ஜானி மேரா நாம் என்ற ஹிந்திப்படம் 1970 ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது , அதன் அஃபிசியல் ரீமெக் தான் இது கன்னடத்தில் அபூர்வ சங்கமா என்ற டைட்டிலில், தெலுங்கில் எதிருலேனி மனுஷி என்ற டைட்டிலிலும் வெளியானது . ஒரிஜினல் ஹிந்திப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஃபிலிம்ஃபேர் விருதைப்பெற்றது 1970 ல் வெளியான ஹிந்திப்படங்களில் அதிக வசூலைப்பெற்ற படம் என்ற பெருமையை ஹிந்தி ஒரிஜினல் பதிப்பு பெறுகிறது . சிவாஜி நடித்த ஸ்டைலிஷ் ஆன படம் இது . சந்திரபாபு 3 வேடங்களில் நடித்த படம் இது
மேஜிக் ரைட்டர் அமரர் சுஜதா இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஏ சி திருலோகச்சந்தர் தான் இயக்குவதாக இருந்தது சில தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொண்டதால் சி வி ராஜேந்திரன் இயக்கினார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் . நாயகன் -ன் சின்ன வயதில் அப்பா கொலை செய்யப்படுகிறார். நாயகனின் சகோதரன் அப்பாவைக்கொன்ற கொலைகாரனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடுகிறான்
பல வருடங்கள் கழித்து கரண்ட் சிச்சுவேஷனில் நாயகன் ஒரு திருடனாக இருக்கிறார். கடத்தல் கும்பலில் நாயகி பணி புரிகிறார். தன் அப்பாவைப்பற்றிய விபரங்கள் அறியவே அவர் அக்குழுவில் சேர்ந்து பணியாற்றுகிறார்.
வைரங்கள் கடத்துவது தான் இவரது முக்கிய வேலை . நாயகனும் நாயகியுடன் சேர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். இதில் நாயகன் நிஜத்தில் ஒரு போலீஸ் ஆஃபீசர் . கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்கத்தான் இப்படி அவர்கள் கூட்டத்திலேயே அடியாளாக சேர்கிறார்
நாயகன் - நாயகி காதல் வெற்றி பெற்றதா? நாயகனின் சகோதரனைக்கண்டு பிடித்தாரா? நாயகி தன் அப்பாவைக்கண்டு பிடித்தாரா? என்பதெல்லாம் பின் பாதி திரைக்கதை
நாயகன் ஆக சிவாஜி . ஓப்பனிங் ஷாட்டிலேயே கோட் சூட் டை என செம ஸ்டைலிஷாக இருப்பார். அப்போதே இவரா திருடர் என்ற டவுட் ஆடியன்ஸ் மனதில் எழுந்திருக்கும். அதே போல பதியிலேயே ட்விஸ்ட் ஓப்பன் ஆகி விடுகிறது
நாயகியாக ஜெ டூயட் பாடுவதற்கு மட்டும் இல்லாமல் நடிப்புக்கும் ஸ்கோப் உள்ள கேரக்டர் . ஜானகிராமன், பட்டாபி ராமன், சீதாராமன் என மூன்று மாறுபட்ட கெட்டப்களில் சந்திரபாபு . ஏனோ பெரிதாக இவர் கேரக்டர் பேசப்படவில்லை
எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் ஐந்து பாடல்களுமே செம ஹிட்டு . மஸ்தான் தாரா வின் ஒளிப்பதிவில் வெளிப்புறப்படக்காட்சிகள் அருமை . ஒரு சீன் கூட போர் அடிக்காத விறு விறுப்பான திரைக்கதை
சபாஷ் டைரக்டர்
1 நாயகனுக்கான காஸ்ட்யூம் டிசைன் ம்ற்றும் நாயகனின் ஸ்டைலிஷ் நடிப்பு
2 ஹிந்தி ஒரிஜினலில் ஆறு பாடல்கள் என இருந்ததை ரீ மேக்கில் ஐந்தாகக்குறைத்தது
3 படத்தின் டோட்டல் டியூரேஷன் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாக இருப்பது போல எடிட்டிங்கில் ட்ரிம் செய்தது
செம ஹிட் சாங்க்ஸ்
1 நீ வர வேண்டும் என எதிர்பார்த்தேன்
2 கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணாலப்பார்த்து துடிப்பது நானா?
3 இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு, என்னை விட்டு வேறு யாரு உன்னைத்தொடுவார்?
4 நான் உயிருக்குத்தருவது விலை , என் உடம்பு உனக்கு ஒரு கலை
5 கங்கையிலே ஓடவில்லையோ எங்கள் கண்ணன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்ஸ் சீனில் கண்ணன் கோயிலில் நகைகளை மாற்ற ஒரு மணி நேரம் போதும், வில்லன் ஏன் லூஸ் மாதிரி அதிகாலை நான்கு மணி வரை காத்திருந்து வெளியேறினால் போதும் என முடிவெடுக்கிறான் ? கோயில் அர்ச்சகரைக்கையில் போட்டுக்கொண்டார் . அப்போ கோயிலைத்திறப்பதும் அவர் வசம் தானே?
2 மைனர் குற்றவாளிகள் குற்றம் செய்தால் சிறை தண்டனை இல்லை , சீர் திருத்தப்பள்ளி தான், ஏன் ஓப்பனிங் ஷாட்டில் அந்தப்பையன் பயந்து ஓடுகிறான் ?
3 வில்லனை மயக்க முஸ்லீம் பெண் பர்தா அகற்றி அரை குறை ஆடையுடன் ஆடுவதை சென்சார் எப்படி அனுமதித்தது ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான விறுவிறுப்பான மசாலாப்படம் , ஸ்பை ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் , சிவாஜி ரசிகர்கள் , சந்திரபாபு ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் , ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment