சிவாஜி கணேசன் வில்லனாக நடித்த முக்கியமான இரு படங்களில் இதுவும் ஒன்று . ஒரு பேட்டியில் நான் நடித்த படங்களில் என்னால் மறக்க முடியாத படம் திரும்பிப்பார் என்றாராம், கலைஞரின் கதை , வசனத்தில் உருவான இப்பட்ம் கமர்ஷியலாகவும் சக்சஸ் ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லனின் பெற்றோர் இறந்து விட்டனர் . வில்லனுக்கு ஒரு அக்கா , இன்னொரு அக்காவின் மகள் மூவர் மட்டுமே. அக்கா மகள் கல்லூரியில் படிக்கிறார். அக்கா தான் அந்த குடும்பத்துக்கு இன்சார்ஜ். பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் நல்லபடி வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று பெற்றோர் இறக்கும் முன் அக்காவிடம் சத்தியம் வாங்கி இறந்ததால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் கண்ணும் கருத்துமாக தன் தம்பியையும், அக்கா மகளையும் பார்த்துக்கொள்கிறார்
வில்லன் ஒரு பெண் பித்தன் , கெட்டவன் .வில்லனுக்கு ஒரு இடத்தில் பெண் பார்க்கிறார்கள் . திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணம் ஆகும் முன்பே அந்தப்பெண் பாமாவுடன் வில்லன் நெருங்கிப்பழகுகிறான். ஆனால் திருமண நாள் அன்று எஸ்கேப் ஆகி விடுகிறான், இதனால் திருமணம் நிற்கிறது
நாயகன் ஒரு ரைட்டர் . புர்ட்சிகரமான எழுத்துக்கு சொந்தக்காரர்.வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்டு பின் திருமணம் நின்றதே அதே பெண் பாமாவுடன் ரைட்டர் பாண்டியனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது
வில்லனுக்கு இது பொறுக்கவில்லை . பாமாவுடன் தனிமையில் சந்தித்து அன்று ஏன் திருமண தினத்தில் காணாமல் போக நேரிட்டது என பொய்யாக ஒரு கதை சொல்லி பாமாவை கன்வின்ஸ் செய்து பாமாவுக்கும், நாயகனான ரைட்டர் பாண்டியனுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்துகிறான்
வில்லன் பாமாவுடன் பட்டணம் போய் ஊரெல்லாம் சுத்திப்பார்த்து விட்டு பின் பாமாவை நைசாக கழட்டி விட்டு ஓடி வந்து விடுகிறான்
இங்கே நாயகன் ஆன ரைட்டர் பாண்டியன் மனம் உடைந்து போகிறான். ஒரு பயணத்தில் வில்லனின் அக்கா நாயகனான ரைட்டர் பாண்டியனை ச்ந்தித்து ஆறுதல் வார்த்தை கூறுகிறாள் . இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது / வில்லனின் அக்கா தன் அக்கா மகள் ஆன காலேஜ் மாணவியிடம் ரைட்டர் பாண்டியனை அறிமுகப்படுத்துகிறாள்
காலேஜ் மாணவி ரைட்டர் பாண்டியனை விரும்புகிறாள் ., இதை அறிந்து அதிர்ச்சி ஆன வில்லனின் அக்கா பின் மனதை தேற்றிக்கொண்டு இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கிறாள்
வில்லனுக்கு இது பிடிக்கவில்லை. தன் அக்காள் மகளை திரும்ணம் செய்து கொள்ள நினைத்த போது எங்கிருந்தோ வந்தவன் அந்த வாய்ப்பைத்தட்டிப்பறித்து விட்டானே என கோபம் கொண்டு ரைட்டர் பாண்டியனை கொல்ல முயற்சி செய்து தோற்கிறான்
இனி ரைட்டர் இங்கே இருந்தால் ஆபத்து என வில்லனின் அக்கா தம்பதியை சென்னையி குடி வைக்கிறாள் . வில்லன் ரைட்டர் பண்டியனை ஒரு திருட்டுக்கேசில் மாட்ட வைத்து 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கித்தருகிறான்
ரைட்டர் பாண்டியனின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அவர் மனைவியை வில்லன் அடைய நினைக்கிறான்
இறுதியில் வில்லன் திருந்தினானா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
வில்லனாக சிவாஜி கணேச்ன். வளர்ந்து வரும் காலத்தில் இந்த மாதிரி ஒரு நெகடிவ் ஷேடு உள்ள கேரக்டரில் நடிக்க தில் வேண்டும். பிரமாதமான நடிப்பு
கலைஞரின் வசனத்தில் சமூக அவலங்கள் எதுகை மோனை வார்த்தை ஜாலங்களில் வெளிப்படுய் தருணங்கள் அருமை
ஜி ராமநாதன் இசையில் 12 பாடலக்ள் , அவற்றில் 6 பாடல்கள் ஹிட் . எல்லாம் 2 நிமிடங்கள் ஓடும் சின்ன சின்ன பாடல்களே. பாடல்கள் பாரதிதாசன் + கண்னதாசன்
டி ஆர் சுந்தரம் தான் இயக்கம் இரண்டரை மணி நேரம் பட்ம் ஓடுகிறது . ஸ்லோ மெலோ டிராமா
சபாஷ் டைரக்டர்
1 வில்லனான சிவாஜிக்கு கதை வசனகர்த்தாவான கலைஞரின் ஹேர் ஸ்டைல் , மீசை என கெட்டப் ரெடி பண்ணிய துணிச்சல் அருமை
2 பிற்காலத்தில் நடக்கப்போவதை முன் கூட்டியே அறிந்தோ என்னவோ கலைஞரின் வசனங்கள் தெரிந்தோ தெரியாமலோ அவரது குடும்ப அரசியலையே தாக்கிய விதம்
ரசித்த வசனங்கள்
1 ஒரு பொண்ணு சிவப்பா? கறுப்பா? என கேட்க வேண்டாம் , இனிமேல் எலுமிச்சை நிறமா? நாவல்பழநிறமா? இரண்டும் கலந்த நிறமா? என கேட்கலாம்
2 பணம் இருக்கு ஜாலியா வாழாம ஏன் இப்படிப்பண்றே? [பணம் , சுகம், வாழ்வு இவை எல்லாம் மூன்று எழுத்துதானே?,
அன்பு , பண்பு ,தொண்டு இவை கூட மூன்று எழுத்துதானே?,
3 விடக்கூடாது
ஆமா, அவனை வெளியே விடக்கூடாது
அதில்லை , நான் அவனிடம் அடி வாங்கிய விஷயத்தை வெளியே விடக்கூடாது
4 பெண்ணைப்பிடிசிருக்கா?னு மாப்ளை கிட்டே கேளுங்க
வாழைப்பழத்தை பிடிக்குமா?னு குரங்கு கிட்டே கேட்போமா?
5 இந்த புத்தகத்துலயே ரொம்பப்பிடிச்சது அட்டைப்படம்தான்
6 என் எக்சாம் நெம்பர் 1624
அட, என் வயசும் 24
என் வயசு 16
7 புத்தகம் பப்ளிஷ் பண்றோம், வர்ற வருமானத்துல ரைட்டரான உனக்கு கால் , பப்ளிஷரான எனக்கு முக்கால் பங்கு
அய்யா , அப்போ எனக்கு ?
உனக்கு அறை தான் . பளார் .
8 மான் தோலில் வேங்கை அதிக நாள் வாழ முடியாது , அதையும் வேட்டை ஆட ஒரு வேடன் வருவான்
9 பேசத்தெரிந்த பெண்களையே பேசா மடந்தை ஆக்கிய இந்த சமூகம் ஒரு ஊமையை சும்மா விட்டு விடவா போகிறது ?
10 குடும்பத்துக்குள்ளேயே தலைவர் பதவி ரொட்டேஷன்ல போகுதா?/ உள் குத்து வசனம் கலைஞர் அட்டாக்கிங் கலைஞர் ஃபேமிலி இட் செல்ஃப் )
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கல்யாணத்தன்னைக்கு வீட்டை விட்டு ஓடி விடலாம் என வில்லன் கூறுவதை நாயகி ஏற்றுக்கொள்வது எப்ப்டி ? அதே மேடையில் நீங்கள் தாலி கட்டுங்கள் என சொல்லி இருக்கலாமே?
2 வில்லனின் அக்கா தன் அக்கா மகளிடம் தன் காதலனை அறிமுகப்படுத்தும்போதே இவர் என் காதலர் அல்லது வருங்காலக்கணவர் என அறிமுகப்படுத்தி இருந்தால் சிக்கலேவந்திருக்காதே?
3 வில்லன் தன் சொந்த வீட்டிலேயே அக்கா மகளின் கணவரைக்கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால் மடத்தனமான முயற்சி. துப்பாக்கியால் சுடுகிறார். குறி தவறுகிறது . ஓடுகிறார். அக்காவிடம் மாட்டிக்கொள்கிறார். இதற்குப்பதில் வேறு
4 வில்லன் தன் அடியாட்கள் கொள்ளை அடித்துத்தந்த வைர நெக்லசை சென்னை போக இருக்கும் தன் அக்கா சூட்கேசில் மறைத்து வைக்கிறான்/. நாயகன் வீட்டுக்கு அக்கா போனதும் போலீசுக்கு தகவல் சொல்லி மாட்டி வைக்க பிளான். ஆனால் அக்கா சென்னை சென்ற பின் தானே அதை செய்ய வேண்டும் ? இப்போதே சென்னை போலீசுக்கு ஃபோன் பண்ணி பாண்டியன் வீட்டை செக் செய்ய சொல்லுங்கள் என முந்திக்கொள்கிறாரே?
