படம் ரிலீஸ் ஆனால் ஓ டி டி க்கு ஒரு மாதத்தில் வ்ந்து விடும், ஆனால் 2022ல் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் கழித்து ஓ டி டி யில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்ப்படம் என்னும் பெருமையை இது பெறுகிறது, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்., அதை எல்லாம் நிறைவேற்றியதா? என்பதைப்பார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
இந்தியாவில் இருக்கும் ப்ழமையான கோவில்களில் பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள் , அல்லது காணாமல் போகிறார்கள் . இந்தியாவில் இருக்கும் பழமையான சிலைகள் நகைகள், கோவில் சொத்துக்கள் வெளிநாட்டுக்குக்கடத்தப்படுகின்றன்.இந்த கடத்தல் வேலையில் சர்வதேசக்குற்றவாளி ஒருவன் சம்பந்தப்பட்டு இருக்கிறான், அவனைப்பொறி வைத்து எப்படிப்பிடித்தார்கள் என்பதே கதையின் ஒன் லைன்
நாயகன் ஆக சிபிராஜ். இவர் கேரக்டர் டிசைனில் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக நினைத்து இயக்குநர் வைத்த ஒரு விஷயம் ஓப்பனிங் சீன்லயே தெரிந்து விடுகிறது . அவரது அலட்டல் இல்லாத நடிப்பு கச்சிதம்
நாயகி ஆக தன்யா ரவிச்சந்திரன், அதிக வாய்ப்பில்லை என்றாலும் ஓக்கே ரகம் பகவதிப்பெருமாள் , கே எஸ் ரவிக்குமார் , ராதாரவி , ஹரீஷ் பெரோரி , ஜி மாரிமுத்து என தெரிந்த முகங்கள் அவர்கள் பாத்திரத்தைக்கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள்
இளையராஜாவின் பின்னணி இசை அருமை , பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை , சி ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு குட் ராம் பிரசாத் , கொண்டலராவ் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது
அருண் மொழி மாணிக்கத்தின் திரைக்கதையை என் கிஷோர் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 செஸ் விளையாட்டை வைத்து அர்சியல் , போர் பற்றிய பஞ்ச் டயலாக்ஸ் வைத்தது
2 மாயாஜால மந்திரக்கதையா? க்ரைம் த்ரில்லரா? என யூகிக்க முடியாத அளவு காட்சிகளை மாற்றி மாற்றி வைத்தது
சாங்க்ஸ்
1 தேடித்தேடிப்போக உண்மை விளங்கும், ஓடிப்போன காலம் கண் முன் தோன்றும்
2 கந்தர்வா
3 மாயோன்
4 கிருஷ்ண பஜனை
ரசித்த வசனங்கள்
1 களத்தில் எதிரியுடன் மோதும் முன் அவனோட புத்தியை நாம வெல்லனும்
2 போர் என்பது வஞ்சனை ஏமாற்றுதல் ஆகியன் அடங்கியது
3 சூழ்நிலைக்கு ஏற்றபடி நம் திட்டங்களை மாத்திக்கனும்
4 எதிரி எதிர்பாராத த்ருணத்தில் நாம் தாக்கனும்
5 என்னோட வேலை புதைஞ்சு கிடப்பதை தோண்டி எடுப்பது மட்டும் இல்லை , என்னைத்தோண்டிப்பார்க்கறவனை புதைப்பதும்தான்
6 உன் பேர் என்னம்மா?
