மலையளத்தில் விசித்திரம் என்பதற்கு வழக்கத்திற்கு மாறான என்று அர்த்தம் . ஃபேமிலி மெலோ டிராமா மாதிரி படம் ஆரம்பித்து ஹார்ர் திரில்லர் மாதிரி திரைக்கதை பயணித்து கடைசியில் ரொமா்ண்டிக் த்ரில்லர் ஆக முடியும் . மாறுபட்ட படம் பார்க்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு அம்மா அவருக்கு ஐந்து மகன்கள் , ஐவரும் வெட்டாஃபீஸ்கள் . அவங்களால எந்தப்பிரயோஜனமும் இல்லை , வீட்டு வாடகை உட்பட எல்லா செலவுகளையும் அம்மாதான் கவனிக்கறார். அம்மாவுக்கு பர்த்டே பார்ட்டிக்கு கேக் வாங்கனும்னாக்கூட அம்மா கிட்டே தான் காசு வாங்கறாங்க .
பனை மரம் மாதிரி வளர்ந்திருந்தாலும் யாருக்கும் பொறுப்புக்கிடையாது. அவங்க குடி இருக்கும் வீட்டின் ஓனர் வாடகை பெண்டிங் ஆகுது , வீட்டைக்காலி பண்ணிடுங்க என கறாராகக்கூறுகிறார்.
இந்த சமயத்தில் அந்த அம்மாவின் சகோதரன் இறந்து விடுகிறான் . அவன் குடி இருக்கும் பங்களா இப்போது வெறுமையா இருக்கு . அப்படியே விட்டு விட்டால் பாழடைந்த பங்களாவாகப்போய் விடும், யாராவது குடி இருந்தால் புழக்காட்டம் உள்ள வீடாக இருக்கும் என சொந்தக்காரர்கள் கருதுகிறார்கள்
வேறு யாரும் குடி வராததற்குக்காரணம் அந்த வீட்டில் பேய் குடி இருப்பதாக வதந்தி இருப்பதால் தான் . அம்மாவின் சகோதரன் உயிருடன் இருந்த போது அவனது மகள் அந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என சிலரும் , மகள் யாரையோ காதலித்ததால் அது பிடிக்காமல் அப்பாவே மகளைக்கொலை செய்து விட்டார் என சிலரும் சொல்கிறார்கள்
ஆக மொத்தம் அந்த மகள் அங்கே ஆவியாக நடமாடுவதாக வதந்தி பரவி யாரும் அங்கே குடி வர பயப்படுகிறார்கள்
இந்த தருணத்தில்; அந்த அம்மாவும், ஐந்து மகன்களும் அந்த பங்களாவில் குடி ஏறுகிறார்கள் . இதற்குப்பின் அவர்களுக்கு நிகழ்ந்த திகிலான அனுபவம் , அந்த மகளின் ஃபிளாஸ்பேக் எல்லாம் சொல்வதுதான் படத்தின் மீதிக்கதை
படத்தின் நாயகி யாக மகள் மார்த்தாவாக கனி குஸ்ருதி மாறுபட்ட நடிப்பைத்தந்திருக்கிறார். அவரது லிவ்விங் பார்ட்னருடன் காதல் பார்வை பார்க்கும் இடங்கள் எல்லாம் கண்களே நடித்து முடித்து விடுகின்றன . கொலை செய்ய முயற்சிக்கும் காட்சிகளில் கண்களில் வெறி தாண்டவம் ஆடுகிறது
அம்மாவின் முதல் மகனாக ஷைன் டாம் சாக்கோ நடித்திருக்கிறார் . ஆர்ப்பாட்டமான நடிப்பு . இவர்தான் வில்லனோ என கேட்கும் அளவு சில இடங்களில் முத்திரை பதித்திருக்கிறார்
நாயகியின் அப்பாவாக அலெக்சாண்டர் எனும் கேரக்டரில் லால் சிறப்பான நடிப்பு சங்கமித்ரா என்னும் முக்கியமான ரோலில் கேடகி நாராயணன் நடித்திருக்கிறார் , அவர் வரும் காட்சிகள் கவிதை
அர்ஜூன் பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு மிக்க உறுதுணையாக இருக்கிறது ஜூபைர் மொகமத் , ஸ்ட்ரீட் அகாடமிக்ஸ் இருவரின் பின்னணி இசையும் திகில் ஊட்டுகின்றன
நிகில் ரவீந்திரனின் திரைக்கதையை திறம் பட அச்சு விஜயன் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் ( அச்சு விஜயன் )
1` அந்த ஜோடி முயல்களைக்காட்டும்போது வரும் திகில் இசை அதன் பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் இருப்பதைப்பறை சாற்றி விடுகிறது
2 ஐவரில் ஒருவரின் கேர்ள் ஃபிரண்ட் வீட்டுக்கு வந்து செயின் பறிகொடுத்து இந்த வீட்டில் ஒரு பேய் இருக்கு என பயந்தபடி ஓடும் காட்சி கலக்கல் ரகம்
3 நாயகியின் காதல் காட்சிகள் ஒரு கவிதை போல சொல்லப்பட்ட விதம்
4 இது பேய்க்கதை இல்லை என க்ளைமாக்ஸில் அழுத்தமாகப்பதித்த விதம்
ரசித்த வசனங்கள்
1 எனக்கு அஞ்சு பசங்க இருந்து என்ன பிரயோஜனம், எல்லாம் தண்டச்சோறுங்க , ஒரு பொண்ணு இருந்தா எனக்கு உறுதுணையா இருந்திருக்கும்
2 நமக்கு வேண்டியவர்கள் இறந்தாலும் அவர்கள் ஆன்மா நம்மைச்சுற்றி சில காலம் இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி தான் உயிருக்கு உயிராக காதலித்த நபரைத்தன் கண் எதிரே கொலை செய்தவரைப்பார்த்து கோபமே கொள்ளாமல் இருப்பது எப்படி | பழி வாங்க நினைக்காமல் இருப்பது ஏன் ?
2 வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது தன் கேர்ள் ஃபிரண்டை வீட்டுக்கு அழைப்பதுதான் உலக வழக்கம், வீட்டில் நான்கு சகோதரர்கள் இருக்கும்போது , அம்மாவுக்கும் தெரியாமல் ஏன் காதலியை அழைத்து வருகிறார் ?
3 நாயகியின் அப்பா இறந்து விட்டார் என்ற தகவல் தான் சொல்லபப்டுகிறது . அது கொலையாக இருக்கலாமோ என நாம் யூகிக்கக்கூட இடம் அளிக்க வில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கிளாமர் காட்சிகள் இல்லை , ஆனால் மைனர்கள் பார்க்கத்தேவை இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான படம் , ஹாரர் த்ரில்லர் ரசிகர்கள் , க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் என இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் படம் இது , ரேட்டிங் 3 / 5
Vichithram | |
---|---|
Directed by | Achu Vijayan |
Written by | Nikhil Ravindran |
Starring | Shine Tom Chacko Balu Varghese |
Cinematography | Arjun Balakrishnan |
Edited by | Achu Vijayan |
Music by | Jubair Muhammed[1] Street Academics |
Production company | Joy Movie Productions |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment