Friday, July 07, 2023

JACK N JILL (2022) - மலையாளம் - செண்ட்டிமீட்டர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் ஃபிக்சன் காமெடி மெலோ டிரமா ) @ அமேசான் பிரைம்

 


  சயின்ஸ் ஃபிக்சன்  காமெடி மெலோ டிராமா  என விளம்பரப்படுத்தப்பட்டாலும்  இது  ரிவஞ்ச்  டிராமாவாக  பின்  பாதியில்  மாறுகிறது . இது  மலையாளம், தமிழ்  என  இரு  மொழிகளில்  வெளியாகி  உள்ளது . யோகி பாபு  மட்டும்  எக்ஸ்ட்ராவாக  சேர்க்கபப்ட்டு  அவர்  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  மட்டும்  தமிழில்  படம்  ஆக்கப்பட்டு மலையாள  வெர்சனுடன்  இணைக்கப்பட்டது . கமர்ஷியலாக  இது  சக்சஸ்  ஆகவில்லை . இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  தளத்தில்  வெளியாகி  உள்ளது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  சயிண்ட்டிஸ்ட். அமெரிக்காவில்  இவர்  கண்டுபிடிப்புகளுகு  அவார்டு  எல்லாம்  வாங்கியவர். லேட்டஸ்ட்  ஆக  இவர்  ஆராய்ச்சி  மனித  மூளையை  அதிகம்  பயன்படுத்த  வைப்பது . சராசரியாக  மனிதர்க்ள்  தங்கள்  மூளையை  10%  மட்டுமே  பயன்படுத்துகிறார்கள் . இவர்  ஆராய்ச்சி  வெற்றி  பெற்றால்  100%  பயன்படுத்துவான் 


இந்தியா  வந்தபின்  நாயகன்  தன்  ஆராய்ச்சிக்கூடத்துக்கு  ஒரு  அனாதையை  வர  வைத்து  அவர்  மூலம்  ஆராய்ச்சி  செய்கிறார். ஓர்ளவு தான்  வெற்றி  கிடைத்தது.


 அடுத்ததாக  பழசை  எல்லாம் தற்காலிகமாக  மறந்த  ஒரு  அம்னீஷியா  பேஷண்ட்  ஆன  நாயகியை  வைத்து  ஆராய்ச்சி  செய்கிறர். இந்த  ஆராய்ச்சி  நடக்கும்போது  நாயகிக்கு  தன்  பழைய  நினைவுகள் எல்லாம்  வருகின்றன. தன்  தங்கையை , அப்பாவைக்கொலை  செய்த  வில்லன் , வில்லனின்  மகன்  ஆகியோரை  எப்படி  பழி  வாங்குகிறார்  என்பதே  மீதிக்கதை 


நாயகன்  ஆக  காளிதாஸ்   ஜெயராமன். விஞ்ஞானி என்றாலே  தாடி  வைத்திருக்க  வேண்டும்  என்பது  எழுதப்படாத  இந்திய  சினிமா  விதி  போல . அவருக்குக்கொடுத்த  கதாபாத்திரத்தை  கச்சிதமாக  செய்திருக்கிறார்.


 நாயகியாக  அம்னீஷியா  பேஷண்ட்  ஆக மஞ்சு  வாரியர்  பின் பாதிரில்  வித  வித  கெட்டப்களில்  வருவது  , ஆக்சன்  சீக்வன்ஸ்களில்  பிளந்து  கட்டுவது , அப்பாவியாக  தன்னைக்காட்டிக்கொள்வது  என  இவருக்கு  நடிக்க  நல்ல  ஸ்கோப்  உள்ள  கேரக்டர் 


காமெடிக்காக  யோகிபாபு  தனி  டிராக்காக இல்லாமல்  கதையுடன்  பயணிக்கும்  அளவு  அவரது  கேரக்டர்  வடிவமைக்கப்பட்டாலும் ஒரு  இடத்தில்  கூட  சிரிப்பு  வரவில்லை 


நாயகன்  மீது  ஆசைப்படும்  கேரக்டரில்   ஷேலி  கிருஷ்ணன்  நடித்திருக்கிறார். இவர்  சும்மா  கிளாமர்  பொம்மை , அதிக  வாய்ப்பில்லை  நடிக்க 

நாயகியின் தங்கையாக  எஸ்தர்  அனில்    அழகிய  முகத்தோற்றத்துடன்  நன்கு  நடித்துள்ளார் 


நாயகனின்  அப்பாவாக  வரும்  நெடுமுடி  வேணு , நண்பனாக  வரும் பஷீல்  ஜோசப் இருவருக்கும்  அதிக  வாய்ப்பில்லை , சும்மா  வந்து  போகும்  கேரக்டர் 


 பாடல்கள் ஐந்தும்  கேட்கும்படி  இருக்கிறது . இசை  மூவர்  ஜாக்ஸ் பேஜாய் , கோபி  சுந்தர் ,  ராம்  சுரேந்தர் , பின்னணி  இசையில்  இன்னும்  கவனம்  செலுத்தி  இருக்கலாம் 


ரஞ்சித்தின்  எடிட்டிங்கில்  இரண்டே கால்  ,மணி  நேரம்  டியூரேஷன்  வரும்படி  ட்ரிம்  பண்ண்  இருக்கிறார்கள் 


முதல்  பாதி  ஒரு  கதை  பின்  பாதி  இன்னொரு  கதையோ  என  தோன்றும்படி  திரைக்கதை  அமைத்து  இயக்கி  இருக்கிறார்  சந்தோஷ்  சிவன் 



சபாஷ்  டைரக்டர்

1  முழுக்க்  முழுக்க  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  ஆன  சப்ஜெக்ட்  ஆன  இப்படத்தில்  காளிதாஸ்  ஜெயராம்  இடம்  நீங்க  தான்  ஹீரோ , சயிண்ட்டிஸ்ட்  வேற  அப்டினு  ஆசை  காட்டி  கால்ஷீட்  வாங்கியது 


2   நாயகன்  மீது ஆசைப்படும்  முறைப்பெண் ,   கூடவே  இருக்கும்  ஆங்கிலேயப்பெண்மணியான  அசிஸ்டெண்ட் ,   நாயகி , நாயகியின்  தங்கை  என  நான்கு  பெண்  கேரக்டர்கள்  இருந்தாலே  போதும்  என  நினைத்து  படத்தில்  எல்லாக்காட்சிகளிலும்  ஏதாவது  ஒரு  பெண்  இங்கிட்டும் அங்கிட்டும்  உலா வர  வைத்தது 


3  இது  ஒரு  காமெடிப்படம்  என  நம்பி  மக்கள்  ஏமாறட்டும்  என  யோகிபாபுவை  புக்  செய்தது   

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   இங்கிருக்கா? இங்கிருக்கா? அங்கிருக்கா? அங்கிருக்கா?  (இங்கன  உண்டோ இங்கன  உண்டோ  அங்கன  உண்டோஅங்கன  உண்டோ.) 


2   ஜாக்  அண்ட்  ஜில் 


3  கிம்  கிம்  கிம் நான்  தான்  என்  காதல்  தேவதை 

4  என்னென்ன  போதை  எங்கெங்கு  போதை 

5 கண்ணனின்  தேவ  கானம்


  ரசித்த  வசனங்கள் 


1 நாம   நம்  மூளையின்  10%  ,மட்டும்தான்  யூஸ்  பண்றோம், ஆனா  ஆர்ட்டிஃபிசிய;ல்  இண்ட்டலிஜென்ஸ்  100%  யூஸ்  பண்ணுது 


2  இந்தி


ய  சட்டம்  சொல்படி ஒவ்வொரு  நாளும்  106  அட்டெம்ப்ட்  ரேப்  ந்டக்குது

 இன்னும் ஒண்ணு  சேர்த்து  நாம  அதை  107 ஆக  மாற்றிடலாமா? 


3  உலகத்தில் 83%  பேரு  தன்னை  விட  அதிக  வயசுள்ள  பெண்ணைத்தான்  விரும்பறாங்க 


4  பசியா  இருக்கறவன்  எதைக்கொடுத்தாலும்  சாப்பிடுவான் 


5  விஞ்ஞானத்தால  பெண்ணின்  மனசில்  என்ன  இருக்கு?னு  மட்டும்  கண்டு  பிடிக்க  முடியாது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  டெட்  பாடியுடன்  இருக்கும்  சவப்பெட்டி , காலி  சவப்பெட்டி  வெயிட்  வித்தியாசம்  தெரியாதா? 


2 வில்லன்  ஒரு  மாங்கா  மடையனாகத்தான்  இருப்பான்  போல , நாயகியின்  தங்கை , அப்பா  என  இருவரை  நாயகி  கண்  முன்  கொலை  செய்து  விட்டு  நாயகியை  அசால்ட்டாக  உயிருடன்  விட்டு  விடுவது  ஏன் ? சாட்சி  ஆக  மாறிவிடுவாள் , பழி  வாங்குவாள்  என  தெரியாதா? 

3  நாயகியின்  உடன்  பிறவா  தஙகையிடம்  வில்லன்  உனக்கு  18  வயசாகட்டும், உன்னையே  கல்யாணம்  பண்ணிக்கறேன்  என  லூஸ்  மாதிரி  லூஸ்டாக்  விடுகிறான். அவள்  தன்  அப்பாவிடம்  சொல்லி  விடுவாள்  என  தெரியாதா? 

4  வில்லனின்  மகன்  வில்லனை  விட  பெரிய  கிறுக்கனா  இருக்கான்,  எப்போப்பாரு  தன்  வாய்க்குள்  பிளேடு  வெச்சிருக்கான், படம்  செம  பிளேடு  என  சிம்பாலிக்காக  சொல்றானா? 

5  அயர்ன்  லேடி  மாதிரி  நாயகி  அயர்ன்  பாக்ஸ்  லேடி  போல , எப்போபாரு  கைல  ஒரு  அயர்ன்  [பாக்ஸ்  உடனே  சுத்துது. அதால தான்  வில்லன்களை  அடிக்குது . கஷ்டம் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வன்முறை  காட்சிகள் உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு  டப்பாப்படம். அப்புறம்   எதுக்கு  தண்டமா  இவ்ளோ   பெரிய  விமர்சனம் ? யாம் பெற்ற  துன்பம் பெறக்கூடாது  இவ்வையகம்  பாலிசி  தான் ., ரேட்டிங்  1.5 / 5 




Jack N' Jill
Directed bySantosh Sivan
Produced by
  • Gokulam Gopalan
  • Santosh Sivan
  • M. Prashanth Das
Starring
CinematographySantosh Sivan
Edited byRenjith Touchriver
Music by
Production
companies
Sree Gokulam Movies
SEWAS Films
Distributed byJoy Movie Productions
Santosh Sivan Productions
Release date
20 May 2022
CountryIndia
LanguageMalayalam

0 comments: