ஒரு நல்ல த்ரில்லர் படம் எடுப்பவர்கள் அதற்கான பிரமோஷன், போஸ்ட்ர் டிசைன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு புத்தகத்தின் உள்ளடக்கம் நன்றாக இருக்கும் அளவு அட்டைப்படம் டிசைன் ரொம்ப முக்கியம், அந்த அளவில் இடைவேளைக்குப்பின் பிரமாதமான த்ரில்லர் மோடில் பயணப்படும் இப்படத்தின் போஸ்டர் டிசைன் ஏதோ சாதா மெலோடி டிராமா லெவலில்; இருந்தது . இது மிகப்பெரும் பின்னடைவு. இதே படத்துக்கு பிரமோ மட்டும் நன்றாக செய்திருந்தால் இது செம ஹிட் ஆகி இருக்கக்கூடும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மற்றும் அவன் நண்பர்கள் ஒரு இசைக்குழு நடத்தி வருகிறார்கள் . அவர்கள் தங்கி இருக்கும் இடம் புறம்போக்கு நிலம், பல காலமாக அவர்கள் அங்கே தான் தங்கி வருகிறார்கள் . அங்கே தண்ணீர் பிரச்சனை இருக்கிறது . நெடுஞ்சாலைத்துறை அந்த இடத்தைகையகப்படுத்தப்போகிறது என்ற தகவல் வர நாயகன் தன் நண்பர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் தருகிறார்கள் , ஆனால் போலீஸ் அதை கவனிக்காமல் நாயகன் ஒரு முன்னாள் மிலிட்ரி வீரர் என்றும் பாராமல் அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறது
ஹை வே டிபர்ட்மெண்ட் அடுத்த நாள் ஆய்வுக்கு வரும் நிலையில் நாயகன் மற்றும் அவரது நண்பர்களை ஆக்ரமிப்பு அகற்றும் பணி தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது போலீஸ் , ஆனால் நாயகன் போலீசை அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் கடுப்பான போலீஸ் நாயகனை லாக்கப்பில் தள்ளி லாடம் கட்டி விடுகின்றனர் . அடுத்த நாளே நாயகன் இற க்கிறார்
இதனால் கோபம் அடைந்த நாயகனின் நண்பர்கள் நாயகனை லாடம் கட்டிய போலீஸ் ஆஃபீசரை அடித்துத்துவைக்கின்றனர் . இதனால் கோபம் ஆன போலீஸ் நண்பர்களை லாக்கப்பில் தள்ளி பழி தீர்க்கத்துடிக்கிறது
இந்த பரபரப்பான சூழலில் ஸ்டேஷனுக்கு புதிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்க வருகிறார் . இதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அடிபொலியான சமாச்சாரங்கள் தான் கலக்கலான பின் பாதி திரைக்கதை
முதல் பாதியில் விசாரணை ஸ்டைலில் போகும் திரைக்கதை பின் பாதியில் கலக்கலான சஸ்பென்ஸ் த்ரில்லராக மாறுகிறது
ஜாஃபர் இடுக்கி தான் நாயகன் , அவர் ஆரம்பக்கடக்காட்சிகளில் காமெடியாக நடிப்பை வழங்கி இருந்தாலும் போலீசால் அடித்துத்துன்புறுத்தப்படும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்
போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக வரும் இந்திரன்ஸ் தான் படத்தின் உயிர் நாடி . அவர் வந்த பின் திரைக்கதையின் போக்கே மாறுகிறது . பிரமாதமான நடிப்பு , அட்டகாசமான உடல் மொழி , இவர் நம்ம ஊர் வடிவேலு போல காமெடி , குணச்சித்திரம் என இரு வடிவங்களிலும் முத்திரை பதித்தவர் . விடுதலை பட சூரி போல போலீஸ் கெட்டப்பில் அசத்தி இருக்கிறார்
உஷ்மான் மரத்தின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஷமால் சுலைமான் . பின் பாதி காட்சிகளில் பல கூஸ்பம்ப் மொமெண்ட் ஸ்
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மிரட்டுகிறது கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு இருட்டுப்பகுதிகளில் பிரகாசிக்கிறது . பின் பாதி திரைக்கதை முழுக்க ஒரே இரவில் போலீஸ் ஸ்டேஷனிலேயே நடப்பதால் போர் அடிக்காமல் காமரா கோணங்களை அமைப்பதில் ஒளிப்பதிவாளருக்கு சவாலான வேலைதான் அப்பு பட்டாத்ரி . ஷைஜாஸ் இருவரும் தான் எடிட்டிங். பின் பாதியில் விறு விறுப்பு அதிகம் . அதே சமயம் முதல் பாதி ரொம்ப ஸ்லோ
சபாஷ் டைரக்டர்
1 விசாரனை தமிழ்ப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சாமார்த்தியமாக பின் பாதி திரைக்கதையில் அதை மறைத்த லாவகம்
2 போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டரின் கேரக்டர் டிசைனும் , இந்திரன்சின் நடிப்பும்
ரசித்த வசனங்கள்
1சோகத்தை எத்தனை பேர் கிட்டே ஷேர் பண்ன முடியும் ? ஆல்ரெடி எல்லார் கிட்டேயும் ஏகப்பட்ட சோகம் இருக்கு
2 இன்ஸ்பெக்டர் சார். ஒரு லேடி ஃபோன் பண்ணி ஸ்டேஷன் வரசோன்னாங்க
ஓஹோ, இப்போ அந்த லேடியே தான் வேணுமா?
3 கைல என்ன பேக் ?
சார் , இன்னைக்கு என் சம்சாரத்தோட் கல்யாண நாள்
அப்போ உனக்கு
அய்யோ எனக்கும்தான்
4 இந்தப்பொண்ணு எப்படி பழக்கம்?
இன்ஸ்டாக்ராம்ல
ஓ, முதல்ல வீட்டுக்குப்போனதும் நாமும் ஒரு இன்ஸ்டா அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிடனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஸ்டேஷனுக்கு வந்த காதல் ஜோடியிடம் செல் ஃபோனை பறிமுதல் செய்யும் போலீஸ் ஆஃபீசர் ஒருவர் அந்த காதல் காட்சியைப்பார்க்க ஆசைப்பட்டால் அப்போதே அந்த ஃபோனிலிருந்து தன் ஃபோனுக்கு ஃபார்வார்டு செய்து பார்த்திருக்கலாமே? தன்னிடமே ஃபோனை வைத்திருந்து ஏன் மாட்டிக்கொள்கிறார்?
2 போலீஸ்க்கு தொப்பை இருப்பது சகஜம், நிஜத்தில் 60% போலீஸ்க்கு தொப்பை இருக்கிறது , ஆனால் மிலிட்ரி வீரர்களுக்குமா தொப்பை இருக்கும் ? ஜாஃபர் இடுக்கி உட்பட மிலிடிரி யூனிஃபார்மில் பலருக்கும் தொப்பை இருப்பதாக காட்சி வருகிறது
3 போலீசால் கொல்லப்பட்ட நாயகன் உடலை ஏன் அடக்கம் செய்கிறார்கள் ? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேண்டும் , நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என ஏன் போராடவில்லை ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - வன்முறைக்காட்சிகள் அதிகம்,
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தரமான பின் பாதி போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளுக்காகவே பார்க்கலாம் ., ரேட்டிங் 2.75 / 5 இது திரை அரங்குகளில் வெளியானபோதும் சுமாராதான் கேரளாவில் ஓடியது , விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப்பெற வில்லை ஏன் எனத்தெரியவில்லை .
Jackson Bazaar Youth | |
---|---|
Directed by | Shamal Sulaiman |
Written by | Usman Marath |
Produced by | Zakariya Mohammed |
Starring | |
Cinematography | Kannan Patteri |
Edited by | Appu N. Bhattathiri Shaijas K. M. |
Music by | Govind Vasantha |
Production companies | Cross Boarder Camera Imagine Cinema. |
Distributed by | Central Pictures |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
Box office |
0 comments:
Post a Comment