கும் சாமார்த்தியம்
ரசித்த வசனங்கள்
1 என்னடா இது ? முழிச்சிட்டு இருக்கும்போதே முழியைத்தோண்டுன கதையா இருக்கு ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் அந்தப்பையன் டூ வீலரில் அமர்ந்து கிராமத்துக்கு செல்லும் தூரத்தைப்பார்த்தால் 15 கிமீ இருக்கும் போல ., அந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையையே தாண்டி இருப்பது போல தெரிகிறது
2 நாயகியின் காதலனை குற்றுயிர் ஆக்கி விட்டு கட்டாயத்திருமணம் செய்து வைக்கிறார்கள் . அதற்குக்கொஞ்சமாவது கால அவகாசம் எடுத்துக்கொள்ள மாட்டார்களா? அடுத்த நாளே திருமணம் நடக்குமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மனதைக்கனக்க வைக்கும் பின் பாதி படத்துக்காக பொறுமையாக இருந்து காண வேண்டிய நல்ல படம், ரேட்டிங் 3 5
நன்றி - அனிச்சம் மின்னிதழ் ஆகஸ்ட் 1, 2023
0 comments:
Post a Comment