பாரதிராஜா, கே பாக்யராஜ், மணிவண்ணன் , ஆர் பாண்டியராஜன் போன்ற புகழ் பெற்ற இயக்குநர்கள் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி வெற்றிகரமான நாயக, நாயகிகளாக உலா வரச்செய்தாலும் அவரவர் சொந்த வாரிசுகளை பிரகாசிக்க வைக்க முடியவில்லை .மனோஜ் பாரதிராஜா நடித்த தாஜ்மகால் , சாந்தனு பாக்யராஜ் நடித்த வேட்டியை மடிச்சுக்கட்டு , சித்து பிளஸ் 2 , எல்லாமே அட்டர் ஃபிளாப்கள் தான். அந்த வரிசையில் சின்னத்தம்பி , சந்திரமுகி மெகா ஹிட்களைக்கொடுத்த பி வாசு தன் வாரிசு சக்தி வாசுவை நாயகனாக அறிமுகப்படுத்திய படம் இது , ஆனால் ஃபிளாப் எல்லாம் ஆகவில்லை, மீடியமாக ஓடியது
என்னெத்த கன்னையா இப்படத்தில் பேசிய வரும் ஆனா வராது என்ற டயலாக் செம ஹிட் ஆனது .சிவகார்த்திகேயன் நடித்த அட்டர் ஃபிளாப் படமான சீமராஜா வில் வரும் ஆனா வராது என்ற பாடல் வரியே இடம் பெற்றது சந்தானத்தின் ஒன் லைன்கள் , சூப்பர் ஹிட் பாடல்கள் , வடிவேலு காமெடி டிராக் இவற்றை நம்பி எடுக்கப்பட்ட படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் , நாயகி கோடீஸ்வரக்குடும்ப குத்து விளக்கு ., இருவரும் ஒரே காலேஜில் படிக்க இருவருக்கும் காதல் வருகிறது, இவர்கள் இருவருக்கும் காதல் மலர்வதை விறு விறுப்பாக வித்தியாசமாக சொல்லி இருக்கிறார்கள் , பல காதலர்களுக்கு சில ஐடியாக்கள் கிடைக்கலாம்
நாயகியின் அம்மா தான் வில்லி . மும்பையில் இருக்கும் தன் அண்ணன் பாசக்காரர் கம் தாதா. அவர் மகனுக்கு தன் மகளை நிச்சயம் செய்து ஒரு சேஃப்டிக்கு மகளை அங்கே அனுப்பி விடுகிறார் வில்லி
நாயகன் மும்பை போய் நாயகியை எப்படிக்கரம் பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை
இதுவரை இது மாதிரி ஏழை - பணக்காரன் காதல் கதை ஒரு லட்சம் வந்திருக்கும். இந்தபப்டம் லட்சத்தி ஒன்று
நாயகன் ஆக வாசு வின் வாரிசு ஷக்தி பி வாசு இளமை கொப்பளீக்கும் முகம் , சுறு சுறுப்பு என கலந்து கட்டி ஜமாய்க்கிறார்
நாயகி ஆக புது முகம் கவுரி முன் ஜால் ரொம்ப சுமாரான முகம், சராசரி அழகு . நாயகனுக்கு பொருத்தம் குறைவு
நாயகியின் அம்மாவாக சுகன்யா . வில்லித்தனம் பெரிதாக எடுபடவில்லை . இவரது அண்ணனாக ராஜ்கிரண் நடிப்பு ஓக்கே ரகம்
வடிவேலு பல கெட்டப்களில் வந்து காமெடி செய்கிறார், சந்தானம் வழக்கம் போல் நாயகன் கூடவே வருகிறார்
ஆகாஷ் அசோக் குமார் ஒளிப்பதிவில் அப்பா அசோக் குமார் டச்சிங் தெரிகிறது . யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அப்பா இளையராஜா சாயல் வருகிரது .
சபாஷ் டைரக்டர்
1 வடிவேலு - என்னெத்த கன்னையா காம்போ காமெடி டிராக் , வடிவேலு - - மகாநதி சங்கர் தீவிரவாதி காமெடி கலக்கல் ரகம்
2 நாயகி நாயகனிடம் தன் பெயர் , ஃபோன் நெம்பர் கண்டுபிடிக்க க்ளூ குடுத்து சவால் விடும் காட்சியும் , நாயகன் கண்டு பிடிப்பதும் ஸ்மார்ட் ஒர்க்
செம ஹிட் சாங்க்ஸ்
1 உனது முகத்தை எப்போதும் மூடி வைக்காதே , எனது நெஞ்சத்தில் முள்ளைத்தைக்காதே ( ஹீரோ ஓப்பனிங் சாங் பஸ் கலாட்டா)
2 வளையல்காரங்களை
3 என்னைப்பிடித்த காதல் பேய்
4 விட்டால் சூரியனை \\
5 வாடி வம்புப்பெண்ணே
6 கடத்தறேன் நான் உன்னை
ரசித்த வசனங்கள்
1 சத்தம் போட்டுப்பேசக்கூடாதுனு தான் லைப்ரரில எழுதி வெச்சிருக்காங்க , சத்தம் போட்டுப்பாடக்கூடாதுனு எழுதி வைக்கலையே?
2 இதை எல்லாம் வெளில வெச்சுக்க , லைப்ரரில வேணாம்
யாரை வெச்சுக்கச்சொல்றாரு ?
3 நான் அடிச்சு நீ பார்த்ததில்லையே?
இல்ல, இப்போ அடி , பார்ப்போம்
4 வரும் , ஆனா வராது
5 தம்பி , நீங்க எம் ஜி ஆர் மாதிரி தக தகனு மின்றீங்க
யாரு ? நானு ? நீ பார்த்த ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சூப்பர் ஹிட் பாடல்கள் , சந்தானம் ஒன் லைனர்கள் , வடிவேலு அக்மார்க் அடியாள் காமெடி இவை மட்டும் போதும் என்பவர்கள் பார்க்கலாம், டைம் பாஸ் மூவி ரேட்டிங் 2.5 / 5
Thottal Poo Malarum | |
---|---|
Directed by | P. Vasu |
Written by | P. Vasu |
Produced by | P. Vasu |
Starring | Sakthi Vasu Gowri Munjal Rajkiran Sukanya Vadivelu Nassar Santhanam |
Cinematography | Akash Ashokkumar |
Edited by | KMK. Palanivel |
Music by | Yuvan Shankar Raja |
Production company | Sapphire Media & Infrastructure |
Release date |
|
Running time | 146 minutes |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment