Thursday, July 27, 2023

ஓர் இரவு (1951) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @ யூ ட்யூப்

 


சி என்  அண்ணாதுரையின்  நாடகங்கள்  ஏற்கனவே  சினிமாவாக  வந்திருக்கின்றன.  1949 ல்  வேலைக்காரி , நல்ல தம்பி  ஆகிய  இரு  நாடகங்களும்  சினிமா  ஆகி  நல்ல  வரவேற்பையும்  , வசூலையும்  பெற்றது. கே  ஆர்  ராமசாமிக்காக  எழுதிய ஓர் இரவு  எனும் இந்த   நாடகத்தை  ஏ வி எம்  நிறுவனம்  சினிமா  ஆக்க  விரும்பியது . ஏ வி எம் ஸ்டூடியோவுக்கு  அண்ணா  வந்து  ஒரே  இரவில்  திரைக்கதை , வசனம்  எழுதிக்கொடுத்தாராம், அன்றைய  மதிப்பில்  ரூ 10,000  ஊதியமாகப்பெற்றாராம், அப்போது  அது  மிகப்பெரிய  தொகை. ஆனால்  நாடகமாக  செம  ஹிட்  ஆன  இக்கதை  ஏனோ  சினிமாவாக  சூப்பர்  ஹிட்  ஆகவில்லை . விமர்சகர்கள்  வரவேற்பைப்பரவலாகப்பெற்ற  இப்படம்  வசூல்  ரீதியாக  தோல்வியையே  சந்தித்தது 


 இயக்குநர்  ப  நீலகண்டன்  1947ல்  ரிலீஸ்  ஆன  நாம்  இருவர்  படத்தில் அசிஸ்டெண்ட்  டைரக்டராக  வேலை  செய்தவர் , அண்ணாதுரையின்  சிபாரிசால் இயக்குநர்  ஆக  ப்ரமோஷன்  பெற்றார் . இப்படத்தின்  கதை  ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  தவிர  மீதி  அனைத்தும்  ஒரே  நாள்  இரவில்  நடப்பதாக  சித்தரிக்கப்பட்டு  இருந்தது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


 கதையை  மூன்று  வெவ்வேறு  சம்பவங்களாகப்பிரிக்கலாம்


 சம்பவம் 1 -  நாயகன்  ரத்தினம்  பெரிய  ஜமீன் தாரர்  வாரிசு . நாயகி  சொர்ணம்  சாதா  ஏழைப்பெண். ஓப்பனிங்  ஷாட்லயயே  நாயகி  மாட்டு  வண்டியில்  வர  நாயகன்  காரில்  வருகிறார். இருவரும்  நேருக்கு  நேர்  சந்தித்துக்கொள்கிறார்கள் . மோதல்  உண்டாகிறது , நாயகியின்  தாத்தா  வந்திருப்பது  ஜமீன்  என்று  சொன்னபின்  தான்  நாயகிக்கு  விபரம்  தெரியும் . அதற்குபபின்  பல  சந்தர்ப்பங்களில்  நாயகன் - நாயகி இருவரும்  பூங்காக்களில்  சந்தித்துப்பழகுகிறார்கள் . காதலிக்கிறார்கள் . நாயகியின்  தாத்தா  இந்தக்காதலை  கண்டிக்கிறார். தன்  பேத்தியிடம்  நீ  அவனை  மறந்து  விடு . அவன்  உன்னைக்கல்யாணம்  எல்லாம்  செய்து  கொள்ள மாட்டான். அவர்கள்  பணக்காரர்கள் , நாம்  ஏழை ,  பின்  ஊர்  ஒரு  விதமாகப்பேசும்  என்கிறார். ஆனால்  நாயகி  அதைக்கேட்கவில்லை 


 ஆனால்  தாத்தா  சொன்னதுதான்  நடக்கிறது . நாயகன்  நாயகியைத்திருமணம்  செய்ய  முன்  வரும்போது  அந்தஸ்து  , ஜாதி  குறுக்கே  வருகிறது . நாயகனுக்கு  நாயகியை  ஏமாற்றும்  எண்ணம்  இல்லை , ஆனால்  சந்தர்ப்ப  சூழ்நிலையின்  காரணமாக  நாயகியைக்கை  விட  வேண்டிய  சூழலில்  இருக்கிறான். நாயகி  கர்ப்பமாக  இருக்கிறார்


சில  இடங்களில்  வேலைக்குப்போகிறார். போன  இடங்கள்  எல்லாம் நாயகியை  ஆசை  நாயகி  ஆக்க  முயலவே  ஒரு நாடகக்குழுவில்  சேர்ந்து  நடிகை  ஆகிறார். சில  வருடங்கள்  கழித்து  நாயகன் - நாயகி  சந்திப்பு  மீண்டும்  நடக்கிறது . அப்போதும்  நாயகன்  நாயகியை  ஏற்றுக்கொள்ள  முன்  வரவில்லை 


சம்பவம் 2 - நாயகன்    பவானி  என்ற  பெண்ணை  மணக்கிறார். அவர்களுக்கு  ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது. சில  வருடங்களீலேலேயே பவானி  இறந்து  விடுகிறார். அவர்களது  பெண்  குழந்தை  பெரியவள்  ஆகிறாள் , பெயர்  சுசீலா . சுசீலா  டாக்டர்  சேகர்  என்பவரைக்காதலிக்கிறாள் இருவரும்  காதலிப்பது  நாயகன்  ரத்தினத்துக்கு  தெரிய  வருகிறது 


 நாயகனை  ஒரு  ஆள்  ஏதோ  ஒரு  விஷயத்தை  சொல்லி  அடிக்கடி   மிரட்டிப்பணம்  பறித்துக்கொண்டிருக்கிறான்,  சட்டத்துக்குபுறம்பான  ஒரு  செயலை  நாயகன்  செய்யும் போது  அந்த  வில்லன்  அதை  ஃபோட்டோ  எடுத்து  வைத்துக்கொண்டு  மிரட்டிக்கொண்டு  இருக்கிறான்


 நாயகனின்  மகளைத்திருமணம்  செய்ய  வில்லன்  முன்  வருகிறான். நாயகன்  அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை. என்  சொத்து  பூரா  தந்து  விடுகிறேன், ஆனால்  என்  மகள் மட்டும்  வேண்டாம் , விட்டு  விடு  என்கிறார், ஆனால்  வில்லன்  அந்த  ஆதாரத்தை  ஊருக்கு  அம்பலப்படுத்துவேன்  என  மேலும்  மிரட்ட  வேறு  வழி  இல்லாமல்  தன்  மகளை  வில்லனுக்கு  திருமணம்  செய்து  தர  சம்மதிக்கிறான். மகளையும்  வலுக்கட்டாயமாக  பாசத்தைக்காட்டி  சம்மதிக்க  வைக்கிறான் 


 சம்பவம்  3  -  நாயகன்  ரத்னம் , நாயகி  சொர்ணம்  இருவருக்கும்  பிறந்த  மகன்  இப்போது  ஒரு  திருடன்  ஆக  இருக்கிறான். நாயகனின்  மகள்  சுசீலா  அவனை  சந்தித்து  தன்  காதலன்  ஆக  நடிக்கும்படி  கேட்டுக்கொள்கிறாள் ., சுசீலாவுக்கு  அவன்  தான்  தன்  அண்ணன்  என  தெரியாது .இதற்குப்பின்  நடந்த  திடுக்கிடும்  திருப்பங்கள்  என்ன? நாயகன், நாயகி  சந்திப்பு  மீண்டும்  நடந்ததா?  நாயகனை  வில்லன்  மிரட்டுவதற்கான  பின்  புலம்  என்ன? நாயகன்  மகள்  சுசீலா - டாக்டர்  திருமணம்  நடந்ததா?  என்பதற்கெல்லாம்  பிற்பாதி  திரைக்கதை  பதில்  சொல்கிறது 



 நாயகன்  ரத்தினம்  ஆக   கே  ஆர்  ராமசாமி .  ஓபனிங்  ஷாட்டில்  தெனாவெட்டாக  அறிமுகம்  ஆகும்  அவர் , பிறகு  குணச்சித்திர  நடிகர்  ஆகி  விடுகிறார். நாயகன்  கமல்  கிட்டே  கேட்பது  போல  இவரிடமும்  நீங்க  நல்லவரா? கெட்டவரா? எனக்கேட்க  வேண்டும்  போல \\


 நாயகி  சொர்ணம்  ஆக  பி எஸ்  சரோஜா. ஓப்பனிங்  ஷாட்டில்  மாட்டு  வண்டியில்  கிளாமராக  வருபவர், கலக்கலாக  டூயட்  எல்லாம்  பாடுபவர்  அப்புறம்  சோகசிற்பம்  ஆகி  விடுகிறார். வயதான  கெட்டப்பில்  பார்க்க  முடியவில்லை, பாவம் 


மகள்  சுசீலாவாக   லலிதா. கச்சிதமான  நடிப்பு . நடனம்  அருமை  (  இவர்  தான்  லலிதா , பத்மினி , ராகினி  சகோதரிகள்  என  நினைக்கிறேன் . திருவாங்கூர்   சகோதரிகளீல்  மூத்த  அக்கா) 

 நாயகனின்  மனைவி  பவானி  ஆக   முத்து லட்சுமி  கெஸ்ட்  ரோல், அதிக  வாய்ப்பில்லை \

  நாயகனை  அடிக்கடி  மிரட்டும்  வில்லனாக  டி கே  சண்முகம் , டாக்டர்  சேகர்  ஆக  நாகேஸ்வரராவ்


 ஒரு  பாடல்  காட்சியில்  லலிதா, பத்மினி , ராகினி  மூவரும்  நடனம்  ஆடுகிறார்கள் .லட்சுமி  காந்தன்  ஒரு  வேடத்தில்  தோன்றுகிறார்  ( இவர்  தான்  பின்னாளில் தியாகராஜ  பாகவதர் , என் எஸ்  கிருஷ்ணன்  ஆகியோரை கொலை  வழக்கில்  ஜெயிலில்  தள்ளியவர் ) 


ஆர்  சுதர்சனம்   இசையில்  பத்து  பாடல்கள் , அவற்றில்  நான்கு பாடல்கள்  செம  ஹிட் , இப்போதும்  கேட்கலாம் 


கே  சங்கர்  எடிட்டிங்கில் 160  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது , எங்கும்  பெரிதாக  போர்  அடிக்கவில்லை , மாருதி  ராவின்  ஒளிப்பதிவு  கச்சிதம் 




சபாஷ்  டைரக்டர்  (  ப  நீலகண்டன் ) 


1 நாயகன்  நாயகிக்கு  செய்தது  துரோகம்  தான்  என்றாலும்   நாயகன்  மீது  ஆடியன்சுக்கு  வெறுப்பு  வராத  வண்ணம்  நாயகனுக்கு  வேறு  வழி  இல்லை  என்பது  போல  காட்சிகளை  சித்தரித்து  அவரது  கேரக்டர்  டிசைனை  வடிவமைத்த  விதம் \


2   வில்லன்  நாயகனை  ஏன்  மிரட்டுகிறான்  என்ற  சஸ்பென்சை  கடைசி  வரை  மெயிண்ட்டெயின்  செய்த  விதம் 


3  டாக்டர் , கம்பவுண்டர்  காமெடி  டிராக் 


  ரசித்த  வசனங்கள்   ( அண்ணாதுரை) 

\

1   உங்க  பார்வையை  லா  பாயிண்ட்  ஆஃப்  வியூவில்  பார்க்காதீங்க , லவ்  பாயிண்ட்  ஆஃப்  வ்யூவில்  பாருங்க \


2   அகராதி  என  அடிக்கடி  என்னைக்கூப்பிடறீங்க, அதுக்கு  என்ன  அர்த்தம்  என  அகராதியில்  தேடிக்கொண்டிருக்கிறேன்


3   எல்லார்  முன்னிலையிலும்  என்னை  இனிஷியல்  சுருக்  ஆக  எம்  என்  எனக்கூப்பிடறீங்க , அது  பேஷண்ட்ஸ்  காதில்  எமன்  என்றே  கேட்கும், பயப்படறாங்க 


4  நீங்க  சந்தோஷமா  இருக்கும்போதும்  என்னை  அடிக்கறீங்க , கோபமா  இருக்கும்போதும்  அடிக்கறீங்க, பணக்காரன்  சந்தோஷமா  இருந்தாலும், கோபமா  இருந்தாலும்   அது  ஏழைக்கு  அனர்த்தம்  தான்

5  உங்க  முகம்  அன்  சகிக்கபிளா  இருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  நாயகியைத்திருமணம்  செய்து  கொள்ள  மறுப்பதில்  நியாயம்  இருந்தது , ஆனால்  நாடக  நடிகை ஆன  பின்  வரும்  சந்திப்பில்  நாயகி  கேட்பதில்  நியாயம்  இருக்கிறது . நாயகன்  மறுப்பதில்  லாஜிக்கே  இல்லை /. நாயகனின்  மனைவி  இறந்த  பின்  நாயகியை  உடன்  வைத்துக்கொள்வதில்  என்ன  தயக்கம் ? 


2   நாயகன்  பண பலம்  மிக்கவன் , ஆனால்  வில்லனுக்கு  எந்தவித  பின்  புலமும்  இல்லை , ஆனால்  நாயகனை  பல  வருடங்கள்  மிரட்டிக்கொண்டே இருக்கிறான், அடியாட்களை   ரெடி  செய்து  வில்லனை  மிரட்டி  ஆதாரத்தைக்கைப்பற்றுவதில்  என்ன  தயக்கம் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யூ 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   வசந்த  முல்லையும்  , மல்லிகையும் 

2   புவி  மேல்  மானமுடன்  பெண்ணாகப்பிறந்தாளே

3  கொட்டு  முரசே  கொட்டு  முரசே

4   அய்யா  சாமி  ஆவோ ஜி  சாமி \

5  துன்பம்  நேர்கையில்  யாழ்  எடுத்து \

6   என்ன  உலகமடா  இது , ஏழைக்கே  நரகமடா 

7  அரும்பு  போல்  மீசை  பார்த்து பார்த்து   கண்கள் இரண்டும் 

8   பூலோகம்தனைக்காண  வருவீர் \

9   படுத்துறங்கும்போது  அக்கம்  பக்கம்  யாரும்  இல்லை 

10   அழகு  நாடு  எங்கள்  நாடு  இது  எங்கள்  நாடு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  கமர்ஷியல்  ஆன  படம்  தான்  சி என்  அண்ணா துரையின்  எழுத்துக்கு  ரசிகர்களாக  இருப்பவர்கள்  பார்க்கலாம், போர்  அடிக்கவில்லை ,.  ரேட்டிங்  2.5 / 5 


Or Iravu
Poster
Directed byP. Neelakantan
Screenplay byC. N. Annadurai
P. Neelakantan
Based onOr Iravu
by C. N. Annadurai
Produced byA. V. Meiyappan
StarringK. R. Ramasamy
Lalitha
CinematographyS. Maruti Rao
Edited byK. Shankar
Music byR. Sudarsanam
Production
company
Release date
  • 11 April 1951
Running time
160 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: