1999ல் துள்ளாத மனமும் துள்ளும் என ஒரு மெகா ஹிட் படத்தை விஜய்க்கு தந்த எஸ் எழில் 2000ம் ஆண்டு பிரபுதேவா வை வைத்து பெண்ணின் மனதை தொட்டு என்ற அட்டர்ஃபிளாப் தந்தார். 2001 ல் பூவெல்லாம் உன் வாசம் ஹிட்டு , 2016ல் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஹிட் ஆன காமெடி மூவி. இப்போது ராஜேஷ் குமார் நாவலைத்தழுவி நாவலின் டைட்டிலையே படத்துக்கும் வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் கதையைப்படமாக எடுத்திருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க வருகிறார். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வாசலில் காத்திருக்கிறார். ரவுண்ட்ஸ் முடிந்து இன்ஸ்பெக்டர் வருவதற்குள் நாயகி போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அவரை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் திடீர் என சயனைடு சாப்பிட்டு இறக்கிறார்
இறந்து போன நாயகிக்கு ஒரு காதலன் உண்டு . அவன் மீது முதலில் போலீஸ் சந்தேகிக்கிறது , ஆனால் அவன் என் காதலியைக்கொலை செய்தவனைப்பழி வாங்காமல் விட மாட்டேன் என தனி ரூட்டில் கொலையாளியைத்தேடிச்செல்கிறான். இறுதியில் கொலையாளி யார் என்பதை யார் எப்படிக்கண்டு பிடித்தார்கள் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக ஆர் பார்த்திபன். சீரியசான ரோலில் காமெடி மொக்கைக்காமெடி நடிப்பில் தருவது ஏனோ? சிரிப்பு வரவில்லை , எரிச்சல் தான் வருகிறது
காமெடி கவுண்ட்டர் செய்கிறேன் பேர்வழி என ரோபோ சங்கர் களத்தில் குதிக்க சீரியஸ் ஆன கொலைக்கதை ”சிரி”யஸ் ஆன காமெடிக்கதை ஆகிறது
நாயகி ஆக சாய் ப்ரியா தேவா அழகாக வந்து போகிறார். இவரது காதலன் ஆக கவுதம் கார்த்திக் அதிக வாய்ப்பில்லை
டி இமானின் இசையில் மூன்று பாடல்கள் . அதில் ஒன்று சூப்பர் ஹிட் . தைலாங்குயில் செம ஹிட் மெலோடி , தீம் மியூசிக்கை நாயகன் ஜீப்பில் வரும்போதெல்லாம் போட்டுத்தெறிக்க் விடுகிறார்
ராஜேஷ் குமாரின் நாவலை எஸ் எழில் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். 125 நிமிடங்கள் படம் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர் ( எஸ் எழில்)
1 24 வருட சினிமா அனுபவத்தில் முதல் முறையாக ரைட்டர் ராஜேஷ் குமார் நாவலை படமாக்க முன் வந்தது
2 போலீசுக்கான எந்த அறிகுறியும் தெரியா வண்ணம் நாயகனுக்கு டி ஆர் தாடி , யோகி பாபு ஹிப்பி தலை ஹேர் ஸ்டைல் என கொடுத்து புதுமை புகுத்தியது
3 போதை தரும் இசை என்னும் புது கான்செப்டில் க்ரைம் நடப்பதாக காட்டியது
ரசித்த வசனங்கள்
1 என்னப்பா அசை போட்டுட்டு இருக்கே?
இந்த கேசை எப்படி டீல் பண்ணலாம்னு அசை போட்டுட்டு இருக்கேன் சார்
அப்போ ஃபிரிட்ஜ்ல எடுத்த கேரட்?
நீங்க அறிவுல 24 கேரட் சார்
2 இவளை ஜாக்கிரதையா ஸ்டேஷன் கொண்டுபோங்க , ஓடிடுவா, மிஸ் ஓடுகாலி
3 ஹலோ . எங்கே போறீங்க ?
உள்ளே போறோம்
உள்ளே யாரைப்ப்பார்க்கனும் ?
பார்க்கற மாதிரி யாரு இருக்காங்க ? வினாயக் மூர்த்தியைப்பார்க்கனும்
கொஞ்சம் மரியாதையாப்பேசுங்க
சரி , அக்யூஸ்ட் வினாயக் மூர்த்தியைப்பார்க்கனும்
4 போலீஸ் செலக்சனுக்கும் நீட் இருந்தா எப்படி இருக்கும்?
5 வண்டியை எடுத்துட்டு வரவா சார்?
பின்னே ? தூக்கிட்டா வருவே?
6 இவன் டிடெக்ட்டிவா? டிஃபக்ட்டிவா?னு கண்டுபிடிக்கனும்
7 என்ன்ய்யா அவளை தடவிட்டு இருக்கே? நீ தடயவியல் நிபுணரா?
8 ஆன் ட்யூட்டில இருக்கற போலீஸ் காரன் பெண் ட்யூட்டிலயே செத்துடுவான் போல
9 டிஜிட்டல் இந்தியா கேள்விப்பட்டிருக்கோம், அதென்ன டிஜிட்டல் டிரக்?
இசை தான். இசை மூலமா போதையை ஏற்படுத்துவது
10 மிக்ஸ்டு ஜூஸ்னு சொல்லிக்கொடுத்தான், எதை மிக்ஸ் பண்ணிக்கொடுத்தானோ?
11 இதுக்கும்மேல என்ன வேணா பண்ணிக்குங்க
சார், அந்தப்பொண்ணே சொல்லிடுச்சு.. என்ன வேணா பண்ணிக்கலமாம்
12 என்கவுண்ட்டர்ல அவனைப்போடனும், போட்டுடுவீங்களா?
டீ போட்டாலே ஸ்ட்ராங்கா போடுவேன் சார்
13 சாரி சார்
சாரி போட்டா வண்டி கிளம்பிடுமா?
சாவி போட்டாதான் கிளம்பும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் போகும்போது கூட ஒரே ஒரு டிரைவரை மட்டும் தான் கூட்டிச்செல்வாரா? ஸ்டேஷனில் எஸ் ஐ , ஏட்டு , பி சி என அத்தனை பேரும் ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாங்களா?
2 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் நாயகி அவர் தோழி ஃபிளாஸ்பேக் காட்சிகள்
3 கதையின் சீரியஸ்னெசை கெடுக்கும் வகையில் நாயகன் - காமெடியன் இருவரும் மொக்கை கவுண்ட்டர்ஸ் கொடுப்பது கடுப்பு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சிகள் இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி விறுவிறுப்பாகவும் பின் பாதி இழுவையாகவும் போகிறது . டி வியில் போட்டால் பார்க்கலாம், ராஜெஷ் குமார் ரெகுலர் ரீடர்ஸ் பார்க்கலாம்., ரேட்டிங் 1.75 / 5
0 comments:
Post a Comment