வாணி
என் மனசைத்தின்ன களவாணி
7 உங்க கிட்டே பேசிட்டு இருந்தா சிரிச்சே செத்துடுவேன்
சிரிச்ச பின் செத்துடலாம், ஆனா செத்த பின் சிரிக்க முடியாது
8 நீங்க ரொம்ப தப்புப்பண்றீங்க
இல்லை , கரெக்ட் பண்றேன்
9 வாலைக்கொடுத்து தலையைக்காப்பாத்திக்கற பல்லி மாதிரி சந்தர்ப்ப சூழல்களை வைத்து எது முக்கியமானது? எது முக்கியமில்லாதது என முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம்
10 வாழ்க்கையை இரு வழிகளில் நாம் வாழலாம் 1 எதுவுமே அற்புதமோ , அதிசயமோ இல்லை என்பது போல 2 எல்லாமே அற்புதமும், அதிசயமும் தான் என்பது போல - ஆல்ப்ர்ட் ஐன்ஸ்டீன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கோயிலுக்குள் செல்ஃபோன் பேசுவது த்டை செய்யப்ப்ட்டிருக்கிறதே? நாயகன் ட்ரோன் அனுப்பி செல்ஃபோனில் கோயில் அமைப்புகளை ஆராயுமோது எதிரே ஒரு முக்கிய ஆள் வரும்போது செல் ஃபோன் பேசுவது போல சமாளிக்கிறாரே? அப்போது அவர் கேட்க மாட்டாரா? ஏன் கோயிலுக்குள் செல் ஃபோன் யூஸ் பண்றீங்க?னு
2 நாயக்கர் குடும்பம் மூலிகைத்தண்ணீரைக்குடித்து விட்டுத்தான் உள்ளே வருகிறார்கள் என்பதால் நாமும் அதே போல் செய்வோம் என கொள்ளை சம்பவத்துக்கு முன் தன் ஆட்களிடம் கூறும் நாயகன் அவன் மேற்பார்வையில் கண் முன் குடிக்க வைத்திருக்கலாமே?
3 நள்ளிரவில் உளவு பார்க்க காட்டுக்குள் வரும் ஆள் செப்பல் இல்லாமல் வெறும் காலில் வந்து முள் குத்து வாங்குவது ஏன் ?
4 பின் பாதியில் வரும் பாம்பு காட்சிகள் போர்.ஒண்ணா அவங்களைக்கொல்லனும், அல்லது பயமுறுத்தி துரத்தனும், சும்மா விளையாட்டு காட்டிட்டு இருக்கு . ராமநாராயணம் படம் மாதிரி இருக்கு
5 குள்ளன் காட்டும் பூமாரங் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் காமெடி என நினைத்து கடுப்பேற்றி இருக்கிறார்கள்
6 சக்கிரவியூகத்துக்கான சாவி என்ன ஷேப்ல எப்படி இருக்கும்னே யாருக்கும் ஒரு ஐடியா இல்லாத போது மூன்று பேரும் கரெக்டாக அவற்றைக்க்ண்டுபிடிப்பது எப்படி ?
7பல வருடங்களாக அடைபட்டுக்கிடக்கும் சுரங்கப்பாதை திறக்கப்படும்போது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் நார்மலாக சுவாசிக்க முடியாது , ஆனால் நாயகன் அண்ட் டீம் சர்வசாதாரணமாக சுவாசிக்கிறார்கள்
8 ஒரு டிரக்கில் ஏற்றும் அளவு புதையல் கிடைக்கிறது , ஆனால் நாயகன் அண்ட் டீம் 25 கிலோ அரிசி சிப்பம் சாக்கு மட்டும்தான் கைல வெச்சிருக்காங்க . முன் யோசனையே இல்லை
9 சுரங்க அறையில் நாயகன் நாயக்க பெருமாளின் மகனை தாக்கி மயக்கம் அடைய வைக்கிறார்கள் , காலையில் அவர் வந்ததும் மகன் நடந்த தாக்குதல் சம்பவத்தை சொல்லவே இல்லையே?
10 நாயக்கர் மகன் சுரங்க அறையில் இருப்பதாக தான் பொய் சொன்னதால் மற்றவர்களுக்கு அவன்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம், யூ ட்யூப்லயும் கிடைக்குது . ரேட்டிங் 2.5 / 5
Maayon | |
---|---|
Directed by | N. Kishore |
Screenplay by | Arun Mozhi Manickam |
Produced by | Arun Mozhi Manickam |
Starring | |
Cinematography | C. Ramprasad |
Edited by | Ram Pandian Kondalarao |
Music by | Ilaiyaraja |
Production company | Double Meaning Productions |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment