1994 ல் வெளிவந்து செம ஹிட் ஆன அமெரிக்கப்படமான த சஷாங்க் ரிடெம்ப்சன் என்ற படத்தின் அன் அஃபிசியல் ரீமேக் ஆன மலையாளப்படம் ஆன ஸ்வாதந்திரம் அர்த்தராத்திரியில் ( நள்ளிரவில் சுதந்திரம் ) 2018ல் ரிலீஸ் ஆனது . அதனுடய பட்டி டிங்கரிங் அட்லீ ஒர்க் வெர்சன் தான் இந்தப்படம்,. டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவின் இரண்டாவது படம் இது . இவர் ஈரோட்டுக்காரர். டான்ஸ் மாஸ்டர் பாடும் வானம்பாடி மாதிரி சப்ஜெக்ட் எடுக்காமல் ஏன் இது போன்ற ஆக்சன் படங்களை எடுக்கிறார் என்பது தெரியவில்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வீணாப்போன ஆளிடம் வேலை செய்கிறார். அங்கே வேறு ஏதோ டொனேஷன் மேட்டருக்காக வந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளீயான நாயகியை சந்திக்கிறார். காதல் வசப்படுகிறார். இவரது ஓனரிடம் வேலை செய்யும் வேறு ஒரு பொறம்போக்கு நாயகியை தொந்தரவு செய்ய கோபத்தில் லைட்டா கொலை பண்ணிடறார். ஜெயிலுக்குப்போகிறார்
\
க்ளாஸ்மேட் , ஸ்கூல் மேட் , ரயில்மேட் மாதிரி அங்கே சில ஜெயில் மேட்கள் உருவாகின்றனர் . அந்த வெட்டிப்பசங்களீன் துணையோடு ஜெயிலில் இருந்து தப்பிக்கத்திட்டம் போடுகிறார். அவரது திட்டம் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக புதுமுகம் ஹிர்து ஹரூன். பெயர் தான் நம் வாயில் நுழைய மாட்டேங்குதே தவிர அவருக்கு நடிப்பு நன்றாக வருகிறது. புதுமுக நடிகர் போலவே தெரியவில்லை
நாயகியாக அனஸ்வரா ராஜன் பாந்தமான முகம் காதல் காட்சிகளில் தெளிவான நடிப்பு
நாயகனின் ஜெயில் மேட் ஆக பாபி சிம்ஹா , முனீஷ் காந்த் வருகிறார்கள் , பாபி சிம்ஹா ஆக்சனுக்கு , முனீஷ் காந்த் காமெடிக்கு , இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்
ஓனராக பி எல் தேனப்பன் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஜெயிலர் ஆக ஆர் கே சுரேஷூம் வந்து போகிறார்
நான் லீனியர் கட்டில் திரைக்கதை ஜெயிலில் கரண்ட் மேட்டர் , ஃபிளாஸ்பேக்கில் நடந்த கதை என மாறி மாறி பயணிப்பது சுவராஸ்யம்
ஒரிஜினலை விட க்ரிஸ்ப் ஆக எடுக்கலாம் என நினைத்தார்களோ என்னவோ ஒரிஜினல் வெர்சன் ரெண்டே கால் மணி நேரம் என்றால் இவருகள் 2 மணி நேரத்துக்கும் குறைவாக முடித்து விட்டார்கள்
ஜெயிலில் சுரங்கம் தோண்டும் காட்சிகள் எல்லாம் நம்ப முடியவில்லை. சத்தம் கேட்காமலா இருக்கும் ? கைதிகல் யாரும் போட்டுக்கொடுக்காமலா இருப்பார்கள் ? ரவுண்ட்ஸ் வரும் அதிகாரிகள் கண்ணில் படாமல் சுரங்கப்பாதை தப்பிப்பது எப்படி என்ற கேள்விகள் வந்து போகின்றன
சபாஷ் டைரக்டர்
1 புதுமுகம்தான் நாயகன் , நீங்க சும்மா மார்க்கெட்டிங்க்காக புக் பண்றோம் என்று சொல்லாமலேயே பாபி சிம்ஹாவை புக் பண்ணியது \\
2 விக்கி பீடியாவில் கூட இது ரீமேக் படம் என்ற தகவல் வராமல் பார்த்துக்கொண்டது
ரசித்த வசனங்கள்
1 தப்பு பண்ணி மாட்டி ஜெயிலுக்கு வந்தாக்கூட தப்பில்லை , ஆனா ஜெயிலில் இருந்து தப்பிக்கும்போது மாட்னோம், அவ்ளோவ் தான்
2 இந்த ஜெயில் எனக்குத்தாய் வீடு மாதிரி , அப்பப்ப இங்கே வந்துட்டுப்போவேன்
3 என்னடா? பாட்டெல்லாம் புதுசா இருக்கு ?
பழைய பாட்டுதான் சார் , உங்களூக்குப்புதுசாத்தெரியுது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஜெயில் கைதிகளைப்பார்க்க வரும் விசிட்டர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் வர வெண்டும், ஆனால் பாபி சிம்ஹாவின் மனைவி நினைச்ச நேரம் வந்து அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் எல்லாம் சொல்கிறார். எந்த ஊர் ஜெயிலில் இதுக்கெல்லாம் அனுமதி ?
2 ஜெயிலுக்கு ரெகுலர் விசிட்டர்கள் பலர்2 இருக்க முதல் முறை வரும் நாயகனுக்கு எப்படி தப்பிக்க பக்கா பிளான் உருவாக்க முடிந்தது ? அவர் சிவில் எஞ்சினியரும் இல்லை
3 ஜெயிலுக்குள் எல்லாருக்கும் டிராயர் தான் , ஆனால் நாயகன் மடும் லுங்கி கட்டிக்கொண்டு லுங்கியில் இரும்புக்கம்பி மறைத்துக்கொண்டு வருகிறார்
4 ஜெயிலுக்குள் அலுமினிய பக்கெட் தான் தருவாங்க , ஆனா நாயகன் செல்லில் இருக்கும் அறையில் 50 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் தேக்சா இருக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ படம் தான். ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நம்ப முடியாத காட்சிகள் கொண்ட படம் , போர் அடிக்காமல் மெதுவாக போகிறது , டி வி ல போட்டா பார்க்கலாம், ரேட்டிங் 2 / 5
Thugs | |
---|---|
Directed by | Brinda |
Produced by | Riya Shibu |
Starring |
|
Cinematography | Priyesh Gurusamy |
Edited by | Praveen Antony |
Music by | Sam C. S. |
Production company | |
Release date |
|
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment