எஸ் ஜே சூர்யா இயக்கிய படங்கள் என்றாலும் சரி , நடித்த படங்கள் என்றாலும் சரி , அது ஏ அல்லது யூ /ஏ படமாகத்தான் இருக்கும், முழுக்க முழுக்க யூ படமாக வந்த முதல் எஸ் ஜே சூர்யா படம் இது . நெல்சன் வெங்கடேசன் இதுவரை மூன்று பட்ங்களை இயக்கி இருக்கிறார். ஒரு நாள் கூத்து (2016) , மான்ஸ்டர் (2019) , ஃபர்ஹானா (2023) மூன்று படங்களுமே மீடியாக்களின் வரவேற்பையும் , மக்களின் வரவேற்பையும் பெற்றவை
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1
- வில்லன் ஒரு கள்ளக்கடத்தல் காரன், வைரங்களை கடத்தி பிரெட்(ரஸ்க்) டில் மறைத்து வைத்துக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கு போலீஸ் வந்து விடுகிறது . உடனே வைரங்கள் உள்ள பிரெட் பாக்கெட்டை வீட்டில் ஒரு இடத்தில் ம்றைத்து வைத்து விட்டு ஜெயிலுக்குப்போய் விடுகிறான்
சம்பவம் 2 - நாயகனுக்கு சொந்த வீடு இல்லை ., இ பி ஆஃபீசில் வேலை செய்கிறார், இன்னும் திருமணம் ஆகவில்லை , பெண் கிடைக்கவில்லை. வரும் வரன்கள் எல்லாம் மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இல்லையா? என கேட்கிறார்கள் . இதனால் நாயகன் ஒரு சொந்த வீடு வாங்குகிறான்
சம்பவம் 3
- நாயகன் வாங்கிய வீட்டில் ஒரு எலி வந்து அவனை பாடாய் படுத்துகிறது . வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் நாசம் செய்து விடுகிறது . நாயகிக்கு பரிசாக வாங்கிய அஞ்சு லட்ச ரூபாய் மதிப்புள்ள சோபாவையும் கபளீகரம் செய்து விடுகிறது. நாயகன் பேசிக்கலி வள்ளலார் பக்தன். அதனால் எலியைக்கொல்லாமல் வீட்டை விட்டு துரத்த முடிவு செய்கிறான்
சம்பவம் 4 - வீட்டை விட்டு ஜெயிலுக்குப்போன வில்லன் ரிலீஸ் ஆகி வரும்போது தான் குடி இருந்த வீடு விற்கப்பட்டது என்பதை அறிகிறான். மறைத்து வைத்த வைரங்களை வீட்டில் புகுந்து கண்டு பிடித்து விடுகிறான், ஆனால் ஒரே ஒரு வைரம் மட்டும் மிஸ்சிங், அதன் மதிப்பு ரூ 30 லட்சம் . வைரம் இருந்த பிரட்டை எலி சாப்பிட்டிருக்கும் என்பதால் எலியைக்கொன்றூ வைரத்தை அடைய நினைக்கிறான்
இதற்குப்பின் என்ன நிகழ்ந்தது என்பது தான் மீதி திரைக்கதை
தமிழ் சினிமாவுக்கு இது போன்ற எலி கான்செப்ட் புதுசு. அதை கமர்ஷியலாகவும் , சின்னக்குழந்தைகளு ம் ரசிக்கும்படியும் சொன்ன விதத்தில் இயக்குநர் ஜெயிக்கிறார்
நாயகன் ஆக எஸ் ஜே சூர்யா . நாயகியுடனான ரொமான்ஸ் காட்சிகளிலு ம் சரி ,எலியைப்பிடிக்க முயலும்போதும் சரி மாறுபட்ட பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவர் டபுள் மீனிங் வசனம் பேசாமல் நடித்த முதல் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தி விட்டார்
நாயகி ஆக கண்ணிய மயில் ப்ரியா பவானி சங்கர் . கிளாமராக வந்து போகும் நடிகைகள் பலர் உண்டு , ஆனால் உடம்பு பூரா கவர் பண்ணி தன் உடல் அழகை மறைத்து முக அழகை மட்டும் வெளிப்படுத்தும் மிகச்சில நடிகைகளில் இவரும் ஒருவர் . இவரது சிரிப்பே மனதை வ்சீகரிக்கும் விதத்தில் உள்ளது
காமெடிக்கு கருணாகரன். இயல்பான நடிப்பு
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஐந்து பாடல்கள் , அதில் ஒரு மெலோடி சாங்க் சூப்பர் ஹிட் ,பிஜிஎம் கச்சிதம் கோகுல் பெனோய் ஒளிப்பதிவில் எலியின் பார்வையில் , மனிதர்களின் பார்வையில் என இரு வேறு கோணங்களில் கலர் காட்டி இருக்கிறார் வி ஜே சாபு , ஜோசஃப் எடிட்டிங்கில் இரண்டே கால் மணி நேரம் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கிறார்கள்
சபாஷ்
டைரக்டர்
( நெல்சன்
வெங்கடேசன்)
1ஒரு சாதாரண எலிக்கான இண்ட்ரோவைக்கூட பேய்ப்பட ரேஞ்சுக்கு 20 நிமிடங்கள் பில்டப் கொடுத்து காட்டிய வித்ம்
2 நாயகி நாயகனை செக் செய்ய தன் தோழியுடன் முதன் முதலாக நாயகனை மீட் பண்ண வரும்போது இவ தான் மேகலா என குழப்பும் காட்சியும் அதைத்தொடர்ந்து நடக்கும் காமெடியும்
3 நாயகிக்குப்பிடிக்கும் என நாயகன் சோபா வாங்க கடைக்குப்போவதும் எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை , 50,000 ரூபா ஆனாலும் பரவாயில்லை , சோபா வாங்கறோம் என கடைக்குள் போனதும் அஞ்சு லட்சம் ரூபா ரேட் சொல்வதும் அதைத்தொடர்ந்து நடக்கும் காமெடி களேபரங்களும்
செம ஹிட் சாங்க்ஸ்
1 தீராக்காதல்
2 தபக்குனு தாவித்தானே
3 அந்தி மாலை நேரம் ஆற்றங்கரை ஓரம் நிலா வந்ததே
ரசித்த வசனங்கள்
1 நம்மை எல்லாம் பார்த்தா எவன் வீடு தரப்போறான் ? சொந்த வீட்டைப்பார்த்தாலாவது தருவான்
2 வீட்டை சுத்திப்பார்க்கலாம், ஊரை சுத்திப்பார்க்கலாம், வீடு வீடா சுத்திப்பார்த்துட்டு இருக்கியே?
3 பிடிக்கும் , பிடிக்காதுனு சொல்ற ஆள் நான் இல்லைங்க, எது கிடைக்குதோ அது பிடிக்கும்
4 சந்தோஷத்துல இந்த சுத்து சுத்தறான், இதுதான் வீட்டை சுத்திப்பார்க்கறதோ?
5 வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்னு வள்ளலார் சொன்னாரு, இப்படி பூஜை , புனஸ்காரம்னு நெல்லை தீயில் போடச்சொல்றீங்களே?
6 மயிலாப்பூர் ஈ பி ஆஃபீஸ், நீங்க அங்கேயே வேலை பார்க்கறிங்க?
அது ஒண்ணும் அவ்ளோ கேவலமான வேலை இல்லீங்களே?
என்னால அப்படி உங்களை சொல்ல முடியலையே?
என்னங்க , இப்படி டமால்னு தூக்கிப்போட்டு மிதிச்சுட்டீங்க ?
இப்டி இருட்டுல இருந்தா எப்படி முகம் பார்க்கறது ?
8 வீட்ல எலித்தொல்லை தாங்காம இப்படி மொட்டை மாடில வந்து படுத்திருக்கேன்
என்னைக்காவது உங்க தொந்தரவு தாங்காம எலி மொட்டை மாடில போய் படுத்திருக்கா?
9 , டாக்டர் , தம்மாந்தூண்டு எலிக்கு அவ்ளோ பவரா?
தம்மாந்தூண்டு
எலியா? நாலே வாரத்துல குட்டி போடும்
10 நிச்சயதார்த்தத்தை அடுத்த வாரம் வெச்சுக்கலாமா?னு பொண்ணு வீட்ல கேட்கறாங்க என்ன சொல்றது ?
--------
என்னடா பேச்சையே காணோம் ?
நம்ம வாழ்க்கைலயும் நல்லது எல்லாம் நடக்குதுனு தெரியும்போது பெச்சே வர்லை
11 எந்த உயிரையும் கொல்லாம இந்த உலகத்துல ஒருத்தனால வாழவே முடியாது , மாட்டைக்கொல்லக்கூடாதுனு சொல்லிட்டு மனுசனைக்கொல்லும் உலகம் இது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1
எலியைப்பிடிக்க
நாயகன் படாத பாடுபடுகிறார். எலிப்பொறி ஒர்க் அவுட் ஆகவில்லை, அடுத்த ஸ்டெப்பாக கம் பேடு வைக்கலாமே? பசையில் ஒட்டிக்கொள்ளுமே? அதை ஏன் ட்ரை பண்ணவே இல்லை ?
2
நாயகன் இ பி ஆஃபீசில்
கிளர்க் ஆக ஒர்க்
பண்றார், ஆனால் நாயகி நாயகன்
சந்திப்புக்கு வழி செய்யும்
வகையில் நாயை பணி புரியும்
இடத்தில் கரண்ட் பிராப்ளம்
என இபி ஆஃபீசுக்கு ஃபோன்
வந்ததும் நாயகனை அங்கே
அனுப்புகிறார்களே? எந்த
ஊரில் இபி ஆஃபீசில் பணி
புரியும் கிளர்க் கரண்ட்
கனெக்சனுக்காக ஸ்பாட் விசிட் அடிக்கிறார்?
3 வீட்ல எலித்தொல்லை தாங்காம இப்படி மொட்டை மாடில வந்து படுத்திருக்கேன் என நாயகியிடம் ஒரு முறை சொல்லும் நாயகன் பூனை செத்துகிடக்கும் நிலையில் நாற்றத்தைத்தாங்க முடியாமல் கர்ச்சீப்பை முகத்தில் கட்டி சிரமப்பட்டு ஏன் பெட்ரூமில் தூங்க வேண்டும் ? ஏன் மொட்டை மாடிக்கு அன்று போல் போகக்கூடாது ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன்
யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குழந்தைகள் ,
சிறுவர்கள் ரசித்துப்பார்ப்பார்கள்.
படம் கொஞ்சம் ஸ்லோ
என்பதால் பெரியவர்கள் பொறுமை
இருந்தால் பார்க்கலாம் , ரேட்டிங்
3 / 5
0 comments:
Post a Comment