Friday, June 09, 2023

KADINA KADORAMEE ANDAKADAHAM (2023) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஃபீல் குட் மூவி ) @சோனி லைவ்

 


 இயக்குநர்  முஹாசின்  இதற்கு  முன் 2018ல் காயங்குளம் கொச்சுண்ணி , 2021ல் முடி  என  இரு  படங்களை  இயக்கி  உள்ளார் நாயகன்  ஆன பஷீல் ஜோசஃப் பால்தூ  ஜான்வர் , ஜெய ஜெய ஜெயஹே என்ற  படங்களில்  நடித்தவர். இவர்  ஒரு  இயக்குநரும்  கூட . மூன்று படங்களை  இயக்கி  உள்ளார். இவரது  லேட்டஸ்ட்  படம்  மின்னல்  முரளி . இவர்கள்  இருவரும்  இணைந்து  ஒரு  ஃபீல் குட்  மூவியை  தந்திருக்கிறார்கள் , இது விமர்சன  ரீதியாக  ஏகோபித்த  பாராட்டுக்களைப்பெற்று  வருகிறது . மம்முட்டி  நடித்த  புழு , உண்டா  ஆகிய  படங்களுக்கு  திரைக்கதை  எழுதிய ஹர்சத் தான்  இதற்கும்  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்


    ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அப்பா  கல்ஃப்  கண்ட்ரியில்  பணி புரிந்து  வருகிறார். வருடம்  ஒரு  முறை  அல்லது  இரு வருடங்களுக்கு  ஒரு  முறை  ஊருக்கு  வந்தால்  இரண்டு  மாதங்கள்  தங்கிச்செல்வார். நாயகனுக்கு   தங்கை , அம்மா  என  நல்லதொரு  குடும்பம்,திருமணம்  ஆகி கணவனைப்பிரிந்து  வாழும்  தங்கையை  அவரது  கணவருடன்  சேர்த்து  வைக்க  வேண்டும் 


தொட்டது  துலங்காது  என்பதுதான்  நாயகன்  கை ராசி . கல்ஃபுக்கே  வா. ஒரு  கம்பெனியில்  வேலை  இருக்கிறது  என  அப்பா  அழைத்தும்  நாயகனுக்கு  அதில்  ஆர்வம்  இல்லை . சொந்த  ஊரிலேயே  ஏதாவது  பிஸ்னெஸ்  செய்து  முன்னேற  வேண்டும்  என்பதுதான்  அவரது  ஆசை. கல்யாணம், கருமாதி  என்றால்  பந்தல்  போடுவது  சேர்  வாடகைக்கு  விடுவது  இதுதான்  இவரது  பிஸ்னெஸ்


 கதை  நடக்கும்  கால கட்டம்  2020 கொரோனா  ஊரடங்கு  காலம். லாக்டவுன்  அமலில்  இருப்பதால்  பெரிய  அளவில்  விசேஷங்கள்  நடைபெறுவதில்லை. அதனால்  நாயகனின்  பிஸ்னெஸ்  சரியாக  நடக்கவில்லை .


 சரி  சீசனல்  பிஸ்னெஸ்  செய்யலாம்  என்றால்  மாஸ்க்  தான்  சேல்ஸ்  பண்ணனும், ஹோல்சேலாக  ஒரு  இடத்தில்  மாஸ்க்  வாங்கி  விற்க  நினைக்கிறார். அதிலும்  சில  சிக்கல்கள்  வருகின்றன


இப்படி  நாயகனின்  பிஸ்னெஸ்  வாழ்க்கை  சரியாகப்போகாத  சமயம்  நாயகனின்  அப்பா  இறந்து  விடுகிறார். ஹார்ட்  அட்டாக்கில்  தான்  இறக்கிறார்  என்றாலும்  கொரானா  காலகட்டம்  என்பதால்  அவரது  டெட் பாடியை  ஊருக்குக்கொண்டுவருவதில்  சிக்கல் . அம்மா  கடைசியாக  ஒரு  முறை  அப்பா  உடலைப்பார்த்தே  ஆக  வேண்டும்  என  அடம்  பிடிக்கிறார்


 இதற்குப்பின்  கதையில்  நிகழும்  சம்பவங்களே  திரைக்கதை 


நாயகன்  ஆக  பஷீல்  ஜோசஃப்  அண்டர்ப்ளே  ஆக்டிங்கில்   கச்சிதமாக  பாத்திரத்தின்  தன்மையை  உள்வாங்கி  அற்புதமாக  நடித்திருக்கிறார். கண்  முன்னே  சம்பவங்களைப்பார்ப்பது  போல  அவ்வளவு  தத்ரூபமான  நடிப்பு  எல்லோரிடமும்


இந்திரன்ஸ் , ஜாஃபர்  இடுக்கி  ஆகிய  முக்கிய  நடிகர்கள்  தங்களுக்குக்கொடுக்கப்பட்ட  பாத்திரத்தை  மிகச்சிறப்பாக  கையாண்டிருக்கிறார்கள் 


