வைக்கம் முகமது பஷீர் எழுதிய நீல வெளிச்சம் என்னும் சிறுகதையைத்தழுவி பார்கவி நிலையம் என்னும் மலையாளப்படம் 1964ல் ரிலீஸ் ஆனது , மலையாளத்தில் ரிலீஸ் ஆன முதல் திகில் படம் என்னும் பெருமையைப்பெற்றது . ரிலீஸ் ஆன டைமில் வசூலில் சக்கை போடு போட்ட படம் இது.. இதன் ரீமேக் தான் நீல வெளிச்சம்
தனது நீல வெளிச்சம் சிறுகதையைத்தழுவி பார்கவி நிலையம் என்னும் படத்துக்கு திரைக்கதையையும் அவரே எழுதினார், அப்போது நிலவு காணும்போழ் எனும் சிறுகதை , அனுராகத்திண்டே தினங்கள் சுய சரிதை , அனர்கா நிமிஷம் ஆகிய சிறுகதை அனைத்தில் இருந்தும் கலந்து கட்டி திரைக்கதை எழுதப்பட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ரைட்டர். தனிமையான இடத்தில் தங்கி கதை எழுத ஒரு கிராமத்துக்கு வருகிறார். அங்கே பார்கவி நிலையம் என்னும் வீட்டில் தங்குகிறார். சாப்பாடு எல்லாம் ஹோட்டலில் தான்.
ஊர் மக்கள் நாயகனை விசித்திரமாகவும், பயமாகவும் பார்க்கின்றனர் ஊர் மக்கள் ரைட்டரை எச்சரிக்கின்றனர். அந்த வீட்டில் ஒரு பேய் நடமாட்டம் உள்ளது . வேறு எங்காவது தங்கிக்கொள் என்கின்றனர்
ஆனால் நாயகன் கவலைப்படவில்லை . பார்கவிக்குட்டி என்ற அந்தப்பெண்ணிடம் ( பேயிடம் ) இவராகப்பேச ஆரம்பிக்கிறார். முதல் பாதி முழுக்க அந்த அமானுஷ்ய வீடு , ரைட்டர் , பூனை , பெருச்சாளி , கதவு மூடும் சத்தம் என வழக்கமான பேய்ப்பட டெம்ப்ளேட்டில் போகிறது
ஊர்மக்கள் சொல்லும் கதைப்படி பார்கவி எனும் பெண் ஒருவனைக்காதலித்தாள். ஆனால் அவன் அவளை ஏமாற்றி விட்டு ஊரை விட்டே ஓடி வேறு ஒரு பெண்ணைக்கல்யாணம் செய்து கொண்டான் .
ஆனால் நிஜமான பார்கவியின் ஃபிளாஸ்பேக் கதை . பார்கவி தன் வீட்டின் அருகே புதிதாகக்குடி வந்த நபருடன் காதல்வசப்படுகிறாள். இருவரும் காதலிக்கின்றனர். இது பார்கவியின் முறை மாமனுக்குத்தெரிந்து விடுகிறது . பார்கவியின் காதலன் ரயிலில் சொந்த ஊருக்குப்போகும்போது வில்லன் அவனைக்கொலை செய்து விடுகிறான்
பிறகு பார்கவியை பெண் கேட்கிறான். பார்கவி சம்மதிக்கவில்லை ., அவளிடம் நான் தான் உன் காதலனைக்கொன்றேன் என சொல்லி விடுகிறான், ஆனாலும் பார்கவி பயப்படவில்லை. மணமுடிக்க சம்மதிக்கவில்லை . கிண்ற்றில் தள்ளி பார்கவியைக்கொலை செய்து விடுகிறான் வில்லன்
இதற்குப்பின் வில்லனைப்பழி தீர்ப்பது யார்? நாயகனான ரைட்டரா? பேய் ஆக நடமாடும் பார்கவியா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
நாயகன் ரைட்டராக டோவினோ தாமஸ். கெட்டப் நன்றாக உள்ளது, ஆனால் நடிக்க பெரிய வாய்ப்பில்லை . படம் முழுக்க தம் அடித்துக்கொண்டே இருக்கிறார்
நாயகி பர்கவியாக ரிமா கல்லிங்கல் அழகு சிற்பம், தேவதை என ஊர் மக்கள் கொண்டாடும் அழகியாக வருகிறார்.நல்ல நடிப்பு . ஒரு சீனில் கூட இவர் பேய் உருவத்தில் வராதது ஆறுதல்
பார்கவியின் முறைமாமனாக வில்லனாக ஷைன் டாம் சாக்கோ நல்ல வில்லத்தனம் மிக்க நடிப்பு
பார்கவியின் ஃபிளாஸ்பேக் காதலனாக ரொஷன் மேத்யூ மாறுபட்ட கெட்டப்பில் வருகிறார்
கிரிஷ் கங்காதர் ஒளிப்பதிவில் கிணறு மேலிருந்து கீழ் , கீழிருந்து மேல் இரு வகை ஷாட்களும் அருமை . இரவில் நீல வெளிச்சம் வரும் காட்சி த அபிஸ் பட தாக்கத்தில் எடுத்திருக்கிறார்கள் .சாஜன் எடிட்டிங்கில் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் படம் ஓடுகிறது
பேய்ப்படஙளுக்கே உரிய திகில் ஊட்டும் பின்னணி இசை நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள் இசை அமைப்பாளர்கள் இருவரும்
ஆஷிக் அபு இயக்கி இருக்கிறார்.
ரசித்த வசனங்கள்
1ஒரு ருசியான சமையலின் அருமை சாப்பிட்டவர்களின் பாராட்டில்தான் தெரிய வ்ரும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியை அடையத்தான் வில்லன் அத்தனை பாடுபடுகிறான், நாயகியின் காதலனை கொலை கூட செய்கிறான், ஆனால் வீட்டில் யாரும் இல்லாத போது நாயகியை பலவந்தமாகவோ, மயங்க வைத்தோ அடைய முயலாமல் நாயகியைக்கொலை செய்வது ஏன்? காதலனுக்கு விஷம் கலந்த பழம் கொடுக்கத்தெரிந்தவனுக்கு நாயகிக்கு அது போல் ஏதாவது கொடுக்கத்தெரியாதா?
2 கிணற்றில் நாயகி விழுந்து இறந்ததும் யாரும் ஏன் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கவில்லை ?
3 முறைமாமன் வலுக்கட்டாயமாக பெண் கேட்டு தகறாரு செய்த சம்பவத்துக்குப்பின் நாயகியை வீட்டில் தனியாக விட்டு விட்டு வீட்டார் ஏன் வெளியே சென்றனர் ?
4 நாயகியின் காதலன் வில்லன் கொடுத்த விஷம் கலந்த பழத்தை ஏன் சாப்பிடுகிறான்? சந்தேகம் வராதா?
5 1964 ல் ரிலீஸ் ஆன படத்தை ரீ மேக் செய்யும் போது இதை எல்லாம் தூக்கி சாப்பிட்ட மணிச்சித்திரதாழ் மெகா ஹிட் ஆனதே , அதே டைப் கதை மீண்டும் எப்படி ஒர்க் அவுட் ஆகும் ? என ஏன் சிந்திக்கவில்லை ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 + காட்சிகள் இல்லை , பேய் வரும் சீனும் இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது 20 நிமிடகுறும்படமாக எடுக்க தகுதி உள்ள படம் ரெண்டு மணி நேரம் ஜவ்வு இழுப்பு இழுத்துட்டாங்க . நாயகியின் அழகு , ஒளிப்பதிவு இரண்டு மட்டுமே பிளஸ் .முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது. பின் பாதி ஃபிளாஸ்பேக் கதை சாதா காதல் கதை தான். கடைசி 15 நிமிடங்கள் மட்டும் விறுவிறுப்பு . ரேட்டிங் 2 /5
Neelavelicham | |
---|---|
Directed by | Aashiq Abu |
Screenplay by |
|
Based on | Neelavelicham by Vaikom Muhammad Basheer |
Produced by |
|
Starring | |
Cinematography | Girish Gangadharan |
Edited by | V. Saajan |
Music by |
|
Production company | OPM Cinemas |
Distributed by | OPM Cinemas |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
0 comments:
Post a Comment