5 வில்லனின் அக்கா மகள் கர்ப்பமாக இருக்கிறாள் . கணவன் ஜெயிலில் இருக்கிறான்., அதனால் படித்த பெண்ணான அவள் ஒரு ஆஃபீசில் வேலை செய்கிறாள். அங்கே வேலை போகிறது , அடுத்ததா அதே போல வேறு ஆஃபீசில் அதே போல் டைப்பிஸ்ட் ஆக சேராமல் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்ணாக சேர்வது ஏன் ? சும்மா இரக்கத்தைப்பெறவா?
6 வில்லன் தனியே போய் உஷாவை பெண் கேட்கிறான். தன் அக்காவை அனுப்பி பெண் கேட்கச்சொல்வதுதானே முறை? இவ்ரே ஒரு மொள்ள மாரி , இவரு போய்க்கேட்டா யார் பொண்ணு கொடுப்பா? அவருக்குத்தெரியாதா?
7 அதிகாலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுப்பி விடு என ராதாவிடம் சொல்லும் பாண்டியனின் அப்பா வில்லனின் சதியால் கடிகாரத்திருப்பலால் மிட் நைட் 12 மணிக்கே எழுந்து கிளம்புகிறார். நைட் 9 மணிக்குப்படுத்த ஒருவர் 12 மணிக்கு எழுந்தால் அவருக்கு குத்து மதிப்பாக கணக்குத்தெரியாதா இப்போதுதான் படுத்தோம் என டவுட் வராதா?
8 வில்லனைப்பழிக்குப்பழி வாங்கத்துடிக்கும் பாமா வில்லனிடம் 2 பக்கம் டயலாக் பேசிட்டு கத்தியால் குத்த வருகிறாள், வில்லன் எஸ்கேப் அகி வ்டுகிறான்., ஒரு குத்து குத்திட்டு பின் டயலாக் பேசி இருக்கலாம்
9 ஜெயில் கைதியாக இருக்கும் ரைட்டர் பாண்டியன் ஜெயிலில் தாடியுடன் இருக்கிறார். ரிலீஸ் செய்தி கேட்டதும் வீட்டுக்கு கிளம்பும்போது ட்ரிம் செய்த கம்மி தாடி
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ படம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இந்தக்காலத்து ரசிகர்களும் பார்க்கத்தக்க கம்ர்ஷியல் படம் தான் பார்க்கலாம், ரேட்டிங் 2.75 /5
- Sivaji Ganesan as Paranthaman
- Narsimhabharathi as Pandiyan
- Durairaj as Karudan
- Thangavelu as Punyakodi
- Karunanidhi as Kundumani
- Thirupathisami as Mill Proprietor
- Krishnan as Office Boy
- Singam Krishnamoorthi as Bhagavathar
- Chellamuthu as Disciple
- Muthukoothan as Disciple
- Krishnan as Lawyer
- Soundar as Inspector
- Srinivasagopalan as Judge
- Ganapathi as Watchman
- Pandari Bai as Poomalai
- Girija as Kumudha
- Krishna Kumari as Bama
- Saraswathi as Usha
- Muthulakshmi as Dumb Girl
- Dhanalakshmi as Thangammal
Thirumbi Paar | |
---|---|
Directed by | T. R. Sundaram |
Written by | M. Karunanidhi |
Produced by | T. R. Sundaram |
Starring | Sivaji Ganesan Pandari Bai |
Cinematography | W. R. Subba Rao |
Edited by | L. Balu |
Music by | G. Ramanathan |
Production company | |
Release date | 10 July 1953 |
Running time | 15616 ft |
Language | Tamil |
Song | Singers | Lyrics | Length |
---|---|---|---|
"Aavanna Doonaa Aadu" | Jikki | Kannadasan | 02:13 |
"Kanniyargal Vellai Manam Pol" | A. M. Rajah & Swarnalatha | 03:17 | |
"Kalappadam Kalappadam" | S. C. Krishnan | 01:28 | |
"Kaadhalar Vaazhndha Ullaasa Vaazhvil" | Jikki | 02:48 | |
"Kannaale Panpaadum" | Thiruchi Loganathan & P. Leela | 02:55 | |
"Nallavaraam Oru Aanodu Pennum" | T. S. Bagavathi | 02:50 | |
"Kannalla Thoongamma" | P. Leela | 02:57 | |
"Vaazhkai Vaazhvadharkke" | S. C. Krishnan | 02:18 | |
"Pozhudhu Vidindhaal Thirumamam" | T. S. Bagavathi | 01:02 | |
"Kaanagatthil Kaadhaliyai" | D. B. Ramachandra | 00:43 | |
"Paandiyan En Sollai" | P. Leela | Bharathidasan | 02:19 |
"Ponndutthu Padaitthaano" | A. M. Rajah, K. Rani & T. S. Bagavathi | 02:58 |
0 comments:
Post a Comment