முதல்  பாதி  திரைக்கதை  நாயகனின்  போராட்டங்களை  நாயகியின்  தங்கை  கணவரைப்பிரிந்து  வாழ்வதில், மீண்டும் சேர்வதில்  எடுக்கப்படும்  முயற்சிகள்  பற்றி  சொல்கிறது . பின்  பாதி  திரைக்கதை  அயோத்தி  படக்கதை  போல் யூ  டர்ன்  அடித்து  டெட்பாடியைக்கொண்டு  வருவதில்  ஏற்படும்  பிரச்சனைகளை  சொல்கிறது 


போலீசின்  சட்டதிட்டங்கள் , புரோட்டோகால் . சாமான்யனின்  கஷ்டங்கள்  என  பல  விஷயங்களை  அலசி  இருக்கிறார்கள் 


கோவிந்த்  வசந்தாவின்  பின்னணி  இசை  உயிர்ப்புடன்  இருக்கிறது , சோபின்  சோமன்  எடிட்டிங்கில்  2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது . அர்ஜூன்  சேது  ஒளிப்பதிவில் கனகச்சிதமாக  காட்சிகளைப்படம்  பிடித்துள்ளார் 


சபாஷ்  டைரக்டர்


1 அப்பா  கேரக்டரை  ஒரு  காட்சியில்  கூட  விஷூவலாகக்காட்டாமல்  குரலை  மட்டும்  வைத்தே  அவர்  உயிருடன்  வாழ்வதைக்காட்டிய விதம் 


2  நிழலின்  அருமை  வெய்யிலில்தான்  தெரியும்  என்பது  போல  அப்பா  மேல்  அதீத  பாசமோ  அன்போ  இல்லாத  நாயகன்  அப்பாவின்  மறைவுக்குப்பின்  அப்பா  நினைவில்  வாடும்  காட்சிகள்  சராசரி  ஆண்களின்  மன  ஓட்டங்களின்  பிரதிபலிப்பு 


3   நாயகனின்  தங்கை , தங்கையின்  கணவர்  இருவருக்குமான  காம்போ  காட்சிகள்  கணவன் - மனைவி  பிரிவுத்துயர்  உணர்த்தும்  காட்சிகள் 


4  இந்திரன்ஸ் , ஜாபர்  இடுக்கி  இருவரின்  அபாரமான  யதார்த்த  நடிப்பு 



  ரசித்த  வசனங்கள் 


1  இந்த  கல்யாணம், கருமாதிக்கெல்லாம்  முடிவே  கிடையாது , ஆனா கொரானாவுக்கு  முடிவு  உண்டு 


2  இந்த  உலகமே  அழிஞ்சாலும்  இவன்  வட்டி  வாங்க  கரெக்ட்  டைம்க்கு  வந்துடுவான்  போல 


3   கடைசி  காலத்துல  என்  அப்பா  என்னைத்திட்டிட்டே  இருந்தாரா?

எந்த  அப்பாவும்  தான்  சாகும்போது  பெத்த  பையன்  மேல  கோபத்தோட  இருக்க  மாட்டாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  மாஸ்க்  ஹோல்சேல் வியாபாரம்  பண்றவர்  காரில்  போகும்போது கைவசம்  ஒரு  மாஸ்க்  வைத்திருக்க  மாட்டாரா? போலீஸ்  செக்கிங்  வரும்போதாவது  மாஸ்க்  அணிந்து  ஹையர்  ஆஃபீசரை  பார்க்கனும்  என  தெரியாதா?


2  கொரோனா  காலத்தில்  மாஸ்க்  அணிய  பிரியப்படாதவர்கள்  கூட  பாக்கெட்டில்  கைவசம்  மாஸ்க்  வைத்திருப்பார்கள் , போலீஸ்  நடமாட்டம்  தட்டுப்பட்டால்  மாஸ்க்  அணிவார்கள் , ஆனால்  நாயகன்  அசால்ட்டாக  இருந்து  பல  முறை  மாட்டிக்கொள்கிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  க்ளீன்  யூ




சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அயோத்தி  படம்  பார்க்காதவர்களுக்கு  மிகவும்  பிடிக்கும், பார்த்தவர்களுக்கு  முதல்  பாதி  பிடிக்கும் . ரேட்டிங் 2.75 / 5 


Kadina Kadoramee Andakadaham
Kadina Kadoramee Andakadaham.jpg
Official poster
Directed byMuhashin
Written byHarshad
Produced byNaisam Salam
Starring
CinematographyArjun Sethu
S. Mundol[1]
Edited bySobin Soman[1]
Music byGovind Vasantha
Production
company
Naisam Salam Productions
Distributed byRejaputhra
Release date
  • 21 April 2023
CountryIndia
LanguageMalayalam

0 comments: