Sunday, June 11, 2023

MEENAKSHI SUNDARESHWAR (2021)-ஹிந்தி - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ நெட்ஃபிளிக்ஸ்

 


இந்தப்படம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகும்போது  மிக்ஸ்டு  ரிவ்யூஸ்  வந்தாலும்  நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆனபோது  அபாரமான  வரவேற்புப்பெற்றது . 5  மில்லியன்  பார்வையாளர்களைப்பெற்ற  மூன்றாவது  ஹிந்திப்படம்  என்ற  பெருமையையும்  பெற்றது .நாயகன் - நாயகி  இருவரின்  கெமிஸ்ட்ரியும்  காஸ்ட்யூம்  டிசைனும்  பரவலாகப்பாராட்டுப்பெற்றது 

     

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  டிகிரி  முடித்தவர், இன்னும்  சரியான  பணி  வாய்க்கப்பெறாதவர். பெண்  பார்க்கிறார்கள் . நிச்சயிக்கப்பட்ட  திருமணம்  நடக்கிறது . திருமணம்  ஆன  அந்த  முதல்  நாள்  இரவிலேயே  அவருக்கு  ஒரு  இண்ட்டர்வ்யூக்கு  அழைப்பு  வருகிறது 



அதில்  தேர்வாகி  பெங்களூரில்  ஒரு  வருடம்  பணி  ஆற்றும்  வாய்ப்புக்கிடைக்கிறது . திருமணம்  ஆன  தம்பதிகள் சேராமல்  பிரிந்து  வாழ்வதால்  அவர்கள்  சந்திக்கும்  பிரச்சனைகளைப்பற்றி  திரைக்கதை  பேசுகிறது 


நாயகன்  ஆக  அபிமன்யூ  தாசனி  மாதவனுக்கு  சித்தப்பா  பையன்  மாதிரி முகச்சாயலில்  இருக்கிறார்.காதல்  குறும்பு , சோகம்  எல்லாம்  நன்றாக  வருகிறது, இவரது  டிரசிங்க்  சென்ஸ், பாடி  ஃபிட்னஸ்  அபாரம் 


 நாயகி  ஆக   சானியா  மல்ஹோத்ரா  பிரமாதமான  நடிப்பு , நாயகன்  உட்பட  அனைவரையும்  தூக்கி  சாப்பிட்டு  விடும்  உற்சாக  நடிப்பு .  இவரது  ஹேர்ஸ்டைலும், ஆடை  வடைவமைப்பு  அலங்காரங்களும் , நடிப்பும்  அட்டகாசம் 


பிரசாந்த  ராமச்சந்திரன்  எடிட்டிங்கில் படம்  ரெண்டே  கால்  மணி  நேரம்  ஓடுகிறது , இன்னும்  அரை  மணி  நேரம்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் ‘டெபோஜித் ரேவின்  ஒளிப்பதிவு  கலர் ஃபுல். ஜஸ்டின்  பிரபாகர்  இசையில்  இரு பாடல்கள்  ஹிட்  ஆகி  உள்ளது , பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


விவேக்  சோனியின்  திரைக்கதை  இயக்கத்தில்  ஒரு  இளம்  தம்பதியின்  மனப்போராட்டங்களை  இளமை  கொப்புளிக்க  தந்திருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1   ஓப்பனிங்  ஷாட்டில் நாயகன்  பெண்  பார்க்கும்  இடம்  மாறிப்போனதும்   ரியலாக  நாயகியைப்பெண்  பார்க்க  வந்த  மாப்பிள்ளையிடம்  இவர்கள்  போக  வேண்டிய  அட்ரசை  சொல்லி  அங்கே  ஒரு  பெண்  இருக்கு , அதை  வேணா  ட்ரை  பண்ணுங்க  என   ஆள்  மாற்றி  விடும்  காட்சி 


2    நாயகன்  நாயகி  இருவரும்  லேப்டாப்பில்  கடலை  போட்டுக்கொண்ட்ருக்கும்போது  அங்கே  வரும்  குடும்ப  ஆட்களிடம்  திருடன்  போலீஸ்  விளையாட்டு  விளையாடுவதாக  சமாளிக்கும்  காட்சி 

3  லிஃப்டில்  கம்பெனி  சீஇஓ  தன்  மகனைப்பாராட்டுவதை  அவர்கள்  அறியாமல்  அப்பா  ரசிக்கும்  காட்சி  கிளாசிக் 


4  உப்புச்சப்பே  இல்லாமல்  க்ளீன்  ஸ்லேட்டாகப்போகும்  திரைக்கதையில்  நாயகியின்  முன்னாள்  தோழன்  நாயகிக்கு  நயன்  தாரா   சேலை  பரிசு  தந்து  டீ எஸ்டெட்டை  கவனிக்கச்சொல்லும்  காட்சியும், அதைத்தொடர்ந்து நடக்கும் களேபரங்களும்  சுவராஸ்யமான  முடிச்சு 


5  அவரவர்  ஆப்  பற்றி  அனைவரும்  இண்ட்ரோ  கொடுக்கும்  காட்சியில்  நாயகனின்  புதுமையான  ஆப்  பற்றிய  விளக்க  உரை  அருமை 


ரசித்த  வசனங்கள் 


1  இஞ்சினியரிங்  முடிச்சு  ஒரு  வருசம்  ஆகியும்  வேலை  இன்னும்  கிடைக்கலைனு  அவங்க  கிட்டே  சொன்னா  அவங்க  உன்னை  முட்டாள்னு  நினைப்பாங்க , நீ முட்டாள்தான், ஆனா அதை  அவங்க  தெரிஞ்சுக்கனும்னு  அவசியம்  இல்லை 


2   ப்ளூ  உங்களுக்குப்பிடிச்ச  கலரா?


 இல்லை , சேஃப்டி கலர். அழகை  அதிகமாவும்  காட்டாது , கம்மியாவும்  காட்டாது 


3   முதல்  ராத்திரில   ஏன்  பாலில்  மஞ்சள்  தூள்  போட்டுக்குடிக்கறாங்க ?


 ஏன்னா  நாம்  பண்ண  வேண்டிய  விஷயத்தை  சரியாப்பண்றதில்லை . அதைக்கச்சிதமா  செய்யத்தான்  அப்படிக்குடிக்கச்சொல்றாங்க 


 அப்போ  நானும்தானே  குடிக்கனும் ?  ஸ்கூட்டி  ஓட்டும்போது  ரெண்டு  டயர்லயும்  காத்து  சமமா  இருந்தாத்தானே  நல்லது ?


4  ஜாயிண்ட்  ஃபேமிலில  இருக்கும்  நல்ல  விஷயம்  என்னான்னா  தனிமையா  ஃபீல்  பண்ண  வேண்டிய  அவசியமே  இருக்காது


5  பணியாட்கள்  சிங்கிளா  இருக்கும் வரை  டேலண்ட்டா  இருப்பாங்க  என்பது  என்  நம்பிக்கை 


6  உங்களுக்கு  சரியா  பொய்  சொல்லத்தெரியலை , அல்;லது  உங்களுக்கு  நல்ல  சென்ஸ்  ஆஃப்  ஹ்யூமர். ஐ  லைக் த  போத் 


7  ஹோட்டலில்  எங்க  யூசுவல்  ஆர்டர்ஸ்  எல்லாம்  அன் யூசுவல்  ஆக  இருக்கும்


8  என்  ஃபோன்  கால்ஸ்  எதையும்  நீ  அட்டெண்ட்  பண்ணி  பதில்  சொல்லலை , அதுவே  ஒரு  விதமான  பதில்தான் 


9  நாம  ரெண்டு  பேரும்  சினிமாக்குப்போலாமா?

  எனக்கு  இப்போதான்  மேரேஜ்  ஆச்சு , அதுக்குள்ளே  டைவர்ஸ்  ஆகனுமா?


10  நீங்க  எல்லாம்  சரக்கு  அடிங்க , எனக்கு  சொல்யூஷன்  போதும் 


 நான்  சொன்னது  பிராப்ளத்துக்கான  சொல்யூசன்


11   நீ  எடுக்கற  முடிவுகள்  உனக்கு பெட்டரா  இருந்தா  அது  நமக்கும்  பெட்டராதான்  இருக்கும்


12  தொலைதூரமா  இருக்கும்  காதலியிடம்  நீங்க  எந்த  அளவு  சோகமா  இருக்கறதா  காட்டிக்கறீங்களோ  அந்த  அளவு  அவங்க  சந்தோஷமா  இருப்பாங்க 


13  ஜோடிகள்  எல்லாம்  அடிக்கடி  ரொம்ப  நேரம்  பேசிக்கிட்டே  இருக்காங்களே? அப்படி  என்னதான்  பேசிக்குவாங்கனு  எனக்கு  ரொம்ப  நாட்களா  சந்தேகம்


 அது  பேசிக்கறது  இல்லை , ஒண்ணா  இருப்பது 


14  மாற்றத்தைக்கொண்டு  வர  முடியாத  இடத்துல  என்னால  வேலை  பார்க்க  முடியாது 


15    அவரு  எந்த  கிஃப்ட்டும்  சர்ப்பரைசும்  வேண்டாம்னுட்டாரு


 எல்லாருக்குமே  கிஃப்ட்டும்  சர்ப்பரைசும்   ரொம்பப்பிடிக்கும், பொண்ணுங்க  நாம  சொல்லிடுவோம், அவங்க  சொல்ல  மாட்டாங்க 


16  நான்  உன்  கிட்டே  உண்மையைச்சொல்லாதது  என்  தப்புத்தான் , ஆனா  நான்  உன்  கிட்டே  உண்மையாத்தான்  இருக்கேன் 


17   சோகப்பாட்டுக்கேட்கனும்  போல  இருக்கு, ஆனா  நெட்  ஒர்க்  இல்லை 


18  இப்படி  எல்லாத்தையும்  குறை  சொல்றீங்களே? இப்போ  நான் வடையை  மாத்தனுமா? தோசையை மாத்தனுமா?


நாங்க  கடையை  மாத்திடறோம்


19  பேசனும்கறதுக்காக  பேசறேன், ஆனா  பேசறதுக்கு  எதுவும்  இல்லை 


20  அரேஞ்ச்டு  மேரேஜ்ல  ஒருத்தரை  ஒருத்தர்  புரிஞ்சுக்க  லேட்  ஆகும், உங்க  விஷயத்துல  லாங்  டிஸ்ட்டென்ஸ்  வேற  சேர்ந்துடுச்சு 


21   எதுக்கு  அவசரமா  வரச்சொன்னே ?


ஒரு  சோகமான  செய்தி 


 வெல்கம்  டூ த  க்ளப் 


22  ஒரு  பிரச்சனை  ஏற்பட்டா  எல்லாரும்  உட்கார்ந்து  பேசுங்க , தீர்வு  கிடைக்கும்னு  எல்லாரும்  சொல்வாங்க , ஆனா  சில  பிரச்சனைகளுக்குத்தீர்வே  கிடையாதுனு  யாரும் சொல்ல  மாட்டாங்க 


23   எல்லாப்பிரச்சனைகளையும்  தீர்க்கனும்னு  அது  பின்னாடியே  ஓடக்கூடாது ‘


24   தொலைதூர  உறவுகள்  சிரமமானவை  ஆனால்  ரொம்ப  ஸ்பெஷல்  ஆனவையும்  கூட . சண்டை  போட  நிறைய  காரணங்கள்  இருக்கும், அதைத்தீர்ப்பதற்கும்  நிறைய  வழிகள்  இருக்கும் 


25  கம்யூனிக்கேஷன் தான்  ஒரு  உறவுக்கு  ஆக்சிஜன்  மாதிரி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஓப்பனிங்  சீனில்  பெண்  பார்க்க  வரும்  மாப்பிள்ளை  வீட்டார்  வீடு  அட்ரஸ்  தெரியாமல்  தடுமாறுகிறார்கள் . எல்லோர்  கைலயும்  ஆண்ட்ராய்டு  ஃபோன்  இருக்கு,  கூகுள்  லொக்கேஷன்  ஷேர்  பண்ணுங்க   என  புரோக்கரிடமோ , பெண்  வீட்டாரிடமோ  கேட்க  மாட்டார்களா? 


2   முதல்  இரவு  அன்று  இண்ட்டர்வ்யூக்கான  அழைப்பு  மெசேஜாக  வருவதும்  அதற்கு  அடுத்த  நாளே  இண்ட்டர்வ்யூ  அட்டெண்ட்  பண்ண  வேண்டி  இருப்பதால்  நாயகன்  அதற்கு  பிரிப்பேர்  பண்ண பிரிப்பேர்  ஆவதும்  சினிமாத்தனம் , பொதுவாக  இண்ட்டர்வ்யூக்கான  அழைப்பு  காலை 11  மணிக்குதான்  வரும்.


3   திருமணம்  ஆன  நாயகன்  தன் மனவியிடம்  ஃபோனில் இன்னும்  ஒரு  வருசம்  நானும்  உன்னை  மீட்  பண்ண  வர  முடியாது , நீயும்  வர  வேண்டாம்   என  சொல்வது  கதையின்  சுவ்ராஸ்யத்துக்கு  சரி ஆனா  ரியல்  லைஃபில்  இது  சாத்தியம் இல்லை , ஈசியா  மீட்  பண்ணலாம் 


4   ஆஃபீசுக்குள்  வெளி  ஆட்கள்  அனுமதி  கிடையாது  என்று  சொன்ன பின்  கொஞ்சம்  தண்ணி கிடைக்குமா? எனக்கேட்டு  ரிசப்ஷனிஸ்ட்டை கவனத்தைக்கலைத்து  இவர்கள்  உள்ளே  போவதெல்லாம்  பாசிபிளிட்டியே இல்லாத  ஹைதர்  அலி  காலத்து  டெக்னிக் 


5   சிசிடிவி  கேமரா  எல்லா  இடத்தில்  இருக்கும்போது  ஆஃபீசில்  நுழைந்த  அப்பாவை  நாயகனும், நாயகியும்  வெட்டியாகத்தேடும்  காட்சி   விழலுக்கு  இரைத்த  நீர்

6  ஊடலில்  கோபித்துக்கொள்ளும்  நாயகி  நாயகன்  சமாதானப்படுத்தாமலேயே  அவரை  சந்திக்க  மீண்டும்  பெங்களூர்  வருவது  எப்படி ? எந்த  ஊர்ல  எந்த  சம்சாரம் தன்  புருசனை சமாதானம்  செய்யாமல்  மன்னிச்சாங்க ?


7   நாயகனின்  நண்பன்  நாயகன்  தன்  மனைவிக்கு  அனுப்புவது  போல்  ஒரு  வெல்கம்  மெசேஜ்  அனுப்பினால்  அது  பற்றி  இருவரும்  ஃபோனில்  டிஸ்கஸ்  பண்ணிக்கொள்ள  மாட்டார்களா? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்=  க்ளைமாக்சில்  லிப்  லாப்  சீன்  லங்க்  ஷாட் டில்  இருக்கிறது , மற்றபடி  படம்  படு  டீசண்ட் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இளம்  தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும்  பிடிக்கும் .  ரேட்டிங் 2.75 / 5 



Meenakshi Sundareshwar
Meenakshi Sundareshwar poster.jpg
Official release poster
Directed byVivek Soni
Written byVivek Soni
Aarsh Vora
Produced byKaran Johar
Apoorva Mehta
Somen Mishra
StarringSanya Malhotra
Abhimanyu Dassani
CinematographyDebojeet Ray
Edited byPrashanth Ramachandran
Music byJustin Prabhakaran
Production
company
Distributed byNetflix
Release date
  • 5 November 2021
Running time
141 minutes[1]
CountryIndia
LanguageHindi

0 comments: