Wednesday, June 14, 2023

UGRAM(2023) -தெலுங்கு - சினிமா விமர்சனம் (ஆக்சன் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


    அமெரிக்கன்  சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  படமான ஃப்ராக்சர்டு  2019ஆம் ஆண்டு  ரிலீஸ்  ஆனது. அந்தக்கதைக்கருவை  அப்படியே  அட்லி  காப்பி  அதாவது  அட்டக்காப்பி  அடிக்காமல்  பின்  பாதி  திரைக்கதையை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  எடுத்த  தெலுங்குப்படம்தான்  இது. ஒரிஜினல்  செம  ஹிட் , இது  மீடியம்  ஹிட் . 2021ல்  ரிலீஸ்  ஆன  நாந்தி  தெலுங்குப்படத்துக்குப்பின்  இந்த  இயக்குநர் + நாயகன்  காம்ப்போ வின்  இரண்டாவது  படம்  இது   


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  நேர்மையான  போலீஸ்  ஆஃபீசர். இவரு ஒரு  பெண்ணை  காதலித்துத்திருமணம்  செய்து  கொண்டவர். மனைவி , ஒரு  மகள் என  வாழ்க்கை  நன்றாகத்தான்  போய்க்கொண்டிருந்தது .


ஹாஸ்டலில்  தங்கிப்படிக்கும்  மாணவிகளிடம்  நான்கு  வில்லன்கள்  வாட்ச்மேன்  உதவியுடன்  தகாத  முறையில்  நடக்கிறார்கள் .  நாயகன்  அவர்களைக்கைது  செய்ய  வில்லன்கள் நான்கு  பேரும்  நீதிமன்றக்காவலில்  14  நாட்கள்  வைக்கப்படுகின்றனர்.


 பெரிய  இடத்துப்பசங்களான  வில்லன்கள்  14  நாட்கள்  கழித்து  வ்ந்து  நாயகனின்  மனைவியை  வீடு  தேடி  மிரட்டிச்செல்கின்ற்னர். நாயகன்   வில்லன்களான  நால்வரில்  மூவரை  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ளுகிறார். மீதி  ஒரு  ஆள்  தப்பி  விடுகிறான்


நாயகன்  தன்  குடும்பத்துடன்  காரில்  போகும்போது  சாலை  விபத்தில் படுகாயம்  அடைந்து ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகிறான். சுய  நினைவு  வந்த  பின்  தன்  குடும்பம்  எங்கே  என  கேட்கும்போது  நீங்க  மட்டும்தான்  தனியே  வந்தீங்க  என    சிசிடிவி  ஃபுட்டேஜ்  காட்டப்படுகிறது


இதற்குப்பின்  என்ன  நடந்தது ? நான்காவத்  வில்லன் தான்  இதற்குக்காரணமா? வேறு  புது  வில்லனா? இதை  நாயகன்  கண்டுபிடிப்பதே  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  அல்லாரி  நரேஷ், ரஃப் அண்ட்  டஃப்  போலீஸ்  கேரக்டர்  கச்சிதம்  உடல்  மொழி , நடிப்பு   அனைத்தும்  ஓக்கே  ரகம் 

நாயகியாக  மிர்ணாமேனன், அழகு  , இளமை , நடிப்பு  மூன்றும்  கைவரப்பெற்ற  காரிகை 


பின்  பாதியில்  வ்ரும்  போலி  திருநங்கை  வில்லன்கள்  எடுபடவில்லை 

சித்தார்த்தின்  ஒளிப்பதிவு  இரவு  நேர  நகர  சாலைகளைப்படம்  பிடித்த  விதம்  அருமை , ஸ்ரீசரண்  பகலா  வின் இசையில்  இரண்டு  பாடல்கள்  ஹிட்  ரகம், பிஜிஎம்  ஆல்சோ  குட் . 


இரண்டரை  மணி  நேரம்  ஓடும் விதமாக   சோட்டா  கே  பிரசாத்  எடிட்டிங்  செய்திருக்கிறார்.


விஜய்கனாக்கமேதலா  திரைக்கதை இயக்கம்  செய்திருக்கிறார். சராசரி  ஆக்சன்  போலீஸ்  ஸ்டோரிதான்  , புதுமையாக  பெரிதாக  ஏதும்  இல்லை . டைம்  பாஸ்  கேட்டகிரியில்  சேர்க்கலாம் , 


சபாஷ்  டைரக்டர்


1   ஹாலிவுட்  படத்தில்  இருந்து  முதல்  பாதி , ஆல்ரெடி  துவைச்சுக்காயப்போட்ட  தென்னிந்தியப்படங்களில்  இருந்து  பின்  பாதி  என  கமர்ஷியல்  கலவை  ரெடி  செய்தது 


2  ஒரிஜினல்  வெர்சன்  சைக்கலாஜிக்கல்  த்ரில்லர்  என்றாலும்  பட்டி  டிங்கரிங்  வெர்சன்  ஆக்சன்  த்ரில்லர்  என  மடை  மாற்றிய  லாவகம் 


  ரசித்த  வசனங்கள் 


தேடித்தேடிப்பார்த்தும்  ஒன்று  கூட  உருப்படியாக  சிக்க வில்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மாணவிகளிடம்  சில்மிஷம்  செய்த  ரவுடிகள்  எப்படி  என்கவுண்ட்டர்  ரவுடிகள்  லிஸ்ட்டில்  வந்தார்கள் ?


2  நாயகனால்  ஜெயில்  தண்டனை  பெற்ற  வில்லன்  நாயகனின்  ம்னைவி  வீட்டுக்கு  வந்து  பெருசா  எதோ  வில்லத்தனம்  புரிவனோ ? என  நிமிர்ந்து உட்கார்ந்தால்  அவன்  பேக்கு  மாதிரி  தன்னை  நிர்வாணப்படுத்திக்கொண்டு அதுதான்  நாயகனுக்கான  தண்டனை  என்கிறான் . கஷ்ட  காலம் . உங்க  கற்பனைத்திறனில்  இடி  விழ 


3   சாலை  விபத்தில்  நெற்றியில்  காயம்  அடைந்த  நாயகன்  அடுத்த  நாளே  க்ளீன்  முகத்துடன்  வருவது  எப்படி ? 


4   ஒரு  காட்சியில்  நாயகன்  என்கவுண்ட்டரில்  மூன்று  பேரை  கொன்றதாகச்சொல்கிறார்கள் , இன்னொரு  காட்சியில்  நாயகன்  மீது  ஆல்ரெடி  3  கொலைக்கேஸ்  இருக்கு  என்கிறார்கள் , ஏன்  இந்த  குழப்பம் ? 


5    பின்  பாதி  திருநங்கை  வில்லன்கள்    சிசிடிவி  கேமரா  இல்லாத  இடமாகப்பார்த்து  குற்றம்  புரிகிறார்கள்  என  கணிக்கும்  நாயகனுக்கு  அவ்ர்கள்  உடை  மாற்றும்  சிசிடிவி  காட்சி  எப்படிக்கிடைத்தது?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுமார்  ரகப்படம்தான், டி வி ல  போட்டாப்பார்க்கலாம், ரேட்டிங்  2 / 5 

0 comments: