தினத்தந்தி தொடங்கிய நாள் முதல் இன்று வரை படக்கதையாக வெளிவந்து கொண்டிருக்கும் கன்னித்தீவு ( சிந்துபாத்-லைலா) கதைக்கும் இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா ஒரு சயிண்ட்டிஸ்ட். நாயகன் சின்னப்பையனா இருக்கும்போதே குடும்பத்தைப்பிரிந்து ஒரு சமூக விரோத கும்பலிடம் வேலைக்குப்போய் விட்டார்.அவர் ஆராய்ச்சி செய்து மனிதன் மாயமாக மறைவது எப்படி என கண்டறியும் பிராஜக்ட்டில் தீவிரமாக இருக்கிறார். பல வருடங்களுக்கு முன் பிரிந்து சென்ற அப்பாவைத்தேடி நாயகன் கன்னித்தீவுக்கு செல்ல முயல்கிறான், ஆனால் அங்கே போக படகோட்டிகள் யாரும் தயாராக இல்லை . அந்தத்தீவுக்குச்சென்றவர்கள் உயிரோடு திரும்ப மாட்டார்கள் என்ற பயம்தான் காரணம்
காமெடியனின் தங்கை சின்ன வயதில் காணாமல் போய் விட்டாள் . அவள் முதுகில் ஒரு மச்சம் இருக்கும், அவளைத்தேடி காமெடியன் நாயகனுடன் சேர்ந்து கன்னித்தீவுக்குக்கிளம்புகிறான்
நாயகி ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர். சூடான செய்தி சேகரிக்க நாயகனுடன் இவரும் கன்னித்தீவு கிளம்புகிறார்
மூவரும் கன்னித்தீவுக்குப்போய் பின் உயிருடன் மீண்டார்களா?அவரவர் இலட்சியத்தை அடைந்தார்களா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஜெய் சங்கர் , வழக்கமாக சிஐடி சஙகர் கேரக்டரில் வருபவர் இதில் பல்லாண்டு வாழ்க எம் ஜி ஆர் மாதிரி நடிக்க முயன்றிருக்கிறார். தனி ரு மனிதனாக தீவில் உள்ள அப்பாவி மக்கள் அனைவருக்கும் அட்வைஸ் செய்வது எல்லாம் இவருக்கு செட் ஆகவில்லை
நாயகி ஆக ஆச்சரிய அறிமுகமாய் ராதிகா. ஸ்லிம் பியூட்டி ஆக மாடர்ன் டிரசில் வியக்க வைக்கிறார்
இன்னொரு நாயகி ஆக கன்னித்தீவின் ராணி ஆக நாயகன் மீது ஒரு தலைக்காதல் கொள்ளும் பெண்ணாக சீமா. உதட்டழகி . கவர்ச்சி நடிப்பு
காமெடியன் ஆக வெண்ணிற ஆடை மூர்த்தி , அவரது வழக்கமான டபுள் மீனிங் வசனங்கள் இல்லாதது ஆறுதல்
நாயகனின் அப்பாவாக சயிண்ட்டிஸ்ட் ஆக சுதர்சன். அந்தக்கால வில்லன். ஆள் செம ஹைட்
மெயின் வில்லன் கேரக்டர் டிசைன் மாங்காய் மடையன் மாதிரி வடிவமைக்கப்ப்ட்டிருப்பது ஏனோ? வில்லன் ரோல் ஸ்ட்ராங்க் ஆக இருந்தால்தான் நாயகன் அவனை ஜெயிக்கும்போது விசில் பறக்கும் ?
இளையராஜாவின் இசையில் நான்கு பாடல்கள் , சராசரி தான், ஒன்று கூட சூப்பர் ஹிட் இல்லை . 111 நிமிடங்கள் டைம் ட்யூரேஷன் பார்க்கும்போது புரொடியூசருக்கு நாமம் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது
டி ஆர் ராமண்ணாதான் இயக்கம், அவரது நெடுங்கால அசிஸ்டெண்ட் ஆன கனகசண்முகம்தான் திரைக்கதை . இவர் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் விஜய்காந்த்துக்கு அப்பாவாக நடித்தவர்
சபாஷ் டைரக்டர் ( டி ஆர் ராமண்ணா)
1 ஒவ்வொரு ஃபிரேமிலும் ராதிகா, சீமா என யாராவது குளித்துக்கொண்டே இருக்கிறார்கள்
2 கானக ராணி ஜைஜாண்டிக்கான சிஐடி ஆஃபீசரை லவ் பண்ணாமல் ஆல்ரெடி லவ்வர் இருக்கும் நாயகனை லவ் பண்ணுவது போல மனசாட்சியே இல்லாமல் திரைக்கதை எழுதி இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது
3 பத்து வயது சிறுவர்கள் ரசிக்கும் விதத்தில் மாயாஜால மந்திரக்காட்சிகள் அபத்தமாய் படமாக்கிய விதம்
சாங்க்ஸ்
1 ஏய் , ஒண்ணா ? ரெண்டா?
2 இது ஒரு புது வித
3 கந்தனே கண்டேனே காதில்
4 பொன்னான நேரம் ராஜா
ரசித்த வசனங்கள்
1 பேரு தான் கன்னித்தீவு , ஒரு கன்னியைக்கூடக்காணோம்
2 இது ஆண் எலும்புக்கூடா? பெண் எலும்புக்கூடா?
கண் கூடா எதுவும் தெரியலயே?
3 ராணி , மன்னிச்சுக்குங்க , திடீர்னு தூக்கத்துல உங்க கை பட்டதும் எதிரினு நினைச்சு உங்க மேல பாய்ச்ஞ்சுட்டேன்
அதுக்காக இப்படியா போட்டு உருட்றது , பொம்பள கைக்குக்கூடவா வித்தியாசம் தெரியாது ?
4 ராணி, இந்தத்தீவில் இருந்து தப்பிக்க எங்களுக்கு உதவி செய்ததுக்கு நன்றி
நன்றியை கொஞ்சம் தள்ளி நின்னு சொன்னா ஆகாதா? இவ்ளோ நெருக்கத்தில் தான் சொல்லனுமா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் அப்பாவைப்பிரிந்து 20 வருடங்கள் கழித்துத்தேடுவது ஏன்? அது வரை என்ன செய்தார்? காமெடியன் தங்கையைப்பிரிந்து 18 வருடங்கள் கழித்து திடீர் என தேடுவது ஏன் ?
2 படிப்பறிவே இல்லாத மக்களை நாயகன் அறிவுரை சொல்லி திருத்தப்பார்ப்பது எல்லாம் ஓவர் . வில்லன்கள் கூட்டத்தில் தனி ஆளாக சமாளிப்பதும் காதில் பூ
3 மாயமாய் மறையும் வித்தை என்பது நல்ல கான்செப்ட் , அதை வைத்து சுவராஸ்யமாய் திரைக்கதை எழுதாமல் வீணடித்து விட்டார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - நாயகிகக்ள் குளியல் காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டைட்டிலும் , கதைச்சுருக்கமும் நன்றாக இருந்ததால் பார்த்தேன் , டப்பாப்படம் . கமர்ஷியலாகவும் ஓடவில்லை , விமர்சன ரீதியாகவும் பாராட்டுப்பெறவில்லை . ரேட்டிங் 2 / 5
0 comments:
Post a Comment