டிவிஎஸ் சுந்தரம் மோட்டார் கம்பெனியின் வாரிசு ஒருவரை நாயகன் ஆக்கி அவர்களே ஒரு படம் தயாரித்து இருக்கிறார்கள் . ஆல்ரெடி இதே பேட்டர்னில் பல மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்கள் வந்திருந்தாலும் ஒரு சராசரி த்ரில்லராகவே இது இருக்கிறது . அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன்கள் இர்ண்டு பேர். இருவரும் தனியார் ஹாஸ்பிடல் டாக்டர்கள் . இலவச மருத்துவ முகாம் நடத்தி பேஷண்ட்ஸ் பற்றிய டேட்டா பேஸ் கலெக்ட் பண்ணி வைத்துகொள்கிறார்கள் . பெரிய பெரிய பணக்காரர்களுக்கு முக்கியமான உறுப்பு தேவைப்படும்போது அது ஹார்ட்டோ , கிட்னியோ என்னமோ பொட்டிக்கடைல கடலை மிட்டாய் வாங்குவது போல அவர்களுக்கு மேட்ச் ஆகும் உடல் உறுப்பை ஆபரேசன் மூலம் பொருத்தி விடுகிறார்கள்
ஏழைகளிடம் கம்மி ரேட்டுக்கு கிட்னி தானம் பெற்று அதிக லாபத்துக்கு பணக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள் . அப்படிப்பட்ட ஏழைகள் கிடைக்காதபோது குறிப்பிட்ட ஆட்களைக்கடத்தி அவர்களைப்போட்டுத்தள்ளிவிட்டு தேவையான உறுப்பை எடுத்துக்கொள்கிறார்கள்
அதே மெடிக்கல் லைனில் இருக்கும் நாயகி , நாயகன் இருவரும் அந்த குற்றத்தை எப்படி மீடியாக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்கள் என்பதுதான் திரைக்கதை
நாயகன் ஆக நிக்கி சுந்தரம் , ஆள் ரகுவரன் , சத்யராஜ் போல ஹைட்டாக இருக்கிறார் என்பதுதான் ஒரே பிளஸ். நடிப்பு , முக பாவனை , உடல் மொழி எதுவும் வரவில்லை
நாயகி ஆக ஐஸ்வர்யா ராஜேஷ். பொருத்தமான பாத்திரம் , கச்சிதமான நடிப்பு . சார்லி ஒரு கேரக்டர் ரோலில் வருகிறார். கிஷோர் போலீஸ் ஆஃபீசர் ஆக வருகிறார். இவர்கள் மட்டுமே தெரிந்த முகங்கள்
112 நிமிடங்கள் மட்டுமே டைம் ட்யூரேஷன் வரும்படி ஷார்ட் அண்ட் ஷார்ப் ஆக எடிட்டிங்க் செய்து இருக்கிறார்கள் . பிருத்வி குமாரின் இசையில் பாடல் சுமார் ரகம் அனில் ஜான்சன் பிஜிஎம் சராசரி தரம் , வி என் மோகன் ஒளிப்பதிவு கச்சிதம்
செந்தா முருகெஷன் கதைக்கு எஸ் ஏ பாஸ்கரன் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் (எஸ் ஏ பாஸ்கரன்)
1 நாயகனுக்கு நடிப்பு வரவில்லை , ஆனால் அவர் தான் தயாரிப்பாளர் என்றதும் சாமார்த்தியமாக அவருக்கு அதிகம் க்ளோசப் ஷாட் வைக்காமல் சமாளித்தது
2 காமெடி டிராக்கில் பழைய ஜோக் தங்கதுரை அண்ட் கோவைக்களம் இறக்கி லைட்டா கலகலப்பு ஊட்டியது
3 க்ரைம் த்ரில்லர் கதையில் காதல் , டூயட் , மொக்கைக்காமெடி என அதிகம் இழுக்காமல் நேரடியாகக்கதைக்குள் போனது
ரசித்த வசனங்கள்
1 கரண்ட் கம்பத்துல பெருச்சாளி ஏறுகிற மாதிரி இருக்கு, அவங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது
2 காசு வந்தா காக்கா கூட கலர் ஆகிடும்
3 அவனை உக்காரச்சொன்னோமே? ஆனா அவன் உட்காரவே இல்லடா
அவன் உக்காந்துதான் இருக்கான், ஆனா ஆள் செம ஹைட். அதான் அப்படி நமக்குத்தெரியுது
4 அவரைப்பார்த்தா மூர் மார்க்கெட்ல வாங்குன காக்காக்குஞ்சு மாதிரி இருக்காரு , உன்னைப்பார்த்தா அமெரிக்கால பிறந்த சத்யராஜ் மாதிரி இருக்கே? அவரு உனக்கு மாமாவா? நம்ப முடியலையே?
5 கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் என்னதான் நல்லா ட்ரீட்மெண்ட் குடுத்தாலும் நம்ம ஆளுங்க பிரைவேட் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலைத்தான் நம்புவாங்க
6 என்ன , இவன் செல் ஃபோன் டவர் மாதிரி இவ்ளோ ஹைட்டா இருக்கான்?
7 இப்போ கிடைக்கற மருந்தெல்லாம் நோயோட முடிவா இருக்கறதில்லை , இன்னொரு புது நோயோட தொடக்கமா இருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி போலீஸ் ஸ்டெஷனில் புகார் பற்றிய விபர்ம் விசாரிக்க வ்ரும்போது அங்கே இருக்கும் வால் க்ளாக்கில் மதியம் 12 என காட்டுகிறது. 2 நிமிசம் தான் பேசுகிறார். கிளம்பும்போது லாங்க் ஷாட்டில் 3 மணி காட்டுகிறது
2 வில்லனான டாக்டர் நாயகனை பின்னந்தலையில் அடித்து அவர் மயக்கம் ஆனதும் ஆளை விட்டு புதைக்க சொல்கிறார். இவர் டாக்டர் தானே? தூக்க மருந்தோ, மயக்க மருந்தோ ஊசி மூலம் செலுத்தி விட்டு சேஃப்டியாக அனுப்பி இருக்கலாமே?
3 டியூட்டில இருக்கும் போலீஸ் டிபார்ட்ம்ண்ட் ரிவால்வர் மூலம் நாயகனை சுடுகிறார். இது அன் அஃபிஷியல் கேஸ். டிபார்ட்மெண்ட்க்கு என்ன கணக்கு சொல்வர்?
4 பொட்டாசியம் குளோரைடு என்ற மருந்தை டைரக்டாக ஊசி மூலம் செலுத்தக்கூடாது என்ற கருத்தை அடிக்கடி ரிப்பீட்டாக சொல்கிறார்களே? ஏன் ?
5 நாயகன் டாக்டர், ஃபாரீன் ரிட்டர்ன். போலீஸ் அவரைத்தேடுகிறது . படித்த நபரான அவருக்கு செல் ஃபோன் டவர் லொக்கேஷன் வைத்து ஆளை ட்ரேஸ் பண்ணிடுவாங்கனு தெரியாதா?
6 ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ எனில் ஓக்கே, ஆனால் நின்று கொண்டிருக்கும் ஆட்டோவில் அடியாள் அந்தப்பெண்ணுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிக்கும்போது அவள் தடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கா. இறங்கி ஓட வேண்டியதுதானே? அல்லது அந்த சீனை ஓடும் ஆட்டோவாக மாற்றி எடுத்திருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம் என்ற அளவில் தான் இருக்கிறது . ரேட்டிங் 2.25 / 5
Mei | |
---|---|
Directed by | SA Baskaran |
Screenplay by | SA Baskaran |
Story by | Sentha Murugesan |
Starring | Nicky Sundaram Aishwarya Rajesh |
Cinematography | VN Mohan |
Music by | Prithvi Kumar Anil Johnson (BGM) |
Production company | Sundaram Productions |
Release date |
|
Running time | 112 minutes |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment