1977ல்நடந்த தேர்தலில் பிரச்சரப்பாடல்களாக இப்படத்தின் இரண்டு பாடல்கள் உபயோகப்படுத்தப்பட்டன ராதா சலுஜா எம்ஜி ஆர் உடன் ஜோடி சேர்ந்து நடித்த கடைசிப்படம் இது .வசனம் எழுதியவர் முன்னாள் எம் எல் ஏ காளிமுத்து
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அம்மா அந்த கிராமத்துப்பெண்ணான கங்கா வின் குடும்பத்தாருக்கு நிறைய உதவிகள் செய்ததால் கங்காவின் அப்பா நாயகனின் அம்மாவிடம் என் மகள் தான் உங்கள் வீட்டு மருமகள் என வாய் மொழி உறுதி கொடுக்கிறார். கங்கா வ்ளர்ந்து பெரிய பெண் ஆனதும் தன் அந்தஸ்துக்கு ஏற்ற படித்த ஒரு தறுதலையைக்காதலித்து அவனிடம் தன்னை இழக்கிறாள்
இந்த விஷயம் தெரியாத நாயகன் வீட்டார் நாயகனுக்கு கங்காவை நிச்சயம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தும்போது நாயகன் ஒரு பட்டிக்காடு என கங்கா நாயகனை அவமானப்படுத்தி விடுகிறாள் . உடனே நாயகன் பட்டணம் வந்து ஒரு படித்த பெண்ணை திரும்ணம் செய்து வாழ்வதாக சவால் விடுகிறார்
கங்காவை ஏமாற்றிய அந்த டுபாக்கூர் காதலன் கங்காவை ஒரு சிவப்பு விளக்குப்பகுதியில் விற்று விடுகிறான். போலீஸ் ரெய்டு வ்ரும்போது கங்கா காப்பாற்றப்பட்டு ஒரு அனாதை விடுதியில் சேர்கிறாள்
பட்டணம் வந்த நாயகன் கங்காவை சந்தித்து அவளை தன் தங்கையாக ஏற்றுக்கொண்டு தன்னுடன் அழைத்து செல்கிறான். கங்காவை ஏமாற்றிய டுபாக்கூர் காதலனின் தங்கை தான் மேனகா என்பது தெரியாமலேயே ,மேனகா நாயகனைக்காதலிக்கிறாள். இதற்குப்பின் நாயகன் - மேனகா திருமணம் , கங்கா - டுபாக்கூர் லவ்வர் மேரேஜ் நடந்தது எப்படி ? என்பதே மீதி திரைக்கதை
இந்தக்கதையைத்தான் பட்டி டிங்கரிங் பண்ணி கமல் சகலகலாவல்லவன் என்ற மெகா ஹிட் படத்தில்நடித்தார்
நாயகன் ஆக எம் ஜி ஆர். கடைசி 3 ஆண்டுகளில் எம் ஜி ஆர் நடித்த படங்களில் ஏனோ அவருக்கு விக் சரியாக பொருந்தவில்லை . முக அமைப்பை விட பெரிய விக் எடுபடவில்லை , ஆனால் எம் ஜி ஆர் ரசிகர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை
நாயகி ஆக ராதா சலூஜா அழகிய முகம் .நாயகன் உடனான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது
கங்காவாக வெண்ணிற ஆடை நிர்மலா, டுபாக்கூர் லவ்வர் ஆக விஜயகுமார் . ஒரு ஷாக் சர்ப்பரைஸ் ஆக எம் என் நம்பியார் நல்லவராக இதில் வருகிறார்
காமெடி டிராக்கிற்கு தேங்காய் சீனிவாசன் , ஆல் இன் ஆல் அருணாச்சலம் ஆக இவர் வருவதை பட்டி டிங்கரிங் பண்ணித்தான் வைதேகி காத்திருந்தாள் ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டர் உருவாகி இருக்கக்கூடும்
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 6 பாடல்கள் , அவற்றில் 3 சூப்பர் ஹிட்
இரண்டரை மணி நேரம் ஓடும் அளவு ட்ரிம் செய்யப்பட்டு இருக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 கிராமம் என்றால் கேவலம் இல்லை ,நகரத்தாரை விட கிராமத்தான் குறைந்து போய் விட வில்லை என்ற கருத்தை வலியுறுத்திய வித்ம
2 பெற்றோரின் மன வருத்தத்தில் நிகழும் காதல் திரும்ணம் முறையானது இல்லை , அவர்கள் சம்மதத்துடன் திருமணம் நிகழவேண்டும் என்று கருத்து சொன்னது
செம ஹிட் சாங்க்ஸ்
1 இது நாட்டைக்காக்கும் கை , நம் வீட்டைக்காக்கும் கை , இந்தக்கை நாட்டின் நம்பிக்கை ( ஹீரோ ஓபனிங் சாங் )
2 அன்புக்கு நான் அடிமை ,தமிழ்ப்பண்புக்கு நான் அடிமை ( பிறந்த நாள் வாழ்த்துப்பாடல் )
3 வெல்கம் ஹீரோ , ஹேப்பி மேரேஜ் , காஷ்மீரில் தேன் நிலவு ( ஹீரோ வை வாழ்த்திப்பாடுதல்)
4 என் யோக ஜாதகம், நான் உன்னைச்சேர்ந்தது ( ஹீரோயின் பாடும் ஹீரோ துதிப்பாடல் )
5 இதயத்தில் இருந்து இதழ்கள் வரை , அது ஏதோ ஒரு வகைப்புதிய கலை ( டூயட்)
6 புதுமைப்பெண்கள்
ரசித்த வசனங்கள்
1 மனிதன் செய்யக்கூடிய உச்சபட்சத்தவறுகளை மீறி தவ்று செய்யக்கூடாது , அவனை அழித்து விடும்
2 மத்தவங்களுக்காக தியாகம் செய்துதான் எனக்குப்பழக்கம். மத்தவங்க தியாகம் செய்ததால எனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்க நான் ஒத்துக்க மாட்டேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஏழைப்பெண்ணை சிவப்பு விளக்கு ஏரியாவில் விற்பது சரி . பணக்காரப்பெண்ணை வைத்து அப்பாவை மிரட்டி பணம் சம்பாதிக்காமல் மடத்தனமாக 3000 ரூபாய்க்கு யாராவதுவிற்பார்களா ?
2 கிராமம்தான் உயர்ந்தது என வாதிடும் நாயகன் கிராமத்தில் பிறந்த பெண்ணைத்திருமணம் செய்து வாழ்வு கொடுக்காமல் ஏன் நகரம் வந்து நகரப்பெண்ணை மணக்க வேண்டும் ? கிராமத்தில் படித்த பெண் இல்லையா? இவ்ருக்கு இருக்கும் வசதிக்கு இவ்ரே படிக்க வைக்கலாமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கதைக்கரு அரதப்பழசு என்றாலும் எம் ஜி ஆர் ரசிகர்கள் மட்டும் பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது . ரேட்டிங் 2.25 /. 5
0 comments:
Post a Comment